திருமாந்துறை ஆம்ரவனேஸ்வரர்

🏵️ மூலவர் : ஆம்ரவனேஸ்வரர்

அம்பாள் : பாலாம்பிகை

ஸ்தல விருக்ஷம் : மாமரம்

தீர்த்தம் : காவிரி & காயத்ரி நதி

பாடல் : சம்பந்தர்,

சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 58

🏵️ ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷சிவனை அழையாமல் தக்ஷன் நடத்திய யாகத்திற்கு சென்று வந்த சூரியன் தன் பாவம் தீர வழிபட்ட தலம்.

🌷திருவண்ணாமலையில் சிவனது முடியினை கண்டுவிட்டதாக பொய் கூறி சாபம் பெற்ற பிரம்மன் தன் சாபம் நீங்க வழிபட்ட தலம்.

🌷மிருகண்டு முனிவர் தவம் இருந்து மார்க்கண்டேயனை பெற்ற தலம்.

🌷ககோளர் மகன் மருந்தாந்தகன் என்ற மன்னன் மாத்ருகண தோஷம் நீங்க பெற்றது,

🌷இந்திரனுக்கு கௌதமர் சாபம் நீங்கியது,

🌷பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரிகார ஸ்தலம் என பல்வேறு சிறப்புகள்.

🏵️ ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பங்குனியில் மூன்று நாள் சூரிய பூஜை

🌷மாமரங்கள் நிறைந்திருக்கும் தலம் என்பதாலும், மானுக்கு அருள் புரிந்த சிவத்தலம் என்பதாலும் இத்தலம் மாந்துறை.

🌷இந்த வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்க சாபம் 👉 இதே வனத்திலேயே தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாகப் பிறந்த அசுர குல தம்பதியர்களுக்கு பிறந்தார்.

🌷 ஒரு நாள் குட்டிமானை விட்டுவிட்டு, தாய் மானும் தந்தை மானும் இரை தேடச் சென்ற போது வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவ பார்வதி அம்பால் சாப விமோசனம். இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது.

நேரம் ஆக ஆக மானுக்குப் பசி எடுக்கவே அது அலறியது. பசியால் வாடிய குட்டி மானுக்கு, அதனைப் பெற்ற மான் வடிவில் வந்து பார்வதி தேவி பால் புகட்ட, தந்தை வடிவில் சிவன் அதனை ஆற்றுப் படுத்தினார். சிவன் பார்வதி தரிசனம் பெற்ற குட்டிமான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரின் வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார்.

🌷மான்களாகப் பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு அங்காரக சதுர்த்தி அன்று விமோசனம் தந்ததாக ஐதீகம்.

🌷இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றது. இந்நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குறைவில்லாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

🏵️ ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷 தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகளாக சமுஞ்யா தேவி பிறந்தாள். பேரழகு கொண்டவளாக இருந்த அவளை சூரியன் மணந்து கொண்டார். அவள் சூரியனுடன் மிகுந்த அன்பு கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தாள். நாளுக்கு நாள் சூரியனின் உக்கிரம் அதிகரிக்கவே அவளால் வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் சூரியனிடம் முறையிட்டும் அவர் உக்கிரத்தை குறைக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் அவரது வெப்பத்தை தாங்கவே முடியாது என்ற நிலைக்கு வந்த சமுஞ்யாதேவி, தன் தந்தையிடமே வந்து விடுவதாக விஸ்வகர்மாவிடம் கேட்டாள்.

அவரோ மகளுக்கு ஆறுதல் கூறி சாந்தப்படுத்தினார். ஆனாலும் அவளால் கணவனின் உக்கிரத்தை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை எனவே கணவனை பிரிந்து செல்ல முடிவெடுத்தாள்.

🌷 தான் சென்று விட்டால் கணவன் மனம் வருந்துவார் என்று எண்ணிய அவள், தன்னில் இருந்து சற்றும் வித்தியாசம் காண முடியாத தன் நிழலில் ஒரு உருவத்தை உண்டாக்கினாள். அவளை தனக்கு பதிலாக சூரியனின் மனைவியாக இருந்து பணிவிடை செய்யும்படி பணித்தாள். இவள் சாயாதேவி. தந்தையிடமே வந்து சேர்ந்தாள்.

🌷தந்தையின் அனுமதி இல்லாமலேயே அவருடன் தங்கி இருந்ததால் மனம் கலங்கிய சமுஞ்யாதேவி குதிரை வடிவம் எடுத்து இத்தலம் வந்து தன் கணவனின் உக்கிரம் குறையவும் அவரது உக்கிரத்தை பொறுத்துக் கொண்டு மீண்டும் கணவனுடன் சேரவும் சிவனை வேண்டி தவம் செய்தாள்.

🌷இதனிடையே சாயாதேவியின் நடத்தையில் வித்தியாசத்தை கண்ட சூரியன் விஸ்வகர்மா மூலமாக தன் மனைவி பிரிந்து வந்ததை தெரிந்துகொண்டு அவரிடமே தன் உக்கிரத்தை குறைத்தார். பின் அவர் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு சமுஞ்யாதேவியுடன் மீண்டும் சேர்ந்தார். இதன் அடிப்படையில் இங்கு நவகிரக சன்னதியில் சூரியன் + சமுஞ்யா + சாயா இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. அருகிலேயே சூரியன் தனியாகவும் இருக்கிறார். இதர கிரஹங்கள் அனைத்தும் சூரியனை பார்த்தபடியே இருக்கிறது.

🏵️ ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சோழர் கால கட்டிடக்கலையுடன் கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம் 2 பிரகாரங்களுடன் கோவில். மூலவர் வலது புறம் அம்பாள் தனி சன்னதியில்.

வடமேற்கில் முருகன் சன்னதியும், வடகிழக்கில் துர்க்கை சன்னதியும், மற்றும் தாமரை பீடத்தில் செதுக்கப்பட்ட நவக்கிரக சன்னதியும் உள்ளன.

🏵️ பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பாலதோஷம் நீங்க

புத்திர பாக்கியம் பெற

மூலம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரப் பரிகாரம்

தோஷ நிவர்த்தி

🏵️ திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஐப்பசி அன்னாபிஷேகம்

திருக்கார்த்திகை தீபம்

வைகாசி ஆதிசங்கரர் ஜெயந்தி

பங்குனி உத்திரம்

மாசி மஹாசிவராத்திரி மற்றும்

பிரதோஷம் பௌர்ணமி சிறப்பு.

🏵️ வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரம்மன், இந்திரன், சூரியன் சமுஞ்யாதேவி, சாயாதேவி, மிருகண்டுமுனிவர், ஆதிசங்கரர்

அர்ஜுனன், சந்திரன், மான் வடிவில் முனிவர்,வசுவகேது மன்னன், மருந்தாந்தகன், அப்பர், சம்பந்தர், சேரமான் பெருமான், சேக்கிழார், ராமலிங்க அடிகளார், அருணகிரிநாதர் முதலியோர்.

🏵️அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருச்சி லால்குடி பேருந்துகளில் லால்குடிக்கு முன்னதாக உள்ள திருமாந்துறை நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.

சத்திரம் பேருந்து நிலையம்15KM

லால்குடி 4KM

7AM – 11.30AM, 4. 30PM – 7.30PM

99425 09993 சுப்பிரமணியம் குருக்கள்

90038 87944 சண்முகம் குருக்கள்

🏵️கோவில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

செம்பொ னார்தரு வேங்கையும்

ஞாழலுஞ் செருந்திசெண் பகம்ஆனைக்

கொம்பும் ஆரமும் மாதவி

சுரபுனை குருந்தலர் பரந்துந்தி

அம்பொன் நேர்வரு காவிரி

வடகரை மாந்துறை யுறைகின்ற

எம்பி ரானிமை யோர்தொழு

பைங்கழல் ஏத்துதல் செய்வோமே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *