திருவெண்பாக்கம் பூண்டி ஊன்றீஸ்வரர்

🌻மூலவர் : ஊன்றீஸ்வரர், ஆதார தண்டேஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர் 

அம்பாள் : மின்னொளி அம்பாள், தடி கௌரி அம்பாள் 

தீர்த்தம் :குஷஸ்தலை நதி, கைலாய தீர்த்தம் 

புராணப் பெயர்  : பழம்பதி, திருவெண்பாக்கம்

ஊர் : பூண்டி,

பாடல் : சுந்தரர், சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், 

தொண்டை நாட்டு ஸ்தலம் 17

🌻ஸ்தல சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹சிவன் கிழக்கு பார்த்தபடி சுயம்பு லிங்கம்.

சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் ஊன்றீஸ்வரர்.

🌹அமாவாசை பௌர்ணமி நாட்களில் இவருக்கு வித்தியாசமாக வடைமாலை சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

🌹கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்தே இருக்கிறது. அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண்பார்வை இழந்த கோலத்தில் இருக்கும் படியான இவரது சிலை மிகவும் சிறப்பு.

🌻ஸ்தல பெருமை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹மின்னொளி அம்பாள் : சுந்தரர் கண் தெரியாமல் தடுமாறியபோது அம்பாள் அவருக்கு வழிகாட்டி கூட்டிச் செல்வதற்காக கிளம்பினாள். அப்போது சிவன் தடுத்து விட்டாராம். இதனை உணர்த்தும் விதமாக அம்பாளின் இடது கால் சற்றே முன்புறம் நகர்த்து உள்ளது.

🌹பின் அம்பாள், சுந்தரரிடம், ‘மனிதர்கள் தவறு செய்வது இயற்கை. ஒவ்வொருவர் செய்யும் தவறுகளும் அவர்களுடைய ஊழ் வினைகளுக்கேற்ப நிகழ்கிறது. தற்போது கண்கள் பறிக்கப்பட்டு இருப்பதும் ஒரு ஊழ்வினை பயனே. எனவே கலங்காது செல்லுங்கள். தகுந்த காலத்தில் அவர் அருளால் பார்வை கிடைக்கும்’ என்று தாய்மை உணர்வுடன் பேசி சுந்தரரை  சாந்தப் படுத்தினாள்.

🌹மேலும் சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல் போன்ற ஓளியை காட்டி வழிகாட்டினாளாம். இதனால் அம்பாள் மின்னொளி அம்பாள், கனிவாய் மொழி நாயகி என்றும் அழைக்க படுகிறாள்.. இந்த அம்பாள் மிகவும் வரப்பிரசாதி.

🌻நம்பிக்கை கோயில்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவர்கள், மன உளைச்சலால் அவதிப்படுபவர்கள், குடும்பம், தொழில் விருத்தி இல்லாதவர்கள் சுவாமியிடம் வேண்டிக் கொண்டால் மன அமைதியும் வாழ்க்கையின் மீது பிடிப்பும் வரும் என்கிறார்கள்.

🌹வாழ்க்கையே இருண்டு விட்டதாக கவலையில் இருப்பவர்களுக்கு, அம்பாள் ஒளி கொடுத்து வாழ வைக்கிறார் என்பது நம்பிக்கை. பொதுவாக தங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நம்பிக்கை தந்து அவர்களை வாழவைக்கும் தலமாக இக்கோவில் திகழ்கிறது. ஆகவே “நம்பிக்கை கோவில்” என அழைக்கிறார்கள்.

🌻ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரில் சிவ சேவை செய்து கொண்டிருந்த சங்கிலியார் எனும் பெண்ணை சிவனை சாட்சியாக வைத்து, அவளை பிரியமாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார்.

🌹ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்கு கிளம்பினார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறிய போது, சிவன் அவரது 2 கண்களையும் பறித்து கொண்டார்.

🌹சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவனிடம் தனக்கு கண்களைத் தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை. 2 கண்களும் தெரியாமல் தட்டு தடுமாறிய படியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்த சுந்தரர் இங்கு சிவனிடம் தனக்கு கண்களை தரும்படி கேட்டார். சிவனோ அமைதியாக இருந்தார். சுந்தரர் விடவில்லை.

🌹பரம்பொருளாகிய நீங்கள் இங்கு தான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே! என வேண்டினார்.

‘ கோவில் உளாயோ ‘ என்ன விண்ணப்பிக்க, இறைவன் ஊன்றுகோலை  அருளிசெய்து, ‘யாம் உளோம் போகீர்’ என்றார்.

🌹தன் நண்பனான சிவன், தனக்கு அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தரருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்கு வாதம் செய்தார். சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை.

🌹கோபம் அதிகரித்த சுந்தரர், சிவன் கொடுத்த ஊன்றுகோலை ஓங்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டுவிட்டது. இதனால் நந்தியின் கொம்பு ஒடிந்து விட்டது.பின்னர் சுந்தரர், “பிழையுளன பொறுத்திடுவீர்” எனும் பதிகம் பாடி போற்றி, தன் யாத்திரையை தொடர்ந்து இங்கிருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்றார்.

🌻ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 பழைய கோவில் “திருவிளம் புதூரில்” இருந்தது. இவ்வூர் குஷஸ்தலை ஆற்றின் கரையில் இருந்தது. பத்திரிகாரண்யம் என்றும் பெயருண்டு ( இலந்தை மரக்காட்டுப்பகுதி) சென்னையின் குடிநீர் தேவையை போக்க, குஷஸ்தலை ஆற்றில் அணை கட்ட 1942ல் அரசு முயற்சிகளை மேற்கொண்டு, அதற்காக நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்ட பொழுது, அப்ப ஊரில் திருவிளம்புதூரும் அடங்கிற்று. 🌹அப்போதைய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த திரு.M. பக்தவச்சலம் & அறநிலையத் துறை ஆணையராக இருந்த திருஉத்தண்டராமபிள்ளை ஆகியோரின் பெரும் முயற்சியால் கோயில் அங்கிருந்து எடுக்கப்பட்டு தற்போது உள்ள இடத்தில், பூண்டியில் பெரிய கோயிலாக கட்டப்பட்டு, 05-07-1988 அன்று கும்பாபிஷேகம் செய்விக்கப் பட்டது. இச்செய்தி குறிப்பு கல்லில் பொறித்து அம்பாள் சன்னதி வாயிலில் பதிக்கப்பட் டுள்ளது.

🌹இங்குள்ள விநாயகர் வலம்புரி விநாயகர். இங்கு பிரதான வாசலுக்கு நேரே மின்னொளி அம்பாள் சன்னதி. ஒரே இடத்தில் நின்று சுவாமி அம்பாள் இருவரையும் வழிபடும்படி உள்ளது. பிரகாரத்தில் ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வயானையுடனும், நின்ற நிலையில் நவகிரகங்கள் , மஹாலக்ஷ்மி தனித்தனி சந்நிதிகளில். 

🌹பைரவர் 8 கைகளுடன் கால பைரவராக தெற்கு பார்த்தபடி உள்ளார். இவருக்கு அஷ்டமி நேரத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. கோயிலுக்கு அருகிலேயே தேவார பாடல் பெற்ற சிவாலயம் கூவம், திருப்பாச்சூர் அமைந்துள்ளது.

🌻பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பார்வையை மீட்டல் மற்றும் வாழ்க்கையில் ஊன்றுகோலாக நின்று வழிகாட்டுதல்..

மேலும் உடல் நலம் செவ்வாய் தோஷம் நீங்க, திருமணத்தடை நீங்க & வாழ்க்கையில் நம்பிக்கை  ஓங்க பிரார்த்தனை.

🌻திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°**

மஹா சிவராத்திரி, திருகார்த்திகை,

ஐப்பசி அன்னாபிஷேகம்  மற்றும்

தைப்பூசம் ஆடி திருவிழா மாசிமகம் பிரதோஷம் பௌர்ணமி சிறப்பு.

🌻 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சுந்தரர் சேக்கிழார் முதலியோர் 

🌻அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பூண்டி நீர்த்தேக்கம் அருகில்.

10KM FROM திருப்பாச்சூர் 

12KM FROM திருவள்ளூர்

6AM to 11AM & 5PM to 8PM இது நடை திறந்திருக்கும் நேரம்.

குருக்கள் வரும் நேரத்திற்கு அவரை அழைத்து விட்டு செல்லவும்.

89399 27468 கார்த்திகேயன் குருக்கள்

86676 74323 ரமணன் குருக்கள் 

98841 48088 பரத் குருக்கள்

98416 57198 பாலாஜி குருக்கள்

044 2769725, 27639895, 27639725

( வாரம் ஒரு குருக்கள் வருவதாலும், கிராமத்துக் கோவில் என்பதாலும், அழைத்து விட்டு செல்வது சிறப்பு )

🌻 கோவில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிழையுளன பொறுத்திடுவர்

 என்றடியேன் பிழைத்தக்காற்

பழியதனைப் பாராதே

 படலமென்கண் மறைப்பித்தாய்

குழைவிரவு வடிகாதா 

 கோயிலுளா யேயென்ன

உழையுடையான் உள்ளிருந்து

 உளோம்போகீர் என்றானே. 1 சுந்தரர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *