கஞ்சனூர் அக்னீஸ்வரர்
மூலவர் : அக்னீஸ்வரர்
அம்பாள் : கற்பகாம்பாள்
ஸ்தல விருக்ஷம் : பலா, புரசு
தீர்த்தம் : அக்னி & பராசர தீ
பாடல் : அப்பர், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு வடகரை ஸ்தலம் 36.
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முதல்சிறப்பு நவகிரகங்களில் சுக்கிரனுக்கு உரிய தலம்
பராசரருக்கு சித்தபிரம்மை நீங்கிய தலம்
பிரம்மனுக்கு திருமணக் காட்சி கிடைத்த தலம்
அக்னிக்கு உண்டான சோகை நோய் தீர்ந்த தலம்
சந்திரனின் சாபம் நீங்கிய தலம்
கம்சன் எனும் மன்னனின் உடற்பிணி நீங்கிய தலம்
கலிகாமருக்கு திருமணம் நடந்த தலம்
மானகஞ்சரார் அவதரித்து வழிபட்ட தலம்.
பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய தலம்
ஹரதத்தர் சிவாச்சாரியார் (வைணவ குடும்பத்தில்) அவதாரத்தலம்.
மாண்டவ்ய மகரிஷியின் புத்திரர்களின் “மாத்ருஹத்தி” தோஷத்தை போக்கிய தலம்.
தேவர்களுக்கு சுக்கிரன் சாபம் போக்கிய தலம்
கஞ்சனூர் சப்தஸ்தானம் தலங்களில் ஒன்று.
சுக்கிரனுக்கு தனி சன்னதி உள்ளது..
சிவபெருமான் உயர்ந்த பானத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் ( சிலா ரூபமாக ) இருப்பது சிறப்பு.
இத்தலத்தின் ஈசன் பிரம்மனுக்கு திருமண கோலத்தைக் காட்டி அருளியதால் அம்மனை தன் வலபக்கம் கொண்டாடுகிறார்.
பராசர முனிவருக்கு சிவன் இங்கு தாண்டவக்கோலம் காட்டி முக்தி அருளினார்.
எனவே இங்குள்ள நடராஜர் “முக்தி தாண்டவ மூர்த்தி” என அழைக்கப்படுகிறார்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாபலியை காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரை காப்பாற்ற வேண்டும் என்ற குணம் கொண்டவர். இவரது அருள் பெற நவக்கிரஹ தலங்களில் கஞ்சனூர் செல்ல வேண்டும். நவகிரஹங்களில் சுக்கிரன் ஆறாவது கிரஹம் ஆவார்.
பிரம்மதேவரின் மானசபுத்ரன் ப்ருகு முனிவருக்கும் பிலோமிசைக்கும் மகன். So, பார்க்கவன். சிறந்த சிவ பக்தன்.
சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர்பிழைக்கச் செய்யும் “அமிர்தசஞ்சீவி” மந்திரத்தை கற்றவர். சிவபெருமானால் நவக்கிரஹம் சுக்கிரன் பட்டம் பெற்றவர். வெண்தாமரையுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார்
முதலை வாகனமும் உண்டு. அசுரர்களின் குரு, So Called as சுக்ராச்சாரியார்.
ஒருமுறை மஹாவிஷ்னுக்கு சுக்கிரச்சாரியாரால் சுக்கிரதோஷம் ஏற்பட்டது. இத்தோஷத்தை நீக்க மஹாவிஷ்ணு ஹரதத்தர் என்ற திருநாமத்துடன் இங்குள்ள சிவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார் என்கிறது புராணம். சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் சுக்கிரனுக்கு அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன சிவனை வழிபாடு செய்வது சிறப்பு.
சுரைக்காய் பக்தர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி சன்னதிக்குச் செல்லும் வழியில் சுரைக்காய் பக்தர் என்ற அடியவர் மனைவியுடன் காட்சி தருகிறார். இவர் சுரைக்காய் விற்று பிழைத்து வந்ததால் இப்பெயர். கையில் இருப்பதை எல்லாம் சிவ பக்தர்களுக்கு செலவழித்து விடுவார். ஒரு நாள் இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய் தான் எஞ்சி இருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார்.
அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அவர் செய்வதறியாது திகைத்தார். அதிதிகளுக்கு சுரைக்காய் ஆகாது என்று எண்ணி கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக
” ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு” என்று அருளிச் செய்ததை ஏற்று.. இவர் சமைக்க
அவருக்கு அருள் புரிந்தார் என வரலாறு..
கல் நந்தி
°°°°°°°°°°°°°°
ஒருமுறை பிராமண ஒருவர் எறிந்த புல் கட்டால் பசுவின் கன்று இறந்து தோஷம் உண்டானது. இவரை அனைவரும் விலக்கி வைத்ததால் ஹரதத்தரிடம் முறையிட்டார். இவர் பேசும் பொழுது ஹர்தத்தர் பஞ்சாட்சரம் சொல்லியவாரே சென்றார். சிவ பஞ்சாட்சரத்தை சொல்லியதால் அப்பாதகம் நீங்கியதாக கூறினார்.
பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்களுக்கு நேரடிச் சான்று தந்து நிரூபிக்குமாறு கூறினர். ஹரதத்தர் உடனே அந்த பிராமணரை அழைத்து, காவிரியில் நீராடி, ஒரு கைப்புல் எடுத்து வந்து, அந்தக் கல் நந்தியிடம் தருமாறு பணிந்தார்.
அப்பிராமணரும் அவ்வாறே செய்து, “கல்நந்தி புல் சாப்பிடுமானால், பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும்” என்று சொல்லி புல்லை தர, அந்நந்தியும் உண்டதாக வரலாறு.
ஸ்தல புராணம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முன்பு கஞ்சனூரில் வாசுதேவர் என்ற வைணவருக்கு பிறந்த குழந்தை சுதர்ஷனர். வைணவ குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது.
திருநீறு உருத்திராக்ஷதாரியாக திகழ்ந்த அக்குழந்தை எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் வைணவர்கள் சொல்லியவாறு பழுக்க காய்ச்சிய இரும்பு முக்காலி மீது அமர்த்த, குழந்தையோ, “சிவமே பரம்பொருள்” என்று மும்முறை கூறியதைக் கண்டு வியந்தனர். குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோவிலிலும், அக்னீஸ்வரர் கோவில் நடராஜர் சன்னிதியிலும் உள்ளது. இந்த பெருமாள் கோவிலிலும் அக்னிஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளி உள்ளனர்.
ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தக்ஷிணாமூர்த்தி அருகில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயரளித்து சிவ நாம தீட்சை செய்தார்.
ஒரு செல்வந்தரின் நைவேத்யத்தை ஏற்று தினமும் அவர் கனவில் உணவை உண்பது போல் காட்சி தருவார்.
ஒரு நாள் கனவு தோன்றவில்லை. அன்று அக்னீஸ்வரர் ஹரத்ததரிடம், ஏழை பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும், அதனால் வயிறு நிரம்பிவிட, செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். ஹரதத்தரின் பெருமையை அறிந்து, செல்வந்தர் அவரை நாடிச் சென்று வணங்கியதாக வரலாறு.
ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும், ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருஉருவமும் உள்ளன. ஊருக்குள் வரும்பொழுது அரச மரத்தின் எதிரில் கிழக்கு நோக்கி ஹரதத்தர் சிவ பூஜை செய்வது போல் உள்ள ஹரதத்தர் தனிக்கோவிலும் இத்தலத்தில் உள்ளது.
மஹாவிஷ்ணுவின் சுக்கிர சாபம் தீர்த்த தலம் இது.
அக்னீஸ்வரன்
°°°°°°°°°°°°°°°°°°°°°°
அக்னி ஒரு முறை பிரம்மதேவர் செய்த யாகத்தில் சேர்க்கப்பட்ட ஆகுதிகளை தேவர்களிடம் தராமல் தானே எடுத்துக் கொண்டதால், பாண்டு ரோகம் பிடிக்கப்பட்டு, இங்கு வந்து தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டு இறைவனால் சாப விமோசனம் பெற்று நோய் தீர்ந்தார். So, அக்னீஸ்வரர், அக்னி தீர்த்தம்…
அக்னிதேவனின் நோயால், ஆரம்பித்த யாகம் தடைபட்டதால் படைப்புத் தொழிலை துவங்க முடியாத பிரம்மதேவரும், இங்கு வந்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்து அவர் அருளால் படைப்புத் தொழிலை தொடங்கினார். இதனால் இத்தலத்தில் ஓடும் காவிரி நதிக்கு பிரம்மதீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுக்கிர தோஷம் நீங்க
களத்திர தோஷ நிவர்த்தி
நோய் மற்றும் மனநல நிவர்த்தி
செல்வம் மற்றும் ஐஸ்வர்யம் பெருக பிரார்த்தனை.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹா சிவராத்திரி
ஆருத்ரா தரிசனம்
நவராத்திரி
ஆடிப்பூரம்
ஹரதத்த சிவாச்சாரியார் குருபூஜை
சுக்கிர பெயர்ச்சி விழா
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுக்கிரன், மஹாவிஷ்ணு, அக்னி, சந்திரன், பிரம்மா, பராசர முனிவர், மாண்டவ்ய மகரிஷி, கலிக்காமர், அப்பர் சுந்தரர் சேக்கிழார்,விருத்தகாளகண்டன், சித்திரசேனன், மார்க்கண்டேயர், சுரைக்கா முனிவர் முதலியோர்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
2KM சூரியனார் கோவில்
3KM திருக்கோடிக்கா
4KM திருமங்கலக்குடி
4KM திருவாவடுதுறை
கும்பகோணம் மாயவரம் என அனைத்து இடத்தில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
7AM – 12NOON, 4PM – 8PM
97873 29460 அக்னீஸ்வரன் குருக்கள்
90435 40752 சண்முகம் குருக்கள்
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மூவிலைநற் சூலம்வல னேந்தி னானை
மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை
நாவலனை நரைவிடையொன் றேறு வானை
நால்வேத மாறங்க மாயி னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை
அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங்
காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. 1
திருநாவுக்கரசர்


Leave a Reply