திருவிடையாறு இடையாறு இடையாற்று நாதர் மருந்தீசர்
மூலவர் : மருந்தீசர் இடையாற்று நாதர் கிருபாபுரீஸ்வரர்
அம்பாள் : ஞானாம்பிகை சிற்றிடைநாயகி
தீர்த்தம் : சிற்றிடை தீ ( இது அம்மன் சந்நிதியில் கிணறாக )
ஸ்தல விருக்ஷம் : மருதமரம்
பாடல் : அப்பர் சுந்தரர், சுயம்பு
45வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், நடுநாட்டு ஸ்தலம்13
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு லிங்கம். மாசி 15 & 16 மாலை, 5-5.15 சூரிய கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது. 8ம் நூற்றாண்டு கோவில் ஆனாலும், கி பி 1471 ஒரிசா மன்னனால் அழிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் கழித்து சாளுவ நரசிம்ம அரசரால் மீண்டும் கட்டப்பட்டது என கல்வெட்டு..
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பலாச்சுளை பாலகணபதி : சில சிவாலயங்களில் சிவ பார்வதி நடுவில் சோமாஸ்கந்த அமைப்பில் முருகன் தான் அருள்பாலிப்பார். .
இங்கு சிவ பார்வதி நடுவே பாலகணபதி குழந்தை வடிவில், மேலிரு கரங்களில் குழந்தைகளுக்கு பிரியமான லட்டு & பலாச்சுளையுடன், கீழிரு கரங்களில் அபய முத்திரையும் கரும்பும் வைத்து அருள்
பாலிக்கிறார்.
சுந்தரர் இத்தலம் வந்து பாடியுள்ளார். 39 திருத்தலங்களை வைப்புத்தலமாக வைத்து, இத்தகைய தலங்களுக்கு இணையானது “இடையாறு” என பாடி உள்ளார். அகஸ்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். அது அகத்தீஸ்வரர். அகஸ்தியருக்கு தனி சிலையும் உள்ளது.
சந்தனாச்சாரியாருள் மறைஞான சம்பந்தரின் அவதாரத்தலமும் இதுவே. இடையாற்றில் பிறந்த இவர் பெண்ணாடத்தில் வாழ்ந்தார். அவர் கடந்தை மறைஞான சம்பந்தர் என்றும் அழைக்கப்படுகிறார். கடந்தை என்பது பெண்ணாடத்தின் புராண பெயர் ஆகும்.
சுகம்=கிளி சுகபிரம்மமகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கும்.
இங்குள்ள சுப்பிரமணியரின் பெயர் கலியுகராம பிள்ளையார் என்பதாகும்
திருமணத்தடை நீக்கும் ஸ்தலம்
சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியும், அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியும் உள்ள தலங்களுக்கு “கல்யாண கோலத்தில் மாலை மாற்றும் அமைப்பு” என்பர். நெடுநாளைய திருமணத்தடை உள்ளவர்கள் வேண்டுதல்.
அம்மன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கயிலையில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் பொழுது, அவற்றை கிளி முகம் கொண்ட சுக பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதை அறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார்.
பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப் பிறந்து பெண்ணை நதியின் தென்புறத்தில் அமைந்துள்ள தலமான திருமருதந்துறை என்ற இடையாற்றில் எம்மை பூஜித்து, மருத மரத்தின் கீழ் தவமிருந்து, பூலோக வாழ்வு நீங்க பெற அவர் வரம் அளித்தார்.
ஒட்டுக்கேட்ட முனிவருக்கே மானிடப்பிறவி என்றால் ஒட்டு கேட்கும் மனிதர்களுக்கு எத்தகைய பிறவி கிடைக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நெடுநாளைய திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்துச் சென்றால் விரைவில் திருமணம்.
தீராத நோய்கள் குணமாகுதல்
க்குகுழந்தை பாக்கியம் மற்றும் குடும்ப அமைதி
குழந்தை பாக்கியம் மற்றும் குடும்ப அமைதிக்கு பிரார்த்தனை
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தை மாதம் ஆற்றுத் திருவிழா சிறப்பு.
மாசி மாத சூரிய பூஜை வழிபாட்டு விழா
மஹாசிவராத்திரி திருக்கார்த்திகை
பிரதோஷம்
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுகமுனிவர், பிரம்மன், அகத்தியர், சுந்தரர், திருநாவுக்கரசர், மறைஞான சம்பந்தர், ராமலிங்க அடிகளார்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் இடையாறு கிராமத்தில் கோவில் உள்ளது.
திருக்கோவிலூர் திருவண்ணாமலை அரசூர் பாதையில் சித்தலிங்க மடம் அடுத்து இடையாறு. நிறைய பேருந்து வசதிகள் உள்ளது.
சாலையோரமாகவே கோவில்.
அடைவது எளிது.
7AM – 11AM 5PM – 7PM
ஞானஸ்தந்த குருக்கள்
98847 77078
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோயில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முந்தையூர் முதுகுன்றங்
குரங்கணின் முட்டம்
சிந்தையூர் நன்றுசென்
றடைவான் திருவாரூர்
பந்தையூர் பழையாறு
பழனம் பைஞ்ஞீலி
எந்தையூர் எய்தமான்
இடையா றிடைமருதே. 1
சுந்தரர்


Leave a Reply