திருத்தினைநகர் தீர்த்தனகிரி சிவ கொழுந்தீஸ்வரர்
மூலவர் : சிவகொழுந்தீசர் சிவாகங்கரேஸ்வரர் திருந்தீஸ்வரர்
அம்பாள் : பிரணவபுரீஸ்வரி, நீலாயதாக்ஷி, ஒப்பிலாநாயகி கருந்தடக்கன்னி
ஸ்தல விருக்ஷம் : கொன்றை
தீர்த்தம் : கௌரி தீ ( கிணறு- அம்பிகையால்) ஜாம்பவ தடாகம், கருட, தேவ, சக்கர தீ
பாடல் : சுந்தரர்,
சுயம்பு, 37வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், நடுநாட்டு ஸ்தலம் 5
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பங்குனி 20 21 22 சூரிய ஒளி சுவாமி மீது படர்ந்து பூஜை.
கோஷ்டத்தில் லிங்கோத்பவர் அருகில் பெருமாள் பிரம்மா இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில்.
நிருத்த விநாயகர் புடைப்புச் சிற்பமாக, அருகே 4 பூதகணங்கள் வணங்கியபடி.
பார்வதி + பரமேஸ்வரன் கைலாயத்தில் வீற்றிருக்கும் அதி அற்புதக் காட்சி –
யுகங்கள் தோறும் தேவாதி தேவர்கள் வழிபடும் காட்சி.
வசிஷ்டர் பூஜை, வராக அவதார
தொடர்பு, ராகு கேது பூஜை பேறு , பிரம்மா, மஹாவிஷ்ணு, துர்வாசர், தேவர்கள் என அனைவரும் என்பது க்ஷேத்ர மஹாத்மியம். அத்ரி+ அனுசுயா பிரார்த்தனை.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிருதயுகத்தில் & திரேதா யுகத்தில் ஒங்காராபுரம் என்றும் துவாபர யுகத்தில்
தேசபிரதம் (ஒளியை தருவது ) கலியுகத்தில்
ஞான பிரதம் ( ஞானத்தை தருவது ), பின்னர் திருத்தினைநகர், இப்போது தீர்த்தனகிரி.
வங்கதேசத்து மன்னனான விசுவநிருபன்-பிரம்மஹத்தி தோஷம்-இங்கு தாமரை தடாகம் ஸ்நானம்- இறைவனை தொழுது- அவனது சரும நோயும், பிரம்மஹத்தி தோஷமும் நீங்கிட, அவனது மகனான வீர சேனன் இங்கு 3 ஆண்டுகள் தங்கி கோவில் கட்டி, திருப்பணிகள். இவனது வில்லேந்திய உருவச்சிலை நால்வர் சன்னதியில்.
இத்தலத்து பெருமானை மஹா விஷ்ணு 3 தினங்கள் வழிபட்டு முராசுரனை வதைத்ததால், முராரி என சிறப்பு பெயரும் பெற்றார்.
துர்வாசரால் சாபம் பெற்ற பிரிங்கி மகரிஷி இங்கு வழிபட்டு சாப நிவர்த்தி.
கருடன் இவரை பூஜித்து பலம் பெற்று தன் தாயின் அடிமைத் தனத்தை தகர்த்தான்.
ஜாம்பவான் இங்கு வந்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜித்து, நீண்ட ஆயுள் பெற்று ராமபிரானுக்கு துணை புரிந்தார். அம்பாள் சன்னதியில் இவர் பூஜித்த சிவலிங்கம் உள்ளது. தீர்த்தம் ஒன்றும் இவர் பெயரில் உள்ளது.
ஸ்தல வருக்ஷமான கொன்றை மரத்தடியில் நந்திதேவர் இறைவனை வழிபட்டுள்ளார். பிரகாரத்தில் உள்ள கொன்றை மரத்தடியில் சிவலிங்கம் + நந்தி உள்ளது.
அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த ஸ்தலம் + பதஞ்சலி வியாக்ரபாதர் வழிபாடு.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாய தம்பதியர் ஆன பெரியான் எனும் பள்ளனும் அவன் மனைவியும் அதீத பக்தி. தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்து விட்டு தான் உண்பர்.
அவர்கள் பக்தியை உலகிற்கு காட்ட எண்ணி, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப் பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என சென்றார். அங்கும் பணியாளர்களே இல்லை. நீண்ட நேரம் அங்கேயே காத்திருக்க, அப்போது இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க, விவசாயி வீட்டிற்கு சென்று உணவு எடுத்து வருவதாக கூறினார்.
இறைவன், ” நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு! அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்! என்றார். ” விவசாயி ஒத்துக்கொண்டு தன் தோட்டத்தை உழுமாறு கூறினான். இறைவன் வயலில் இறங்கி உழுதார்.
தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று உணவை எடுத்துக் கொண்டு திரும்பினர். அப்போது தோட்டத்தில் அன்று விதைக்கப்பட்டிருந்த தினை பயிர்கள் விளைந்து, கதிர்கள் முற்றி, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன.
ஆச்சரியமடைந்த விவசாயி சந்தேகத்துடனே அடியவருக்கு அருகில் இருந்த கொன்றை மரத்தின் அடியில் அன்னமிட்டான். அடியவர் சாப்பிட்ட பிறகு தான், ஒரே நாளில் திணை பயிர் விளைந்தது எப்படி? என வினவினான்.
அடியவராக வந்த முதியவர் மறைந்து, சிவபெருமான் காட்சி தந்து, தானே அடியவராக வந்தது என உணர்த்தினார். சிவ தரிசனம் கண்டு மகிழ்ந்த விவசாயி, இறைவனை அங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக் கொண்டான். இறைவனும் சுயம்பு லிங்கமாக அவ்விடத்தில் எழுந்தருளினார். ஒரே நாளில் திணை விளைந்ததால் திணை நகர் என்று பெயர் பெற்றது. சிவபெருமான் உணவு சாப்பிட்ட கொன்றை பிரகாரத்தில் உள்ளது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நடராஜ சபையில் நடராஜர் அழகான சிரித்த முகம். நடராஜ மூர்த்தியின் கீழே பீடத்தில் மஹாவிஷ்ணு சங்கை வாயில் வைத்து ஊதுவது போலவும், பிரம்மா பஞ்சமுக வாத்யம் வாசிப்பது போலவும் சிறிய மூர்த்தங்கள் உள்ளன.
இத்தலத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி 2 கால்களையும் மடக்கி, யோக பீடத்தின் மீது- சனகாதி முனிவர்களுடன். முயலகன் இல்லை. சிவபெருமான் உணவு சாப்பிட்ட கோலம். வேண்டினால் உணவு பஞ்சம் அகலும். விவசாயம் செழிக்கும்.
நந்தி முன்னே 35 துவாரங்கள் கொண்ட சாளரம், வசீகரம்.
சிவபெருமானுக்கு தினமும் தினை நைவேத்தியம் வழக்கமாக இருந்திருக்கிறது. எனவே தான் திருத்தினைநகர். இப்பொழுது தேன் நாட்டுச்சக்கரை நெய் திணை மில்லட் கலந்து பிரசாதமாக கொடுக்கிறார்கள் விசேஷ நாட்களில்.
வைகாசி விசாகத்தில் தேர் திருவிழாவும், அனுஷ நட்சத்திர நாளில் ஜாம்பவான் தடாகத்தில் தீர்த்த வாரியும், மாசி மகத்தில் தேவ தீர்த்தம் எனும் கடலில் தீர்த்தவாரியும் சிறப்புற நடைபெறுகிறது..
சிவபெருமான் உணவு சாப்பிட்ட கொன்றை மரம் பிரகாரத்தில் உள்ளது.
இத்தல விநாயகர்
வலம்புரி விநாயகர். கிழக்கு நோக்கிய கோவில், 3 நிலை ராஜகோபுரம்.
ராஜகோபுரத்திற்கு வெளியே இருப்பது வித்தியாசம்
பலிபீடம் கொடிமரம் நந்தி மண்டபம் கடந்து சென்றால் 3 நிலை அழகிய அகன்ற எழில் கொஞ்சும் ராஜகோபுரம்.
இசைக்கும் திருமால் பிரம்மா
மிகவும் அபூர்வம், தரிசனம் மிகவும் விசேஷம்.
விஷ்ணு துர்க்கை கோஷ்டத்தில் இல்லாமல் தனி சன்னதியில்.
சிவபெருமான் நீர் இறைத்த கலம்
இங்கு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக, சதுர வடிவ பீடத்துடன் அருள் பாலிக்கிறார். சிவன் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்திய ஏர் மற்றும் நீர் இறைத்த கலம் தற்போதும் உள்ளது.
அம்பாள் தனி சன்னதி. சுந்தரர் அம்பாளுக்கும் பதிகம்.
இங்கு சண்டிகேஸ்வரர் மனைவியுடன் காட்சி தருகிறார்.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சரும நோய்கள் நீங்க: இத்தலத்தில் உள்ள ஜாம்புவதடாகம் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் தீராத தோல் நோய்கள் மற்றும் சரும வியாதிகள் நீங்கும்.
சாப விமோசனம்: முன்வினைப் பாவம் மற்றும் சாபங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து சிவனை வணங்கினால் நிம்மதி பெறலாம்.
விவசாய வளம்: சிவபெருமான் விவசாயிக்கு உதவிய தலம் என்பதால், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், பயிர்கள் செழிப்படையவும் விவசாயிகள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
முன்வினைப் பயன்கள் நீங்க: ஜாம்பவான் சாபம் தீர்ந்த தலம் என்பதால், பூர்வ ஜென்ம கர்மாக்கள் மற்றும் முன்வினைத் தொல்லைகள் விலகும்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வைகாசி பிரம்மோற்சவம்: வைகாசி மாதத்தில் 13 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தேர்த்திருவிழா மற்றும் தீர்த்தவாரி: வைகாசி விசாகத்தில் தேர்த்திருவிழாவும், அனுஷ நட்சத்திர நாளில் ஜாம்பவான் தீர்த்தத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன.
மாசி மக தீர்த்தவாரி: மாசி மகம் அன்று தேவ தீர்த்தம் என்னும் கடலில் தீர்த்தவாரி சிறப்புற நடைபெறுகிறது.
மஹா சிவராத்திரி: சிவராத்திரி நாளில் சிறப்புக் பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
அன்னாபிஷேகம்: ஐப்பசி பவுர்ணமி அன்று சிவக்கொழுந்தீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
ஆருத்ரா தரிசனம்: மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது
மற்றும் திருக்கார்த்திகை பௌர்ணமி பிரதோஷம் போன்ற நாட்களும் சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கௌரி, திருமால், பிரம்மா, நந்திதேவர், அகத்தியர், துர்வாசர், வசிஷ்டர், அத்ரி, அனுசுயா, ராகு, கேது, கருடன், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், பிருங்கிமுனிவர், ஜாம்பவான், திருநாவுக்கரசர், சுந்தரர், சேக்கிழார், விசுவ நிருபன், வீரசேன மன்னன், பெரியான் & அவன் மனைவி
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகில் உள்ளது
கடலூர் – சிதம்பரம் பிரதான சாலையில், கடலூரிலிருந்து சுமார் 27 கி.மீ தொலைவிலும், சிதம்பரத்திலிருந்து சுமார் 26 கி.மீ தொலைவிலும் உள்ளது. மேட்டுப்பாளையம் அருகில் தீர்த்தனகிரி செல்லும் சாலையில் பிரிய வேண்டும்.
7AM -11.30AM, 5PM – 7.30PM
TS வெங்கட்ராமன் சிவாச்சாரியார் 97864 67593
மணிகண்டன் சிவாச்சாரியார்
90471 40464
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நீறு தாங்கிய திருநுத லானை
நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானைக்
குற்றம் இல்லியைக் கற்றையஞ் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்
கரிய சோதியை வரிவரால் உகளுஞ்
சேறு தாங்கிய திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. 1
சுந்தரர்


Leave a Reply