திரு விஜயமங்கை விஜயநாதேஸ்வரர்

👑மூலவர் : விஜயநாதேஸ்வரர், விஜயநாதர்

அம்பாள் : மங்களநாயகி மங்களாம்பிகை

ஸ்தல விருக்ஷம் : வில்வம்

தீர்த்தம் : அர்ஜுன தீர்த்தம், மண்ணியாறு, கொள்ளிடம்

பாடல் : அப்பர் சம்பந்தர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 47

👑 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹அப்பர் பெருமான் கொள்ளிடம் நதியில் வெள்ளம் பெருகியதால் ஆற்றின் கரையில் இருந்தே பதிகம் பாடினார். அதைக் கேட்க விநாயகரும் முருகனும் தெற்கு நோக்கித் திரும்பினர். இதனால் இங்குள்ள விநாயகரும் முருகனும் தெற்கு நோக்கியே காட்சியளிக்கின்றனர்.

🌹அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம். இறைவன் சதுர ஆவுடையார் மீது அருள் பாலிக்கிறார்.

🌹அர்ஜுனனுக்கு விஜயன் எனும் பெயர் உள்ளதால், சிவன் விஜயநாதர் என்றும், தலம் திருவிஜயமங்கை என்றும் பெயர் ஏற்பட்டது.

👑 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹காமதேனுவின் மகளான நந்தினி என்ற பசு, இத்தல சிவலிங்கத்தின் மீது தானாகவே பாலைச் சொரிந்து வழிபட்டதால் இவ்வூருக்கு கோவந்தபுத்தூர் என்ற பெயரும் உண்டு.

🌹திருநாவுக்கரசர் தனது பதிகத்தில் எமனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு பாடியுள்ளார். இதனால் ஆயுள் விருத்தி ஆயுள் தோஷம் நோயில் பாதிக்கப்பட்டோர் குணமடைய இங்கு வேண்டுதல்.

👑 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹மஹாபாரத காலம். அர்ஜுனன் சோர்ந்து போய் உட்கார்ந்து இருக்கும்பொழுது பகவான் கிருஷ்ணர் பக்கத்தில் வந்து எல்லா அஸ்திரங்களையும் உனது பிதாவான தேவேந்திரன் இடமிருந்து வாங்கிக் கொண்டு விட்டாய். இன்னும் ஒரு அஸ்திரம் வாங்கிக் கொண்டால் கவலைப்பட வேண்டாம். அதற்கு பெயர் “பாசுபதம்”. சிவபெருமானிடம் இருக்கிறது. சிவ பூஜை பண்ணி நீ பெறலாம். ஆகவே சிவ பூஜை செய்வதற்கான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து சிவஆராதனை செய். உன்னுடைய கலக்கம் நீங்கும்.

🌹எங்கெல்லாமோ சுற்றி திரிந்து கடைசியில் தில்லை வனமாக இருக்கக்கூடிய இந்த பகுதிக்கு வந்தவுடனே அர்ஜுனன் மனது சாந்தமாயிற்று. ஆகவே இங்கேயே வெகு காலம் ஒற்றைக் காலில் – ஒரு கால் பூமியில், ஒரு கால் மடக்கி, கைகளை தலைக்கு மேலே தூக்கி வைத்து பஞ்சாட்சர மந்திரத்தால் இறைவனை வழிபட்டு பூஜித்து வருகிறான்.

🌹இந்த அகோர தவம் எதற்காக என துரியோதனன் பார்த்தான். இவன் ஏதாவது அஸ்திரம் பெற்றுவிட்டால் என்ன செய்வது என்று மூகாசுரன் எனும் ஒரு அசுரனை பன்றியின் வடிவத்தை எடுத்துக்கொண்டு இவனை ஹிம்சை செய்ய அனுப்பினான். இரவு பகல் என கடின தபஸ் செய்யும் அர்ஜுனனுக்கு அருள் புரிய வேடன் வேட்டுவச்சி வடிவம் தாங்கி (கிராதரூபம்) இறைவனும் இறைவியும் இறங்கி வரும் பொழுது பன்றியை கண்டார்கள்.

🌹சிவபெருமான் தன்னுடைய அம்பை அடித்தார். அதே நேரத்திலே அர்ஜுனனும் அடித்தான். இருவருடைய அம்பும் பட்டது. பன்றியும் கீழே விழுந்தது. யார் அடித்ததால் பன்றி இறந்தது என இருவருக்கும் வாக்குவாதம், கைச்சண்டை, மல்யுத்தம் வெகு நேரம். அர்ஜுனனின் வில் முறிந்தது. கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது.

🌹உமயம்பிகைக்கு கோபம் வந்தது. சிவபெருமான்- சற்குணா! அமைதியுறு!! நீ கோபம் கொண்டால் உலகம் தாங்காது. கொஞ்ச நேரம் அர்ஜுனனுடன் விளையாடினேன் என சமாதானப்படுத்த, தன் தவறை உணர்ந்த அர்ஜுனன் சிவனைப் பணிந்து பாசுபதாஸ்திரம் பெற்றான்.

👑 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹சோழர் காலம் முறைப்படி கட்டப்பட்ட கோவில். ராஜகோபுரம் கொடிமரம் இல்லை. இங்கு மூலஸ்தான கோபுரம் பெரியதாகவும், நுழைவு வாயில் சிறியதாகவும் உள்ளன. மூலவர் கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கிறார்கள். அம்பாள் நான்கு திருகரங்களுடன், முன்னிரு கரங்களின் அபய முத்திரையும் பின்னிரு கரங்களில் அட்சரமாலை நீலோற்பல மலருடன் அருள்கிறார். கோவிலுக்கு வெளியே அர்ஜுன தீர்த்தம். பிரகாரத்தில் அணுக்கை விநாயகர் சண்டிகேஸ்வரர் காலபைரவர் சூரியன் நால்வர் உள்ளனர். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி. அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகனை பாடியுள்ளார்.

👑 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தோல் நோய்கள் தீர

உடல் கட்டிகள் கரைய

திருமணத்தடை நீங்க

சந்திர தோஷம் நீங்க

நீண்ட ஆயுள் பெற பிரார்த்தனை

👑 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாசி மஹாசிவராத்திரி

திருக்கார்த்திகை

பங்குனி திருக்கல்யாணம்

👑 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அர்ஜுனன் காமதேனு அப்பர் சம்பந்தர் சேக்கிழார் முதலியோர்

👑அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கும்பகோணத்தில் இருந்து திருவைகாவூர் செல்லும் பேருந்துகளில் ஏறி இத்தலத்தை அடையலாம்.

திருப்புறம்பியம் 3KM

இன்னம்பூர் 7KM

திருவைகாவூர் 6KM

7AM – 12NOON, 5PM – 8PM

88258 11973 பாபு குருக்கள்

97894 09069 கோவில் மெய்காவல் எண்

கிராமத்து கோவில், ஒருகால பூஜை, குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

👑 கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மருவமர் குழலுமை

பங்கர் வார்சடை

அரவமர் கொள்கையெம்

அடிகள் கோயிலாங்

குரவமர் சுரபுன்னை

கோங்கு வேங்கைகள்

விரவிய பொழிலணி

விசய மங்கையே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *