எதிர்கொள்பாடி ஐராவதேஸ்வரர்

🌺மூலவர் : ஐராவதேஸ்வரர்

அம்பாள் : சுகந்தகுந்தளாம்பிகை

ஸ்தல விருக்ஷம் : பன்னீர் மரம்

தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்

புராண பெயர் : எதிர்கொள்பாடி, மேலைத்திருமணஞ்சேரி.

பாடல் : சுந்தரர், சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் சோழ நாட்டு காவிரி வடகரை தலம் 24

🌺ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பரத முனிவர் வழிபட்ட பரதலிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது.

ஐராவதம் யானை வழிபட்டதால் இங்குள்ள கர்ப்பக்கிரகம் யானை சுற்றும் அளவிற்கு மிகவும் பெரிதாக உள்ளது & சுவாமி ஐராவதேஸ்வரர் .

மருமகனுக்கு வரவேற்பு :

இக்கோயிலில் பிரம்மோற்ஸவம் கிடையாது. இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் உள்ள திருமண தலமான திருமணஞ்சேரியில் கல்யாண சுந்தரருக்கு சித்திரை மாதம் திருக்கல்யாணம் நடக்கும். மாப்பிள்ளை கோலத்தில் அவர் எதிர்கொள்பாடி கோயிலுக்கு எழுந்தருள்வார். அவரை கோயில் அர்ச்சகர் தன்னை அம்பாளின் தந்தை யாகப் பாவித்து, பூர்ணகும்ப மரியாதை கொடுத்து வரவேற்பார். மருமகனுக்குரிய நியாயமான சீரும் தருவார். இந்த உபசரிப்பை ஏற்றபின்பு, சுவாமி திருமணஞ்சேரிக்கு மீண்டும் சென்று, அம்பிகையை மணந்து கொள்வார்.

இந்திரனும் இழந்த பொன், பொருள், பதவியை பெற்றான்.

வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே! அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே’ என்று பாடி அனைவரையும் சுந்தரர் இந்த கோயிலுக்கு அழைக்கிறார். அந்த அழைப்பை நாம் ஏற்றால் தோழனின் மகிழ்ச்சியை காணும் சிவன் நமது குறைகளை போக்கி அருள்புரிவார்.

திருமண வரவேற்பை இத்தலத்தில் நடத்தினால், தம்பதியர் நலம் பலபெற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.

சுவாமி சன்னதி கோஷ்டத்தில் தாமரை பீடத்தின் மீது துர்க்கை காட்சி தருகிறாள்.

🌺ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சிவனுக்கு அணிவிக்கப்பட்ட தாமரை மலரை கைகளில் ஏந்தியபடி தேவலோகத்தில் துர்வாச முனிவர் வந்தார். அசுரர்களை வென்ற இந்திரனுக்கு பரிசாக அளித்தார். இந்திரன் அதை அலட்சியப்படுத்தினான். இதனால் கோபம் கொண்ட முனிவர் பாண்டிய மன்னன் எறியும் கைவளையால் இந்திரனின் முடி சிதறுமாறு சாபமிட்டார். பதறிப்போன இந்திரன் மன்னிப்பு கேட்க, இந்திரனின் தலைக்கு வருவது முடியோடு கழியும் என்று சாபவிமோசனம் தந்தார்.

தாமரை மலரை புறக்கணித்ததில் இந்திரனின் ஐராவத யானைக்கும் பங்குண்டு. துர்வாசரால் சபிக்கப்பட்ட யானை பூமிக்கு வந்து பல இடங்களில் சுற்றி திரிந்தது. பல தலங்களில் பூஜையும் செய்தது. கடைசியாக இத்தலத்திற்கு வந்து இறைவனை பூஜித்து துயரம் நீங்கியது. எனவே இங்குள்ள இறைவன் “ஐராவதேஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார்.

🌺ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருவேள்விக்குடியில் யாகம் வேள்வி உள்ளிட்ட திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கேள்விகள் முடிந்ததும் தான் குடியிருக்கும் மேல திருமணஞ்சேரிக்கு வர இறைவனுக்கு அழைப்பு விடுத்தார். இறைவனும் ஒப்புக் கொண்டார். இறைவனும், அம்மையும் வருகிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும். பிரமாதமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டார். மணக்கோலத்தில் வந்த தெய்வத்தம்பதியினரை பரதமுனிவர் எதிர்கொண்டு அழைத்தார். இதனால் இத்தலம் “எதிர்கொள்பாடி’ என அழைக்கப்பட்டது. தற்போது “மேலக்கோயில்’ என்று அழைக்கிறார்கள்.

பரத்வாஜ மஹரிஷி ( பரத முனிவர்) தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் அடைந்த போது, சிவனிடம் அவளை மணந்து கொள்ளும்படி வேண்டினார் மஹரிஷி. சிவனும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வெளியே வந்து வரவேற்பது நம் கலாசாரம். பரத்வாஜரும் மாப்பிள்ளையாக வந்த சிவனை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதையை ஏற்ற சிவன், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் தலத்திற்கு எதிர்கொள்பாடி என்றும், சுவாமிக்கு திருஎதிர் கொள்பாடி உடையார் என்றும் பெயர் உண்டானது.

🌺 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

5 நிலை, கிழக்கு நோக்கிய ராஜகோபுரம், பண்டைக் காலத்தில் மல்லப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. நுழைந்ததும் கொடிமரம் நந்தி பலிபீடங்கள், அடுத்துள்ள முன் மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சன்னதி உள்ளது. மிகச்சிறிய திருமேனி – சுகாசனத்தில் அமர்ந்த திருக்கோலம். “சுகந்த குந்தளாம்பிகை’ என்ற “மலர் குழல் நாயகி’.

நேரே மூலவர் தரிசனம்.

உள்பிராகாரத்தில் நால்வர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, காலபைரவர், சனீஸ்வரன் சன்னதிகள். கோஷ்டத்தில் பிட்சாடனர், பாலகணபதி, நடராசர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, ராகு, துர்க்கை, கங்காவிசர்ஜனர் மூர்த்தங்கள் உள்ளன.

கருணை அம்பிகை: காவிரியின் வடகரையில் அமைந்த இக்கோயிலில்,சிவன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலத்து அம்பாள் மலர்க்குழல்நாயகிக்கு பெருங்கருணை பிராட்டியார் என்றும் பெயருண்டு. நீண்ட நாட்களாக வரன் அமையாமல் இருப்பவர்கள் மீது கருணை கொண்டு, நல்ல வரன் அமைய அருளுபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர்.

🌺 பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பொருளை பறி கொடுத்தவர்கள், பதவி பறி போனவர்கள் இங்கு வழிபட்டால் மிகவும் சிறப்பு. திருமணம் நடைபெறாமல் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால், இந்திரன், ஐராவதத்தின் சாபம் நீக்கியது போல் இவர்களையும் காத்து அருள்புரிவான். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வது மிகவும் சிறப்பு.

மகளுக்காக பிரார்த்தனை : பெண்ணைப் பெற்றவர்கள் வரன் பார்க்கும் முன்பு, நல்ல மாப்பிள்ளை அமைய இங்கு மகளை அழைத்து வருகிறார்கள்.

மாப்பிள்ளை மற்றும் அவரது வீட்டாருடன் மனக்கசப்பு உள்ளவர்களும் இங்கு பூஜை நடத்துகின்றனர். மகளின் வாழ்க்கை நன்றாக அமைய பெற்றோர் வழிபட வேண்டிய தலம் இது.

🌺 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சித்திரையில் இந்திர விழா, கார்த்திகை சோமவாரம், மார்கழியில் திருவாதிரை

மாசி மஹா சிவராத்திரி

🌺அமைவிடம்,நேரம்,தொடர்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ளது குத்தாலம். இங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் திருமணஞ்சேரி செல்லும் வழியில் உள்ளது எதிர்கொள்பாடி. இத்தலத்திற்கு மயிலாடுதுறையிலிருந்தும், குத்தாலத்திலிருந்தும் பஸ்வசதி உள்ளது.

திருமணஞ்சேரி அருகிலேயே உள்ளது < 1 KM.

8AM – 11AM, 4PM – 6.30PM

76399 83570 செந்தில்குமார் சிவாச்சாரியார்

🌺கோவில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மத்த யானை ஏறி மன்னர்

சூழவரு வீர்காள்

செத்த போதில் ஆரும் இல்லை

சிந்தையுள் வைம்மின்கள்

வைத்த உள்ளம் மாற்ற வேண்டா

வம்மின் மனத்தீரே

அத்தர் கோயில் எதிர்கொள் பாடி

என்ப தடைவோமே. 1

சுந்தரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *