திரு நீடூர் சோமநாதர் அருட்சோமேஸ்வரர்

🌼மூலவர் : சோமநாதர் அருட்சோமேஸ்வரர்

அம்பாள் : வேயுறு தோளியம்மை,

ஆதித்ய அபய பிரதாம்பிகை ஸ்தல விருக்ஷம் : மகிழம்

தீர்த்தம் : 9 தீர்த்தம் இந்திர சந்திர வருண செங்கழு நீரோடை பத்ரகாளி பருதிகுண்டம் etc

ஆகமம் : காரண ஆகமம்

பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்

தேவார பாடல் பெற்ற சிவாலயம் 75, சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 21

🌼 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹ஊழிக்காலத்திலும் இத்தலம் அழியாது நீடித்திருக்கும். ஆதலால் இத்தலம் நீடூர்.

🌹கிருத யுகத்தில் இந்திரன், திரேதா யுகத்தில் சூரியன், துவாபர யுகத்தில் பத்ரகாளி, கலியுகத்தில் நண்டு பூஜித்து பேறு பெற்றனர்.

🌹முனையடுவார் நாயனார் அவதார முக்தி ஸ்தலம். இவர் திருமேனி கோவிலில் உள்ளது.

🌹இந்திரன் சிவனின் நடன தரிசனம் வேண்டி, இத்தலத்தில் பூஜித்து பாடிய போது மகிழ்ந்த சிவன், அவனுக்கு நடனக்காட்சி அருளினார். எனவே இவருக்கு “கான நர்த்தன சங்கரன்” என்ற பெயர் உண்டு. மூல லிங்கத்தில் இந்திரனின் விரல் தடம் இருப்பதை இப்போதும் காணலாம்.

🌹இங்கு ஓடும் காவிரிக்கு பொன்னி எனும் பெயர் வரக் காரணமே, சுவாமி இங்கு பொன்னாக மாறியதால் தான்.

🌼ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 நண்டு துவார லிங்கம் :

தன்மசுதன் எனும் அசுரன் முன்வினைப் பயனால் அடுத்த பிறவியில் நண்டாக பிறந்தான்.

அவன் தன் பாவங்களுக்கு விமோசனம் பெற நாரதரிடம் ஆலோசனை கேட்டான். அவர் இத்தலத்தில் வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி தன்மசுதன் இங்கு வந்து நீராடி (காவிரியில்), சிவனை வழிபட்டான். சிவன் அவனுக்கு காட்சி தந்து ஆசி வழங்கி தாக்குல் ஐக்கியமாவதற்கு வசதியாக லிங்கத்தில் துளையையும் ஏற்படுத்திக் கொடுத்தார். நண்டு வடிவில் இருந்த அசுரன், லிங்கத்துக்குள்ளே சென்று ஐக்கியமானான்.

நண்டு சென்ற துளை தற்போதும் லிங்கத்தில் உள்ளது.

ஆடி மாத பௌர்ணமி தினத்தில் இங்கு சிவனுக்கு கற்கட பூஜை நடக்கிறது. மேலும் இங்கு சுவாமிக்கு காராம் பசு பாலில் 21 லிட்டர் அபிஷேகம் பண்ணினால் நண்டு வெளியில் வந்து தரிசனமோ காட்சியோ கொடுக்குமாம். அப்பேர்ப்பட்ட விசேஷமான ஸ்தலம்.

🌹சூரியன் வழிபட்ட அம்பாள் :

அம்பாள் வேயுறு தோளியம்மை, சூரியன் வழிபட்டுள்ளார் எனவே ஆதித்ய அபய வரதாம்பிகை என பெயர். இவ்வளவு சன்னதி முன் மண்டபத்தில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனியே இருக்கிறார். ஒரே இடத்தில் இருந்து அம்பாளையும் சனீஸ்வரனையும் தரிசிக்கலாம். இதனால் சனி தோஷம் விலகும் என்கிறார்கள்.

இங்கு நவகிரஹ சன்னதி கிடையாது. கோவிலுக்கு வெளியே பத்திரகாளி அம்மன் தனி கோவில் கொண்டுள்ளாள்.

இவள் இத்தலத்தில் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.

🌹ஆலோசனை சொல்லும் விநாயகர் : எந்த செயலை செய்யும் முன்பு முழு முதல் கடவுளான விநாயகரை வணங்கி விட்டு தான் செய்ய வேண்டும். அதன்படி இத்தலத்தில் விநாயகரே பெரியவர் பழையவர் புனிதமானவர் இடம் மூன்று நிலைகளில் சிந்தாமணி, செல்வமஹா, சிவானந்த விநாயகராக அருள்பாலிக்கிறார்

புதிய செயல் தொடங்குபவர்கள் இவரை வணங்கி ஆலோசனை கேட்டு விட்டு அதன் பின்பே செயலாற்றுகின்றனர்.

🌼 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹தேவேந்திரன் தபஸ் பண்ணின புண்ணிய பூமி. தேவலோகத்தில் தினமும் காலையில் மண்ணால் லிங்கத்தை பிடித்து வைத்து க்ஷனிக லிங்க பூஜை செய்யும் தேவேந்திரன், ஆகாச மார்க்கமாக பிரயாணப்பட்டு ஒரு நாள் இரவு இங்கு வந்து தங்குகிறான். மறுநாள் காலை பொழுது விடிந்ததும் அவன் சிவபூஜை செய்ய என்ன செய்வது? தேவலோகத்தின் அவன் பிடித்து வைத்த சிவலிங்கம் ஸ்வர்ணமா மாறும்.

🌹இந்த ஊரில், பூமியில் மண் எடுத்து, அதைப் பிடித்து வைக்கிறான். அது ரத்தினமாய் மாறுகிறது. ரொம்ப சந்தோஷப்பட்டு பூஜை பண்றான். அதோடு இல்லாமல் இந்த சுவாமியை பார்த்து நீ என்னோடு தேவலோகத்திற்கு வா நான் உன்னை அழைத்துக் கொண்டு செல்கிறேன் அப்படின்னு இங்க பூமியிலிருந்து பெயர்த்து எடுக்கும் பொழுது ஸ்வாமி, ஏழு லோகத்துக்கு கீழே போயிட்டார்.

அதாவது நீடு – நீளமா / பெருசா- ஸ்வாமி உள்ள போனதுனால நீடு+ஊர்= நீடூர். பெருமையான ஊர் என்றும் அர்த்தம்.

ஸ்வாமி எந்த அளவுக்கு சுயம்பு மூர்த்தியா உள்ள இருக்கிறார் என்றே தெரியாதாம். அருட்தோமநாதருக்கு மாணிக்க தியாகர் என்றும் பெயர். காவிரிக்கு பொன்னி என்று பெயர் வர காரணமும் இதுதான்.

🌹காலை வேளையில் சூரியன் பூஜை செய்வார். சாயந்திர வேளையில் சந்திரன் பூஜை செய்வார். சூரியன் தினமும் பூஜை செய்து அம்பாளிடம் அணுகிரஹம் பெறுகிறார். அம்பாள் ஆதித்ய அபய பிரதாம்பிகை. அம்பாள் சூரியன் வந்து பூஜை செய்வதற்கு சாட்சி. சந்திரன் வந்து பூஜை செய்வதற்கு ஸ்வாமி சாட்சி சோமநாதர்.

🌼ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பிரகாரத்தில் நிறைய சுவாமிகள் தரிசிக்கலாம். சிவலோகநாதர் கைலாசநாதர் காசி விஸ்வநாதர் ஆனந்த தாண்டவம் மூர்த்தி சின்மயானந்த விநாயகர் முருகர் சப்த கன்னியர். நடராஜர் சுதை வடிவில் தனியே இருக்கிறார். இத்தல விநாயகர் சித்தி விநாயகர். மூலவருக்கு மேல் உள்ள விமானம் துவா தள விமானம்.

க்ஷய ரோகம் மேலில் இருக்கும் தோல் வியாதிகள் எல்லாம் சுவாமியை தரிசனம் செய்தால் நீங்குகிறது.

ரொம்ப சூக்ஷுமமான லிங்கம். ஆத்ம லிங்கமா இருக்கிறார். ரொம்ப சின்ன சுவாமி.

மூர்த்தி சிறியது கீர்த்தி பெரியது

🌼 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கடக ராசி தோஷ நிவர்த்தி பிரார்த்தனை

நவகிரஹ சனி தோஷ நிவர்த்தி பிரார்த்தனை

திருமணத்தடை நீங்க

புத்திர பாக்கியம் பெற

புது தொழில் &வியாபார வெற்றி

எதிரிகள் பயம் நீங்க

எடுத்த காரியம் வெற்றி பெற

🌼 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பங்குனி உத்திரம் பிரம்மோற்சவம் 10 நாட்கள்

முனையடுவார் நாயனார் குரு பூஜை.

ஆருத்ரா தரிசனம்

மஹா சிவராத்திரி

ஐப்பசி அன்னாபிஷேகம் கார்த்திகை தீபம்

விநாயகர் சதுர்த்தி நவராத்திரி பிரதோஷம் சிறப்பு.

🌼 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரம்மா திருமால் தேவர்கள் தேவேந்திரன் சந்திரன் சூரியன் பத்ரகாளி தன்மசுதன் முனையடுவார் நாயனார் அப்பர் சம்பந்தர் சுந்தரர் நம்பியாண்டார் நம்பி சேக்கிழார் முதலியோர்..

🌼அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

6KM from மாயவரம்.

மணல்மேடு செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

ஆட்டோ டவுன் பஸ் வசதி உள்ளது.

7AM – 10AM, 5PM – 7PM

9786879971 சிவசுப்பிரமணியன் சிவாச்சாரியார்.

இங்கு குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🌼 கோவில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப்

பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்

துறவாதே கட்டறுத்த சோதி யானைத்

தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத்

திறமாய எத்திசையுந் தானே யாகித்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை

நிறமா மொளியானை நீடூ ரானை

நீதனே னென்னேநான் நினையா வாறே. 1

திருநாவுக்கரசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *