திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் தியாகராஜர் தியாகேசர்
மூலவர் : ஆதிபுரீஸ்வரர் படம்பக்க நாதர் எழுத்தறியும் பெருமாள் தியாகேசர் புற்றிடங்கொண்டார்
அம்பாள் : திரிபுரசுந்தரி வடிவுடையம்மன், வடிவுடைமாணிக்கம்
ஸ்தல விருக்ஷம் : அத்தி மகிழம்
தீர்த்தம் : பிரம்ம, நந்தி தீ
பாடல் : சுந்தரர்
புராணப் பெயர் : ஆதிபுரி
சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் & தொண்டை நாட்டு ஸ்தலம் 20
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த ஸ்தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும்.
பட்டினத்தார் இங்குதான் ஜீவசமாதி அடைந்தார்
27 நக்ஷத்திரங்கள் சிவ பெருமானை வழிபட்டன. அந்த நக்ஷத்திரங்களை லிங்கமாக மாற சிவன் அருள் புரிந்தார்.
சிவன் அருள்பாலித்த அந்தந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் லிங்கத்தை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாந்தாதா என்ற மன்னனுக்கு அதிக வயதாகிவிட்டது. ஆனாலும் இறப்பு இல்லை. பாவம் செய்தாவது இறந்து போக வேண்டும் என கருதினான். அவனது ஆட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் அநியாய வரி விதித்தான்.
இது சம்பந்தமான ஓலை சிற்றரசர்களுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஓலையில் யாரும் அறியாமல், ஒற்றியூர் நீங்கலாக என திருத்தி எழுதினார் சிவன். இதன் பிறகு அந்த மன்னன் சிவனிடம் மன்னிப்பு கேட்டு வரியை விலக்கினான்..
நீண்ட காலம் பூமியில் வாழ்ந்தான். எந்த சூழ்நிலையிலும் விரக்தி அடையக் கூடாது என்பதையும் இத்தலம் காட்டுகிறது.
திருவொற்றியூர் கோவிலுக்கு வெளியே பிரம்மாண்டமான பிரம்ம தீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை தலையில் தெளித்தாலே பாவங்கள் நீங்கி விடும். பாவமன்னிப்பு கேட்காமலேயே பாவங்களை தீர்க்கும் தலம் இது.
இவ்வூரில் உள்ள கற்கள் அனைத்தும் லிங்கங்கள் என்றும், சிதறி கிடக்கும் மண் திருநீறு என்றும் சொல்லப்படுகிறது. மாசி மக திருவிழாவின் 10ம் நாளில் (தியாகராஜர் சந்நிதியில்) 18 வகை நடனக் காட்சி நடக்கிறது.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வைகுண்டத்தில் பெருமாளின் நாபிக் கமலத்தில் இருந்து பிறந்த பிரம்மன் உலகை படைக்க துவங்கினார். அதற்கு முன்னதாகவே இந்த உலகில் ஒரு நகரம் அமைந்திருந்தது. “நான் உலகை படைக்கும் முன் இந்த நகரத்தை படைத்தது யார்? எனக்கு மேலே ஒருவரா? யார் அவர்? என்று திருமாலிடம் கேட்டார்.
அதற்கு மஹாவிஷ்ணு, ‘அந்நகரை ஆதி பகவானான சிவன் உருவாக்கினார். அவர் ஆதிபுரீஸ்வரர் எனப்படுவார். நகரத்தின் பெயர் ஆதிபுரி. திருவொற்றியூர் என்றும் அது அழைக்கப்படும்.
அந்நகருக்கு சென்று ஆதிபுரீஸ்வரரை வணங்கி விட்டு படைக்கும் தொழிலை தொடர்வாயாக என்றார் மஹாவிஷ்ணு. பிரம்மனும் திருவொற்றியூர் வந்து சிவனை வழிபட்டார்.
உலகை பிரம்மன் படைப்பதற்கு வசதியாக, ஆழி சூழ்ந்த கடல்நீரை “ஒத்தி”விலகி இருக்க சிவன் உத்தரவிட்டார். எனவே இவ்வூர் ‘ஒத்தியூர்’, காலப்போக்கில் ஒற்றியூர்…
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உபமன்யு முனிவரிடத்து சிவ தீட்சை பெற்று தம்மை வழிபட்ட வாசுகியை தம் திருமேனியில் இறைவன் ஐக்கியம் செய்து கொண்டமையால், படம்பக்க நாதர்.
அம்பாளின் வடிவத்தை (சுவடு) இறைவன் திருமேனியில் இன்றும் காணலாம்.
நந்தி தேவருக்காக சிவபெருமான் பத்ம தாண்டவம் ஆடிய தலம்.
திருவொற்றியூரில்- ஏலேல சிங்கர் மன்னனுக்கு கொடுக்க மாணிக்க நகைகள் வைத்திருந்தார். காசியில் இருந்து வந்த சிவபக்தர்களுக்கு அதை கொடுத்துவிட்டார் – மன்னன் கேட்டபோது செய்வதறியாது திகைக்க, அப்போது சிவபெருமானே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர் “மாணிக்க தியாகர்” எனவும் அழைக்கப்படுகிறார் .
சுந்தரர், சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, இத்தல மரமான மகிழமரத்தின் முன்னால், “நான் உன்னை பிரியேன்” என சங்கிலியாரிடம் சத்தியம் செய்து, இத்தல எல்லையை தாண்டியதும் தன் கண் பார்வையை இழந்தார்.
வட்டப்பாறை அம்மன் ‘ (காளி) சந்நிதி – இந்த அம்மன் ஒரு காலத்தில் மிக்க உக்கிரத்துடன் விளங்கி, பலிகளைக் கொண்டதாகவும், ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்து சாந்தப்படுத்தியதாக வரலாறு சொல்லப்படுகிறது.
பட்டினத்து பெருமானுக்கு பேய்க்கரும்பு இனித்த இடம் இது. ஆகவே தனக்குரிய இடம் இதுவே என முடிவு செய்து கடற்கரை ஒட்டிய (அவர் கோவில்) ஜீவசமாதி.
பட்டினத்தார் காளமேகம் அருணகிரிநாதர் தியாகய்யர் முத்துசாமி தீக்ஷிதர் – சுவாமி அம்பாள் மீது பாடல், கீர்த்தனைகள்.
கலிய நாயனாரின் அவதார & முக்தி தலம்.
பெறும் பணக்காரர், இறைவன் சோதனையால் ஏழையாகி, ரத்தத்தில் விளக்கு ஏற்றி இறைவனுடன் கலந்தார் கலிய நாயனார்..
வடலூர் வள்ளல்
பெருமானின் வாழ்வோடு இணைந்த பதி.
கம்பர் தினமும் வணங்கிய கோவில், கம்பராமாயணம் எழுதியது இங்கே.
கிழக்கு நோக்கிய 5நிலை ராஜகோபுரம்
முன் மண்டபத் தூண்களில் அற்புத சிற்பங்கள்.
மூலவர் சுயம்பு, நாகவடிவில் சிவலிங்க திருமேனி. சிவலிங்கமும் ஆவுடையாரும் சதுர வடிவில் – கவசம் பொருத்தப்பட்டுள்ளது .
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பௌர்ணமி நாளில் மட்டும் கவசம் அகற்றப்பட்டு, புனுகுச் சட்டம், ஜவ்வாது சாம்பிராணி தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. இந்நாள் முதல், 3 நாள் கவசம் இல்லாமல் தரிசனம் செய்யலாம். அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிரக தோஷ நிவர்த்தி மற்றும் நட்சத்திர பரிகாரம்
27 நட்சத்திர லிங்க வழிபாடு
ஞானம், கல்வி மற்றும் தொழில் சிறக்க
மன அமைதி மற்றும் வாழ்வியல் திருப்தி
திருமண வரம் மற்றும் குழந்தைப்பேறு
பிணிகள் மற்றும் வயிற்று வலி நீங்க பிரார்த்தனை
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாசி மக பிரம்மோற்சவம் 10 நாள் பெருவிழா – சுந்தரர் திருக்கல்யாணம்,63 நாயன்மார் உற்சவம்,தியாகேசரின் ஒய்யார நடனம்.
கார்த்திகை பௌர்ணமி – ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு விழா 3 நாட்கள் புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம்
வட்டப்பாறை அம்மன் திருவிழா 18 நாட்கள்.
ஆடிப்பூரம், வைகாசி வசந்த உற்சவம், நவராத்திரி, மஹாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பட்டினத்தார் குருபூஜை, தைப்பூசம், கந்தசஷ்டி மற்றும் பிரதோஷம் பௌர்ணமி சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாவிஷ்ணு , பிரம்மா, நந்திதேவர் , சந்திரன் , 27 நட்சத்திரங்கள், சுந்தரர், அப்பர், சம்பந்தர், சேக்கிழார், கபிலதேவ நாயனார், பரண தேவ நாயனார், பட்டினத்து பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன், வால்மீகி முனிவர் , சங்கிலி நாச்சியார்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
11 KM FROM சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.
அனைத்து பேருந்து & ரயில் வசதிகளும் உள்ளது.
6AM – 12 NOON, 4 PM – 8PM
வெள்ளிக்கிழமை பௌர்ணமி தினங்களில் மதியம் நடை அடைப்பதில்லை.
செவ்வாய்க்கிழமை பிரதோஷ நாட்களில் மதியம் 3.30PM கோயில் திறக்கும்.
9444451933 சுந்தர ராம
குருக்கள்
8300723952 அருள்நந்தி குருக்கள்
98401 41343 சுதர்ஷன் குருக்கள்
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விடையவன் விண்ணுமண்ணுந்
தொழநின்றவன் வெண்மழுவாட்
படையவன் பாய்புலித்தோல்
உடைகோவணம் பல்கரந்தைச்
சடையவன் சாமவேதன்
சசிதங்கிய சங்கவெண்தோ
டுடையவன் ஊனமில்லி
யுறையும்மிடம் ஒற்றியூரே. 1
ஞான சம்பந்தர்


Leave a Reply