திருமயிலை கபாலீஸ்வரர் மயிலாப்பூர்
மூலவர் : கபாலீஸ்வரர்
அம்பாள் : கற்பகாம்பாள்
ஸ்தல விருக்ஷம் : புன்னை
பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்
ஆகமம் : காமீகம்
புராண பெயர் : கபாலீச்சரம் மயிலாப்பு
தீர்த்தம் : கபாலி கடவுள் வேத வாலி கங்கை வெள்ள ராம தீ & திருக்குளம். சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் & தொண்டை நாட்டு ஸ்தலம் 22.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அம்பாள் மயிலுருக்கொண்டு கபாலீஸ்வரரை பூஜித்த தலம்.
முருகபெருமான் மயிலை நாதனை வழிபட்டு சக்திவேல் பெற்ற தலம்.
பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலை பெற்ற தலம்.
நான்மறைகள் (வேதங்கள்) பூதித்ததால் வேதபுரி, சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி.
ராமர் நேசித்து தங்கி இருந்து பூஜித்து திருவிழா நடத்திய இடம்.
ஞான சம்பந்தர் எலும்பை பூம்பாவை ஆக்கிய திருத்தலம்.
63 நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் அவதார ஸ்தலம்.
12 ஆழ்வார்களில் (3rd) ஒருவராகிய பேயாழ்வார் அவதார் தலம்.
சீர்மிகு சிங்காரவேலர் கீர்த்திமிகு திருப்புகழை பெற்ற தலம்.
வான்புகழ் கொண்ட வள்ளுவன் புகழோடு தோன்றிய தொன்மை தலம்.
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவபெருமான்
உமையவள், மஹாவிஷ்ணு, பிரம்மா, வியாக்ரபாதர், பதஞ்சலி மற்றும் தில்லைவாழ் அந்தணர்களுக்கு நடன காட்சி அருளிய நாளே தைப்பூச திருநாள்.
இந்நாளில் சிவபெருமானை தரிசித்தால், பரமானந்த நிலை எனும் பிறப்பற்ற நிலை பெறலாம். விழாவை இக்கோயில் வந்த சம்பந்தர் குறிப்பிட்டு பாடி இருக்கிறார்..
இங்கு தைப்பூச பௌர்ணமி தெப்பத் திருவிழா- சிவ பார்வதியுடன் சிங்காரவேலரும் எழுந்தருள்கிறார். அன்று கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்
கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சன்னதி இருக்கிறது. அங்கு ஞானசம்பந்தரும் உள்ளார்.
இது வாயிலார் நாயனார் அவதார தலம். அவருக்கு தனி சந்நிதி உள்ளது.
இத்தல விநாயகர் நர்த்தன விநாயகர் , இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் 10 திருப்புகழ் பாடல்.
மயிலாப்பூர் HIGHLIGHTS
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த கிரேக்க ஆசிரியர் தாலமி இவ்வூரை மல்லியார் பா எனக் குறிப்பிட்டுள்ளார்.
மயில்கள் மிகுதியாக இருந்து, ஆர்தெழுந்திருந்த காரணத்தால் இத்தலம் மயில் ஆர்ப்பு என பெயர் பெற்றது. பின்னர் வழக்கில் மயிலாப்பு என்றாகி பின் மைலாப்பூர் ஆகிவிட்டது.
கபாலீச்சுரம்
சிவபெருமானை போலவே பிரம்மா 5தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற ஆணவம் பிரம்மாக்கு ஏற்பட்டது.
பிரம்மா ஊழியில் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார். சிவபெருமான்
ஆதியும் அந்தமும் அற்றவர். இதை உணராததால், அவரை திருத்த அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்தி கொண்டார். எனவே கபால ஈஸ்வரர்- கபாலீஸ்வரர் ஆனார். தலமும் கபாலீச்சரம்.
இலக்கிய சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமயிலையை பற்றியும் கபாலீஸ்வரரை பற்றியும் எழுந்த முதல் இலக்கியம் ஞான சம்பந்தர் பாடிய ‘மட்டிட்ட புள்ளையங் காணில்…’ பதிகமே ஆகும். இப்பதிகம் மூலம் திருமயிலையில் வளர்ந்த சிவனேசர் எனும் வணிகர் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். அவரது மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு மணம் முடிக்க முடிவு செய்தார்.
அந்நேரத்தில் மலர் பறிக்கச் சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிரிழந்தாள். அவளை தகனம் செய்த சிவனேசன், அஸ்தியை யும் எலும்பையும் ஒரு குடத்தில் போட்டு வைத்து விட்டார்.
ஞான சம்பந்தர் இங்கு வந்ததும் நடந்ததை அறிந்து, சாம்பல் போட்டு வைத் திருக்கும் குடத்தை கொண்டு வர கூறினார். அப்போது ஞாச சிவனை வேண்டி,
“மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலை –
கைப்பூசு நீற்றான் கபாலீச்சுர மமர்ந்தான் –
நெய்ப்பூசு மொண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்-
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் ” என்ன பதிகம் பாடினார்..
“மண்ணில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு நடத்தப்படும் தைப்பூசம் எனும் நல்விழாவை காண்பதே பிறவிப் பயனாகும். விழாவை காணாமல் நீ சென்று விட்டது உனக்குத்தானே நஷ்டம், ” என்ற ரீதியில் இப்பாடல் அமைந்தது.
அவர் பாடியதும் பூம்பாவை உயிர்பெற்று எழுந்தாள். அவளைத் திருமணம் செய்து கொள்ளும்படி சிவனேசன் ஞான சம்பந்தரிடம் வேண்டினார்.
உயிர் இழந்தவளுக்கு நான் மீண்டும் உயிர் கொடுத்ததால் அவள் எனக்கு மகளாகிறாள் என சொல்லி ஞானசம்பந்தர் மறுத்து விட்டார்.
பூம்பாவையும் இறுதிவரை சிவப்பணியே செய்து சிவனடி சேர்ந்தாள். ஞான சம்பந்தர் பாடிய 11 பாடல்களில் முதல் 10 பாடல்கள் பூம்பாவையை அழைக்கும் முறையில் உள்ளன. இப்பதிகத்தில் இத்தலத்து ஈசனையும், கோயில் பற்றியும், மயிலாப்பூர் பற்றியும் அழகுற கூறுகிறார்.
யானையில் தேவியர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சூரனை வதம் செய்யும் முன்பு, முருகபெருமான், இக்கோயிலில் சிவனை வேண்டி தவமிருந்தார். சிவனும் பார்வதியும் அவருக்கு காட்சி தந்து வேலாயுதம் கொடுத்தனுப்பினர். அதன் பின் முருகன் சூரனை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டார். இவர் சிங்கார வேலராக அசுர மயிலுடன் தனி சந்நிதியில் இருக்கிறார்.
அசுரனை வென்றதால் இந்திரன், தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணமுடித்து கொடுத்தார். அப்போது அவரது வாஹனமான ஐராவதம் தெய்வானையை பிரிய முடியாமல் அவருடனே தங்கிவிட்டது. வள்ளியும் தெய்வானையும் யானை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கின்றனர். இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உமையம்மை சிவபெருமானிடம் ஐந்து எழுத்தின் பெருமைகளையும் திருநீற்றின் மஹிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் நல்கிட, அப்போது அங்கு மயில் ஒன்று தோகை விரித்தாட, பார்வதி தேவியின் கவனம் அங்கு செல்ல, கோபமுற்ற சிவபெருமான், “நீ பூதலத்தில் மயில் உருப்பெற்றிடுவாய்” என சாபம். பார்வதி தேவி வேண்ட, “சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய்” என கூறினார்.
அவ்வாறே இத்தலத்தில் அமைந்துள்ள புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பூஜித்து வழிபட்டார். அவர்தம் அருந்தவத்தின் மஹிமையால் சிவபெருமான் தேவியின் முன் தோன்றி, மயிலாய் இருந்த பழி உன்னை விட்டகன்றது. “கற்பகவல்லி என்பதான பெயர் உனக்காகுக!” என வரமருளினார். அச்சமயம் தேவியார் பரமனை நோக்கி, “அடியேன் இங்கு தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதி மயிலை என பெயர் வழங்க… பரமனும் அவ்வாறே அருளியதாக வரலாறு…
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கபாலீஸ்வரருக்கு ஒவ்வொரு பௌர்ணமியிலும் சிறப்பு பூஜை நடக்கிறது. அம்பாள் மயில் வடிவில் பூஜித்த தலமென்பதால் மயிலாப்பூர்.
தேவலோகத்து கற்பக மரம், கேட்டதை கொடுப்பதை போல், இத்தலத்து அம்பிகையும் கேட்கும் வரங்களை தருவதால் கற்பகாம்பிகை எனப்பட்டாள்.
பங்குனியில் 63வர் விழா நடக்கும் பொழுது நாயன்மார்கள் வீதி உலா செல்வது சிறப்பு. இக்கோயில் கிழக்கு ராஜகோபுரத்தில் 7 நிலைகள், 9 கலசங்கள் உள்ளது
கோபுரத்தின் வடக்கில் பிரம்மனும் தெற்கில் தக்ஷிணாமூர்த்தியும் கோபுரத்தை சுற்றிலும் புராண கால சிற்பங்களும் உள்ளன.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம். இங்குள்ள வடக்கு பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் நின்று பார்த்தால்
கிழக்கு ராஜகோபுரம் , அம்பாள் கோபுரம், சிவன் கோபுரம், முருகன் கோபுரம், மேற்கு கோபுரம் என அனைத்து கோபுரங்களும் தெரியும்.
இங்குதான் கோவிலுக்கான மிகப்பெரிய மணி இருக்கிறது.
வடகிழக்கு பிரகார தெற்கு பக்கம் ஸ்தல விநாயகர் , புன்னை மரமும், கோசாலையும் அமைந்துள்ளது. பெண்கள் ஸ்தல விருக்ஷத்தில் குழந்தை பாக்யம், தாலி பாக்யம் வேண்டி வழிபாடு.
அம்பாள், சிவனை அடைய, மயில் வடிவில் வழிபாடு செய்த காட்சி இங்கு புன்னைவனநாதர் சந்நிதியில் உள்ளது. இதன் அடிப்படையில் தான் மயிலாப்பூர் பெயர்.
பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் சனிபகவான் தனி சந்நிதியில் அருள்பாலிப்பது சிறப்பு
வாயிலார் நாயனார் சந்நிதி – கற்பகாம்பாள் சந்நிதிக்கு எதிரில்- தனி ஆலயமாக.
பூம்பாவை குடத்தினின்றும் தோன்றும் திருஉருவமும், பிள்ளையார் பதிகம் பாடும் திருவுருவமும் உடனாக தனி கோயிலாக வெளிசுற்றில் மேற்கு கோபுர வாசல் அடுத்து வடக்கில் உள்ளது.
பழைய கோவில் இப்போதுள்ள SANTHOME CATHEDRAL CHURCH – உள்ள இடத்தில். அருணகிரிநாதர் காலம் வரையில். (கி.பி 1450) கி.பி 1516 PORTUGESE தகர்த்து.. AFTER 1672 தற்போதுள்ள கோவில். EVEN IN 1910, நிலத்தை அகழ்ந்த போது,
பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கற்பக விருக்ஷம் போல் அருள் தரும் அம்மன் கற்பகாம்பாளை வேண்டிக் கொள்ள திருமண வரம், குழந்தை பேறு, குடும்ப நலம் என வேண்டுதல். மன அமைதி உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் வளம் பெறுதல் & தீவினைகள் அகல பிரார்த்தனை..
திருவிழா
°°°°°°°°°°°°°°°°°°°°°°
பங்குனி பெருவிழா 10 நாள். With கொடியேற்றம், அதிகார நந்தி சேவை, 63வர் விழா (Devotees in lakhs ), தேரோட்டம் திருக்கல்யாணம் என விமர்சையாக நடைபெறும். அந்தக் காலத்தில் ஞானசம்பந்தர் பதிகத்திலேயே குறிப்பிட்டுள்ளார்.
மயிலாப்பூர் திருவிழா
சித்திரை வசந்த உற்சவம்
மேலும் மஹா சிவராத்திரி நவராத்திரி கார்த்திகை தீபம் பிரதோஷம் பௌர்ணமி என மாதம் தோறும் திருவிழாக்கள்…
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அம்பாள் , ராமர், பிரம்மா , வேதங்கள் , சுக்கிரன், காடவர் கோன், நம்பியாண்டார் நம்பி, சிவநேசன்செட்டியர், பூம்பாவை அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சென்னை மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது.. அனைத்து பாகங்களிலிருந்தும் பேருந்து வசதி உண்டு.
5.30AM to 12.30PM 4PM to 9PM
044 24641670
கோயில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மட்டிட்ட புன்னையங்
கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின்
உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே
போதியோ பூம்பாவாய். 1
மைப்பூசும் ஒண்கண்
மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல்
நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே
போதியோ பூம்பாவாய். 5
ஞான சம்பந்தர்


Leave a Reply