திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர்

🌷மூலவர் : வேதகிரீஸ்வரர் (மலைமேல்) பக்தவத்சலேஸ்வரர் (தாழக்கோவில்)

அம்பாள் : சொக்கநாயகி பெண்ணினல்லாளம்மை (மலைமேல்) திரிபுரசுந்தரி (தாழ)

ஸ்தல விருக்ஷம் : வாழை 

தீர்த்தம் : சங்குதீ, பட்சி தீ, மலையைச் சுற்றி அமைந்த  12 தீர்த்தம் : இந்திர, சம்பு, ருத்திர, வசிஷ்ட, அகத்தியர் , மார்க்கண்டேய, மெய்ஞ்ஞான கௌசிக, நந்தி, வருண, அகலிகை, பக்ஷி தீர்த்தங்கள் 

பாடல் : நால்வரும், அப்பர் சுந்தரர் சம்பந்தர் மாணிக்கவாசகர் 

🌷இத்தலம் வேதமே மலையாய் இருத்தலின் “வேதகிரி” என பெயர் பெற்றது. ரிக் யஜுர் சாமம் அதர்வணம் என்ற 4 வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும் அவற்றுள் அதர்வண வேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார்- தலபுராணம்.

🌷கழுகுகள் பூஜித்து பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது.

கிருத யுகத்தில் சண்டன் பிரசண்டன் எனும் கழுகுகளும் 

திரேதா யுகம் சம்பாதி ஜடாயு

துவாபர யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன்

கலியுகத்தில் சம்பு ஆதி முறையே வழிபட்டு பேறு பெற்றன. 

🌷மலையில் நாள்தோறும் உச்சி பொழுதில் 2 கழுகுகள் வந்து உணவு பெற்று சென்றுள்ளன. கழுகுகள் காலை ராமேஸ்வரத்தில் ஸ்நானம் செய்து, கழுகுன்றத்தில் ஆகாரம் உண்டு, காசியில் அடைக்கலம் ஆவதாக ஐதீகம்.

🌷500 அடி உயரமுள்ள இம்மலையில் நாள்தோறும் உச்சிப் பொழுதில் கழுகு வந்து உணவு பெற்று செல்வதால் இதற்கு பட்சி தீ & திருக்கழுகுன்றம்.

🌷பிரம்மபுரம், ஆதிநாராயண புரம், இந்திரபுரம், வேதகிரி, பக்ஷி ரக்ஷபுரம், தபோவனம், தேவலோகம், அமராவதி பட்டினம், ஆகாச நகரம், பூ கைலாயம், தக்ஷின மேரு, கர்ம நாசபுரம், பரத்வாஜ க்ஷேத்ரம்… புண்ணிய பதி..

🌷 நம் கர்ம வினைகளை நாசம் செய்யும் 👉 புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்ககூடிய திவ்யக்ஷேத்ரம் 

🌷ஸ்தலம் தீர்த்தம் மூர்த்தி – அனைத்தும் புகழ்ந்துரைக்கபட்ட பதி. எத்தனை முறை சென்றாலும் ஒரு ஆனந்த பேரானுபவம் கிடைக்கும் உயர்ந்த ஸ்தலம். இந்த தரிசனம் கோடி ஜென்ம சுஹுர்தம்.

🌷 இந்த மலையேறிச் செல்லும் போது, மனம் பஞ்சாட்சரம் ஜபித்துச் செல்லும் போது, பக்தியே நம்மை அழைத்துச் செல்லும். சுவாமியை போன்று தாழக்கோவில் அம்பாள் திரிபுரசுந்தரியும் சுயம்பு.

🌼ஸ்தல சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷இங்கு சிவன் சுயம்புவாக அருள் பாலிக்கிறார். சிவ தலங்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கு இல்லாமல் இருப்பது மாறுபட்டதாகும். 565 படிகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் தலம்.

🌷12 வருடங்களுக்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும். புஷ்ப கர மேளா என புகழ்பெற்ற இவ்விழா, வட இந்தியாவில் நடக்கும் கும்பமேளா போன்று புகழ் பெற்றது.

🌷12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம். இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

🌷இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது. சித்த பிரம்மை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மனம் உருகி வேண்டினால் முழுமையாக குணமடைகின்றனர் என்பது இப்போதும் நடக்கும் அதிசயம்.

🌷திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கும் போது, அது சமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன், குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.

🌷சங்கு கரை ஒதுங்கியதும், கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்து வைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்குப் பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும்.

🌷அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். அந்த அரிய நிகழ்வுகளை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தை சுற்றிலும் நிரம்பி இருப்பார்கள்.

🌷பின்னர் தூப தீப ஆராதனை செய்து மங்கள வாத்தியம் முழங்க வேதம் ஓதி கோவிலுக்குள் எடுத்துச் செல்வார்கள்.

🌷சாதாரணமாக உப்பு நீரில்- கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகிறது. மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இது தோன்றும். இதுவரை பிறந்துள்ள பல சங்குகள் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.

🌷சுமார் 1400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோவில், மகேந்திர வர்ம பல்லவன் 1, கட்டிய குடைக்கூளி கோவில் என்று கூறுவர். அப்பன் மட்டுமின்றி அம்மையும் சுயம்பு. வடநாட்டிலிருந்து வருவோர் பெரும்பாலும் இத்தலத்தை பக்ஷி தீர்த்தம் என்றே அறிவர்.

🌷லட்ச தீப விழாவின்போது வீடுகளிலும் கோயில்களிலும் சங்கு தீர்த்த குளக்கரையிலும் லட்சக்கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும்.

🌼 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷கழு-கழுகு-கங்கம்👉 ஒரே பொருள் குறிக்கும் சொற்கள்

கழுகு வழிபட்டதால், வழிபடுகின்றதால் திருக்கழுகுன்றம் என பெயர்.

🌷சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம், வேதமே மலையாக அமைந்த தலம், கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம், சித்தர்கள் பலர் இம்மலையில் வாழ்ந்ததால் வாழ்வதால் தியானம் செய்ய ஏற்ற இடம்.

🌷“இறைவன் காதலித்தறையும் இடம் கழுகுன்றம்” என ஞான சம்பந்தர் மகிழ்ந்து போற்றிய தலம். மாணிக்கவாசகருக்கு, சுவாமி காட்சி தந்த தலம். என் உடல் வீழும் போதும் நீ தான் எனக்கு துணை என ஈசனை பட்டினத்தார் உருக்கமாக வழிபட்ட தலம். 

🌷உலகின் உச்சமான அமராவதி நகருக்கு நிகரான தலம் திருக்கழுகுன்றம் என அருணகிரிநாதரால் பரவசமாய் புகழப் பெற்ற தலம்.

சுரகுரு மன்னனுக்கு, சுவாமி சுயம்புவாய் காட்சி தந்த தலம். 

🌷 அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். எனவே ஆடிப்பூரம், நவராத்திரி கடைசி நாள், பங்குனி உத்திரம் ஆகிய ஆண்டுக்கு மூன்று நாட்கள் தான் முழு அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும்தான் அபிஷேகம்.

🌷 இத்தலத்திற்கு அந்தக்கவி வீரராகவ புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது. பௌர்ணமி கிரிவலம் சிறப்பு. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடி, இம்மலையை வலம் வரின் உடற்பிணி நீங்கும், இதை சில மருத்துவர்களே மேற்கொண்டு அனுபவத்தில் உணர்ந்துள்ளனர்.

🌼 ஸ்தல வரலாறு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌼 கிருத யுகத்தில் வேதங்களாலும், திரேதா யுகத்தில் துர்வாசராலும், துவாபர யுகத்தில் கிருஷ்ணனுடன் பாண்டவர்களாலும் கலியுகத்தில் ஆதிசங்கரராலும் பூஜை.

🌷4 வேதங்களும் கைலாயத்தில் வேத மந்திரங்கள் சொல்லி சுவாமியை பூஜை பன்றத்தே, சுவாமியின் அந்த ரூபத்தை வேதங்கள் தன் கண் கொண்டு காண முடியவில்லை.

🌷சிவபெருமான் தென்திசையிலே சென்று வேதத்தை ஓதி கொண்டே இருங்கள் என அனுப்பிவிட்டார் 4 வேதங்களுக்கும் சிவபெருமானை இங்கு தொடர்ந்து வழிபட, அடி முடி காணாத ஒரு ரூபத்தில் அருட்காட்சி அளித்து, இங்கு மலையே வேதங்களாக  வேதகிரி என்றும், இறைவன் வேதகிரீஸ்வரர் ஆகவும் அருள்பாலிக்கின்றனர்.

🌷மலையின் அடிவாரம் ரிக் வேதம், ஒரு பகுதி யஜுர் வேதம் அதற்கு மேலே இருக்கும் குன்று சாம வேதம், சிவPஅமர்ந்திருக்க கூடிய கருவறை அதர்வன வேதமாகவும்…

🌷565 படிகள், பக்தியுடன் செல்பவர்களை பகவானே கைப்பிடித்து அழைத்து செல்கிறான். பஞ்சாட்சரம் சொல்லிக் கொண்டே ஏறுங்கள்.

🌷இந்த மலையிலேயே தான் நாள்தோறும் 2 பக்ஷிகள் கழுகுகள் வந்து சிவ பிரசாதத்தை உண்டு அதன் பிறகு செல்வது மிக சிறப்பு.

🌷ஆதிகாலத்திலே கிருத யுகத்தில் பூஷா விதாதா  என 2 மஹரிஷிகள். நெடுங்காலம் இறைவனை காண தியான நிலை / தபோ நிலை. இறைவனோடு ஐக்கிய பட வேண்டும், (சாரூப்யம்) என்ற எண்ணம்-வருடங்கள் கழிந்தன- புற்று மண்ணால் தேகம்- பஞ்சாட்சரம் ஜபித்து.. இறைவனும் ஜோதி ரூபமாக தரிசனம்..

🌷இறைவனை விட்டு பிரிய மனம் இல்லாமல், முக்தி நிலைக்கு பதிலாக பக்தி நிலையை கேட்டு பெற்றார்கள். இறைவனும் அருளித் செய்தார். அவர்களே யுகம் தோறும் பக்ஷிகளாக பிறந்து, உதய காலம் 22 தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து இராமேஸ்வரம்  சிவ தரிசனம், உச்சி காலம் திருக்கழுக்குன்றம் வேதம் சொல்லி பிரசாதம், இரவில் காசியில் சிவ பூஜை. நாள்தோறும் இப்படி வழிபட்டு வந்த புண்ணிய திருத்தலம். ( 30 வருடங்களுக்கு முன்பு வரை இப்பொழுது இல்லை , முக்தி  )

🌷இது தக்ஷின கைலாயம். வேத வெர்ப்பு. ஆகவே தான் கர்ப்ப கிரகத்தின் 4 கோஷ்டங்களிலும் சிவ ரூபமாகவே காண முடியும். உமா மகேஸ்வரர், சோமாஸ்கந்தர், பிரம்மவிஷ்ணு & யோக தக்ஷிணாமூர்த்தி ரூபம்.

🌷ஜகன்மாதா பராசக்தி பராபரி சௌந்தர்ய நாயகி👉 சொக்கநாயகி என்கிற திருநாமத்தோடு அழகு மிளிர காட்சி.

🌷தாழக்கோவிலில் அமர்ந்து அருள் பக்தவத்சலேஸ்வரர் 👉 அகஸ்தியர் மார்க்கண்டேயர் வசிஷ்டர் சுரகுரு மகாராஜா பூஜித்து அருள் பெற்ற புண்ணிய தலம்.

🌷இந்த தலத்தில், காசியில் இருந்து வந்த மார்க்கண்டேயர் , தீர்த்தமாடி இறைவனை வணங்கி அனுஷ்டானத்துக்கும் பூஜிப்பதற்காகவும் பூஜா பாத்திரம் வேண்டி நின்ற போது, வருண பகவான் அவருக்கு பூஜா பாத்திரதமாய் சங்கு கொடுத்தார். அந்த சங்கை வைத்து இறைவனுக்கு அபிஷேகித்து பூஜித்தார்.

🌷இன்று வரை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு  தீர்த்தத்தில் சங்கு தானாகவே தோன்றுகிறது👉 எப்பேர்பட்ட கர்ம வினை இருந்தாலும், கர்ம நோய் இருந்தாலும் தீர்த்தமாடுவதால் நிவர்த்தி. 

🌼 ஸ்தல சிறப்பு செய்திகள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷இத்தலத்தில் இந்திரன் பூஜித்தான். தொடர்ந்து இன்றும் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலை மேல் உள்ள கருவறை கோபுர கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடி விழுந்து சிவலிங்கத்தை சுற்றி பரவி பாய்ந்து விடுகிறது. தாங்கவே முடியாத வெப்பத்தை மறுநாள் கருவறை திறக்கும் போது காணலாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது நடக்கிறது. (10/11/1930 நடந்ததாக கூறி அறிவியலாளர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்)

🌷தாழக்கோவில் 👉 கல் மண்டபத்தின் மீது செங்கலால் அமைக்கப்பட்ட மிகப் பழமையான கோவில். கோயிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கு பைரவர் வாகனம் இன்றி உள்ளார். கருவறை கஜபிருஷ்ட அமைப்பு உள்ளது.

🌷வலம் வரும்போது நந்தி தீ அடுத்து, அலுவலக சுவரில் அழகான அஷ்டபுஜ துர்கையின் சிற்பம் உள்ளது. இதன் கலையழகு கண்டுணர தக்கது.

🌷 பிரகாரத்தில் ஆத்மநாதர் சன்னதி பீடம் மட்டுமே உள்ளது பாணம் இல்லை.எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது.

🌷 அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரபதக்கம் சாத்தபட்டுள்ளது. சித்திரை திருவிழா 3ம் நாள் காலை அதிகார நந்தி சேவை என்று பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மாரோடு மலை வலம் வருதல் சிறந்த காட்சி.10ம் நாள் விழாவில் இரவிலும் மீண்டும்.

🌷 தேவேந்திரன் இழந்த பதவியைப் பெற்றான். நமக்கு எவையெல்லாம் வேண்டுமோ அவை அனைத்தையும் தருவதற்கு உரித்தான சிவாலயம். பக்தியும் முக்தியும் தரவல்ல, கர்ம வினை நீக்க வல்ல, செய்தவினை நீக்கவல்ல சகல சாபங்களும் தீரவல்ல, வாழ்விலே சென்று தரிசித்து இன்புற்று பேறு பெற ஓர் அழகான சிவாலயம்.

🌷 ராஜ கோபுரத்தின் உள்ளே வரும் காற்றே வேத ரூபமாய் வருகின்றது. மனதை சுத்தி பண்றது, இந்திரியங்களை சரி பண்றது, நேர்கோட்டில் புத்தியை அழைத்துச் செல்கிறது..

🌼 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மனநலக் கோளாறுகள்

உடல் நலம்: ஆஸ்துமா, BP, HT 

திருமண தடை நீங்க 

சந்தான பாக்கியம்

கன்னி ராசி பரிகார ஸ்தலம் 

🌼திருவிழா 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°

சித்திரை 10 நாள் பிரம்மோற்சவம் தேரோட்டம்

63 நாயன்மார்கள் உற்சவம்

ஆடிப்பூர உற்சவம்

கார்த்திகை சங்காபிஷேகம் கார்த்திகை தீபம்

மஹா சிவராத்திரி பிரதோஷம் மற்றும் முக்கிய விழாக்கள்.

🌼வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரம்மா வேதங்கள் இந்திரன்  துர்வாசர் கிருஷ்ணர் பாண்டவர்கள் ஆதிசங்கரர் மார்க்கண்டேயர் வசிஷ்டர் பூஷா மற்றும் விதாதா (முனிவர்கள்), சுரகுரு மகாராஜா, கோடி ருத்திரர்கள், சுந்தரர் அப்பர் சம்பந்தர் மாணிக்கவாசகர் சேரமான் சேக்கிழார் வீரராகவப் புலவர், அருணகிரிநாதர் முதலியோர்.. 

🌼அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

14 KM FROM செங்கல்பட்டு

17 KM FROM மாமல்லபுரம்

செங்கல்பட்டில் இருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக கல்பாக்கம் செல்லும் பேருந்திலும் நேரடியாக செல்லலாம். 

வாகனம் மூலம் செல்பவர்கள் ECR / OMR மாமல்லபுரம் இணைப்புச் சாலைகள் வழியாக எளிதாக சொல்லலாம்.

தாழக்கோவில் 7 -12, 4- 8

மலைக்கோவில் 9-12, 5 – 7.30

9944192974 பிரபாகர் குருக்கள் 

044 27447393

9894507959

9443247394

9444710979 OFF

🌼 கோயில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தோடுடை யானொரு காதில் தூய குழைதாழ

ஏடுடை யான்த லைகல னாக இரந்துண்ணும்

நாடு டையான் நள்ளிருள் ஏம நடமாடும்

Lகாடு டையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. 1 ஞா.ச 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *