ஆவூர் பசுபதீஸ்வரர்
மூலவர்: பசுபதீஸ்வரர், காவரடேஸ்வரர், அஸ்வத்தநாதர்
அம்பாள்: மங்களாம்பிகை, பங்கஜவல்லி
ஸ்தலவிருக்ஷம் : அரசு
தீர்த்தம்: பிரம்ம, காமதேனு, சந்திரா, அக்னி தீர்த்தங்கள்
பாடல் : சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 21.
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஐந்து பைரவர்கள் நின்ற வடிவில் சிவனை வழிபடுகின்றனர். எனவே இத்தலம் பஞ்ச பைரவ ஸ்தலம்.
முருகன் கையில் வில்லுடன் காட்சி தருகிறார்.
கோயில் பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாடக்கோயில்
கருவறையின் மேற்கூரை அழகிய மலை உச்சியை கொண்டிருப்பதால், இத்தலம் மணிக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.
வாயு கைலாசத்தில் இருந்து கொண்டு வந்த மலைத்துண்டு. (மற்றொன்று நல்லூர்)
சப்தரிஷிகள், கணங்கள் தேவர்கள், இயக்கங்கள், கந்தர்வர்கள் (All from வான் லோகம்) இந்திரன் சூரியன் நவகிரஹங்கள் விநாயகர் தசரதன்
சிவனை வழிபட்டு அருள் பெற்றனர்.
தர்மத்வஜன் என்ற மன்னன் புனித பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தொழுநோயிலிருந்து குணமடைந்தான்.
அவ்வூர்கிழார், மூலக்கிழார் பெருந்தலைச் சாத்தனார்
புகழ்பெற்ற தமிழ் புலவர்களின் பிறப்பிடம்.
ஸ்தல புராணம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காடாயிருந்த இவ்விடத்தில் பார்வதி தவம் செய்ய, தேவலோகத்தில் இருந்த அனைவரும் தாவரம் மற்றும் மரங்களாக இங்கேயே குடியேறினர். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமானும் ஜடாமுடியுடன் இங்கு காட்சி தருகிறார். So காவரடேஸ்வரர்..
பட்டி, தெய்வீகப் பசுவான காமதேனுவின் கன்று, இத்தலத்தின் மகிமையை அறியும் ஞானம் பெற்று, இங்கு வந்து, லிங்கம் செய்து, அதன் பாலால் அபிஷேகம் செய்து, சிவபெருமானை இத்தலத்திலேயே தங்கும் படி வேண்டிக் கொண்டது. இறைவனை பசு வழிபட்டதால் பசுபதீஸ்வரர்.
கோ வந்த குடி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வசிஷ்டரின் சாபம் பெற்ற காமதேனு, நாரதரின் அறிவுரையில், இங்கு வந்து பூஜை செய்து சாப நிவர்த்தி பெற்றது.
கோ = பசு, வந்த = வந்த, குடி = அரண்மனை.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்த மாடக்கோவில்
கோயிலின் திருச்சுற்றில் பல சன்னதிகளும், விசாலமான பிரகாரங்களும் உள்ளன.
உச்சிப் பகுதியில் உள்ள கருவறையில் மூலவரும், இத்தலத்தில் இறைவனுக்காக மங்களாம்பிகை (மங்களநாயகி) மற்றும் பங்கஜவள்ளி என இரண்டு அம்மன்கள் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்கள்.
இத்தலத்தில் நடராஜர் மற்றும் விநாயகர் சன்னதிகள் படிக்கட்டுகளுக்கு முன்னே அமைந்துள்ளன.கிழக்குப் பகுதியில் யாகசாலையும், நவகிரக சன்னதியும் உள்ளன.பிரதான சன்னதியை எதிர்கொள்ளும் மூலையில் பஞ்சபைரவர் (ஐந்து பைரவர்கள்) சிலைகள் காணப்படுகின்றன.முருகப்பெருமான் வில்லும் அம்பும் ஏந்தியிருக்கும் அபூர்வ கோலத்திலான சன்னதியும் இங்குள்ளது.
கோயிலின் கொடிமரத்தின் காமதேனு செய்த அபிஷேகம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நூற்றாண்டின் சோழர் கல்வெட்டுகள் உள்ளன.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மரண பயம் நீங்க பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள்.
திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறக்க பிரார்த்தனை.
பித்ரு தோஷ பரிகார ஸ்தலம்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹா சிவராத்திரி
ஐப்பசி அன்னாபிஷேகம்
திருவாதிரை
தேய்பிறை அஷ்டமி சிறப்புப் பூஜைகள் மற்றும் பிரதோஷம் சிறப்பு
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காமதேனு, பிரமன், சப்தரிஷிகள், தேவர்கள், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், வசிட்டர், தசரதன், சம்பந்தர், சேக்கிழார் ஆகியோர்.
அமைவிடம்,நேரம், தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணத்தில் இருந்து 12KM
கும்பகோணத்தில் இருந்து மெலட்டூர், திட்டை அல்லது திருக்கருகாவூர் செல்லும் சாலையில் பயணம் செய்து இத்தலத்தை அடையலாம். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஆவூர் செல்ல நகரப் பேருந்து (டவுன் பஸ்) வசதிகள் உள்ளன.
தஞ்சாவூரிலிருந்து மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் வந்து ஆவூரை அடையலாம்.
9AM – 12 NOON, 5PM – 7.30PM
79041 90049 & 94448 61548
M. பிச்சை குருக்கள்.
குருக்களை தொடர்பு கொண்டு விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
புண்ணியர் பூதியர் பூதநாதர்
புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்
கண்ணிய ரென்றென்று காதலாளர்
கைதொழு தேத்த இருந்தவூராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி
விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாட லறாதஆவூர்ப்
பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1


Leave a Reply