சிறுகுடி மங்களநாதர் சூட்சுமபுரீஸ்வரர்

🪷மூலவர் : சூக்ஷ்மபுரீஸ்வரர் மங்களநாதர்

அம்பாள் : மங்களநாயகி

ஸ்தல விருக்ஷம் : வில்வம்

தீர்த்தம் : மங்கள தீ

பாடல் : சம்பந்தர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 60

🪷 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹மண்ணால் செய்யப்பட்ட

லிங்கமாதலால் அபிஷேகம் ஆவுடையாருக்கு மட்டும்,

லிங்கத்திற்கு புனுகு சாத்த

படுகிறது. எப்பொழுதும் கவசத்தால் மூடப்பட்டுள்ளது

🌹அங்காரகனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கி பூஜித்து வரம் பெற்றமையால் இங்கு அங்காரகனை தரிசனம் செய்பவர்களுக்கு (தனி சன்னதி) செவ்வாய்தோஷம் திருமண தடை பலவித நோய்கள் நீங்குகின்றன. மாசி மாதம் செவ்வாய்க்கிழமைகள் ஏற்றது விசேஷ பூஜைகள்

நடக்கும். மேலும் இத்தலத்தில் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர பிரார்த்தனை.

🌹மேலும் இந்த ஈசன், பதவியைப் பெற சூட்சுமமாக அருள்பாலிப்பவர். தற்போது தேர்தல் காலம் என்பதால் அரசியல்வாதிகள் பலரும் இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டுச் செல்கிறார்கள்.

🌹 சூரியனும் சனீஸ்வரனும் அருகருகே இருப்பது சிறப்பாகும். சூரியன் விசுவாமித்திரர் கந்தர்வன் பூஜித்த தலம்.

🪷 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹“தேனமலர் பொழிலணி சிறுகுடி” – என்னும் சம்பந்தரின் வாக்குக்கேற்ப – சுவாமிக்கு முன்னால், முன் மண்டபதில் வலப்புறத்தில் சுவர் ஓரத்தில் தேனடை உள்ளது. சாளரம் அமைத்து அதன்வழியே வெளியிலிருந்து தேனீக்கள் வந்து போகுமாறு செய்து, மண்டபத்தின் உட்புறத்தில் இரும்புவலை போட்டுப் பாதுகாத்துள்ளனர். 

🌹இத்தலத்திற்குரிய சிறப்பு மூர்த்தமாகிய “சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி ” மிகமிகச் சிறப்பானது. அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து அம்பாளை ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள்மீது கை போட்டுக்கொண்டு காட்சித் தரும் அழகு – கண்டு அனுபவித்தாலே உணர முடியும். 

🌹இவர் வருடத்தில் பங்குனி உத்திர நாளில் மட்டுமே காட்சி தருவார். இந்நாளில் சந்தோஷ ஆலிங்கன மூர்த்திக்கும் மங்களாம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

🌹நவகிரக மண்டபம் சிறப்பு. கோளறு பதிகம் பாடிய ஞான சம்பந்தர் குழந்தை வடிவில், நவகிரஹங்களின் நண்பராக அருகே உள்ளார்.

மேலும் விநாயகரும் பைரவரும் இதே மண்டபத்தில் இருப்பது இன்னும் ஒரு விசேஷம். இவர்களை தரிசித்தால் எப்படிப்பட்ட கிரஹதோஷமும் விலகும்.

🌹 சோழ மன்னன் கிள்ளி வளவனின் நண்பனும், பல நற்காரியங்கள் சேவைகள் புரிந்த நிலச்சுவான்தார் பண்ணன் பிறந்த பூமி. இவரை அகநானூறு புறநானூறு புகழ்ந்து குறிப்பிட்டுள்ளது.

🪷 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹ஒருமுறை கயிலையில் சிவபெருமானும் அம்பாளும் தாயம் (சொக்கட்டான்) விளையாடினர். அம்மன் பக்கம் வெற்றி திரும்பியது. அம்பாள் வெற்றி பெற்றதும்

சிவபெருமான் அவ்விளையாட்டிலிருந்து காணாமல் போனார். பின்னர் அம்பாள் ஈசனை தேடி அலைந்தாள்.

🌹எங்கும் காணாததால் காவிரியின் தென்கரையில் வில்வ மரங்கள் அடர்ந்த, அமைதியான சூழல் உள்ள, குளக்கரையில் மண்ணில் லிங்கம் பிடித்து வைத்து வழிபட்டாள். காணாமல் போன சிவபெருமான் அந்த இடத்தில் தோன்றினார்.

🌹விளையாட்டில் தான் வேண்டுமென்றே தோற்றதாகவும் மனைவியின் மனம் மகிழவும் குடும்பம் மங்கள கரமாக இருப்பதற்காக கணவரிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டுமென்றும் அருள்பாலித்தார்.

🌹இதனால் அம்பிகை மங்களாம்பிகை என்று பெயர் பெற்றாள். அவள் தவம் இருந்த குளக்கரை மங்கள தீர்த்தம் ஆயிற்று. சுவாமிக்கு மங்களநாதர் என பெயர் சூட்டப்பட்டது.

🌹சிறு கைப்பிடி மண்ணால் லிங்கம் அமைக்கப்பட்டதால் சிறுபிடி மருவி சிறுகுடி. அம்பாளின் கைத்தடம் லிங்கத்தில் காணலாம். மேலும் இறைவன் மந்திரமாய் மறைந்ததால் சூக்ஷ்மபுரீஸ்வரர்.

🪷 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி உள்ளது.

முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய தனிச் சன்னதியில் அம்பாள் நின்ற கோலத்தில் அபய, வரத முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள்.

இக்கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் இல்லாததால், அபிஷேகம் முழுவதும் அம்பாளுக்கு மட்டுமே செய்யப்படுகிறது

பிரகாரத்தில் மங்கள விநாயகர் சுப்ரமணியர் சண்டிகேஸ்வரர் சன்னதிகள். முன் மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி சிறப்பு.

🪷 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

செவ்வாய் தோஷ நிவர்த்தி

திருமணத் தடை நீங்க

பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேர

மங்களப் பேறு மற்றும் மாங்கல்ய பாக்கியம்

கடன் நிவர்த்தி மற்றும் பதவி யோகம்

ரத்த சம்பந்தமான நோய்கள் நீங்க

🪷 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாசி மகம்

மாசி மாத செவ்வாய்க்கிழமைகள்

மஹா சிவராத்திரி

விநாயகர் சதுர்த்தி

நவராத்திரி

ஐப்பசி அன்னாபிஷேகம் ஆருத்ரா தரிசனம் & பிரதோஷம்

சிறப்பு.

🪷 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அம்பிகை அங்காரகன் சூரியன் விசுவாமித்திரர் கந்தர்வர்கள் சம்பந்தர், வள்ளலார், கருடன், வள்ளல் பண்ணன் முதலியோர்.

🪷அமைவிடம் நேரம் தொடர்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

• கும்பகோணம் ➡️ நாச்சியார்கோவில் ➡️ கூந்தலூர் ➡️ பூந்தோட்டம் வழித்தடத்தில் பயணிக்க வேண்டும்.

• இந்த வழியில் வரும் எரவாஞ்சேரி அல்லது கடகம்பாடி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள சிறுகுடி கோவிலுக்கு ஆட்டோ மூலம் செல்லலாம்

• மயிலாடுதுறை ➡️ திருவாரூர் நெடுஞ்சாலையில் உள்ள கொல்லுமாங்குடி என்ற ஊருக்கு வர வேண்டும்.

• கொல்லுமாங்குடியிலிருந்து திருப்பாம்புரம் வழியாகச் சிறுகுடி கிராமத்தை அடையலாம்.

7AM – 12NOON, 4PM – 8PM

93810 44986 கார்த்திகேயன் சிவாச்சாரியார்

95851 60660 முத்து சுப்பிரமணிய சிவாச்சாரியார்

🪷 கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திடமலி மதிலணி சிறுகுடி மேவிய

படமலி அரவுடை யீரே

படமலி அரவுடை யீருமைப் பணிபவர்

அடைவதும் அமருல கதுவே. 1

சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய

சுற்றிய சடைமுடி யீரே

சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்

உற்றவர் உறுபிணி யிலரே. 2

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *