அச்சிறுப்பாக்கம் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர்
மூலவர் : ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர் 2 மூலவர்கள் தனி தனி கருவறைகளில்
அம்பாள் : இளங்கிளி அம்மை உமயாம்பிகை என 2 அம்மன் தனித்தனி கருவறையில்
ஸ்தல விருக்ஷம் சரக்கொன்றை தீர்த்தம் : தேவ, பானு & சங்கு தீ பாடல் : ஞான சம்பந்தர்
புராணப் பெயர் : அச்சு இறு பாகம் அச்சிறுபாக்கம்
ஆகமம்:காமிகம், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் தொண்டை நாட்டு ஸ்தலம் 29
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கணபதி பூஜை கை மேல் பலன், விக்னகர்த்தா விக்னஹர்த்தா கணபதி
கணபதியை விட்டுவிட்டு நாம் எதை பண்ணினாலும் சாத்தியப்படாது.
கிருத யுகத்தில் சுவாமி கணபதிக்காக வந்து இறங்கிய இடம். திரேதா யுகத்தில் கண்ணுவ மகரிஷி, கௌதம மகரிஷிக்கு அவா அவா ஆத்மார்த்த மூர்த்தியாக காட்சி கொடுத்த மூர்த்தி ( பிராசீனமா கௌதமேஸ்வரர் கண்வேஸ்வரர் னு திருநாமம் )
2 மூலவர் 2 அம்பாள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கின்றனர்
இத்தலத்தை திருநாவுக்கரசர் தனது க்ஷேத்ர கோவையில் குறிப்பிட்டிருக்கி றார். அகஸ்தியருக்கு இத்தலத்திலும் சிவன் தனது கைலாய திருமண காட்சியை காட்டி அருளியுள்ளார்.
சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும் வித்யுன்மாலியும் அவருக்கு துவாரபாலவர்களாக இருக்கின்றனர்.
உமையாட்சீஸ்வரருக்கு முன்னே தியான நந்தி இருக்கிறது.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விலகிய கோபுரம்
பாண்டிய மன்னன் ஒருவன் சிவ தல யாத்திரை சென்று கொண்டிருந் தபோது இத்தலத்தின் அருகே அவனது தேர் அச்சு முறிந்தது. பணியாளர்கள் சக்கரத்தை சரி செய்து கொண்டிருந்தபோது தங்க நிறமான உடும்பு ஒன்று சென்றதை கண்ட மன்னன், அதை பிடிக்க சென்றான். உடும்போ ஒரு சரக்கொன்றை மரத்தினுள் புகுந்து கொண்டது.
காவலர்கள் மரத்தை வெட்டிய போது, ரத்தம் வெளிப்பட்டது.
உடும்பு வெட்டுப்பட்டதாக நினைத்த மன்னன், மரத்தின் அடியில் தோண்டி பார்த்தான். எவ்வளவோ தேடியும் உடும்பு மட்டும் அகப்படவில்லை. அன்று இரவு மன்னனுக்கு காட்சி தந்த சிவன், உடும்பு மூலமாக தான் திருவிளையாடல் புரிந்ததை வெளிக்காட்டி, இவ்விடத்தில் சுயம்புவாக எழுந்தருளி இருப்பதை உணர்த்தினார்.
அவருக்கு இங்கேயே கோவில் கட்ட விருப்பம் கொண்டான் மன்னன். அப்போது அங்கு ‘திருநேத்திரதாரி’ எனும் மூன்று கண்களை உடைய முனிவர் ஒருவர் வந்தார். தீவிர சிவபக்தரான அவரை பற்றி அறிந்து கொண்ட மன்னன், இத்தலத்தில் சிவாலயம் கட்டித் தரும்படி கூறிவிட்டு தனது யாத்திரையை தொடர்ந்தான்.
நெடுநாட்கள் கழித்து மன்னன் திரும்பி வந்த பொழுது கோவில் மத்தியில் நந்தி கொடி மரத்துடன் ஆட்சிபுரீஸ்வரருக்கு ஒரு கருவறையும், அவருக்கு வலது பின்புற பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் நேரே உமை ஆட்சீஸ்வரருக்கு ஒரு மூலஸ்தானமுமாக கட்டி வைத்திருந்தார். (இக்கருவறையில் தான் லிங்கத்திற்கு பின்புறம் சிவ பார்வதி திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர் )
புரியாத மன்னன் காரணம் கேட்டான்.
” உமை ஆட்சி செய்த ஈஸ்வரனே, உடும்பு வடிவாக்கி என்னையும் ஆட்சி செய்தார். எனவே உங்களுக்கு காட்சி தந்த உமை ஆட்சீஸ்வரருக்கு பிரதான வாயில் கொண்டு ஒரு கருவறையும், எமை ஆட்சி செய்த ஈஸ்வரருக்கு பிரதான கருவறையுமாக வைத்து கோவில் கட்டினேன் என்றார் திரிநேத்ரதாரி. மன்னனும் ஏற்றுக் கொண்டான்.
சுயம்பு லிங்கமாக இருக்கும் எமையாட்சீஸ்வரரே இங்கு பிரதானம். திருவிழாக்களும் இவருக்கே நடக்கிறது. ராஜகோபுரத்தில் இருந்து கொடி மரமும் நந்தியும் விலகியே இருக்கிறது.
பிரகாரத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடி ஈஸ்வரர் சன்னிதியில் சிவனை வணங்கிய கோலத்தில் திருநேத்ரதாரி இருக்கிறார். இம் மரத்தில் சித்திரை மாத திருவிழாவின் போது மட்டும் பூக்கள் மலர்வது சிறப்பு.
அச்சு முறித்த விநாயகர்
சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர், அச்சு முறி விநாயகராக கோவிலுக்கு வெளியே, தனிச் சன்னதியில் மேற்கு திசையை பார்த்து அமர்ந்திருக்கிறார். அருணகிரிநாதர் இவ்விநாயகரை தரிசித்து விட்டு, “அச்சிறு பொடி செய்த” என்று இவரது சிறப்புகளை பாடி தான் திருப்புகழை துவக்கி உள்ளார். புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாக்ஷன் வித்யுன் மாலி ஆகிய 3 திரிபுர அசுரர்கள் சேர்ந்து கொண்டு தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தனர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி பிரம்மாவிடமும், அவர்கள் விஷ்ணுவிடம், பின் அனைவரும் சென்று சிவனை வேண்டினர்.
தேவர்களுக்கு இரங்கிய சிவன், வானுலகு மற்றும் பாதாள உலகை இணைத்து தேர் ஆக்கி, அதில் ஏறி அசுரர்களை அழிக்க சென்றார்.
எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக, முழு முதற் கடவுளான விநாயகரை வணங்கி விட்டு அல்லது மனதில் நினைத்து விட்டோ தான் செய்ய வேண்டும் என்பது நியதி. சிவனுக்கும் இந்த நியதி பொருந்தும்.
ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில், விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ சிவனே நம்முடன் இருக்கும்போது வேறென்ன துணை வேண்டும்? என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர்.
கோபம் கொண்ட விநாயகர், தேரின் அச்சை முறித்து சிவனை செல்ல விடாமல் தடுத்து விட்டார். தேர் அங்கேயே நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார்.
தந்தை சொல் கேட்ட விநாயகர், தேர் அச்சை சரியாக்கினார், பின் சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடம் என்பதால் இத்தலம் அச்சு இறு பாக்கம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் அச்சிறுப்பாக்கம் ஆனது. சிவன் ஆட்சீஸ்வரர் என்றும் ஆட்சிபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஸ்தல சிறப்பு செய்திகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆட்சிபுரீஸ்வர் பிற பெயர்கள்- அச்சேஸ்வரர், பார்க்கபுரீஸ்வரர், ஆட்சீஸ்வரர், ஆட்சிகொண்டநாதர், ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக்கானமுடையார்.
ஸ்தல விநாயகர் : அச்சுமுறி விநாயகர் , 5 நிலை ராஜகோபுரம் பிரகாரத்தில் சீனிவாச அலமேலு மங்கை தாயார் தனி சன்னதியில் உள்ளனர்..
மக்கள் வழக்கில் அச்சரபாக்கம் என்று வழங்குகிறது.
பிரம்ம கபால மாலைடன் பைரவர் காட்சி தருகிறார்.
மூலவர் ஆட்சீஸ்வரர் சுயம்பு – தாழ அமைந்த சதுரமான ஆவுடையார்- திருமேனி சொரசொரப்பாக உள்ளது.
பெருமானுக்கு முன்பு நாம் நின்று வழிபடும் இடத்தில் கீழே கிணறு உள்ளதாம். கருங் கற்கள் போட்டு மூடப்பட்டுள்ளது மழைக்காலத்தில் கற்களின் இடுக்கு வழியாக பார்த்தால் நீர் இருப்பது நன்கு தெரியும்.
கோஷ்ட மூர்த்த சோமாஸ்கந்தருக்கு கீழே நாகம் ஒன்று சிவ லிங்கத்தை வழிபடுவது, காரைக்கால் அம்மை தலையால் நடப்பது, கண்ணப்பர் கண்ணை பெயர்க்கும் போது, இறைவனின் கை வெளிப்பட்டு தடுப்பது, ஒரு தலையுடன் இரு மான்கள் போன்ற சிற்பங்கள் கண்ணுக்கு விருந்தளிப்பதுடன் மனதிற்கும் அமைதியை தருகின்றன.
கருவறை சுவரில் நிறைய கல்வெட்டுகள் உள்ளன.
மஹா பெரியவா ராமேஸ்வரத்தில் ஆதிசங்கரரை பிரதிஷ்டை பன்றச்சே, கிளம்பி வந்த பெரிய லாரி, இங்க நின்னுடுத்து. லாரி AXIL CUT ஆகி நின்னுடுத்து.
பெரியவா காஞ்சிபுரத்தில் இருக்கா. அவரை கூப்பிட்டு சொன்னபோது, 108 தேங்காய் பிள்ளையாருக்கு உடை, அப்புறம் தான் நகரும்னுட்டார். பல அற்புதங்கள் நிகழ்ந்த ஸ்தலம்.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆட்சிபுரீஸ்வரர் இடம் வேண்டிக் கொண்டால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமை திறன், பதவி உயர்வு கிடைக்கும் என்பதும், சுவாமி அக்ஷரம் எனும் எழுத்தின் வடிவமாக இருப்பதால், கல்வி கேள்விகளில் சிறக்கலாம் என்பதும் நம்பிக்கை. இங்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதில் கலந்து கொண்டால் தோஷங்கள் ஜென்ம வினைகள் தொழில் தடைகள், மனக்குழப்பங்கள் நீங்கும் என நம்புகின்றனர்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்திரை பிரம்மோற்சவம் 10 நாள் தேரோட்டத்துடன் , ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், மஹாசிவராத்திரி, பிரதோஷம்,
பௌர்ணமி விசேஷ பூஜைகள்.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவபெருமான், த்ரிநேத்ரதாரி முனிவர், மஹாவிஷ்ணு பிரம்மா, கௌதம மகரிஷி , கண்வ மகரிஷி, அப்பர், சம்பந்தர், சேக்கிழார் ,
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் தாண்டி உள்ளது. சென்னை திருச்சி நெடுஞ்சாலையில், மெயின் ரோட்டில் இருந்து இடது பக்கம் (TAKE LOOP ROAD ) 800 மீட்டர் உள்ளே உள்ளது.
அருகில் உள்ள ரயில் நிலையம் மேல்மருவத்தூர் 4KM
6.30AM – 12 NOON, 4PM – 8PM
98423 09534
சங்கர் சிவாச்சாரியார்
82709 75564
லோகேஷ் குருக்கள்
கோயில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொன்றிரண் டன்ன புரிசடை புரளப்
பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக்
குன்றிரண் டன்ன தோளுடை யகலங்
குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
மின்திரண் டன்ன நுண்ணிடை அரிவை
மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
அன்றிரண் டுருவம் ஆயஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply