திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர்
மூலவர் : திருமேனியழகர்
அம்பாள் : வடிவாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : கண்ட மரம், தாழை
தீர்த்தம் : கோயில் எதிரே உள்ள மகேந்திர தீர்த்தம்
புராணபெயர் : மயேந்திரப்பள்ளி
பாடல் : சம்பந்தர், சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் 60, சோழ நாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 6
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.
அலங்காரப் பிரியரான திருமால் அழகர் என அழைக்கப்படுவது தெரிந்தது. இங்கு சிவபெருமான் அழகர் என அழைக்கப்படுகிறார்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அழகு தரும் சிவன் சிவன் அம்பாள் இருவரும் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். எனவே சுவாமி திருமேனி அழகர் அம்பாள் வடிவாம்பிகை. இங்கு வந்த ஞானசம்பந்தர் சுவாமியை அழகா என குறிப்பிட்டு பாடி இருக்கிறார்.
சூரியன் சந்திரன், இந்திரன் பிரம்மா ஆகிறார் பூஜிக்கப்பட்ட தலம் இது. சிவன் சந்நிதி கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்திரன் கௌதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி சாபம் பெற்றான். விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல ஸ்தலங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து சிவபெருமானை வழிபட்டான். அதில் ஒன்று மகேந்திர பள்ளி ஆகும். சிறப்புமிக்க (மஹா) இந்திரன் வழிபட்டதால் மகேந்திரபள்ளி என்ற சிறப்புப் பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது.
பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.
ஸ்தல சிறப்பு செய்திகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் மனைவியுடன் இருக்கிறார். விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. காசி விஸ்வநாதன் விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பைரவர் சனி சூரியன் சந்திரன் ஆகியோரும் உள்ளனர். நவகிரஹ சந்நிதி இல்லை.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தீராத நோய்கள் நீங்க
சாப விமோசனம்
முன்வினைப் பாவம் நீங்க
இளமை அழகு மற்றும் வசீகரம் பெற
நவகிரக தோஷங்கள் நீங்க (சூரிய, சந்திர தோஷம்)
கல்வியின் சிறக்க
நாகதோஷம் நீங்க
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாசிவராத்திரி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை மற்றும் மார்கழி திருவாதிரை சிறப்பு
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன், சம்பந்தர், சேக்கிழார் ஆகியோர்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிதம்பரம் சீர்காழி சாலையில் அமைந்துள்ளது. (22KM இரு பக்கம் இருந்தும் )
சிதம்பரம் & சீர்காழியில் இருந்து கோவிலுக்கு ஆச்சாள்புரம் வழியாக நகரப் பேருந்துகள் உள்ளன.
10 AM – 12NOON, 6 PM – 7 PM
97511 00938 செந்தில் குருக்கள்
குருக்களை தொடர்பு கொண்டு விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திரைதரு பவளமுஞ்
சீர்திகழ் வயிரமுங்
கரைதரும் அகிலொடு
கனவளை புகுதரும்
வரைவிலால் எயிலெய்த
மயேந்திரப் பள்ளியுள்
அரவரை அழகனை
அடியிணை பணிமினே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply