திருமாகறல் அடைக்கலம் காத்தநாதர் மாகறலீஸ்வரர்
மூலவர் : திருமாகறலீஸ்வரர்/ அடைக்கலம் காத்தநாதர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்/ நடராஜர்
அம்பாள் : திரிபுவனநாயகி புவனநாயகி
ஸ்தல விருக்ஷம் : எலுமிச்சை
தீர்த்தம் : அக்னி தீ, சேயாறு,
பாடல் : ஞான சம்பந்தர், சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் & தொண்டை நாட்டு ஸ்தலம் 7
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தல இறைவனுக்கு அடைக்கலம் காத்தநாதர் , மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர், புற்றிடம் கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகஸ்தீஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. சுயம்பு. மூலவர் விமானம் கஜபிருஷ்ட விமானம்.
திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வயானை திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமண பரிசாக வெள்ளை யானையை கொடுத்தான். புதுமண தம்பதிகளை வெள்ளை யானை மீது அமர செய்து அக்காட்சியை அனைவரும் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார்கள்.
அப்போது சிவ பூஜையில் இருந்த மஹாவிஷ்ணு , இக்காட்சியை காண விரும்ப, முருகன் இத்தலத்தில் வெள்ளை யானை மீது அமர்ந்து காட்சி தந்தார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முருகப்பெருமான் சூரபத்மன் முதலிய அரக்கர்களை அழிக்க போர் செய்தபோது தப்பி பிழைத்த மாக்கிரகன் என்ற அசுரன் சிவபூஜை செய்து வந்தான்.
அவன் இத்தலம் வந்தபோது, இதன் பெருமையை உணர்ந்து இங்கேயே தங்கி பூஜை. அவனுடைய பெயராலேயே வழங்கப்பட்டு, இப்போது மருவி மாகறலீசர்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முன்னொரு காலத்தில் பிரம்மா இத்தலத்தில் சிவபூஜை செய்துவிட்டு சத்யலோகம் செல்லும் பொழுது, ஆண்டு முழுவதும் நாள்தோறும் காய்க்கும் அதிசய பலாமரம் ஒன்றை நட்டார்.
ராஜேந்திர சோழ மன்னன் இந்த அதிசய பலா மரத்தை கண்டு வியந்து, அந்த ஊரில் இருந்து தினமும் ஒருவர் தலை சுமையாக இந்த பழத்தை எடுத்து வந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டான்.
நடராஜருக்கு இப்பழத்தை மதிய வேளையில் நைவேத்யம் செய்து அதை மன்னருக்கு கொடுப்பது வழக்கம்.
ஒருமுறை ஒரு அந்தண சிறுவனின் முறை வந்தது. இந்த மரத்திலிருந்து தினமும் பழம் பறித்து போக மக்களை ஏவும் மன்னன், வேலைக்காரர்களை இதற்கென நியமித்திருக்கலாமே என எண்ணி ஒரு தந்திரம் செய்தான்.
“நான் சிறுவன், பழத்தை சுமக்க சிரமப்படுவேன். நீங்கள் எல்லோரும் போய் இந்த பழத்தை கொடுத்து வாருங்கள். நான் இங்கிருந்து உங்கள் வீடுகளை பார்த்துக் கொள்கிறேன் என்று கூற அனைவரும் சிதம்பரம் சென்று விட்டனர்.
இந்த மரம் இருந்தால் தானே பிரச்சனை வரும். இதை அழித்துவிட்டால், நம் ஊர் மக்கள் தினமும் பழம் சுமக்கும் தொல்லை இருக்காதே என கருதி, அந்த மரத்தை எரித்து விட்டான். ஊர் திரும்பிய மக்களிடம் பலா மரத்தில் தானாக தீப்பிடித்து சாம்பலாகி விட்டதாக சொல்ல, ஊர் மக்களும் நம்பி விட்டனர்.
மறுநாள் பலாப்பழம் சிதம்பரம் செல்லவில்லை. அந்த சிறுவனை அழைத்து மன்னர் விசாரித்தார். அப்போது அவன், “பலாபழத்தை சிதம்பரம் கொண்டு வருவதற்கு தாங்கள் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எனவே தான் மரத்தை எரித்தேன் என்றான்.
அதற்கு மன்னன், “தகுந்த வசதி வேண்டும் என நீ இதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதை நீ செய்யாததால் உனது கண்ணை கட்டி நாடு கடத்த உத்தரவிடுகிறேன்.
காவலர்கள் சிறுவனை அழைத்து சென்ற போது, மன்னனும் உடன் சென்றான். ஊர் எல்லையில் அவனை விட்டு விட்டு திரும்பிய போது, ஓரிடத்தில் பொன்னிற உடும்பு தென்பட்டது. அதை பிடிக்க காவலாளிகள் சென்ற போது அது ஒரு புற்றினுள் சென்று மறைந்தது.
காவலாளிகள் அந்த புற்றை ஆயுதங்களால் கலைத்த போது உடும்பின் வாலிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது அசரீரி தோன்றி, சிறுவன் என்றும் பார்க்காமல், நாடு கடத்தியதற்காக கண்டன குரல் எழுந்தது. மன்னன் மயங்கி விழுந்தார்.
மயக்கம் தெளிந்த மன்னனிடம், மீண்டும் அசரீரி தோன்றி, சிவபெருமானே உடும்பாக வந்ததாகவும், அவ்விடத்தில் ஓர் சிவாலயம் கட்டி வழிபடு என ஆணையிட்டார்.
இன்றும் கூட உடும்பின் வால் அளவிலுள்ள லிங்கம் தான் மூலஸ்தானத்தில் உள்ளது. சிறுவனை அழைத்துச் சென்று விட்ட ஊர் ( திருத்தணிக்கும் திருவள்ளூருக்கும் இடையில்) ‘விடிமாகறல்’ என்று வழங்கப்படுகிறது.
சேலம் சுப்பராய பிள்ளை தம் உடம்பில் இடுப்பின் கீழ் செயலற்று போக எல்லாவித மருத்துவமும் செய்து பலனின்றி போக, திருமுறையில் கயிறு சாத்திப் பார்த்து, இத்தல பதிகம் வர, இங்கு வந்து தங்கி.. பூரண குணம்.. அண்மைக்காலத்தில் நிகழ்ந்ததாகும்..
இந்திரன் வழிபட்ட தலம். ராஜேந்திர சோழனுக்கு இறைவன் பொன் உடும்பாகத் தோன்றி, அவன் துரத்த, புற்றில் ஓடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வெளிப்பட்ட தலம். (மாகறம்= உடும்பு). மன்னனால் வாலை மட்டும்தான் பிடிக்க முடிந்தது.
சிவலிங்க திருமேனி உடும்பு போல் சிறுத்து உள்ளது. சுயம்பு. ஆவுடையார் பின்பு கட்டப்பட்டது
ஞான சம்பந்தர் பதிகம் ‘வினை நீக்கும் பதிகம்’ எனும் சிறப்புடையது.
இக்கோவிலில் யானை மீது முருகன் அமர்ந்திருக்கும் அபூர்வ திருமேனி அழகுற காட்சி தருவதை காணலாம். திங்கட் கிழமை தரிசனம் விசேஷம்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அழகிய சுதை சிற்பங்களோடு 5 நிலை ராஜ கோபுரம், 2 பிரகாரமும் உள்ளது. பிரகாரத்தில் விநாயகர் முருகர் 63வர், நடராஜர், பைரவர், நவகிரஹ சந்நிதிகள் உள்ளது. விமானத்தில் வீணை ஏந்திய தக்ஷிணாமூர்த்தி பார்க்கலாம்.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீர
கர்ம வினைகள் மற்றும் பாவங்கள் நீங்க
எம பயம் மற்றும் தோஷங்கள் நீங்க
புத்திர பாக்கியம் கிடைக்க
கண் பார்வை குறைவு பக்கவாத நோய் தீர
பிரிந்த தம்பதியர் ஒன்று சேர
கர்ம வினைகள் மற்றும் பாவங்கள் நீங்க (
பிரார்த்தனைகள்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாசி மாதம் 10 நாள் பிரம்மோற்சவம்,
மஹாசிவராத்திரி,
திருக்கார்த்திகை,
ஆருத்ரா தரிசனம் மற்றும்
பௌர்ணமி பிரதோஷம் சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாவிஷ்ணு, இந்திரன், மாகறன், மலையன்,
ராஜேந்திர சோழன், சம்பந்தர், பட்டினத்து பிள்ளையார், சேக்கிழார் முதலியோர்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காஞ்சிபுரத்திலிருந்து 16 KM, காஞ்சி உத்திரமேரூர் பாதை (வழி ஓரிக்கை ), செய்யாற்றின் கரையில் உள்ளது.
8AM to 12 NOON, 5 PM to 8 PM
9444810396 சண்முக சுந்தரம் குருக்கள் ( கிராமத்து கோவில், கைபேசியில் அழைத்து விட்டு செல்வது சிறப்பு )
கோயில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
பாடல்விளை யாடல்அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி
நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள்
தீவினைகள் தீருமுடனே. 1
ஞான சம்பந்தர்.


Leave a Reply