திருஎருக்கத்தம்புலியூர் ராஜேந்திரபட்டினம் நீலகண்டேஸ்வரர் ஸ்வேதாரண்யேஸ்வரர்
மூலவர் : திருக்குமாரஸ்வாமி, ஸ்வேதாரன்யேஸ்வரர் நீலகண்டேஸ்வரர்
அம்பாள் : விறாமுலையம்மன், (அபின்ன குசநாயகி) , அபீத குஜநாயகி, நீலோற்பலாம்பிகை
ஸ்தலவிருக்ஷம்:வெள்ளெருக்கு தீர்த்தம் : கந்த, செங்கழுநீர், சுவேதம், நீலோத்பவம் தீ…
ஊர் : ராஜேந்திரபட்டினம்,
புராணப் பெயர் : எருக்கத்தம் புலியூர், குமரேசபட்டினம்
பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர் சுயம்பு, 36வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், நடுநாட்டு ஸ்தலம் 4
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
MAR 16 முதல் 20 வரை சூரிய ஒளி மூலவர் மீது படுகிறது. திருநீலகண்ட நாயனார் அவதரித்த தலம்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ராஜராஜ சோழன் புத்திர பாக்கியம் வேண்டி இத்தல ஈசனை வணங்கினார். அதன் பலனாக ராஜேந்திர சோழன் பிறந்தான். SO ராஜேந்திர பட்டினம். ராஜேந்திர சோழனுக்கு திருமண வரத்தையும் அருளிய ஸ்தலம். SO ஏராளமான திருப்பணிகள்.
ஸ்வேதன் மஹாராஜா – ஸ்னானம் செய்துவிட்டு வரும் பொழுது வசிஷ்டர் மேல் பட சாபம் – வெண்குஷ்டம் ஏற்பட்டது. சிவபக்தனான இவன் எருக்கத்தம்புலியூர் தீர்த்தத்தில் நீராடி சிவ பூஜை செய்து நோய் நீங்கப் பெற்றான். எருக்கத்திற்கு வெண்குஷ்டத்தை போக்கும் சக்தி உண்டு.
ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜை செய்து, எருக்க இலையில் தயிர்சாதம் பிரசாதம், நிவர்த்தி.
பிறந்த குழந்தை- திருஷ்டி நீங்க -அரைஞான் கயிற்றில் – வெள்ளெருக்கு கொடியினுடைய நாரை எடுத்து, சுருட்டி இடுப்புல குழந்தைக்கு கட்டுவா. திருஷ்டி படாமல் இருக்கும்னு.
திருநீலகண்டர்
இங்குள்ள இறைவன் அருளால்
யாழ் மூலமாக இசைத்து திருமுறைகளைப் பாட
ஏற்றுக்கொண்டது.
மதுரை சொக்கநாதர் பலகை கொடுத்து ஏறி நின்று பாடு.. அவரை மக்கள் 4 வீதியிலும் ஊர்வலமாக அழைத்துக் கொண்டு வந்தார்கள்.
பின்னர் தான் சம்பந்தருடன் க்ஷேத்ராடனங்கள். அவருடன் திருநல்லூர் பெருமணம் ஆச்சாள்புரம், ஞான சம்பந்தரின் விவாகம், அக்னியில் புகுந்து கைலாச பிரவேசம். அவரின் அவதார ஸ்தலம்.
முருகப்பெருமானுக்கு ஊமை தன்மை நீங்கியது போல், திறமையிருந்தும் பயம் கோபம் முதலியவற்றால் பேச தெரியாதவர்கள் இங்கு வந்து பூஜை செய்து நிவாரணம் பெறலாம்.
நைமிஷாரண்யம் மகரிஷி சூத மகரிஷி நியமமா பூஜை செய்ய தேடி வந்த இடம் எருக்கத்தம் புலியூர். பிறகு அனைத்து மகரிஷிகளும் வந்தார்கள். அவ்வளவு சிறப்பு.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கைலாயத்தில் சிவன் வேதாகமத்தின் உட்பொருளை பார்வதி தேவிக்கு உபதேசித்து கொண்டிருந்தார். பார்வதி தேவி அதை சரியாக கவனிக்காததால், அவளை பரதவ குல ( மீனவ ) பெண்ணாக பிறக்குமாறு சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன், தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார்.
இந்த குற்றத்திற்காக சிவன், முருகனை, மதுரையில், வணிகர் குலத்தில் ஊமை பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். மதுரையில் முருகன் தனபதி குணசாலினி தம்பதியருக்கு “உருத்திரசன்மர்” என்ற பெயரில் அவதரித்தார். உரிய வயது வந்த போது, பல சிவ தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். கடைசியாக எருக்கத்தம் புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டு, பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் குமாரசுவாமி. உருத்திர சன்மனின் உருவம் உள்ளது. மற்றும் நீலகண்ட நாயனார் உருவமும் உள்ளது.
இங்கு வேதத்தை மொழிந்த பன்மொழியோடு சுவாமி வேதம் சொல்லிண்டே இருக்கார். பார்வதி தேவி ஆத்மார்த்தமா கேட்டுண்டு இருக்கா. நாம பக்தியோட பஞ்சாக்ஷரம் சொல்லிண்டே நுழையனும். பரம பக்குவத்தோடு உண்டான ஆலயம். ஜன்ம சாபல்யம் தீர்க்கும் ஆலயம்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தலத்தின் பெருமையை கேட்ட தேவர்களும் முனிவர்களும் இங்கு வந்து பறவைகளாககவும் மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட துவங்கினர். அங்கே வந்த வேடர்கள் பறவைகளை கொல்லவும் மரங்களை வெட்டவும் முயன்றனர். உடனே அனைவரையும் யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி வழிபடுங்கள் எனக் கூறி மறைந்தார். எனவே இவவூர் எருக்கத்தம்பலியூர். புலிக்கால் முனிவரான வியாக்ர பாதர் வழிபட்ட தலங்களில் ஒன்று So புலியூர். பஞ்ச புலியூர் தலங்களில் ஒன்று.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பேச்சு குறைபாடுகள் மற்றும் ஊமைத்தன்மை நீங்க
குழந்தை வரம் வேண்டுதல்
தோல் நோய்கள் மற்றும் வெண்குஷ்டம் குணமாக
இசையார்வம் மற்றும் கலைகளில் சிறக்க பிரார்த்தனை.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்திரை மாத பிரம்மோற்சவம் சிறப்பு.
மார்ச் 16 முதல் 20 வரை சூரிய பூஜை சிறப்பு.
மஹாசிவராத்திரி கார்த்திகை பௌர்ணமி பிரதோஷம் சிறப்பு
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முருகப்பெருமான் as ருத்ரசர்மன், ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், வியாக்ர பாதர், ஸ்வேத மஹாராஜா, திருஞானசம்பந்தர், நீலகண்ட யாழ்பாணர், சூத மகரிஷி, தேவர்கள், முனிவர்கள்..
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விருத்தாச்சலம் ஜெயங்கொண்டம் சாலை 12KM தூரத்தில் கோவில். OR சென்னை தஞ்சை சாலையில் சேத்தியாத்தோப்பு ஸ்ரீமுஷ்ணம் விருத்தாச்சலம் பாதையிலும் செல்லலாம்.
7AM to 11AM, 4PM to 7.30PM
84890 38738
விக்னேஷ் குருக்கள்
கோவிலுக்கு அதிக பார்வையாளர்கள் இல்லாததால் குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோயில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை
உடையான் உமையோடும் உடனா யிடுகங்கைச்
சடையான் எருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
விடையான் அடியேத்த மேவா வினைதானே.
ஞான சம்பந்தர்


Leave a Reply