இலுப்பைபட்டு பழமண்ணிப்படிக்கரை நீலகண்டேஸ்வரர்

🌼மூலவர் : நீலகண்டேஸ்வரர், படிகரைநாதர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், மகதீஸ்வரர்

அம்பாள் : அமிர்தவல்லி, மங்களாம்பிகை,

ஸ்தல விருக்ஷம் : இலுப்பை

தீர்த்தம் : பிரம்ம, அமிர்த தீர்த்தம் மண்ணியாறு

புராணப் பெயர் :

பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை

ஊர் : இலுப்பைபட்டு

பாடல் : சுந்தரர், சுயம்பு தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு வடகரை ஸ்தலம் 30

🌼ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இங்கு தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பஞ்சலிங்கங்கள் உள்ளது.

🌼 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கணவனை காத்த அம்பாள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பாற்கடலை கடைந்தபோது, வாசுகி பாம்பு களைப்பில் விஷத்தை கக்கியது. தேவர்களை காப்பதற்காக விஷத்தை சிவன் விழுங்கினார். அவ்விஷம், சிவனின் உடம்பில் சேராமல் இருப்பதற்காக அம்பாள், சிவனுக்கு பின்புறமாக இருந்து அவரது கண்டத்தை (தொண்டைக்குழி) பிடித்து நிறுத்தினாள். விஷம் கழுத்திலேயே தங்கியது. இதன் அடிப்படையில் இத்தலத்தில் சிவன் சன்னதிக்கு பின்புறம் அமிர்தவல்லிக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அமிர்தத்தில் கலந்திருந்த விஷத்தை நிறுத்தியவள் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். கணவனை காத்த அம்பாள் என்பதால் இவளிடம் வேண்டிக்கொண்டால் பெண்களுக்கு கணவன் மீது பாசம் அதிகரிக்கும், தீர்க்க சுமங்கலிகளாக வாழலாம் என்பது நம்பிக்கை. இவள் தன் இடது கையால் பாதத்தை காட்டியபடி அருளுவது சிறப்பு

🌹நளன் வழிபாடு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஐந்து மூர்த்திகளும் மூலவராக இருந்தாலும், நீலகண்டேஸ்வரர், படிகரைநாதர் இருவரும் பிரதான மூர்த்திகளாக வணங்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிரில் மட்டுமே நந்தி இருக்கிறது. சகாதேவன் வழிபட்ட முத்துகிரீஸ்வரர், தெற்கு நோக்கி இருக்கிறார். சாஸ்திரம், ஜோதிடம் கற்பவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கின்றனர். சனிபகவானால் பிடிக்கப்பட்ட நளமகாராஜன், ஏழரைச்சனியின் முடிவு காலத்தில் சிவதலங்களுக்கு சென்று தரிசித்து வந்தார். திருக்கடையூர் செல்லும் முன்பு அவர் இத்தலத்தில் பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்தார். அப்போதே தனக்கு சனியின் ஆதிக்கம் குறைந்திருப்பதை உணர்ந்து கொண்டாராம். எனவே, இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் ஆதிக்கம் குறையும் என்பது நம்பிக்கை.,

🌼 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, இங்கு சிலகாலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள், இங்கு தேடிப்பார்த்தும் லிங்கம் கிடைக்க வில்லை. எனவே, அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில், இலுப்பைக்காயில் விளக்கேற்றி சிவனை மானசீகமாக (மனதில் நினைத்து) வணங்கினர். சிவன் அவர்கள் ஐந்து பேருக்கும் தனித்தனி மூர்த்தியாக காட்சி தந்தார். அவர்கள் சிவனிடம், தங்களுக்கு அருளியதைப் போலவே இங்கிருந்து அருள் செய்ய வேண்டுமென வேண்டிக்கொண்டனர். சிவனும் ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளினார். தற்போதும் இக்கோயிலில் ஐந்து லிங்கங்கள் தனித்தனி சன்னதியில் இருக்கிறது.

🌹பஞ்சலிங்க தலம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பொதுவாக சிவன் கோயில்களில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பார். அரிதாக சில தலங்களில் இரண்டு மூலவர்கள் இருப்பர். ஆனால், இங்கு ஐந்து சிவன் தனித்தனி சன்னதிகளில் இருக்கிறார். தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர், அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர், பீமனால் வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர், நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன், சோடஷலிங்கமாக, 16 பட்டைகளுடன் இருக்கிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

🌼ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

5 ஐந்து நிலை கோபுரம், பிரகாரத்தில் திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகர் இருக்கிறார். இவர் அருகே இடம்புரி விநாயகரும் இருக்கிறார். ஒரே நேரத்தில் இந்த இரட்டை விநாயகர்களை தரிசனம் செய்வது விசேஷம். கோவிலுக்கு எதிரே வெளியில் விஜய விநாயகர் உள்ளார். இவரிடம் வேண்டிக் கொண்டால் அனைத்து செயல்களும் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை. 5 மூலவர், 2 அம்பாள், 2 விநாயகர் தவிர தட்சிணாமூர்த்தி லிங்கோதவர் அஷ்டபுஜ துர்கை சண்டிகேஸ்வரர் கஜலட்சுமி சனீஸ்வரர் மற்றும் மாதவிதியில் பைரவரும் சூரியனும் அருள் பாலிக்கின்றனர். இங்கு நடராஜர் 10 கைகளுடன் காலையின் மீது நின்றபடி காட்சி தருகிறார் சுற்றிலும் தேவர்கள். தக்ஷிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழே காளையின் மீது அமர்ந்திருப்பதை காணலாம். அவரது இடது காது வலது காதை இணைக்கும் ஒரு துளைஉள்ளது

அருணகிரிநாதர் திருப்புகழில் முருகனை போற்றி பாடியுள்ளார்

இலுப்பை மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் இத்தலம் இலுப்பைபட்டு என பெயர் பெற்றது. கோவில் மண்ணியாறு ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. ஆகவே

திருப்பழமண்ணி படிக்கரை. மதுகாவனம் என்பது வேறு பெயர்கள். 3KM from திருவாளபுத்தூர்.ராஜராஜ சோழன் விஜயநகர மன்னர்கள் கல்வெட்டுகள் உள்ளன. திருவாவடுதுறை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ளது.

🌼 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தோஷம் நீங்க,

கல்வி மற்றும் ஞானம் பெற,

செல்வம் பெருக,

நோய்கள் நீங்குவதற்கு, பணியில் சிறப்பிடம் பெறுவதற்கு இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். பதினாறு பேறுகளும் பெற சோடஷலிங்க சன்னதியில் வழிபடுகிறார்கள்.

🌼 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சித்ரையில் 10 நாள் பிரம்மோற்ஸவம்,

மஹாசிவராத்திரி, திருக்கார்த்திகை

ரேவதி நட்சத்திரம் சிறப்பு வழிபாடு.

🌼 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரமன், மாந்தாதா, பாண்டவர்கள், திரௌபதி,

நளன், சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார் முதலியோர்.

🌼அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாயவரம் 10KM., மணல்மேடு பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து சுமார் 1 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

வைத்தீஸ்வரன் கோயில் திருப்பனந்தாள் சாலையில், மணல்மேடு பஞ்சாலைத் தாண்டி பாப்பா குடியில் வலப்புறம்.

7AM – 11AM 4PM – 7PM

புதிய குருக்கள் செந்தில்

63816 61407 செல்வம் மணியம்

🌼 கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

முன்னவன் எங்கள்பிரான்

முதற்காண்பரி தாயபிரான்

சென்னியில் எங்கள்பிரான்

திருநீலமி டற்றெம்பிரான்

மன்னிய எங்கள்பிரான்

மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்ப்

பன்னிய எங்கள்பிரான்

பழமண்ணிப் படிக்கரையே. 1

சுந்தரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *