திருஅன்னியூர் பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர்

🪷மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர் விருகசாரண்யேஸ்வரர்

அம்பாள் : பிருஹன்நாயகி பெரிய நாயகி

ஸ்தல விருக்ஷம் : எலுமிச்சை

தீர்த்தம் : வருண அக்னி தீர்த்தம்

புராணப்பெயர் : விகுசாரண்யம் பாஸ்கர க்ஷேத்ரம், அன்னியூர்

ஊர் : பொன்னூர்

பாடல் : அப்பர் சம்பந்தர், சுயம்பு, 76 வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழநாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 22

🪷 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹ஸ்தலம் மூர்த்தி தீர்த்தம் 3ம் சிறப்பு

🌹யுகத்திற்கெல்லாம் முந்தைய கோவில் 👉

கிருத யுகத்தில் ரதி, மன்மதன் சூரியன் வழிபாடு

திரேதா யுகத்தில் அக்னி ஹரிச்சந்திரன்

துவாபர யுகத்தில் வருணன் பாண்டவர்கள்.

🌹கோவிலின் வாசலில் இருக்கும் அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து இறைவனை வேண்ட மேகநோய் (தோல் நோய் அனைத்தும் ) குணமாகிறது.

🪷 ஸ்தல பெருமை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாடவீதியில் ஸ்தல விருக்ஷம் அருகே ஸ்ரீ ஆதிமூல லிங்கம் உள்ளது. இது அக்னிக்கு தரிசனம் தந்த இறைவன்.

முருகன் காதணிகளுடன் காட்சியளிப்பது தனித்துவம்.

சூரியன் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 25 to 30, 5 தினங்கள், (MAR – APR ) வழிபடுகிறார். ஆதலால் பாஸ்கரஸ்தலம்.

ரதி சிவனை வழிபடும் நிகழ்வு கார்த்திகை மாதம் சிறப்பு பூஜைகள்.

ஆத்ம சாந்திக்குண்டான ஸ்தலம்

முன்னோர்களின் நற்கதிக்கு ஞாயிறன்று தீர்த்தத்தில் நீராடி, தீபமேற்றி, தயிர்சாதம் நைவேத்யம் செய்து, சுவாமியை வழிபட்டால் முன்னோர்கள் நற்கதி அடைகிறார்கள்.

ஹரிச்சந்திரன் குதிரையின் கால் குழம்பு பட்டு ஒரு வயோதிகர் இறந்துவிட, வெண்குஷ்டம் வந்து, நைமிசாரண்ய மகரிஷியின் ஆலோசனைப்படி, இங்கு வந்து தங்கி இருந்து தினமும் அக்னி தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு பூஜை செய்தார் விமோசனம் கிடைத்தது. மேலும் பானு என்ற அந்தணன் தொழு நோயிலிருந்து விடுபட்ட ஸ்தலம்.

🪷 ஸ்தல வரலாறு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கிருத யுகத்தில் அனைவரும் தக்ஷிணாமூர்த்தி கிட்ட நின்னுண்டு பிரார்த்தனை பண்றா.. அந்தகாசுரனின் அட்டகாசம் தாங்கவில்லை , அழிக்க வேண்டும்..

தக்ஷிணாமூர்த்தியில் இருந்து எழுப்பி பரமேஸ்வர சொரூபத்தில் பார்வதி கரம் பிடிக்க வேண்டும், யாரும் அருகே செல்ல முடியவில்லை. யோகத்தில் இருக்கிறார்.

அனைவரும் மன்மதனை வற்புறுத்த, மன்மதனின் பாணம் தவத்தைக் கலைக்க, அவனை எரித்த இடம் திருக்குறுக்கை.

மன்மதனை மீட்க இங்கு ரதிதேவி தபஸ் செய்கிறாள்.

அவ்வளவு அழகான ரதி தேவியை சூரியன் பார்க்கிறான். ரதிதேவி சாபம் கொடுத்தாள். என் கணவர் சாகவில்லை. சாம்பல் மொட்டாக இருக்கிறார். உயிர் பெற்று எழுவார். உன்னுடைய பார்வை என் மீது படலாமா. உன்னிடம் எது அவசியமோ அது இல்லாமல் போகட்டும் என்றாள். சூரிய பகவானுக்கு ஜோதி போய்விட்டது. லோகம் முழுக்க இருட்டாகி விட்டது. எல்லோரும் ரதி கிட்ட வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். என்னுடைய கணவர் உயிர்பெற்று எழட்டும். சூரியன் எழுவார் என சொல்லி தவத்தை தொடர்கிறாள்.

சிவபெருமான் அனுக்கிரகம் பண்ணி ரவிதேவிக்காக மன்மதனை எழுப்பி, சூரியனையும் உயிர்பித்து கொடுத்த ஸ்தலம். சுமங்கலிகள் வேண்டிக் கொள்ளலாம். ஆதலால் அவர் ரதிபுரீஸ்வரர் மன்மதபுரீஸ்வரர்.

இவர்கள் இருவர் மட்டுமல்ல, அக்னி பகவான் – பிரதான மூர்த்தி அக்னீஸ்வரர் – தக்ஷ யஞ்யத்தில் கலந்து கொண்டதால் வீரபத்ரரால் இடப்பட்ட சாபமானது, அவர் இங்கே வந்து தவம் செய்ய, பூஜை பண்ணி தன்னுடைய பெயரினாலேயே தீர்த்தம் ஏற்படுத்தி சாபம் நீங்க பெற்றார்.

ஆதலால் அக்னிபுரீஸ்வரர்.

பாண்டவர்கள் வணங்கியதால் பாண்டவேஸ்வரர்.

அனைவரையும் ஆபத்திலிருந்து காப்பதினால் “ஆபத்சகாயேஸ்வரர்”

🪷 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இது கிராமத்தின் கடை கோடியில் அமைந்திருக்கும் கிழக்கு நோக்கிய கோவில். கோபுரம், கொடி மரம் இல்லை.

சிறிய சிவன் பார்வதி சிலை. எதிரில் தீர்த்த குளம். உள்ளே சென்றவுடன் பலிபீடம் நந்தி தாண்டியவுடன் மூலஸ்தானத்தில் ஆபத்சகாயேஸ்வரர். பிரகாரத்தில் கணபதி புணுகேஸ்வரர், 2 தக்ஷிணாமூர்த்தி, வள்ளி தெய்வயானை உடன் சுப்பிரமணியர், மஹாலக்ஷ்ம.

கோஷ்டத்தில் லிங்கோத்பவர் பிரம்மா சண்டிகேஸ்வரர் சூரியனுக்கு சன்னதி. பூர்த்தியாகும் பொழுது ஸ்தல விருக்ஷம் எலுமிச்சை / வன்னி மரம்.

நம் எல்லோரையும் ஆபத்தில் இருந்து காக்கக்கூடிய ஆபத் சகாயேஸ்வரரை, வாழ்வில் ஒரு முறையேனும் தரிசித்து, உய்வு பெற வேண்டிய உன்னதமான சிவாலயம்.

🪷 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருமணத்தடை நீங்க,

தீர்க்க சுமங்கலியாக நீடிக்க,

கல்வி, ஞானம் பெற,

தோஷங்கள் நீங்க,

வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்கள் நீங்க,

தம்பதிகள் ஒற்றுமை,

முன்னோர்களின் ஆத்மா சாந்தி / நற்கதி

ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு என பிரார்த்தனை.

🪷 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கார்த்திகை மாத ரதி பூஜை,

ஆடிப்பூரம், ஆவணி மூலம்

மஹா சிவராத்திரி

வைகாசி விசாகம் திருக்கார்த்திகை

பங்குனி சூரிய பூஜை

🪷 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ரதிதேவி மன்மதன் சூரியன் அக்னி வருணன் ஹரிச்சந்திரன் பாண்டவர்கள் பானு அப்பர் சம்பந்தர் முதலியோர்.

🪷அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

10 KM மாயவரத்தில் இருந்து

மணல்மேடு செல்லும் பேருந்து or நமச்சிவாயபுரம் பாண்டூர் செல்லும் பேருந்து 👉 பொன்னூர் பஸ் ஸ்டாப் அருகிலேயே கோவில்.

ஆட்டோ வசதிகளும் உண்டு.

7AM – 11AM, 5PM – 8PM

97867 66995 ரவி குருக்கள்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🪷 கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மன்னி யூரிறை, சென்னி யார்பிறை

அன்னி யூரமர், மன்னு சோதியே. 1

பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னியூர்க்

குழகன் சேவடி, தொழுது வாழ்மினே. 2

நீதி பேணுவீர், ஆதி அன்னியூர்ச்

சோதி நாமமே, ஓதி உய்ம்மினே.3

ஞானசம்பந்தர்

பாற லைத்த

படுவெண் டலையினன்

நீற லைத்தசெம்

மேனியன் நேரிழை

கூற லைத்தமெய்

கோளர வாட்டிய

ஆற லைத்த

சடைஅன்னி யூரரே. 1

திருநாவுக்கரசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *