திருவான்மியூர் மருந்தீஸ்வரர்
மூலவர் : மருந்தீஸ்வரர், ஒளஷதீஸ்வரர் பால்வண்ணநாதர் வேதபுரீஸ்வரர், லிங்கதிருமேனி சற்று வடபக்கம் சாய்ந்துள்ளது.
உற்சவர் : தியாகராஜர்
அம்பாள் : திரிபுரசுந்தரி சொக்கநாயகி சுந்தரநாயகி
ஸ்தல விருக்ஷம் : வன்னி
தீர்த்தம் : பஞ்ச தீ, பாபநாசினி
பாடல் : அப்பர் சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் & தொண்டை நாட்டு ஸ்தலம் 25.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வால்மீகி முனிவர் பூஜித்த பதி ஆதலின் வான்மியூர் எனப்படுகிறது. மார்க்கண்டேயர், வான்மீக முனிவரிடம் முக்தி பெற என்ன உபாயம் செய்துள்ளீர் என கேட்க, அவர் ராமகாதை இயற்றியுள்ளேன் என கூறினார்.
மீண்டும் மார்க்கண்டேயர் அவரிடம் அது சரி, முக்திக்கு என்ன உபாயம் செய்துள்ளீர்கள் என கேட்க, வால்மீகி முனிவர் சிவபூஜை முக்தியை தர வல்லது என்பதை உணர்ந்தவராய், இங்கு சிவ பூஜை செய்தார். பங்குனி பௌர்ணமியில் வான்மீகி முனிவர் முக்தி பெற்றார்.
வான்மீக முனிவருக்கு இறைவன் நடனகாட்சி அருளிய தலம்.
திருவான்மியூர் தலத்தில் அகத்தியருக்கு திருமண கோலம் காட்டி அருளினர். அகத்தியர் இங்கு தங்கி இருந்தபோது வயிற்று வலியால் அவதிப்பட்டார். அகத்தியருக்கு (வைத்திய) மூலிகைகள் பற்றி இறைவன் உபதேசித்தருளிய சிறப்பு தலம். So மருந்தீஸ்வரர் / ஒளஷதீஸ்வரர் Name.
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வேதங்கள் வழிபட்ட ஸ்தலம்
தேவர்களும் சூரியனும் பிரிங்கி முனிவரும் வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலம்.
சிறந்த மேதை அப்பைய தீக்ஷிதர் – வேளச்சேரியில்- தினமும் திருவான்மியூர் வழிபாடு- ஒருமுறை மழை வெள்ளம்- நீர் பிரளயமாக மாற- அப்பையர் பிரார்த்தித்தார்-அவர் பிரார்த்தனையை ஏற்று அவருக்காக சிவன் மேற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தார்.
இச்சிறப்பினால் சுவாமி சன்னதி மற்றும் கோபுரம் மேற்கு நோக்கி உள்ளது, கோயில் வாயில், ராஜகோபுரம் விநாயகர், முருகன் கிழக்கு நோக்கியே உள்ளனர். அம்பாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு சமயம் காமதேனு பிரம்ம ரிஷியான வசிஷ்டரிடம் அவ மரியாதையாக சிவபூஜை நேரத்தில் பால் கொடுக்காமல் தாமதம் செய்தது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், “நீ பூவுலகில் (காட்டு) பசுவாக பிறப்பாய்” என்ன சாபமிட்டார்.
தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு, வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டு, சாப விமோசனம் வழி கேட்க,’ வான்மையூரில் எழுந்தருளியுள்ள சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா, விமோசனம் கிட்டும் என கூறினார்..
அதன்படியே இங்கு வந்து தினமும் பால் சுரந்து பூஜை செய்து ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது. காமதேனு பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாக காட்சி தந்ததால் இவர் பால் வண்ண நாதர் பெயர். பசு (காமதேனு) பால் சொரிந்து வழிபட்டமை தொடர்பாக சிவலிங்கம் திருமேனியில் சிரசிலும் மார்பிலும் சற்று அரிந்தும், குளம்பு வடுவும் தெரிகின்றது
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிழக்குப் பார்த்த கோவில், 5 நிலை ராஜகோபுரம். கோயில் குளம் மண்டபம் கிழக்கில். மேற்கு கோபுரமும் 5நிலை.
சுவாமிக்கு பாலபிஷேகம்.
பஞ்சாமிர்தம் முதலான பிற அபிஷேகங்கள் ஆவுடையாருக்கு.
வடமேற்கில் உள்ள வன்னி மரம் ஸ்தலவிருக்ஷம், இந்த மரத்தின் அடியில் தான் இறைவன், அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்தார்.
வால்மீகி முனிவருக்கு தனி கோயில் உள்ளது.
சூரியன் இத்தலத்தில் பெருமானை அர்த்தசாமத்தில் வழிபட்டதாக வரலாறு உள்ளதால் பெருவிழா
கொடியேற்றம் அர்த்தசாமத்தில் தான் நடக்கிறது.
சோழர் கல்வெட்டுகள் 16 உள்ளது. 7 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.
நடராஜர், அருணகிரிநாதரால் பாடல் பெற்ற முத்துக்குமரர், 3சக்தி விநாயகர், நால்வர், 108 சிவ லிங்கங்கள், பஞ்ச லிங்கங்கள், பைரவர், தனி தனி சன்னதியில் உள்ளன.
தினமும் அதிகாலை கோபூஜை செய்யப்பட்ட பின்பே ஸ்வாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.
இவ்விடத்தில் பங்குனி பிரம்மோற்சவத்தின் போது அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நோய் நிவர்த்தி: இறைவன் ‘மருந்தீஸ்வரர்’
தீர்த்த பிரசாதம் :
இங்கு வழங்கப்படும் திருநீறு, தீர்த்தம் மற்றும் பால் கலந்த பிரசாதம் மாமருந்தாக நம்பப்படுகிறது.
ஆயுள் விருத்தி : மார்க்கண்டேய முனிவர் தவம் செய்து வழிபட்ட தலம்
ஞானம் மற்றும் கல்வி: அகஸ்திய முனிவருக்கும், வால்மீகி முனிவருக்கும் இறைவன் ஞானம் வழங்கிய தலம்
முக்தி : சிவன் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வணங்கிட முக்தி கிடைக்கும்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பங்குனி பிரம்மோற்சவம்
மஹா சிவராத்திரி,
திருக்கார்த்திகை
பங்குனி உத்திரம் மற்றும்
விநாயகர்சதுர்த்தி, கந்தசஷ்டி, பௌர்ணமி பிரதோஷம் சிறப்பு
வழிபட்டோர் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அகத்தியர் வால்மீகி வேதங்கள் சூரியன் இந்திரன் பிரம்மா அனுமான் தேவர்கள் வசிஷ்டர் மார்க்கண்டேயர் பரத்வாஜர் காமதேனு பிரிங்கி முனிவர் அப்பர் சம்பந்தர் சேக்கிழார்…
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருவான்மியூர் பேருந்து நிலையம் எதிரிலேயே உள்ளது. ( ECR ROAD துவக்கத்திலேயே மேற்கு வாசல் ) காரில் வருபவர்கள் கிழக்கு வாசலில் நிறுத்தி உள்ளே செல்லலாம்.
6AM -12AM, 4.30PM – 8.30PM
81484 43278 ஈஸ்வரன் சிவாச்சாரியார்
94862 21377 கணேச சிவாச்சாரியார்
97102 00287 ஸ்ரீகாந்த் குருக்கள்
63816 36752
044 24410477
கோயில் தேவாரம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விரையார் கொன்றையினாய்
விடமுண்ட மிடற்றினனே
உரையார் பல்புகழாய்
உமைநங்கையோர் பங்குடையாய்
திரையார் தெண்கடல்சூழ்
திருவான்மி யூருறையும்
அரையா வுன்னையல்லா
லடையாதென தாதரவே. 1
ஞான சம்பந்தர்


Leave a Reply