திருஅறையணி நல்லூர்  அறங்கண்ட நல்லூர் அறையணி நாதர் அதுல்யநாதேஸ்வரர்

திருஅறையணி நல்லூர்  அறங்கண்ட நல்லூர் அறையணி நாதர் அதுல்யநாதேஸ்வரர்

🌺 மூலவர் : அறையணி நாதர் அதுல்யநாதேஸ்வரர்

அம்பாள் : அழகிய பொன்னம்மை, சௌந்தர்ய கனகாம்பிகை 

ஸ்தல விருக்ஷம் : வில்வம் தீர்த்தம் : தென்பெண்ணை

ஊர்:அறங்கண்ட நல்லூர்

பாடல் : அப்பர் & சம்பந்தர், ஆகமம் : சிவாகமம், சுயம்பு, 44வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், நடுநாட்டு ஸ்தலம்12

🌺 ஸ்தல சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இங்கு சாமி சுயம்பு லிங்கமாக மேற்குப் பார்த்தபடி ருத்ராக்ஷ பந்தலின் கீழ் காட்சி தருகிறார். ஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோவிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர்.

ஞான சம்பந்தர் பதிகம் பாடி கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார்.

🌹அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய பிரதோஷ நந்தி வலது புறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்ததாம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள 2 நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கிறது.

🌺 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹ஞான சம்பந்தர் இங்கு அரையணிநாதரை வணங்கி பதிகம் பாடிவிட்டு திருவண்ணாமலை செல்ல முடியவில்லை. எனவே இக்கோயிலிலேயே அண்ணாமலையாரை பிரதிஷ்டை செய்து பதிகம் பாடினார். ஞான சம்பந்தர் பிரதிஷ்டை செய்த சிவன் சன்னதி சுவாமி அம்பாள் சந்நிதிகளுக்கு இடையே தனியே இருக்கிறது.

🌹ஞானசம்பந்தர்  திருவண்ணாமலையாரை வணங்கி பதிகம் பாடிய இடத்தில் ஒரு பீடத்தின் மேலே அவரது இரு பாதங்களும் இருக்கிறது. அந்த இடத்திலிருந்து பார்த்தால் திருவண்ணாமலை முழுவதுமாக பார்க்கலாம் என்பது விசேஷம்.

🌹இங்கு நவகிரஹத்தில் உள்ள சனீஸ்வரர் வலது காலை தூக்கி காகத்தின் மீது வைத்தபடி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு அருகிலேயே மற்றொரு சனீஸ்வரர் நின்ற கோலத்தில் தனியாகவும் இருக்கிறார்.

🌹சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் இவ்விரு சனீஸ்வரருக்கும் எள் படைத்து வழிபடுகின்றனர்.

🌹இங்குள்ள காலபைரவர் நாய் வாஹனம் இல்லாமல் காட்சி தருவதும், துர்க்கை அம்மன் தெற்கு பார்த்தபடி இருப்பதும் வித்தியாசமான தரிசனம் ஆகும்.

🌹அம்பாள் அழகிய பொன்னம்மை தனி சன்னதியில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். திருவண்ணாமலை சென்ற ரமண மஹரிஷி வழியில் இக்கோவிலுக்கு வந்து அதுல்ய நாதேஸ்வரரை வணங்கி விட்டு, அதன் பின்னரே திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட்டார். இவருக்கு இக்கோயிலில் தனி சந்நிதி இருக்கிறது.

🌺 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹மஹாபலி மன்னனிடம் மூன்றடி மண் கேட்டு, அவரை அடக்கிய மஹாவிஷ்ணு, உயிரைக் கொன்ற தோஷம் நீங்க சிவனை வேண்டினார். அவர் பூலோகத்தில் தன்னை வழிபட்டு வர தோஷம் நீங்க பெறும் என்றார். அதன்படி பல ஸ்தலங்களுக்கும் சென்ற மஹாவிஷ்ணு இத்தலத்தில் வழிபட்ட போது, சிவன் அவருக்கு காட்சி தந்து விமோசனம் தந்தார்.

🌹மஹாவிஷ்ணு தாயாரைப் பிரிந்து தனியே வந்ததால், ஸ்ரீதேவியும் மஹாவிஷ்ணுவை தேடி இத்தலத்திற்கு வந்தாள். இவ்விருவருக்கும் சிவன் காட்சி தந்தருளினார்.

🌹பிற்காலத்தில் நீலகண்டர் எனும் முனிவர் ஒருவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் வேண்டி சிவ தல யாத்திரை சென்றார். அவர் TVML செல்லும் வழியில் தென் பெண்ணை ஆற்றல் நீராடி சிறு குன்றாக இருந்த இத்தலத்தில் அமர்ந்தார்.

🌹அப்போது தூரத்தில் இருந்த திருவண்ணாமலையை தரிசித்த முனிவருக்கு இந்த தலத்திலேயே சிவனை வழிபட வேண்டும் என ஆசை வந்தது. அவருக்காக மனம் இறங்கிய சிவன், அம்பாளுடன் காட்சி தந்து அவருக்கு சாப விமோசனம் அருளினார்.

🌹நீலகண்ட முனிவர் சிவனிடம் தனக்கு இவ்விடத்தில் அருளியது போல இங்கிருந்து அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என வேண்டினார். அவருக்காக சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி, “அறையணி நாதர்” என பெயர் பெற்றார்.

🌹அறை=பாறை அணி=அழகு பாறை மீது அழகாக அமர்ந்திருப்பவர் என்பதால் இப்பெயர்.

🌹திருக்கோவிலூருக்கு எதிர் கரையில் ஒரு சிறிய பாறை மேல் கோவில். வானளாவிய கோபுரம்.

🌹கோவிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில் உள்ளது “பீமன்குளம்”. பீமனின் கதையால் உண்டாக்கப்பட்டது. ராஜகோபுரம் அடி வாயிலில் குடவறை கோவில்களாக 5 அறைகள். பாண்டவர்கள் இங்கே தங்கி இருந்தனர்..

🌺ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இங்கு சிவனுக்கு ஒப்பிலாமணீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இங்குள்ள ராஜ கோபுரம் 7 நிலை. தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ள மலையின் மீது இக்கோவில் அமைந்துள்ளது. கருவறையை சுற்றி அகழி போன்ற அமைப்பு இருக்கிறது.

🌹ஸ்தல விநாயகர் – வலம்புரி விநாயகர் – சுயம்பு.

🌹பிரகாரத்தில் உள்ள முத்துக்குமாரர் ஒரு முகமும் ஆறு கரங்களுடன் காட்சி. ராமலிங்க வள்ளலார் இவரை வணங்கி பாடல் பாடியிருக்கிறார்.

🌹சப்த மாதாக்கள் சன்னதியில் விநாயகர், ஐயப்பன் ஆகியோரும் உள்ளனர்.

🌹மஹாவிஷ்ணு இங்கு வழிபட்டதை குறிக்கும் விதமாக பிரகாரத்தில் கையில் பிரயோக சக்கரத்துடன் மஹாவிஷ்ணுவும் ஸ்ரீதேவியும்  இருக்கின்றனர்.

ஸ்ரீதேவியின் கையில் உள்ள ஒரு தண்டத்தில் பறவை ஒன்று இருப்பது போலவும், அவளுக்கு இடப்புறத்தில் ஒரு பெண்ணும் வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஒரு ஆணும் இருக்க, ஸ்ரீதேவி வித்தியாசமான கோலத்தில் அமர்ந்திருக்கிறாள்

🌺 பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மனபயம் நீங்குதல் மற்றும் மன அமைதி

சனி தோஷ நிவர்த்தி

தோஷங்கள் மற்றும் சாப விமோசனம்

திருமண தடை அகலவும்  புத்திர தோஷம் நீங்கவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்கவும் பிரார்த்தனை..

🌺திருவிழாக்கள் :

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வைகாசி 10 நாள் பிரம்மோற்சவம் சிறப்பு. மஹாசிவராத்திரி திருக்கார்த்திகை 

ஐப்பசி அன்னாபிஷேகம்

ஆருத்ரா தரிசனம்

பங்குனி உத்திரம்

ஆடிப்பூரம் தைப்பூசம் மாசிமகம் 

பௌர்ணமி பிரதோஷ வழிபாடுகள் சிறப்பு..

🌺வழிப்பட்டோர் :

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மஹாவிஷ்ணு மஹாலக்ஷ்மி பிரசண்ட முனிவர், நீலகண்ட முனிவர், பிருகு முனிவர்,  உரோமச முனிவர், கபிலர், பாண்டவர்கள், ரமண மகரிஷி, மெய்ப்பொருள் நாயனார், நரசிங்க முனையரைய நாயனார், வள்ளலார், ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள், சம்பந்தர் அப்பர் சேக்கிழார் முதலியோர்

🌺அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூர் பகுதியில், தென் பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.

விழுப்புரம் திருவண்ணாமலை ரயில் பாதையில் அரங்காண்டநல்லூர் ரயில் நிலையம் உள்ளது.

விழுப்புரம் திருக்கோவிலூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் கோவில் வழியாகவே செல்லும்.

7AM – 12 NOON, 4PM – 8PM

73392 91990 சுரேஷ் குருக்கள் 

87784 89060 நடராஜ குருக்கள்

(திருக்கோவிலூர் கோவில் குருக்கள் இங்கும் பூஜை 4KM )

திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 2KM, ஆட்டோ வசதியும் உண்டு.

🌺 கோயில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பீடினாற்பெரி யோர்களும்

  பேதைமைகெடத் தீதிலா

வீடினாலுயர்ந் தார்களும்

  வீடிலாரிள வெண்மதி

சூடினார்மறை பாடினார்

  சுடலைநீறணிந் தாரழல்

ஆடினார் அறையணி

  நல்லூர் அங்கையால்தொழுவார்களே. 1

ஞான சம்பந்தர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *