காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கச்சி ஏகம்பம்

🪷காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கச்சி ஏகம்பம் 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🪷மூலவர் : ஏகாம்பரநாதர் திருவேகம்பர் தழுவக்குழைந்தநாதர்

அம்பாள் : ஏலவார்குழலி காமாட்சியம்மை 

ஸ்தல விருக்ஷம் : மாமரம்

தீர்த்தம்  : கம்பா நதி, சிவகங்கை & சர்வ தீர்த்தம் 

பாடல் : நால்வரும் பாடியுள்ளனர் சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் 

முதல் தொண்டை நாட்டு ஸ்தலம்.

🪷 ஸ்தல சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹சுயம்பு. காமாக்ஷி அம்மன் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானம். அம்மன் கட்டியணைத்ததற்கான தடம் இன்னும் L ல் உள்ளது என்பது சிறப்பு.

🌹ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிகலிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது.

🌹தைமாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.

🌹பஞ்சபூத ஸ்தலங்களில் இது நிலம், முதல் தலம்.

🌹ஒற்றை மாமரம், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. 4 வேதங்களை 4 கிளைகளாக கொண்டது தெய்வீக மாமரம். இனிப்பு புளிப்பு துவர்ப்பு கார்ப்பு ஆகிய நால்வகை சுவைகளை கொண்ட கனிகளை தருகிறது.

🌹உற்சவர் ஏகாம்பரேஸ்வரர்  தனி சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராக்ஷ பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராக்ஷங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்ராக்ஷத்துடன் எல்லையற்ற சிவனின் உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக் கூடியது.

🌹சிவனுக்கு உகந்த ஸ்படிகம் குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த ஸ்படிகலிங்கம் வேண்டிக் கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம். மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது.

🌹 ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ர லிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு உள்ளது.

🌹பச்சையப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில் தான் கந்தபுராணத்தை இயற்றினார். பின் அருகில் உள்ள குமரக் கோட்டம் முருகன் கோவிலில் அரங்கேற்றம் செய்தார்.

🪷 சுந்தரருக்கு அருள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கைலாயத்தில் பார்வதி தேவிக்கு தொண்டு செய்த அணிந்திதை பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவப்பணி செய்து கொண்டிருந்தாள்.

🌹சிவதல யாத்திரை சென்ற  சுந்தரர், சங்கிலியாரை 2வது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின் போது அவரை விட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழ மரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார்.

🌹ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருகு சென்றதால் கண் பார்வையை இழந்தார்.

🌹பார்வை இல்லாத நிலையிலும் சிவதல யாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள் செய்தார்.

🌹எனவே இத்தலத்தில் வேண்டி கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும்.

🪷 பிருத்வி தலம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார்.

🌹இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் இப்போதும் இருக்கிறது.

🌹இவருக்கு புனுகு மற்றும் வாசனைப் பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர்.

🌹அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.

🌹சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள் புரிவதற்காக கங்கையையும் ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மஹாவிஷ்ணுவை குணப்படுத்த பிறை சந்திரனையும் பயன்படுத்தி இருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன், இங்கு பணி கொடுத்திருப்பது சிறப்பு.

🌹 தை மாத ரத சப்தமி லிங்கம் மீது சூரிய ஒளி. அன்று சுவாமி தரிசனம் பாவம் தோஷம் நீங்கும்.

🪷 ஒற்றை மாமரம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 ஏகாம்பரேஸ்வரருக்கு  பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்று உள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன் , அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமாஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்த்தபடி சிவனை நோக்கி திரும்பி இருக்கிறாள். இதனை சிவனது திருமண கோலம் என்கிறார்கள்.

🌹அம்பாள் தவம் செய்த போது சிவன் இம்மரத்தின் கீழ் தான் காட்சி தந்து, மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி ஏகாம்பரேஸ்வரர் (ஏகம் ஒரு ஆம்ரம் மாமரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர். 3500 ஆண்டுகளுக்கு முந்தைய இம் மாமரத்தின் கனிகளை புசித்தால் மக்கள் பேறு இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கிறது. 

🪷 நிலா துண்ட பெருமாள் 👉 திவ்ய தேசம் :

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும்  காலத்தில் மஹாவிஷ்ணுவின் மேல் (கூர்மா) ஆலகால விஷத்தினால் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு பிரம்மா தேவர்கள் அஸ்வினி குமாரர்கள் என அனைவரும் முயன்றும் முடியாமல், அவர் ஈசனை இங்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து வேண்ட, சிவபெருமான் தன் சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணுவின் மேல் படுமாறு செய்ய, வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலா துண்ட பெருமாள் என பெயர் பெற்றார்.

🪷ஸ்தல வரலாறு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது 2 கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள்.

🌹இதனால் கிரஹங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது.

🌹தவறு செய்து விட்டதை உணர்ந்த  அம்பாள், சிவனிடம் தன்னை மன்னிக்கும் படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.

🌹எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.

🌹 இங்கு வந்த அம்பாள், ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தார்.

🌹அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன், தன் தலையில் சூடிக்கொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓட விட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்து வர, தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்து விடும் என அஞ்சிய அம்பாள், லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள்.

🌹அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன், அவளுக்கு காட்சி தந்து, பாவத்தை மன்னித்தருளி திருமணம் செய்து கொண்டார்.

அம்பாள் அணைத்த சிவன் என்பதால் தழுவக் குழைந்த நாதர் என்ற பெயரும்..

🪷 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹மிகவும் அழகிய மண்டபங்கள் சுற்று பிரகாரங்களை கொண்ட கோவில் இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

🌹 அப்பர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். இவை தவிர பெரிய புராணம் போன்ற 18 புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பட்டு உள்ளது 

🌹கோவிலின் முன்மண்டபத்தில் 108 திவ்ய தேசங்களில்  ஒன்றான “நிலா திங்கள் துண்டத்தான்” பெருமாள் சந்நிதி இருக்கிறது.

🌹இத்தல விநாயகர் விகட சக்கர விநாயகர். முருகர் மாவடி கந்தர் என அருள்பாளிக்கிறார். & 9 நிலை ராஜகோபுரம்.

🌹கச்சி என்பது ஊரின் பெயர்.

🌹காமாக்ஷி அம்மை 32 அறங்கள் செய்த இடம்.

🌹பிரம்மா, மஹாவிஷ்ணு , ருத்ரர் பூஜித்த லிங்கங்கள் – முறையே வெள்ள கம்பம், கள்ள கம்பம், நல்ல கம்பம்.

🌹விகடசக்கர விநாயகர்- ஆயிரம் கால் மண்டபத்தில் எழிலாக வீற்று இருக்கிறார்.

•சலந்திரனை அழிக்க திருமால் இறைவனை வேண்டி பெற்ற சக்கராயுதத்தை வீரபத்திரர் மேல் ஏவிய போது அவர் அணிந்திருந்த வெண்டலை மாலையில் உள்ள ஒரு தலை அதை விழுங்கி விட்டது. திருமால் பெரிதும் வருந்தினார். இதை அறிந்த விஷ்வக்சேனர் வீரபத்ரரிடம் சென்று வேண்டி அவர் சொல்லியவாறே பிரம்ம கபாலம் சிரிக்கும் வகையில் விகட கூத்தாடினார்.

🌹அக்கூத்தை கண்டு பிரம்ம கபாலம் சிரிக்க சக்கராயுதம் கீழே விழுந்தது. அப்போது அருகில் இருந்த விநாயகர், அதை விரைந்து எடுத்துக் கொண்டு மறுமுறையும் விகட கூத்து ஆடுமாறு பணிக்க, அவரும் அவ்வாறே ஆடினார். விநாயகர் மகிழ்ந்து சக்கராயுதத்தை தந்தருளினார்.

ஆதலின் விகட கூத்தினை  விரும்பி கொண்டமையால், விகட சக்கர விநாயகர்..

🌹 சீன யுவான் சுவாங் காஞ்சியைப் புகழ்கிறார். 5th Century,

🌹2nd Century பதஞ்சலி தன் பாஷ்யத்தில் காஞ்சி சிறப்பு.

🌹3rd Century to 9th Century பல்லவர்கள் காஞ்சியை  தலை நகராக கொண்டு ஆட்சி.

🌹 கல்வியில் கரையிலாத காஞ்சி என அப்பர்.

🌹 கல்விக்கு இருப்பிடமான நாலந்தா பல்கலைக்கழகம் தலைவர் தர்மபாலர் ( HARSHA காலத்தில் ), Prof.தின்னதர், பௌத்த தத்துவ போதிதர்மர் 👉 ALL FROM KANCHI ONLY..

🌹” விழவறா காஞ்சி ” எப்போதும் விழாக்கள் ( in Temples )

🌹கோவிலில் 15 கல்வெட்டுக்கள்..

🪷 பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தியானதால், வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதலும் சித்தியாகிறது. 🌹திருமணவரம் குழந்தைவரம் முக்கிய பிரார்த்தனை.

🌹இத்தல சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மன நிம்மதி வேண்டுவோர் இத்தலத்திற்கு பெருமளவில் வருகின்றனர்.

🌹இது திருமண தலம் என்பதால் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்கின்றனர்.

🪷 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பங்குனி பிரம்மோற்சவம் 10 நாட்கள், பங்குனி உத்திரம் திருக்கல்யாணம், 63 நாயன்மார்கள் உலா 

🪷 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

உமையம்மை பிரம்மா மஹாவிஷ்ணு  ருத்ரர்  பட்டினத்து பிள்ளையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், பரணதேவ நாயனார், நம்பியாண்டார் நம்பி, மாணிக்கவாசகர் சுந்தரர் அப்பர் சம்பந்தர் சேக்கிழார்…

🪷அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நகரின் மத்தியில், 1.6 KM பேருந்து நிலையத்திலிருந்து,

6AM to 12.30PM, 4PM to 8.30PM,

044 27222084, 9629293020

🪷 கோவில் தேவாரம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆலந் தான்உகந் தமுதுசெய் தானை 

  ஆதி யைஅம ரர்தொழு தேத்தும் 

சீலந் தான்பெரி தும்முடை யானைச் 

  சிந்திப் பாரவர் சிந்தையு ளானை 

ஏல வார்குழ லாள்உமை நங்கை 

  என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 

கால காலனைக் கம்பனெம் மானைக் 

  காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 1   சுந்தரர் 

வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி 

  நூலொருபால் பொருந்தக்

கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் 

  கச்சி தன்னுள்

அந்தமில் குணத்தா ரவர்போற்ற 

  அணங்கினொ டாடல்புரி

எந்தை மேவிய ஏகம்பந்தொழு 

  தேத்த இடர்கெடுமே. 1

 ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *