திருஅரசிலி ஒழிந்தியாம்பட்டு அரசலீஸ்வரர் அரசலிநாதர்
மூலவர் : அரசலீஸ்வரர் அரசலிநாதர் அஸ்வத்தேஸ்வரர் ஆலாலசுந்தரர்
அம்பாள் : பெரியநாயகி அழகியநாயகி பிருஹந் நாயகி ஸ்தல விருக்ஷம் : அரசமரம்
தீர்த்தம் : வாமன & அரச தீ,
ஆகமம் : காரண, காமீக
பாடல்:சம்பந்தர், சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம்,
தொண்டை நாட்டு ஸ்தலம் 31
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஸ்வாமி 108 ருத்ராக்ஷ மணிகள் சேர்ந்த ருத்ராக்ஷ பந்தலின் கீழ் சுயம்பு லிங்க வடிவில் சிறிய மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், லிங்கத்தின் மேல் தலைப்பாகை அணிவித்து பூஜை செய்கின்றனர்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தக்ஷிணாமூர்த்தி கோஷ்ட சுவரில் இருக்கிறார். பொதுவாக வலது பக்கம் திரும்பி இருக்கும் முயலகன் இங்கு இடது பக்கம் திரும்பி கையில் நாகத்தை பிடித்தபடி இருக்கிறான். இது வித்தியாசமான அமைப்பு.
இவருக்கு மேலே நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் சிறிய மூர்த்தியாக இருக்கிறார்.
தக்ஷிணாமூர்த்தி எப்போதும் அமைதியாக இருப்பார்- நடராஜர் ஆடிக்கொண்டே இருப்பார்.. இவர் தக்ஷிணா மூர்த்தி மேலே இருக்கிறார்.
மனிதர்கள் வாழ்க்கையில் ஆனந்தமாக இருக்க வேண்டிய நேரத்தில் ஆனந்தத்தையும், அமைதியாக இருக்க வேண்டிய சமயத்தில் அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பதையும் இந்த வடிவம் உணர்த்துவதாக சொல்கின்றனர்.
ஒரே நேரத்தில் சிவனது ஞான உபதேச கோலத்தையும், தாண்டவக்கோலத்தையும் தரிசனம் செய்வது மிகவும் விஷேசம். கருவறைக்கு பின்புறத்தில் கோஷ்டத்தில் மஹாவிஷ்ணு மேற்கு பார்த்த படி இருக்கிறார். பக்கத்தில் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர், பைரவர், நால்வர்
தனி தனி சந்நிதியில்
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வாமதேவர் எனும் முனிவர், தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெறுவதற்காக பல தலங்களுக்குச் சென்று சிவனை வணங்கி வந்தார்.
அவர் இங்கு வந்தபோது ஒரு அரச மரத்திற்கு அடியில் சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தார். அப்போது உடலுக்கு குளிர்ச்சி தரும் அரச மரத்தின் அடியில் சற்று நேரம் இருக்கும் நமக்கே இவ்வளவு சுகமாக இருக்கிறதே இங்கு சிவன் இருந்தால் எப்படி இருக்கும் என மனதில் நினைத்துக் கொண்டார்.
அவரது எண்ணத்தை அறிந்த சிவன் அரசமரத்திற்கு அடியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். மகிழ்ந்த வாமதேவ முனிவர் அருகில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி பூஜித்தார். சிவன் அவர் முன் காட்சி தந்து சாப விமோசனம்.
அரச மரத்தின் கீழ் சுயம்பு வாக எழுந்தருளியதால் தலத்திற்கு அரசிலி , சுவாமிக்கு அரசலீஸ்வரர்.. என பெயர்…
மானாக வந்த சிவன்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பல்லாண்டுகளுக்குப் பிறகு இத்தலத்தில் இருந்த லிங்கம் மறைந்து விட்டது. சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான்.
சிவன் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னனுக்கு பிள்ளைகள் இல்லை. எனவே ஒரு நந்தவனம் அமைத்து அருகில் உள்ள மற்றொரு சிவனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டு வந்தான்.
இதற்காக பணியாள் ஒருவர் தினமும் நந்தவனத்தில் இருந்து மலர்கள் எடுத்து வரும் பணி. ஒரு நாள் மலர்கள் இல்லை. மன்னன் வேறு மலர்களால் அன்று பூஜை. மறுநாளும் மலர்கள் இல்லை.
சந்தேகம் கொண்ட மன்னன் அடுத்தநாள், படையினரோடு நந்தவனம் சென்று கண்காணித்தார். அப்போது நந்தவனத்திற்குள் புகுந்த மான் ஒன்று மலர்களை உண்டதை கண்டான். கோபத்துடன் மான் மீது அம்பை எய்தான்..
மான் தப்பி விடவே, காவலர் அதை விரட்டிச் சென்றனர். அந்த மான் ஒரு அரச மரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்து கொண்டது. மன்னன் மரத்திற்குள் அம்பு எய்தான். அதிலிருந்து ரத்தம் வெளிபட்டது.
மான் அம்பினால் தைக்கப்பட்டிருக்கும் என நினைத்த மன்னன் உள்ளே பார்த்தபோது அங்கு மான் இல்லை. அதற்கு பதில் லிங்கம் (பல்லாண்டுகளுக்கு முன் மறைந்தது) அதன் தலையில் ரத்தம் வழிந்தபடி இருந்தது.
அதிர்ந்த மன்னன் சிவனை வேண்டினான். சிவன் மன்னனுக்கு காட்சி தந்து, மான் வடிவில் அருள்புரிந்தது தான் தான் என உணர்த்தியதோடு மன்னனுக்கு புத்திர பாக்யமும் கொடுத்து அருளினார். அதன் பின் மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஞான சம்பந்தர் சிலகாலம் இங்கு தங்கியிருந்து சுவாமியை வழிபட்டு பதிகங்கள் பாடியிருக்கிறார்.
அம்பாள் : பெரியநாயகி தனி சன்னதி, தெற்கு பார்த்த கோலம், ஸ்தல விநாயகர்
வரசித்தி விநாயகர், 3 நிலை ராஜகோபுரம்.
இவ்வூரில் வாழ்ந்த திருமதி ஜெயலக்ஷ்மி கட்டிய ஞான சம்பந்தர் திருமடம் கோவிலுக்கு அருகில் உள்ளது.
சோழர்களின் 5 கல்வெட்டுகள் உள்ளன.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அரச மர இலையால் சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால், இழந்த பதவி திரும்ப கிடைக்கும், பதவி உயர்வு உண்டாகும்.
அரச போக வாழ்வு அமைய
செல்வ செழிப்பிற்கு
மேலும் புத்திர பாக்கியம், ராகு கேது தோஷ நிவர்த்தி, பூச நட்சத்திர பரிகாரம் என பிரார்த்தனை செய்கிறார்கள்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வைகாசி 10 நாள் பிரம்மோற்சவம், மஹாசிவராத்திரி, திருக்கார்த்திகை,
பங்குனி சூரிய பூஜை
தேர் திருவிழா, பிரதோஷம்
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வாமதேவர், சத்தியவிரதன், சாளுவ மன்னன், தண்டபாணி சுவாமிகள், ஞானசம்பந்தர் சேக்கிழார்..
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விழுப்புரம் மாவட்டம், ஒழிந்தியாம்பட்டு பகுதியில் அமைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து குறிஞ்சிபாடி, தொரவி, சேதரபட்டு வழியாகவும்
திண்டிவனம் பாண்டி வழி கிளியனூர் சாலை வழியாகவும் வரலாம்.
7AM – 12AM, 5PM-8PM
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
90803 30203 குமார் குருக்கள்
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பாடல் வண்டறை கொன்றை
பால்மதி பாய்புனற் கங்கை
கோடல் கூவிள மாலை
மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை
மருவிட வல்லியம் தோள்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த
அடிகளுக் கிடம்அர சிலியே. 1
ஞானசம்பந்தர்.


Leave a Reply