திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர்

⭐மூலவர் : வீரட்டேஸ்வரர்

அம்பாள் : பெரியநாயகி சிவானந்தவல்லி 

ஸ்தலவிருக்ஷம் :சரக்கொன்றை தீர்த்தம் : சக்தி, வேல், வஜ்ர, உமாபதி, ருத்ர, கோடி, சிவ தீ & தென்பெண்ணை நதி

பாடல் : சுந்தரர் அப்பர் சம்பந்தர்

புராண பெயர்  : அந்தகபுரம் திருகோவிலூர், சுயம்பு,

43வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், நடுநாட்டு ஸ்தலம்11

⭐ ஸ்தல சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இத்தலத்து விநாயக பெருமானை குறித்து அவ்வையார் சீதக்களப என தொடங்கும் விநாயகர் அகவல் பாடியுள்ளார்.

🌹அந்தகாசுரனை சிவபெருமான் சம்ஹாரம் செய்த தலமிது. அட்டவிரட்டான தலங்களில் மிகவும் தொன்மையானதும் வரலாற்று சிறப்பு பெற்றதுமான 2வது வீரட்டான திருத்தலம் இது

🌹சுவாமி மூலஸ்தானத்தில் பைரவ ஸ்வரூபமாக உள்ளராம். எனவே பில்லி சூனியம் வைப்பு போன்ற தோஷங்களை இவர் நிவர்த்தி செய்வதாக ஐதீகம்.

🌹வாஸ்து சாந்தி (வீடு கட்டுதல்) எனப்படும் ஐதீகம் தோன்றியதற்கு காரணமான ஸ்தலம் இது.

🌹சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற ஸ்தலமிது. 

🌹அம்பாள் திரிபுர பைரவி உற்பத்தி ஸ்தலம் இது. சப்த  மாதாக்கள் உற்பத்தியான ஸ்தலமிது. 64பைரவர்கள் 64பைரவிகள் உற்பத்தியான ஸ்தலம் இது.

⭐ஸ்தல பெருமை👉 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பாரிவள்ளல் (பிரான்மலை) தன் மகள்களான அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோவிலூர் ஆண்ட தெய்வீகன் மன்னனுக்கு  ஔவையார் கபிலர் இருவரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்த சிறப்பு தலம் இது.

🌹இந்த திருமணத்தை வைத்து அமைந்த பெயர்களே சுற்றுப்புற கிராமங்களின் பெயர்களாக இப்போதும் உள்ளன. சங்கப்புலவர் கபிலர் பெருமான் குடியிருந்த பெருமைக்குரிய பேரூர். கபிலர் வடக்கிருந்து உயிர்த்துறந்த பாறை கபிலர் குன்று என்று பெண்ணை ஆற்றின் நடுவே தற்போதும் உள்ளது.

🌹இத்தலத்து முருகனை குறித்து அருணகிரிநாதர் திருப்புகழில் பாடி இருக்கிறார்.

🌹64 நாயன்மார்களின் இருவரான மெய்ப்பொருள் நாயனார், நரசிங்கமுனைய  நாயனார் அவதரித்த ஊர் இது.

⭐அஷ்டபுஜ விஷ்ணு துர்கை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சந்நிதியில் பிரகாரத்தில் இருக்கும் இந்த அம்மன் இங்கு சிறப்பு பெற்றவர். சாந்த ஸ்வரூபியாக, நமக்கு இருப்பது போலவே கண்கள் இருபுறமும் வெள்ளையாகவும் நடுவில் கருப்பு கரு விழியடனும் சாந்தமாக, சிரித்த முகத்துடன் இயற்கையாக இருப்பது போலவே இருக்கிறார். இவரை வழிபட்டால் திருமண தடை நீங்குகிறது. கஷ்டங்கள் நீங்கும். வேலை வாய்ப்பு தடை கல்யாணத்தடை ஆகவை விலக விசேஷ பிரார்த்தனை. எலுமிச்சம் பழ விளக்கு பூஜை செவ்வாய் வெள்ளி ஞாயிறு ஆகிய கிழமைகளில் ராகு காலத்தில் செய்கிறார்கள்.

⭐ பெரிய யானை கணபதி👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சுந்தரர் சேரமான் இருவரும் வான் வழியாக கயிலை செல்லும்போது, அவ்வை இந்த தலத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார். தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்தாராம். உடனே விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்ய அருளினார். சீதக்களப எனத் தொடங்கும் விநாயகர் அகவலை, ஔவையார் பாடி பூஜை செய்த பிறகு, மகிழ்ந்த விநாயகர், விஸ்வரூபம் கொண்டு தன் துதிக்கையால் ஒளவையாரை சுந்தரர், சேரமான் ஆகியோர் சென்றடையும் முன்பே கயிலையில் விட்ட கணபதி இவர். இவர் விஸ்வரூபம் எடுத்ததாலேயே பெரிய யானை கணபதி என்று பெயர் பெற்றார். “கணபதி பூஜை கைமேல் பலன்” உதாரணம்..

⭐ சண்முகர்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°

முருகன் அசுரனை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பூமியில் சிவபூஜை செய்ய வேண்டினார். அம்பாள் எந்த இடம் என்று உணர்த்த, அம்பாள் தன் கையில் இருந்த வேல் விழுந்த இடம், ” திருக்கை வேலூர்” என்பதால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. முருகன் சிவனை பூஜை செய்த ஸ்தலம் இது. இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடி இருக்கிறார்.

⭐ ஸ்தல வரலாறு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பார்வதி, ஈசனின் இரு கண்களையும் (சூரிய,சந்திரன்) விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்ந்தது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள் ( அஞ்ஞானம் ).

அந்த அந்தகாசுரனுக்கும் ஈஸ்வரனுக்கும் யுத்தம் நடக்கிறது. சிவன் தன் கரத்தில் உள்ள கதையால் அந்தகனுடைய தலையில் அடிக்க அவன் தலையில் இருந்து ரத்தம் பீரிட்டு பூமியில் விழுகிறது.

🌹ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உற்பத்தி ஆகி போர் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பார்வதி தேவி, காளி ஸ்வரூபம் எடுத்து அந்தகனின் தலையிலிருந்து வெளிவரும் ரத்தத் துளிகளை கபாலம் கொண்டு கையில் ஏந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறாள்.

🌹வெளிப்பட்ட ரத்தங்கள் ரத்தக் கோடுகள் ஆகி எட்டு திசைகளிலும் விழுந்து குறுக்கும் நெடுக்குமாக 8,8 ஆக 64 (சதுரங்களாக) பதங்களாக விழுகிறது.

🌹அந்தப் பதங்களில் சிவன் தனது அருளால் 64 பைரவர்களை உற்பத்தி செய்து அந்தப் பதங்களில் இருக்கச் செய்கிறார். 64 பைரவ சக்திகளையும் உற்பத்தி செய்து அசுர உற்பத்தியை தடுத்து அசுரனை வதம் செய்து தேவர்களுக்கு அனுக்கிரகம் செய்கிறார்.

🌹இதுவே இந்நாளில் வாஸ்து சாந்தி என்று கிரகப்பிரவேச காலங்களில், வீடு கட்டும் காலங்களிலும் செய்யும் வாஸ்து சாந்தி தோஷ நிவர்த்தியாகும். இந்த 64 பைரவர்களே வாஸ்து பூஜை எனப்படுகிறார்கள். இவ்வாறு அந்தகனை அழித்து அஞ்ஞானத்தை நீக்கி, நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளியவர் வீரட்டானேஸ்வரர் ஆவார்.

⭐ மற்ற சிறப்பு செய்திகள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கைலாயம் கூப்பிடு தூரத்தில் தான் உள்ளது எனும் வழக்கு உள்ள ஸ்தலம்.

🌹மெய்ப்பொருள் நாயனார் அவதரித்து குறுநில மன்னனாக ஆட்சி செய்த பதி. அவர் திருவுருவசிலை கோவில் உள்பிரகாரத்தில் உள்ளது.

🌹ஸ்தல மூர்த்தியாகிய அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது.

🌹கோவிலுக்கு பக்கத்தில் ஸ்ரீமத் ஞானியார் சுவாமி மடாலயம் உள்ளது. இதுவே ஆதி மடாலயம். முதல் 3 சன்னிதானங்கள் இங்குதான் வாழ்ந்து சமாதி அடைந்துள்ளனர். 4வது சன்னிதானம் இருந்துதான் திருப்பாதிரிப்புலியூர் மடாலயம். இச்சமாதிகள் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளன.

🌹இவ்வூரின் வடக்கு வீதியில் குகைநமச்சிவாயர் சமாதி உள்ளது.

🌹சுவாமி ஞானானந்த கிரியின் தபோவனம் இத்தலத்தில் தான் உள்ளது.

🌹மாசி மாதத்தில் பெருவிழா நடைபெறுகிறது. அதில் 6ம் நாள் மாலையில் அந்தகாசுர சம்ஹார ஐதீகம் நடைபெறுகிறது.

🌹70 கல்வெட்டுகள், அனைத்தும் சோழர்கள், புகழ் பெற்றிருந்தது.

🌹திருக்கை வேல் ஊர் மருவி திருக்கோவிலூர்.

🌹 1 மேற்கு பார்த்த சிவாலயம் தரிசனம் = 1000 சிவாலய தரிசனம் பலன்.

🌹மேற்கு பார்த்த ஸ்தலங்கள் பொதுவாக சம்ஹார ஸ்தலங்க ளாக சொல்லப்படுகிறது.

🌹சங்ககாலம், புராண காலம், இதிகாச காலம், வேதகாலம்னு எல்லா காலத்திலேயேயும் தொழப்பட்ட மஹோனதமான புண்ணிய பூமி.

🌹 மேற்கு பார்த்த கோவில்ல எல்லாம் நுழைந்ததும் வலது பக்கம் விநாயகர் சந்நிதி, இடது பக்கம் முருகன் சந்நிதி. இங்கு பிள்ளையார் பக்கத்தில் ஒளவையார் எப்படி கைலாயம் போனான்னு பார்க்கணும். அப்புறம் முருகன், அப்புறம் சுவாமி பிரதக்ஷணம்.

🌹திருகைலாய ஞான உலா என்பது கைலாயம் சென்று அங்கே பாடப்பட்டது.

⭐ பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இங்கு ஈசனை வழிபடுவோருக்கு மன நிம்மதி கிடைக்கும். பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும் ( வர்க்க தோஷம் ). புத்திர தோஷங்கள் விலகும், பாவ தோஷங்கள் விலகும். காரிய தடைகள் நீங்கும். வீடு கட்டுவதற்கான தடைகள் இத்தலத்தில் வழிபட்டால் நீங்கும். (வாஸ்து ஐதீகம் தோன்றியதே இத்தலத்தில் தான் ). சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலமாகளால் திருமணத்தடை விலகும். 

⭐ திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாசிமகம் 10 நாட்கள்- பிரம்மோற்சவம், பக்தர் கூட்டம் அலைமோதும். கார்த்திகை 3ம் சோமவாரம்- சங்காபிஷேகம், ஆடி வெள்ளிக்கிழமைகள் விசேஷம். புரட்டாசி-நவராத்திரி, ஐப்பசி-அன்னாபிஷேகம், சஷ்டி உற்சவம், சூரசம்ஹாரம், மார்கழி மணிவாசகர் உற்சவம், திருவாதிரை உற்சவம், ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகியவை விழா நாட்கள்.

⭐ வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கபிலதேவ நாயனார், மெய்ப்பொருள் நாயனார், நரசிங்க முனையரையர் (சுந்தரரை வளர்த்தவர்), அப்பர் சுந்தரர் சம்பந்தர் சேக்கிழார் 

⭐அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூரில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

எல்லா ஊர்களில் இருந்தும் திருக்கோவிலூருக்கு பேருந்துகள் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுன் பஸ் ஆட்டோ மூலம் கோவிலுக்கு செல்லலாம்.

6.30AM – 12NOON, 4.30PM-8.30PM

98426 08874 சுந்தரமூர்த்தி குருக்கள் 

94862 80030 ரமேஷ் சிவாச்சாரியார் 

87784 89060 நடராஜ குருக்கள் 

⭐ கோவில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

படைகொள் கூற்றம் வந்துமெய்ப்

  பாசம்விட்ட போதின்கண்

இடைகொள்வா ரெமக்கிலை

  யெழுகபோது நெஞ்சமே

குடைகொள்வேந்தன் மூதாதை

  குழகன்கோவ லூர்தனுள்

விடையதேறுங் கொடியினான்

  வீரட்டானஞ் சேர்துமே. 1

ஞான சம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *