திரு ஆமாத்தூர் திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் அழகியநாதர்
மூலவர் : அபிராமேஸ்வரர் அழகியநாதர்
அம்பாள் : முத்தாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : வன்னி கொன்றை
தீர்த்தம் : ஆம்பலம் பூம்பொய்கை (குளம்) தண்ட தீ (கிணறு) பம்பை (ஆறு) சக்கர தீ
பு.பெ : கோமாதுபுரம், திரு ஆமாத்தூர்
பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர் அருணகிரிநாதர்
ஊர் : திருவாமத்தூர், சுயம்பு, 53வது தேவார பாடல் பெற்ற சிவாலயம் நடுநாட்டு ஸ்தலம் 21
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மூலவர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கிறார். இங்குள்ள அம்பாள் முத்தாம்பிகையை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.
பொதுவாக சிவாலயங்களில் ஒரே கோவிலுக்குள் சிவனும் அம்மனும் இருப்பார்கள். ஆனால் இங்கு சிவன் தனி கோவிலில் கிழக்கு பார்த்தும், எதிரே அம்மன் தனி கோவிலில் மேற்குப் பார்த்தும் அருள் பாலிக்கின்றனர்.
அம்மனின் திருமேனியில் நாகப்பாம்பில் வால் பகுதி அமைந்துள்ளது. சிவன் கோவிலுக்கும் அம்மன் கோவிலுக்கும் இடையில் துளை ஒன்று உள்ளது. இதன் வழியாக அம்பாளும் சிவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.
திருவட்டப் பாறை என்ற சிவலிங்க மூர்த்தி இங்கு மிகவும் சிறப்பு. இதன் முன் அமர்ந்துதான் ராமனும் சுக்கிரீவனும் ராவணனை வதம் செய்வதற்கு அனுமனின் சான்றுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்டதாக வரலாறு. சுவாமி கோவில் ராஜகோபுரம் பிற்காலத்தில் கட்டப்பட்டது. கருவறை அகழி அமைப்பு.
வட்டப்பாறை அம்மன் சந்நிதி பிரசித்தம். இங்கு அம்பாள் சன்னதியில் இருந்து பொய் சத்தியம் செய்தால் அவர்களை பாம்பு தீண்டி விடும் என்பது அசையாத நம்பிக்கை. அண்ணன் தம்பி சொத்து கதை
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ராவணனை வதம் செய்த ராமன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இங்கு சிவனுக்கு தண்ட தீர்த்தத்தில் அபிஷேகம் செய்து பூஜித்தார்.
சூரபத்னை அழிப்பதற்காக முருகன் இங்குள்ள சிவ பார்வதியை வணங்கி உள்ளார்.
அருணகிரிநாதர் முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.
ஈசனை மட்டுமே வழிபட்டு வந்த பிரிங்கி முனிவர், பார்வதி தேவி சாபத்தால் வன்னி மரமாக மாறிவிட்டார். அவரே இத்தலத்தில் ஸ்தல விருக்ஷமாக சுவாமி அம்மன் சந்நிதிக்கு இடையே அருள் பாலிக்கிறார்.
விநாயகர் பூஜை செய்யும் அமைப்பில், கையில் மலருடன் சந்நிதியில் காட்சி தருகிறார்.
அர்த்தமண்டபத்தில் நிலவரை உண்டு. சர்ப்ப கோவனத்துடன் அழகான பிக்ஷாடன மூர்த்தி.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு காலத்தில் பசுக்களுக்கு கொம்புகள் இல்லாமல் இருந்தது. இதனால் பசுக்களை கொடிய விலங்குகள் கொடுமைப்படுத்தி வந்தன. வருத்தம் அடைந்த பசுக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சிவனை வேண்டி கொம்புகளை பெற்ற தலம். திரு+ஆ+மத்தூர்.
இத்தலத்தை பசுக்களின் தாய் ஊர் என்பார்கள். பசுவின் உடலில் பிரம்மா விஷ்ணு சிவன் சரஸ்வதி லட்சுமி பார்வதி மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிக்கின்றனர்.
பசுவே வந்து இங்குள்ள இறைவனை பூஜித்ததால் இத்தலம் மிகவும் பெருமை பெற்றது. இத்தல இறைவன் அபிராமேஸ்வரர், பசுவின் கால் குளம்பை தன் தலையில் தாங்கியபடி அருள்பாலிக்கிறார்
இரட்டைப் புலவர்கள் இறைவன் மீது கலம்பகம் பாடியுள்ளனர்.
ஸ்தல சிறப்பு செய்திகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அம்மன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
கோயில் உள்பிரகாரத்தில் மால் துயர் தீர்த்த விநாயகர், பிக்ஷாடனர், முருகன், நடராஜர், தக்ஷிணாமூர்த்தி … நிறைய சன்னதிகள்.
தென்மேற்கு மூலையில் வட்டப் பலகை எனும் சத்திய மண்டபம் உள்ளது.
கோபுர வாசலை கடத்து உள்ளே நுழைந்த உடன் சுதையாலான பெரிய நந்தியும் பாதாள நந்தியும், கொடிமரம் பலிபீடம் காட்சி தருகின்றன.
சோழர் கால கல்வெட்டுகள் உள்ளன.
அச்சுதராயர் திருப்பணி செய்த பதி. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் சமாதி இத்தலத்தே உள்ளது. பங்குனியில் பெருவிழா நடைபெறுகிறது.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நீதி மற்றும் வழக்குகள்,
குடும்ப ஒற்றுமை,
புத்திர பாக்கியம்,
திருமண தடை என பிரார்த்தனைகள்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாசி மஹா சிவராத்திரி
புரட்டாசி நவராத்திரி
பங்குனி உத்திரம்
ஐப்பசி அன்னாபிஷேகம்
பிரதோஷம் பௌர்ணமி சிறப்பு பூஜை.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தல இறைவனை விநாயகர், முருகன் , பார்வதி தேவி, திருமகள், காளி, அஷ்டவசுக்கள் ராமர் , சீதா, லக்ஷ்மணன், ஹனுமான், நாரதர், அகஸ்தியர் , வஷிஷ்டர், துர்வாசர், ப்ருகு, பராசரர், காமதேனு, விசுவாமித்ரர் வியாசர், உரோமசர், மதங்கமுனி, அப்பர் சுந்தரர் சம்பந்தர் வழிபாடு.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
13KM from பனையபுரம்
22KM from முண்டீச்சரம்
விழுப்புரம் – திருவண்ணாமலை – செஞ்சி சாலையில் 2 கி.மீ. சென்றால் “திருவாமாத்தூர்” கைகாட்டி உள்ளது. அங்கு இடப்புறமாகப் பிரிந்து செல்லும் பாதையில் 6 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
7AM – 12NOON, 4.30PM – 8PM
98420 22544 மகேஷ் குருக்கள்
89035 55344 கிரிதர குருக்கள்
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
துன்னம்பெய் கோவணமுந்
தோலு முடையாடை
பின்னஞ் சடைமேலோர்
பிள்ளை மதிசூடி
அன்னஞ்சேர் தண்கானல்
ஆமாத்தூர் அம்மான்றன்
பொன்னங் கழல்பரவாப்
பொக்கமும் பொக்கமே. 1
ஞான சம்பந்தர்
காண்டனன் காண்டனன் காரிகை
யாள்தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்
தூரெம் அடிகட்காட்
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று
சொல்லுவன் கேண்மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித்
தல்லா தவர்கட்கே. 1
சுந்தரர்
பாடுவன் பாடுவன் பார்ப்பதி
தன்னடி பற்றிநான்
தேடுவன் தேடுவன் திண்ணெனப்
பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன் ஆமாத்
தூரெம் அடிகளைக்
கூடுவன் கூடுவன் குற்றம
தற்றென் குறிப்பொடே. 2


Leave a Reply