வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர்
மூலவர் : தயாநிதீஸ்வரர்
உற்சவர் : குலை வணங்கி நாதர்
அம்பாள் : ஜடாமகுட நாயகி ஸ்தல விருக்ஷம் : தென்னை
தீர்த்தம் : காவிரி
புராணப்பெயர் : கபிஸ்தலம், ஆடுதுறை பெருமாள் கோவில்
பாடல் : சம்பந்தர், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 49
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கர்ப்பிணிப் பெண்கள் வணங்க வேண்டிய கோவில்.
கார்த்திகையில் அம்பிகையை பெண்கள் 1008 முறை சுற்றி வருவது விசேஷ அம்சமாகும்.
பங்குனி உத்திரம் நவராத்திரி விழாக்கள் சிறப்பாக நடக்கிறது.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கர்ப்பமான பெண்களை பொதுவாக கோவிலுக்கு சொல்ல வேண்டாம் என சொல்வதுண்டு. இக்கோவிலுக்கு முக்கியமாக கர்ப்பிணி பெண்களை வருகிறார்கள். இக்கோயிலில் சிவபெருமான் கர்ப்பிணிக்கு அருள் செய்ததால், இந்த தளத்திற்கு வந்தால் சுகமான பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கை. நவராத்திரி காலத்தில் மஹாலக்ஷ்மியை வழிபடுவதன் மூலம் செல்வ செழிப்பு கூடும்.
துர்கையின் சிறப்பு
இங்கு விஷ்ணு துர்க்கை கையில் சங்கு சக்கரத்துடன் அருள் பாலிக்கிறாள். 8 முதல் கொண்ட இந்த துர்க்கைக்கு பாலாபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக காட்சி அளிக்கிறது.
வேறு எந்த துர்க்கை தளத்திலும் இம்மாதிரியான அதிசயம் நிகழ்வதாக தெரியவில்லை. நவராத்திரி காலத்தில் இந்த அதிசய துர்க்கையை வழிபடுவதன் மூலம் மனதில் தைரியம் அதிகரிக்கும்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவபெருமான் தனது லீலைகளை பல இடங்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். வாலிக்கு வால் வளர அருள் செய்த இடமே குரங்காடுதுறை ஆகும். வாலிக்கு வால் அறுந்து போனது எப்போது என கேள்வி எழலாம். வாலியைக் கண்டு ராவணனே நடுங்கி இருக்கிறான். அவனை வாலால் அடிக்கும் பொழுது ஒருவேளை வால் அறுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தனது வால் வளர அவன் இங்கு சிவனை வணங்கினான். குரங்காடுதுறை தளத்திற்கு வந்து சிவனை வழங்கியதால் அவனது வால் வளர்ந்தது. இங்கு சிவன் தயாநிதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அம்பாள் ஜடாமகுட நாயகி.
சிட்டுக்குருவி ஒன்றுக்கும் சிவபெருமான் மோக்ஷம் அளித்துள்ளார். எனவே இவர் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். தயாநிதி என்ற பெயருக்கு ஏற்ப கருணை மழை பொழிந்துள்ளார்.
செட்டிப்பெண் எனப்படும் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தாகம் தாளாமல் இக்கோவில் வழியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் தாகத்தால் இறந்து விடுவாளோ என்ற நிலைமை ஏற்பட்டது. சுற்றிலும் எங்கும் தண்ணீர் இல்லை. அவள் உயிர் போகும் தருணத்தில் அங்கிருந்த சிவலிங்கத்தை வணங்கினாள். சிவபெருமானே அங்கு தோன்றி அருகில் இருந்த தென்னை மரத்தை வளைத்து இளநீரை பறித்து கொடுத்தார். அந்தப் பெண் தாகம் நீங்கினாள். எனவே இறைவனுக்கு குலை வணங்கிநாதர் என்ற பெயரும் உள்ளது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.
தெற்குக் கோஷ்டத்தில் வழக்கமான தக்ஷிணாமூர்த்திக்கு பதிலாக, சனகாதி முனிவர்கள் மட்டுமின்றி கந்தர்வர்களும் கிம்புருடர்களும் சேர்ந்து மொத்தம் எட்டு பேர் அமர்ந்துள்ள ஆதி மௌன குரு தக்ஷிணாமூர்த்தி உள்ளார். பின்புறக் கோஷ்டத்தில் வழக்கமான லிங்கோத்பவருக்கு பதிலாக அரிதாக அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
துர்க்கை அம்மன் அஷ்டபுஜ துர்க்கையாக (8 கரங்கள்) காட்சியளிக்கிறாள்
கிழக்குச் சுற்றில் சனி பகவான், பைரவர், சூரியன், நாகர் ஆகியோருக்கு அடுத்தபடியாக நால்வருக்குப் பதிலாக தேவார மூவர் மட்டும் அருள்கிறார்கள். தொடர்ந்து எந்தப் பெண்ணுக்காக தென்னங்குலையை சிவனார் வளைத்தாரோ, அவளின் சிலையையும் காணலாம்.
கருவறைக்குச் செல்லும் வழியில் முகமண்டபத்தில் தூண் சிற்பங்கள் கருத்தைக் கவர்கின்றன. வலப் பக்கத்தூண் ஒன்றில், சிவலிங்கத்தை வழிபடும் கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்கிறார். அனுமன், சிவலிங்க வழிபாடு செய்த ஐந்து முக்கிய சிவத்தலங்களில், வடகுரங்காடு துறையும் ஒன்று. இந்தத் தூண் ஆஞ்சநேயர்- பிரார்த்தனா மூர்த்தியாகத் திகழ்கிறார். இவரிடம் என்ன நேர்ந்து கொண்டாலும், உடனடியாக நிறைவேற்றி வைப்பாராம்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமணத் தடை நீங்க
சந்தான பிராப்தி (குழந்தைப் பேறு)
சுகப்பிரசவம்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பங்குனி உத்திரம் / பிரம்மோற்சவம்
மஹா சிவராத்திரி
நவராத்திரி
திருகார்த்திகை
ஐப்பசி அன்னாபிஷேகம்
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வாலி அனுமன் சிட்டுக்குருவி சம்பந்தர் அப்பர் சேக்கிழார்
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணம் திருவையாறு நடுவில் உள்ளது. கும்பகோணம் உமையாள்புரம் கபிஸ்தலம் தாண்டி உள்ளிக்கடை வடகுரங்காடுதுறை. இரண்டு பக்கத்தில் இருந்தும் நிறைய பேருந்து, ஆட்டோ வசதிகள் உண்டு.
8AM – 12NOON 4PM – 7PM
96887 26690 ராஜு குருக்கள்
குருக்களை அழைத்துவிட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோங்கமே குரவமே கொழுமலர்ப்
புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா
திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி அடிகளா
ரிடமென விரும்பினாரே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply