திருக்குருகாவூர் வெள்ளடைநாதர்
மூலவர் : வெள்ளடைநாதர், ஸ்வேதரிஷப ஈஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்பாள் : நிலோத்பல விசாலக்ஷி காவியங்கன்னி
ஸ்தல விருக்ஷம் : வில்வம்
தீர்த்தம் : வேல்விடை தீர்த்தம் / பால்கிணறு
ஆகமம் : சிவாகமம்
பாடல் : சம்பந்தர் சுந்தரர் சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் 67, சோழ நாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 13
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அற்புதமான காசிக்கு நிகரான ஒரு சிவ க்ஷேத்ரம். இந்த திவ்யமான சிவ க்ஷேத்ரத்தை சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன்னுடைய 7ம் திருமுறைல ஆகாசத்தில் இருந்து பூமிக்கு வந்த சிவாலயம்னு சொல்றார்.
விண்ணிடை (விண்ணில் இருந்து வந்த) வெள்ளடைநாதர்.
கோவில் குளம் தீர்த்தம் எல்லாமே ஆகாசத்தில் இருந்து பூமிக்கு வந்ததாம். சுவாமி ரிஷபா ரூடராக இருக்கார். வேல் விடை – விடை ரிஷபம், வெண்மையான வேல் விடை, வேதம் ஓதி,வெண்ணூல் பூண்டு, வெள்ளை எருதேறி – அது மாதிரியான மூர்த்தி சுவாமி. ரொம்ப அழகான அம்பாள் நகர மனசு வராது. சுகப்பிரசவாம்பிகை இன்னொரு பெயர். ( திருக்கருகாவூர் வேறு, இரண்டும் ஒரே மாதிரி ஷேத்ரம் தான்). இங்கேயும் சுவாமி அம்பாள் நடுவுல முருகன் சோமாஸ்கந்த ஷேத்திரம்.
இங்கு தெற்கு பார்த்த முருகன் அழகு & குரு வடிவம். ஏன்னா கைலாயத்துல சுவாமி அப்படித்தான் இருக்காளாம். சக குடும்பமா ஸ்வாமி கைலாயத்தில் எப்படி இருக்கிறாரோ அப்படி இங்கு வந்தார்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
துர்வாசர் சிவபூஜை பண்ணிய இடம். துர்வாசர் என்றெல்லாம் சிவபூஜை பண்றாரோ அங்கெல்லாம் க்ஷேத்ரங்களோட மகத்துவம் 1 சிவாலய தரிசனம் = 1000 சகஸ்ர சிவாலய தரிசனம். துர்வாசர் சந்நிதி இருக்கிறது. ரொம்ப சிரித்த முகத்தோட கையில் ஏட்டோட துர்வாசர் இங்கு இருக்கிறார் மிகவும் விசேஷம். துர்வாசர் இங்கு மிகவும் ஆத்மார்த்தமாக சிவ பூஜை பண்ணின க்ஷேத்ரம்.
இன்னொரு பெரிய விசேஷம்
ஒரு சிவாலயத்தில் அந்த கோவில் தீர்த்தத்தில் தான் சுவாமி தீர்த்தம் கொடுக்கும்.
ஆனால் இன்னொரு சிவன் கோவிலில் இருந்து மூர்த்தி வந்து தீர்த்தம் கொடுப்பது இங்குதான்.
சீர்காழி சுவாமி கிட்ட உத்தரவு கேட்டுண்டு, ஞானசம்பந்தர் தை மாச அமாவாசை அன்று, இங்க கோபுரம் இல்லாத இந்த வாசல்ல, வலது பக்கம் உள்ள கிணறு கிட்ட தீர்த்தம் கொடுப்பார். கங்கை இது.
தரிசனம் முடிந்த பிறகு இங்கு புரோக்ஷணம் பெற்றுக் கொள்ளுங்கள். நிறைய பாவங்கள் பண்றோம். தெரிந்தும் தெரியாமலும், அத்தனை பிராயச்சித்ததிற்கும் உண்டான க்ஷேத்ரம் இது.
ஸ்தல புராணம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கூன் பாண்டியனின் வெப்பு நோயை மந்திரமாவது நீறு பதிகம் பாடி போக்குகிறார் ஞானசம்பந்தர். மதுரையில் அனல்வாதம் புனல்வாதம் பண்ணி ஜெயிக்கிறார்.
நின்ற சீர் நெடுமாறனை சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றுகிறார். இவர் சைவத்திற்கு மாறிய பிற்பாடு கூட சமணர்களுக்கு மன்னனை மீண்டும் மாற்ற முயற்சிக்க, அவர்களை எல்லாம் கழுவில் ஏற்றுகிறான்.
என்ன இருந்தாலும் இதுவெல்லாம் பாவமாயிற்றே. நமக்கும் பாவம் சேருமே. “அன்யக்ஷேத்ரே பாபானாம் புண்யக்ஷேத்ரே விநஷ்யதி.
புண்யக்ஷேத்ரே பாபானாம் வாரணாஸ்யாம் விநஷ்யதி”
அதனால் கங்கையில் போய் சங்கல்பம் பண்ணி ஸ்னானம் பண்ணி காசிவிஸ்வநாதர் விசாலாக்ஷி தரிசனம் பண்ணனும்னு கிளம்புகிறார். எப்பவுமே நாம ஒரு புண்ணிய க்ஷேத்ரத்திற்கு போகும் பொழுது நம்ம ஊர்ல உள்ள மூர்த்தி கிட்ட ஒரு உத்தரவு வாங்கிக்கணும். நாம வழக்கமா பிள்ளையார் கிட்ட ஒரு தேங்காய் உடைப்போம். அதே மாதிரி சம்பந்தர் சீர்காழில சுவாமி கிட்ட பிரார்த்தனை பண்றார். சங்கல்பம் பண்ணிக்கிறார்.
( அந்த காலத்துல மூர்த்தி பேசுவார் ) எங்க கிளம்பற, காசி
சுவாமி- இங்கிருந்து கூப்பிடும் தூரத்தில் கங்கையை வரவழைக்கிறேன் உனக்காக என கங்கையை வரவழைத்த இடம் தான் இது.
ஞானசம்பந்தர் அங்கிருந்து இங்கே வருகிறார். தை அமாவாசை. கங்கை பொங்கியது. கிணத்தை காண்பித்து இதுதான் கங்கை என்றால் ஒத்துக் கொள்ள மாட்டோம். யோசிப்போம்..
மஹா பெரியவாளும் இந்த க்ஷேத்ரத்தை பற்றி சொல்லி இருக்கா!
இன்னிக்கும் ஒரு கோவிலில் இருந்து இன்னொரு கோவிலுக்கு ஞான சம்பந்தர் வருகிறார். தீர்த்தம் கொடுக்கிறார். இங்கே கங்கை வருகிறது. அப்பொழுது நாம் செய்யும்,செய்த பாவங்கள் இந்த ஜல புரோக்ஷனத்தினாலே போகிறது.
உன்னதமான க்ஷேத்ரம்.
இத்தலத்திலேயே விஸ்வநாதரும் விசாலாக்ஷியும் இருக்கிறார்கள்.
அன்னமிட்ட கை
சிவ தல யாத்திரை சென்ற சுந்தரர், இத்தலத்திற்கு வரும்பொழுது இப்பகுதி அடர்ந்த வனபகுதி. எனவே அவரால் இக்கோவிலை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இத்தலத்து இறைவனை தரிசிக்காமல் சென்று விட்டார்.
வழியில் அவருக்கு பசி எடுத்தது. அப்போது ஒரு முதியவர் அவர் முன்பு சென்றார். சுந்தரரிடம் அவர் அருகில் உள்ள இடத்தை சுட்டிக்காட்டி அவ்விடத்தில் சிவனடியார்களுக்கு அன்னம் பரிமாறுவதாகவும் அங்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்படியும் கூறினார். அதன்படி சுந்தரரும் அவருடன் வந்த அடியார்களும் சாப்பிட சென்றனர். அவர்களை முதியவர் உபசரித்தார். அதன் பின்பு சாப்பிட்ட களைப்பில் அன்ன பந்தலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். சுந்தரர் சற்று நேரம் கழித்து விழித்த போது அங்கு அன்னதானப் பந்தலோ சாப்பாடு பரிமாறியதற்கான தடமோ தெரியவில்லை.
வியந்த சுந்தரர், தனக்கு அன்னம் பரிமாற வந்தது சிவன் தான் என அறிந்து கொண்டார். சிவனை வேண்டவே அவர் இத்தலத்தை அடையாளம் காட்டினார். அதன் பின்பு இங்கு வந்த சுந்தரர் சிவனை வேண்டி பதிகம் பாடினார். ( அதுவே புகழ்பெற்ற ” இத்தனை யாமாற்றை அறிந்திலேன்…
பாடுவார் பசி தீர்ப்பாய்.. )
சுந்தரருக்கு அன்னம் பரிமாறிய விழா, சித்ரா பௌர்ணமி அன்று நடக்கிறது. இங்கு சிவனிடம் வேண்ட – அன்னத்திற்கு குறைவில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள காவியங்கண்ணி அம்பிகைக்கு, சுகப்பிரசவ நாயகி – இவளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அதையே பிரசாதமாக எடுத்துச் செல்கிறார்கள். இதனால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இக்கோவிலில் உள்ள விநாயகர் தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்க, அவருக்கு மேலே ஒரு குடை 2 சாமரம் உள்ளன.
வழக்கமாக கிழக்கு நோக்கி இருக்கும் முருகன் வள்ளி தெய்வானையுடன் இங்கு குரு வடிவில் தெற்கு நோக்கி உள்ளார். வியாழக்கிழமைகளில் இவருக்கு சிறப்பு பூஜை உண்டு.
எட்டு கைகள் உடைய துர்கா தேவிக்கும் சத்யநாதருக்கும் சன்னதி உண்டு. நவக்கிரக சந்நிதி இல்லை. ராஜகோபுரம் கொடிமரம் இல்லை.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பாவங்கள் நீங்குவதற்கும், தோஷ நிவர்த்திக்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற கடுமையான தோஷங்கள் விலகுவதற்கும் பிரார்த்தனை.
இங்கு சிவனிடம் வேண்ட – அன்னத்திற்கு குறைவில்லாத நிலை ஏற்படும்.
அம்பாளை வேண்ட சுகப்பிரசவம் உண்டாகும்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்திரை கட்டமுது தந்த விழா
தை அமாவாசை தீர்த்த விழா
தைப்பூசம் பஞ்சமூர்த்திபுறப்பாடு
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுந்தரர் அப்பர் சம்பந்தர் சேக்கிழார் வள்ளலார்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சீர்காழி (5KM) அருகே, தென்திருமுல்லைவாயில் சாலையில், வடகால் என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது.
8AM – 11AM, 6PM – 7PM
94892 53941 & 94453 53941
முத்துமணி குருக்கள்
கிராமத்து கோவில் குருக்களை அழைத்துவிட்டு செல்வது சிறப்பு
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தனை யாமாற்றை
அறிந்திலேன் எம்பெருமான்
பித்தரே என்றும்மைப்
பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை
மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே. 1
சுந்தரர்


Leave a Reply