திருவேட்களம் பாசுபதேஸ்வரர்

🌻மூலவர் : பாசுபதேஸ்வரர்/ பாசுபதநாதர்

அம்பாள்: நல்லநாயகி / கிருபாநாயகி

ஸ்தல விருக்ஷம் : மூங்கில்

தீர்த்தம் : கிருபா தீர்த்தம்

பாடல் : அப்பர், சம்பந்தர், சுயம்பு, 56வது தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம், சோழநாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 2

🌻ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹ஸ்தலம் மூர்த்தி தீர்த்தம் என அனைத்திலும் ஏற்றம். வேடுகளம் 👉 திரு வேடு களம்👉 மருவி திருவேட்களம்.

யுகத்திற்கு முன்னால் தோன்றிய மிகப் பழமையான சிவாலயம். ஆலயம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்.

உன்னதமான தீர்த்தம் :

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கிருபா தீர்த்தம் (Also Called நள தீ) 100 ஆண்டுகளுக்கு முன்பாக கானாடுகாத்தான் செட்டியார்கள் புனரமைத்து தந்திருக்கிறார்கள்.

🌹யுகத்திற்கெல்லாம் முந்தைய இறைவன். இத்தலத்தில் தங்கி இருந்து தான் சிதம்பரத்தை கண்டு தரிசித்திருக்கிறார்கள். ANNAMALAI UNIVERSITY, ANNAMALAI NAGARல இருக்கு.

🌻ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹மஹாபாரத காலம். அர்ஜுனன் சோர்ந்து போய் உட்கார்ந்து இருக்கும்பொழுது பகவான் கிருஷ்ணர் பக்கத்தில் வந்து எல்லா அஸ்திரங்களையும் உனது பிதாவான தேவேந்திரன் இடமிருந்து வாங்கிக் கொண்டு விட்டாய். இன்னும் ஒரு அஸ்திரம் வாங்கிக் கொண்டால் கவலைப்பட வேண்டாம். அதற்கு பெயர் “பாசுபதம்”. சிவபெருமானிடம் இருக்கிறது. சிவ பூஜை பண்ணி நீ பெறலாம். ஆகவே சிவ பூஜை செய்வதற்கான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து சிவஆராதனை செய். உன்னுடைய கலக்கம் நீங்கும்.

🌹எங்கெல்லாமோ சுற்றி திரிந்து கடைசியில் தில்லை வனமாக இருக்கக்கூடிய இந்த பகுதிக்கு வந்தவுடனே அர்ஜுனன் மனது சாந்தமாயிற்று. ஆகவே இங்கேயே வெகு காலம் ஒற்றைக் காலில் – ஒரு கால் பூமியில், ஒரு கால் மடக்கி, கைகளை தலைக்கு மேலே தூக்கி வைத்து பஞ்சாட்சர மந்திரத்தால் இறைவனை வழிபட்டு பூஜித்து வருகிறான்.

🌹இந்த அகோர தவம் எதற்காக என துரியோதனன் பார்த்தான். இவன் ஏதாவது அஸ்திரம் பெற்றுவிட்டால் என்ன செய்வது என்று மூகாசுரன் எனும் ஒரு அசுரனை பன்றியின் வடிவத்தை எடுத்துக்கொண்டு இவனை ஹிம்சை செய்ய அனுப்பினான். இரவு பகல் என கடின தபஸ் செய்யும் அர்ஜுனனுக்கு அருள் புரிய வேடன் வேட்டுவச்சி வடிவம் தாங்கி (கிராதரூபம்) இறைவனும் இறைவியும் இறங்கி வரும் பொழுது பன்றியை கண்டார்கள்.

🌹சிவபெருமான் தன்னுடைய அம்பை அடித்தார். அதே நேரத்திலே அர்ஜுனனும் அடித்தான். இருவருடைய அம்பும் பட்டது. பன்றியும் கீழே விழுந்தது. யார் அடித்ததால் பன்றி இறந்தது என இருவருக்கும் வாக்குவாதம், கைச்சண்டை, மல்யுத்தம் வெகு நேரம். அர்ஜுனனின் வில் முறிந்தது. கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது.

🌹உமயம்பிகைக்கு கோபம் வந்தது. சிவபெருமான்- சற்குணா! அமைதியுறு!! நீ கோபம் கொண்டால் உலகம் தாங்காது. கொஞ்ச நேரம் அர்ஜுனனுடன் விளையாடினேன் என அவனை காலால் எத்த, அவன் நேராக சென்று ஒரு தீர்த்தத்திலே விழுந்தான். அதுதான் கிருபா தீர்த்தம் எனும் புண்ணிய தீர்த்தம்.

🌹அங்கு விழுந்து அர்ஜுனன் எழுந்தான், இறைவனுடைய அருட்காட்சி பெற்றான். இறைவனும் இறைவியும் அவனுக்கு கருணையோடு அருள் புரிந்த காரணத்தினாலே கிருபாநாயகி/ நல்லநாயகி என பெயர். பாசுபதம் வழங்கியதால் பாசுபதேஸ்வரர். சிவபெருமான் அடித்த அந்த தழும்போடு கருவறையில் வீற்றிருந்து அருள் புரிகிறார்.

🌻 மற்ற சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹அம்பாள் 4 திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறாள். முன்னிறு கைகளில் தாமரை & நீலோத்பல மலர்களுடன் அருள்கிறாள். நந்தி இவளுக்கு எதிரிலும் உள்ளது.

🌹கோவில் சுற்றுபகுதியில் நர்த்தன விநாயகர், சித்தி விநாயகர், அனுகிரஹ தக்ஷிணாமூர்த்தி & அருகருகே சூரியன் சந்திரன் உள்ளனர்.

🌹இக்கோயிலின் ஸ்தலபுராணத்தை விளக்கும் வகையிலே, முன் மண்டபத்தில் புடைப்பு சிற்பங்களாக அர்ஜுனன், கிராதமூர்த்தியாக சிவபெருமான் கருங்கல் தூணில் செதுக்கியுள்ளனர்.

🌻 பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நல்ல சொல்வளம் வேண்டினால் இறைவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்கினால் கிடைக்கும். நல்ல ஞானம் பெற பிரதோஷ காலத்தில் காராம் பசுவின் பால் அபிஷேகம். பக்தியுடன் பிரதக்ஷணம் செய்தாலே கேட்டது கிடைக்கும் ஸ்தலம்.

🌻 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தமிழ் புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி, அன்னாபிஷேகம் திருவாதிரை, கார்த்திகை மற்றும் பிரதோஷம் பௌர்ணமி சிறப்பு பூஜைகள்..

🌻 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நாரதர் அர்ஜுனன் அப்பர் சம்பந்தர் சேக்கிழார் முதலியோர்

🌻 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அண்ணாமலை நகர் வளாகம்.

7AM – 11 AM, 5PM – 8PM

88254 75448 விஜய் சேகர சிவாச்சாரியார்

90037 47978 மாதேஸ்வரன் குருக்கள்

குருக்களை அழைத்துவிட்டு சொல்வது சிறப்பு.

🌻அர்ஜுனனுக்கு தேவை பாசுபதம் எனும் அஸ்திரம். நமக்குத் தேவை பக்தி எனும் அஸ்திரம். ஆகவே அந்த பக்தியை முக்திக்கு வழிகாட்டுவதற்காக இறைவன் இங்கேயே எழுந்தருளியிருக்கார் வாழ்விலே ஒரு முறையேனும் ஆலயத்தை வலம் வந்து அருள் பெறுவோம், ஆனந்தமடைவோம். நீக்கமற நிறைந்திருக்கக் கூடிய சிவபெருமான் நம் எல்லாருக்கும் சகலவித சௌபாக்யம் தந்தருள செய்யட்டும்

🌻கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்

ஆரழல் அங்கை அமர்ந்திலங்க

மந்த முழவம் இயம்ப

மலைமகள் காணநின் றாடிச்

சந்த மிலங்கு நகுதலை கங்கை

தண்மதி யம்மய லேததும்ப

வெந்தவெண் ணீறுமெய் பூசும்

வேட்கள நன்னக ராரே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *