திலதர்ப்பணபுரி திலதைப்பதி முக்தீஸ்வரர்
மூலவர் : முக்தீஸ்வரர், மந்தாரவனேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்பாள் : சொர்ணவல்லி, பொற்கொடியம்மை
ஸ்தல விருக்ஷம் : மந்தாரை,
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி, சந்திர தீ, அரசலாறு
பாடல் : சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 58
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோவிலுக்கு உள்ளே நுழைந்ததும் முதலில் பார்ப்பது மனித முக விநாயகர் (பெயர்
ஆதி விநாயகர்) இங்கு மட்டும்தான் பார்க்க முடியும்.. அவ்வளவு அழகு..
விநாயகர் மனித முகத்துடன் மேற்கு பார்த்து தனிசன்னதியில் இருக்கிறார்.
இதனை கஜமுகாசுரனை வதம் செய்வதற்கு முன்புள்ள கோலம் என்கிறார்கள்.
இவரது சன்னதியில் மட்டை தேங்காய் கட்டி வேண்டினால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுவதாக நம்பிக்கை.
இத்தலத்தில் அருளும் சிவன் முன்னோர்களுக்கு முக்தி தருபவராக அருள்வதால் இவரை முக்தீஸ்வரர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த இடம் 7, அவை
காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, திரிவேணி சங்கமம்.. இதில் 5ம் இடத்தில் உள்ள தலம் இது.
ராமர் திலம் (எள்) வைத்து தர்ப்பணம் செய்த இடம் என்பதால் திலதர்ப்பணபுரி. இப்போது சிதலபதி.
இக்கோவிலில் மஹாவிஷ்ணுவும் மூன்று கோலங்களில் அருள்கிறார்.
சிறிய கோவில், கிழக்கு நோக்கிய மூலவர் சன்னதி, வலப்புறம் அம்பாள் சன்னதி..
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவாலயத்தில் 3 பெருமாள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அரிதாக சிவன் கோவில்களில் கருவறைக்கு பின்புறம் லிங்கோத்பவர் or விஷ்ணு இருப்பார். இங்கு 3 கோலங்கள்.
ராமர் தர்ப்பணம் செய்த போது, மாதா பிதா குரு தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் வைத்து பூஜை செய்தார். இந்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. மூலஸ்தானம் பின்புறத்தில் இந்த லிங்கங்களையும், தர்ப்பணம் செய்த ராமரையும் காணலாம். இவர் வலது காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கி திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார். ராமரின் இத்தகைய தரிசனம் காண்பது அபூர்வம். இத்தலம் பித்ரு வழிபாட்டுக்கு உகந்த தலமாக திகழ்கிறது.
இச்சன்னதி எதிரே, சிவனது கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இடத்தில், மஹாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் நவகிரஹ சன்னதி அருகில் மற்றொரு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இது போல் மூன்று கோலங்களைக் காணலாம்.
நித்ய அமாவாசை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாபாரதம் – யுத்தம் முன்பு – போரில் வெற்றி பெற களபலி கொடுக்க உகந்த நாளை துரியோதனன், சகாதேவனிடம் கேட்கிறான். கேட்பது எதிரியாக இருந்தாலும் உண்மையைச் சொல்கிறார். பூரண அமாவாசை களபலி கொடுத்தால் வெற்றி. துரியோதனன் அதற்கு ஆயத்தம் செய்கிறான்.. இங்கு தான் கண்ணனின் சூழ்ச்சி..
கண்ணன் திடீரென ஒரு குளக்கரையில் அமர்ந்து அமாவாசைக்கு முதல் நாளே தர்ப்பணம் செய்கிறார். இதைப் பார்த்த சூரியனும் சந்திரனும் பூலோகத்திற்கு ஒன்றாக ஓடி வருகின்றனர். ” நாங்கள் இருவரும் ஒன்றாக சேரும் நாள்தான் அமாவாசை. ஆனால் நீங்கள் இன்றே தர்ப்பணம் செய்கிறீர்கள். இது சரியாகுமா?
கிருஷ்ணன்
இப்போது கூட நீங்கள் ஒன்றாக தானே வந்திருக்கிறீர்கள். எனவே இன்று தான் அமாவாசை என்று சமயோசிதமாக பதில் சொல்லி விடுகிறார். அனைவரும் அன்றே தர்ப்பணம் செய்கிறார்கள்.
அதேபோல் முக்தீஸ்வரரை சூரியன் சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர். இங்கே சந்நிதியிலும் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியனும் சந்திரனும் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இக்கோயிலில் தினமும் அமாவாசையாகும். இதனை “நித்ய அமாவாசை” என்பர்.
இக்கோயிலில் பெற்றோர் / முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம்/ தர்ப்பணம் செய்யலாம். சிறந்த பரிகார தலம்.
அம்பாள் ஸ்வர்ணவல்லி
தங்கம் வாங்கவேண்டுமா? அம்பிகைக்கு சிறப்பு அர்ச்சனை செய்கிறார்கள்.. வாங்கி குவிக்கலாம்..
( பொற்கொடி நாயகி )
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒருமுறை கைலாயத்தில் அனைவரும் சிவ பூஜை செய்து கொண்டிருந்த நேரத்தில், விதிவசத்தால் பிரம்மாவின் கவனம் ஊர்வசி பக்கம் சென்றது. இதனால் சிவபெருமானின் சாபத்தால் மண்ணுலகுக்கு சென்று வழிபட்டார். பிரம்மா திலதர்ப்பணபுரிக்கு வந்து தவம் செய்து சிவபெருமானின் தரிசனம் & சாப விமோசனம் பெற்றார்.
ராவணன் சீதை கடத்தல் – ஜடாயு நிறுத்த -வாளால் வெட்டி- ராமர் மடியில் உயிர் விட்டார் – வனவாச காலத்தில் தந்தை தசரதர் இறந்திருந்ததால், அதற்காக சிரார்த்தம் செய்ய எண்ணி இத்தலம் வந்தார். அரசலாற்றில் நீராடி, சிவபூஜை செய்து, தசரதருக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார். அப்போது தனக்கு உதவி செய்வதற்காக போராடி உயிரை விட்ட ஜடாயுவிற்கு மரியாதை தரும் விதமாக, “எள்” வைத்து பிதுர்தர்ப்பணம் செய்தார். எனவே “திலதர்ப்பணபுரி” பெயர். இறைவன் ராமரின் தந்தைக்கு முக்தி அளித்ததால் “முக்தீஸ்வரர்”.
காசியில் நார்சோதி எனும் மன்னன், இறந்த தன் தந்தைக்கு சடங்கு செய்ய விரும்பினான். அவன் தனது முன்னோர்களுக்கு நேரடியாக பிண்டம் வழங்க விரும்பினார். அவர் பல இடங்களுக்கு சென்று முயன்றாலும் எங்கும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்த இடத்தில் அவர் தில தர்ப்பணம் அவரது முன்னோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே இத்தலம் மறைந்த முன்னோர்களுக்கு சடங்கு செய்ய மிகவும் உகந்தது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிழக்கு நோக்கிய இரும்புக் கம்பிகளாலான கதவுகளுடன் கூடிய முகப்பு வாயில் உள்ளது. கொடிமரம் இல்லை. மூலவர் அம்பாள் ஆதிவிநாயகர் சன்னதி தவிர,பிரகாரத்தில் விநாயகர் மற்றும் ஒரு முகம், நான்கு கரங்களுடன் தேவியர்களுடன் நின்ற திருக்கோலத்தில் ஆறுமுகர் (முருகன்) சன்னதி உள்ளது.வெளிப்பிரகாரச் சுற்றின் முடிவில் சந்திரா சூரியர்களுக்கு அடுத்தபடியாக ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீமன் நாராயணன் காட்சி தருகிறார்.கஜலட்சுமி மற்றும் நவக்கிரக சன்னதிகள் இக்கோவிலில் உள்ளன.
கோவில் ஸ்தல விருக்ஷத்தின் கீழ் ( மந்தார மரம் ) மந்தாரவனேஸ்வரர் சன்னதியை காணலாம்.
இங்கு ஓடும் அரசலாறு வடக்கில் இருந்து தெற்கு நோக்கி “உத்தரவாஹினி”யாக சொல்வது சிறப்பு. இதுபோல் நதிகள் ஓடும் கோவில்களில் வழிபட்டால் செல்வம் செழிக்கும்
இங்குள்ள முருகனை அருணகிரியார் பாடியிருக்கிறார்.
பிரகாரத்தில் துர்க்கை எட்டு கைகளுடன் இருக்கிறாள். இவள் இடது காலை பின்னோக்கி வைத்திருக்கிறாள். காலுக்கு கீழே மஹிஷாசுரன், பின்னால் சிம்ம வாஹனம் உள்ளது.
நவகிரஹ சன்னதியில் சூரிய பகவான் மட்டும் உயர்ந்த பீடத்தில் உள்ளார்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பித்ரு தோஷ நிவர்த்தி
365 நாட்களும் தர்ப்பணம்
குடும்ப ஒற்றுமை & கல்வி உயர்வு
திருமண வரம் மற்றும் மன அமைதி
செல்வ வளம் பெருக
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்திரை பெருவிழா பிரம்மோற்சவம்
விநாயகர் சதுர்த்தி
மஹா சிவராத்திரி
திருக்கார்த்திகை
தைப்பூசம்
பீஷ்மாஷ்டமி
ஆடி அமாவாசை
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பார்வதி தேவி, லக்ஷ்மி தேவி, பிரம்மா, சூரியன், சந்திரன், ஹேரண்ட முனிவர், மார்க்கண்டேயர், பத்திரயோகி முனிவர் ராமன் லட்சுமணன், நார்சோதி மன்னன், யானை, சிங்கம், சம்பந்தர் சேக்கிழார்..
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாயவரம் திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் இறங்கி மேற்கே அரசலாற்றுப் பாலம் கடந்து வலப்புறம் சென்றால் கோவில்
கூத்தனூர் சரஸ்வதி 2.2 KM
அம்பர் மாகாளம் 5KM
திருமீயச்சூர் 7.5 KM
7AM – 12.30PM 4.30PM – 8.30PM
94423 90299 & 94427 14055
சுவாமிநாத சிவாச்சாரியார்
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொடிகள்பூசிப் பலதொண்டர்
கூடிப் புலர்காலையே
அடிகளாரத் தொழுதேத்த
நின்றவ் வழகன்னிடம்
கொடிகளோங்கிக் குலவும்
விழவார் திலதைப்பதி
வடிகொள்சோலைம் மலர்மணங்
கமழும் மதிமுத்தமே.
ஞானசம்பந்தர்


Leave a Reply