திரு வடுகூர் திரு ஆண்டார் கோவில் பஞ்சநதீஸ்வரர்

🌼மூலவர் : பஞ்சநதீஸ்வரர் வடுகீஸ்வரர்

உற்சவர் : பஞ்சமூர்த்தி

அம்பாள் : திரிபுரசுந்தரி 

ஸ்தல விருக்ஷம் : வன்னி

தீர்த்தம் : வாமதேவ தீ, பெண்ணை ஆறு,

பாடல் : ஞானசம்பந்தர்,

ஆகமம் : காமிகம்,

ஊர் : திருவண்டார் கோவில்,

புராணப் பெயர் : திருவடுகூர், வடுகூர், சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் 48

நடுநாட்டு ஸ்தலம் 16 

🌼 ஸ்தல சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சுயம்பு லிங்கம் இடது பக்கம் சற்று சாய்ந்தவாறு காட்சி அளிக்கிறார். லிங்கத்தின் மீது வடுக்கள் உள்ளது. இவரை மரியாதை செய்யும் பொருட்டு தலையில் தலபாகை அணிவித்துள்ளனர்.

🌼 ஸ்தல பெருமை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹சுவாமிக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் 8 தூண்கள் இருக்கிறது. அதன் அருகே நின்று தரிசனம் செய்தால் ராஜ பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஞான சம்பந்தர் இவரை “வடுகூரில் ஆடும் அடிகளே” என்று பதிகம் பாடி…

🌹 அம்பாள் திரிபுரசுந்தரி மஹாலக்ஷ்மி அம்சத்துடன் தனி சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு வடுகர் நாயகி என்ற பெயரும் உண்டு. பைரவர் பிரகாரத்தில் தனி சன்னதியில் இருக்கிறார். அஷ்டமி தினங்களில் சுவாமி மற்றும் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதனால் தோஷங்கள் பிணிகள் நீங்குவதாக நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு சுவாமி பைரவருக்கு தேன் கரும்பஞ்சாறு அபிஷேகம் செய்து பின் நாய்க்கு சாதம் படைத்து வழிபடுகின்றனர்.

🌹 இங்கு முருகன் இடது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் காட்சி, 6முகம் 12 கரங்களில் ஆயுதங்களுடன் இருக்கும் இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

கோஷ்டத்தில் உள்ள துர்க்கை 8 கைகளுடன் போர் கோலத்தில் இருக்கிறாள். வரப்பிரசாதியாக திகழும் இவளை வழிபட்டால் எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும். இவளுக்கு இடப்புறம் அர்த்தநாரீஸ்வரர் வலப்புறம் பிரதோஷ நாயனார். இத்தலவிநாயகர் = வலம்புரி விநாயகர்.

🌼 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹படைப்பு தொழிலுக்கு அதிபதியான பிரம்மன், சிவனை போலவே 5 தலைகளை கொண்டவராக இருந்தார். இதனால் அவருக்கு மனதில் அகம்பாவம் உண்டானது. அவரது கர்வத்தை அழிக்க எண்ணினார் சிவன்.

🌹 ஒரு சமயம் பிரம்மாவை கண்ட பார்வதி தேவி, அவரை சிவன் என நினைத்து கணவனுக்கு செய்யும் மரியாதைகளை செய்தார். பிரம்மன் மறுக்காமல் இருந்து விட்டார். இதைக் கண்டு கோபமடைந்த சிவன், பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கொய்து விட்டார். 

🌹 ஆணவம் அழிய பெற்ற பிரம்மன் சிவனை வணங்கி தன்னை மன்னிக்கும் படி வேண்டினார். சிவனும் அவரை மன்னித்து அருள் செய்தார். இந்த வரலாறு இந்த தலத்தில் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. பிரம்மன் தலையை எடுத்த சிவன் இங்கு வடுகீஸ்வரராக அருள்கிறார்.

🌼ஸ்தல சிறப்பு  தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கோஷ்டத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி வெள்ளை வஸ்திரம் சாத்தி பூஜிக்கிறார்கள். பிரம்மா சிவனை வழிபட்ட சிற்பம் இவருக்கு அருகில் உள்ளது. பிரம்மா அருகில் ஆஞ்சநேயரும் இருப்பது விசேஷமான அமைப்பாகும்.

🌹முன் மண்டபத்தில் இரண்டு நாகங்களின் மத்தியில் கிருஷ்ணர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். திருமண தோஷம் உள்ளவர்கள் இங்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, தாலி கட்டி வழிபாடு, இதனால் தோஷம் நீங்குகிறது. 

🌹மேலும் பணி உயர்வு கிடைக்க ஆணவம் அழிய சிவபெருமானை வேண்டுதல்.

🌹வடுகூர் என்ற பெயர் பிற்கால வழக்கில், ” ஆண்டார் கோயில் “, இன்று திருவாண்டார் கோவில்

🌹அஷ்ட பைரவர்களுள் ஒருவராகிய வடுக பைரவர், முண்டகன் எனும் அசுரனை கொன்ற பழி தீர வழிபட்ட தலமாதலின், வடுகர் வழிபட்டது வடுகூர் என்றானது.

🌹சோழர் கால கலை பாணியில் அமைந்துள்ளது.

🌹கோயில் தொல்பொருள் ஆய்வுத்துறை – புதுப்பிக்கப்பட்டு- பராமரிக்கப்பட்டு வருகிறது…

🌹பராந்தக சோழன் திருப்பணி.

🌼பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

உத்தியோக உயர்வு மற்றும் வேலைவாய்ப்பு,

ஆணவம் அகந்தை அகல,

திருமணத் தடை நீங்க,

எடுத்த காரியங்கள் வெற்றி பெற

மன அமைதி, எதிரி பயம் பகை நீங்க,

பாவங்கள் தோஷங்கள் நீங்க  பிரார்த்தனை.

🌼திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தமிழ் வருட பிறப்பின் போது திருக்கல்யாணம், சித்திரைப் பெருவிழா,  வைகாசி விசாகம், சிவராத்திரி, திருக்கார்த்திகை,  கந்த சஷ்டி தைப்பூசம். கார்த்திகை அஷ்டமி & ஞாயிற்றுக்கிழமை வடுக பைரவருக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகம்.

🌼வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரம்மன், வடுக பைரவர், ஞானசம்பந்தர், சேக்கிழார், அருணகிரிநாதர்,

பராந்தக சோழன்,

ராஜராஜ சோழன்,

ராஜேந்திர சோழன் முதலியோர். 

🌼அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

புதுவை அருகில் விழுப்புரம் பாண்டிச்சேரி சாலையில் உள்ளது. கோலியனூர் வளவனூர் கடந்து புதுவை மாநில எல்லைக்குள் FCI ஆபீஸ் அருகே உள்ளது. விழுப்புரம் பாண்டியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

7AM – 11AM, 4PM – 8PM

6380235005 வெங்கடேஷ் குருக்கள் 

96299 27048 ஜெகதீஷ் குருக்கள் 

🌼 கோவில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்

கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்

கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்

வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே. 1 

ஞான சம்பந்தர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *