திருநல்லூர்பெருமணம் ஆச்சாள்புரம் சிவலோகத்யாகர்

🌼 மூலவர் : சிவலோகத்தியாகர் சிவலோக தியாகேசர்

உற்சவர் : திருஞானசம்பந்தர்

அம்பாள் : திருவெண்ணீற்று உமையம்மை, ஸ்வேத விபூதி நாயகி

ஸ்தல விருக்ஷம் : மாமரம்

தீர்த்தம் : பஞ்சாட்சர ருத்ர குஷ கங்கா ம்ருகண்டு ஜமதக்னி ஜாபாலி வசிஷ்ட இந்திர காமதேனு ஐராவத ருத்ரபாத்ர ப்ருகு அசுவ அத்ரி வியாச என 16 தீர்த்தங்கள்

புராணப் பெயர் : நல்லூர் பெருமணம் சிவலோகபுரம்

ஊர் : ஆச்சாள்புரம் சுயம்பு

59வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழநாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 5

🌼 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹ஞானசம்பந்தப் பெருமான் திருமணத்தன்று மனைவியுடன் முக்தி பெற்ற க்ஷேத்ரம் இது.

🌹யுகத்திற்கெல்லாம் முன்னாடி உண்டான கோவில். கிருத யுகத்தில் பிரம்மா ஆராதனை, திரேதா யுகத்தில் மஹாவிஷ்ணு பூஜை, துவாபர யுகத்தில் தேவேந்திரனுக்கு பிரத்யக்ஷம், ரிஷிகளுக்கெல்லாம் அனுகிரகம். கலியுகத்தில் காகபுஜண்டர் பூஜை. ஆனந்தமான ஆலயம். பூலோக கைலாயம். உண்மையை சொல்லனும்னா செருப்பு போட்டுண்டு நடக்கக் கூடாது. இந்த ஊரைப் பார்க்கும் பொழுது கைலாய மாதிரி தெரிந்ததினால் காகபுஜண்டர் கால் படாமல் தலையால் நடந்து வந்தார். அப்படிப்பட்ட விசேஷமான க்ஷேத்ரம்.

🌼 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இந்த க்ஷேத்ரத்துக்கு சிவபதவி வேணும்கிறவா தான் வர முடியும்.

யுகமெல்லாம் பிரளயத்தில் ஒடுங்குகிறது. பிரம்மா தன்னுடைய கமண்டல ஜலத்தை எடுத்துண்டு வந்து ( கங்கை தீர்த்தம்) இந்த க்ஷேத்ரத்தில் உட்கார்ந்து சுவாமியை பூஜை பண்றார். ஸ்வாமி படைப்பின் ரகசியத்தை பிரம்மாவிற்கு உபதேசம் பண்ணிய இடம். தன் தீர்த்தத்தை வாசலில் சேர்க்கிறார். கோவில் வாசல்ல கங்காதேவி தான் தீர்த்தம். நித்திய கங்கையா இருக்கா.

16 தீர்த்தம் இங்க.

தீர்த்தத்தின் மஹிமையே அவ்வளவு உசத்தி. இந்த தீர்த்தத்தை குடித்த நாய் மரிக்கிறது. கைலாசம் போகிறது.

இந்த ஜலத்தில் வேறு யாரும் ஸ்னானம் பண்ணிவிட்டு வந்து, வஸ்திரம் பிழிந்த தண்ணி மேலே பட்டாலே அவாளுக்கு மோக்ஷம் கிடைக்குமாம். அப்பேர்ப்பட்ட உசத்தியான க்ஷேத்ரம்.

🌹 இந்த ஊருக்கு வந்து நம்ம உடம்பு பூமியில் படட்டும்னு, கோவில் உள்ள இல்ல, வாசல்லயே அங்கப் பிரதக்ஷணம் பண்ணினவா பல்லாயிரக்கணக்கான பேர். இங்க பராசரருக்கு ஸ்வாமி கைலாயமா காட்சி கொடுக்கிறார். மகரிஷிகள் எல்லாம் கூடறா. வசிஷ்டர் பராசரர் ஜமதக்னி ஜாபாலி எல்லோரும் வேண்டி சுவாமி கைலாயமாகவே காட்சி கொடுத்தார். கைலாயத்திற்கு உள்ள மகத்துவங்கள் அனைத்தும் இந்த க்ஷேத்ரத்திற்கு உண்டு. பூலோக சிவலோகம். அதனாலேயே சுவாமிக்கு சிவலோக தியாகேசர்னு பேர். சுயம்பு மூர்த்தி. ரொம்ப அழகான அம்பாள், திருவெண்ணீற்று அம்பிகை/ ஸ்வேத விபூதி நாயகி. இந்த க்ஷேத்ரம், ஸ்வாமி ஒருவரே அனைத்திற்கும் காரணம் என்பதற்காக “ஏகாம்ரம்” தான் ஸ்தல விருக்ஷம் ( மாமரம் ).

🌼திருஞான சம்பந்தர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹ஞானசம்பந்தருக்கும் கைலாயமாகவே காட்சி கொடுக்கிறார். ஞானசம்பந்தர் சீர்காழியில் அவதாரம் -தோடுடைய செவியன்

அப்பா தோளில் தூக்கிண்டு எல்லா சிவாலயங்களுக்கும் போறார். அப்புறம் சம்பந்தர் தனியாகவே எல்லா சிவாலயங்களுக்கும் போக ஆரம்பிக்கிறார். முதல் பதிகம் ‘தோடுடைய செவியன்’, பூர்த்தியான பதிகம் தான் “காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” சம்பூர்ணமான பதிகம். அது இந்த க்ஷேத்ரத்தில் தான். அவர் பூர்த்தி பண்றச்சேயே இந்த க்ஷேத்ரத்தில் இருக்கிறவாளுக்கெல்லாம் அனுக்கிரஹம்.

ஞானசம்பந்தர் எங்கெல்லாம் போனாரோ அத்தனை இடத்திலும் அனுகிரஹம்.

🌹சீர்காழில அவதரித்தார். சீர்காழில பார்வதி பரமேஸ்வரா பிரத்யக்ஷம். திருக்கோலக்கால ஸ்வாமி பொற்தாளம் தரா. தட்டிப் பார்த்தார், சத்தம் வரல. அம்பாள் அவற்றிலிருந்து ஓசைகொடுக்றா So “ஓசை கொடுத்த நாயகி” பேர். பட்டீஸ்வரம்👉 முத்து பந்தல், திருப்பூந்துருத்தி 👉 நந்தி விலகி ( Also in பட்டீஸ்வரம் ) சுவாமி தரிசனம். விருதாச்சலத்தில் பொற்காசுகள். நிறைய இடத்தில் பொற்காசுகள், திருவாவடுதுறையில் பொற்கிழி, வேதாரண்யத்தில் கதவு மூடி திறப்பதற்கு உண்டான காரண காரியமா இருக்கார். மதுரையில் சைவம் தழைக்க திருநீற்றுப் பதிகம், மயிலாப்பூரில் பூம்பாவை இறந்து, சாம்பலை குடுவையில் ப்ரோக்ஷணம் பண்ணி பதிகம் பாடி எழுப்பி தருகிறார். வேதத்தில் இருக்கக்கூடிய மந்திரங்களை தமிழ்ப்படுத்தி நமக்கு பதிகமாக கொடுத்திருக்கிறார்.

🌹ஞானசம்பந்தர் எங்கெல்லாம் போவாரோ ஸ்வாமியோடயே பேசுவார். ஏன்னா அவர் முருகப்பெருமான். அவருடைய ஸ்வரூபம். இப்போ அவருக்கு சம்பூர்ணமான 16வது வயது. பிள்ளையாண்டானுக்கு கல்யாணம் பண்ணனும்னு அப்பா கவலைப்படுகிறார்.

🌼ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இந்த ஊரில் இருக்கக்கூடிய நம்பியாண்டார் நம்பி, அவருக்கு ஒரு பெண், “நங்கை நல்லாள்”னு பேர். இந்த இடத்தில் விவாகத்திற்கு வேண்டிய ஏற்பாடு எல்லாம் நடக்கிறது. நிறைய அடியார்கள் எல்லாம் சூழறா. திருநீல நக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், ருத்ர பசுபதி நாயனார் என நிறைய பேர்.

🌹பெரிய ஜோதியானது வருகிறது. யஞ்யத்தில் சேர்க்க கூடிய அக்னி. அவா நித்தியமா பூஜை பண்ணி பூஜை பண்ணி வச்சிருக்கிற, சமிதாதானம் பண்ணிண்டு வந்த அக்னில, அன்னிக்கு ஒளபாசன அக்னியை ஏற்படுத்துகிறார்கள். வேதநெறி தழைத்தோங்கத்தான் சைவத் துறை விளங்கத்தான் ஞானசம்பந்தர் அவதாரம். அப்படியாக எல்லாம் ஆறது. திருமாங்கல்ய தாரணம் ஆறது. கையை பிடிக்கிறா. பாணிக்கிரஹணம் தான் கல்யாணத்தோட சம்பூர்ணம்.

🌹கையைப் பிடித்த உடன் அவருக்கு என்ன தோன்றதுன்னா – ஸ்வாமியின் சரணத்தை இதோட சேர்ந்து – கிரகஸ்தாசிரமத்தோட சேர்ந்து அடைஞ்சா எப்படி இருக்கும்… புது மனைவி கையை பிடிச்சா வேற வேற எண்ணங்கள் எல்லாம் வரணும். இவருக்கு பகவத் சரணத்தை அடையணும் என்கிற எண்ணம் எப்படி வருகிறது. இந்த சன்னதிக்கு உண்டான அமைப்பு..

🌹கையைப் பிடித்த பிற்பாடு பார்த்தால் கர்ப்ப கிரஹத்தில் இருக்கக்கூடிய மூலாலய லிங்கம் வெடிக்கிறது. அங்கே இருந்து பிரம்மாண்டமான ஜோதி தோன்றுகிறது. எல்லோரும் பயப்படறா. ஞான சம்பந்தர் அப்பதான் யாரும் பயப்படாதீங்கோன்னு சொல்லி, இந்த ஊர் பதிகத்தை ஆரம்பிக்கிறார். அந்த ஜோதிக்கு நடுவிலே, இறைவனோட அருட் காட்சி கிடைக்கிறது. பார்க்கிறவா அத்தனை பேரையும் உள்ள அழைச்சிண்டு போறார்.

🌹இங்க வாசல். FIRST STEP பாதத்தை ஜோதில வச்சாக்க, NEXT STEP அத்தனை பேருக்கும் கைலாயத்தில் ENTRY கிடைக்கிறது. So கைலாயத்திற்கு ENTRY வேணும்னா இங்க உள்ள ஸ்வாமியை பார்த்தா போறுமாம். இவா அத்தனை பேருக்கும் யாருடைய அனுக்கிரகத்தினாலே கிடைக்கிறதுனு கேட்டோம்னா – சிவானுகிரகம் கிடைக்கணும்னா சக்தியினுடைய அனுக்கிரகம் வேணும். அதுக்கு முருகனுடைய அனுக்கிரகம் வேண்டும்.

🌹உமையாம்பிகை இந்த க்ஷேத்ரத்தில் வந்திருந்த அத்தனை பேருக்கும் விபூதி கொடுத்தாளாம். அம்பாள் சன்னதியில் விபூதி கொடுக்கிற ஒரே கோவில் உலகத்திலேயே இது ஒன்றுதான். என்ன காரணம் விபூதி கொடுத்தா 🤔

“பஸ்பதாரண சர்வாங்கம் சர்வாபரண பூஷிதம்” – நமக்கு எவ்வளவு ஆபரணங்கள் போட்டிருந்தாலும் நெற்றியில் விபூதி இல்லனா வாழறதுக்கே சம்பந்தம் இல்லை. வந்தவா எல்லோரும் உள்ள போனா. அங்க காணாம போயிட்டா. ஞானசம்பந்தர் ஒருவர் மட்டும் உள்ளே போய் நுழையலை. தான் உள்ள போறச்சே அத்தனை பேரையும் கூட்டிண்டு போனார். அனைவருக்கும் சிவ பதவி. அப்பேர்ப்பட்ட திவ்யக்ஷேத்ரத்துகு தான் வந்திருக்கிறோம். இது பூலோக சிவலோகம்.

காகபுஜண்ட முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு அஞ்சி தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவம் இருந்தார்.

🌼ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹விநாயகர் முருகன் அம்பாள் சன்னதி மட்டுமில்லை, நூற்றுக்கால் மண்டபத்தில் ஞானசம்பந்தர், ஸ்தோத்திர பூர்ணாம்பிகையோடு மணக்கோலத்தோட இருக்கிற காட்சியை இந்த ஒரு கோவிலில் மட்டும் தான் பார்க்க முடியும்.

🌹அடுத்து கிழக்குப் பார்த்தபடி கர்ப்பகிரஹத்தில் வெடித்த லிங்கமாக, ருத்ரலிங்கமாக ஸ்வாமி சந்நிதி & திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதியும் அமைந்துள்ளது இக்கோயில் கிழக்கு நோக்கி 5 நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இக்கோவில் பிரகாரத்தில் ருண லிங்கேஸ்வரர் அமைந்திருப்பது மற்றுமொரு சிறப்பு.

🌼 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருமணத்தடை நீக்கும் பிரார்த்தனை தலம். மேலும் மாங்கல்ய பலம் குடும்ப ஒற்றுமை ஆரோக்கியம் கடன் நிவர்த்தி புத்திர பாக்கியம் வேண்டுதல். இவரை வேண்டி சென்றால் தரித்திரம் நீங்கி முக்தி கிடைப்பது நிச்சயம்.

🌼 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வைகாசி பிரம்மோற்சவம்

வைகாசி மூல நக்ஷத்திரம் திருஞானசம்பந்தர் குருபூஜை மற்றும் முக்தி உற்சவம்.

திருஞானசம்பந்தர் திருக்கல்யாண உற்சவம்.

🌼 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மஹாவிஷ்ணு, பிரம்மா, முருகன், பிருகு, வசிஷ்டர், பராசரர், ஜமதக்னி, அத்ரி, வியாசர், மிருகண்டு, அகத்தியர், காகபுஜண்டர், கங்காதேவி, இந்திரன், சந்திரன், சம்பந்தர்,

தோத்திர பூர்ணாம்பிகை,

திருநீலகண்ட யாழ்ப்பாணர், மதங்கசூளாமணி, திருநீலநக்க நாயனார், முருகநாயனார், சேக்கிழார்

🌼அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சிதம்பரம் – சீர்காழி சாலையில், கொள்ளிடம் பாலத்தைக் கடந்து கொள்ளிடம் ஊர், இடப்புறம் 8KM

FROM சிதம்பரம் கோவில் 13KM

FROM சீர்காழி 15KM

7AM – 12NOON, 5PM – 8PM

70949 31315 மணிகண்டன் குருக்கள்

98653 26636 பாலாஜி குருக்கள்

8270448100 ராஜகணபதி குருக்கள்

🌼 கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கல்லூர்ப் பெருமணம்

வேண்டா கழுமலம்

பல்லூர்ப் பெருமணம்

பாட்டுமெய் யாய்த்தில

சொல்லூர்ப் பெருமணஞ்

சூடல ரேதொண்டர்

நல்லூர்ப் பெருமண

மேயநம் பானே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *