திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர்

🌸மூலவர் : ஐராவதேஸ்வரர்

அம்பாள் : வண்டமர்பூங்குழலி / சுகந்த குந்தளாம்பிகை

ஸ்தல விருக்ஷம் : பாரிஜாதம் (தற்போது இல்லை),

தீர்த்தம் : வாஞ்சியாறு சூரிய தீ

புராண பெயர் : திருக்கோட்டாறு

பாடல் : சம்பந்தர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 53

🌸 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷ஐராவதம் தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை ஆறு போல் சொரிவித்து

வழிபட்டதால் கோட்டாறு என இத்தலப் பெயர்.

🌷கோடு=கரை, இக்கோயில் வாஞ்சியாற்றின் கரையில் விளங்குவதால் கோட்டாறு எனப்பட்டது.

🌷அர்த்த மண்டபத்தில் பல்லாண்டுகளாக தேனீக்கள் கட்டிய பழமையான தேனடை உள்ளது. இறைவன் சந்நிதியில் தேனீக்கள் ரீங்கார ஓசை செய்வதை கேட்கலாம்.

🌷ஞான சம்பந்தர் பதிகம் கல்லில் பொறிக்கபட்டுள்ளது.

🌸 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷முன்மண்டபத்தில் உள்ள மேற்கு நோக்கிய பெரிய சிவலிங்கமான குமார புவனேஸ்வரர் அகத்தியரும் சுப மகரிஷிம் சேர்ந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். மேற்கு நோக்கிய சிவலிங்கம் மேலும் சிறப்பு.

🌷சுபமஹரிஷி தினமும் இப் பெருமானை தரிசனம். ஒரு நாள் அவர் வருவதற்கு நேரமானதால் கோயில் கதவு சாத்தப்பட்டது. அதை கண்ட ‘சுபர்’, தேனீ வடிவம் கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டார். அது முதல் அங்கேயே தங்கி விட்டார். அக்காலம் தொடங்கி மூலவர் சந்நிதில தேன்கூடு இருந்துவருகிறது. தரிசிக்கச் செல்வோர் கூட்டை தொடாது எட்டி நின்று பார்த்து விட்டு வர வேண்டும்.

🌷இந்த சுப மஹரிஷியின் உருவமே வெளிச்சுவற்றில் பின்புறத்தில் உள்ளது.

🌷ஆண்டுக்கு ஒரு முறை இக்கூட்டில் இருந்து தேனை எடுத்து சுவாமிக்கு சாற்றுகிறார்களாம். மீண்டும் கூடு கட்டப்படுகிறதாம்.

🌸 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷ஐராவதம் சொர்க்கத்தில் இந்திரனின் வாகனமான வெள்ளை யானை, 4 கொம்புகளுடன். ஒருமுறை துர்வாச முனிவர் காசியில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு இறைவனுக்கு சாத்திய மலர் மாலையை இந்திரனிடம் தர, அவனும் அலட்சியமாக யானையின் மத்தகதத்தில் வைக்க, அதில் உள்ள முள் குத்தியதால் யானை தன்

துதிக்கையால் தள்ளி, காலால் மிதிக்க, கோபம் கொண்ட துர்வாசர் யானைக்கு சாபம்.

காட்டானையாக மாறி, 100 ஆண்டுகள் பல தலங்கள் சென்று மதுரையில் இறைவன் அருளால் சுய உருவம் பெற்றது. ஐராவதம் காட்டானையாய் வழிபட்ட தலங்களில் திருக்கோட்டாறும் ஒன்று.

🌸 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மூன்று நிலைகளைக் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் கோயிலின் வாசலாக அமைந்துள்ளது.

உள்ளே சென்றதும் நேரே மூலவர் ஐராவதீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார், சிறப்பு.

கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா மற்றும் விஷ்ணுவின் உருவங்கள் அமைந்துள்ளன. அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியது, நின்ற திருக்

கோலம். விசாலமான வெளிச்சுற்றும் உள் பிரகாரமும் உள்ளன. பிரகாரத்தில் விநாயர், பாலவிநாயகர், சுந்தரர், பரவையார், சுபமகரிஷி, முருகர், அர்த்தநாரீஸ்வரர், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோரின் திருமேனிகள் காணப்படுகின்றன.

மூலவர் கருவறையிலேயே இயற்கையான தேன்கூடு ஒன்று உள்ளது. சுபமகரிஷி தேனீ வடிவெடுத்து வழிபட்டதன் அடையாளமாக இக்கூடு இருப்பதாக நம்பப்படுகிறது.

🌸 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சகல தோஷங்கள் நீங்க

பிதுர் தோஷம் மற்றும் குடும்ப நலம்

திருமண வரம்

புத்திர பாக்கியம்

கல்வி மற்றும் ஞானம்

சாப விமோசனம்

மன அமைதி மற்றும் கோபக் கட்டுப்பாடு

🌸 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆருத்ரா தரிசனம் திருவாதிரை

வைகாசி விசாகம்

மஹா சிவராத்திரி

தைப்பூசம்

கார்த்திகை

ஆனித் திருமஞ்சனம்

ஐப்பசி அன்னாபிஷேகம்

🌸 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரமன், திருமால், இந்திரன், குபேரன், சூரியன், சந்திரன், அக்கினி, அஷ்ட வசுக்கள், அஷ்ட திக்குப்பாலகர்கள், சுப மகரிஷி, அகத்தியர், கௌதமர், பராசரர், இராமர், கோச்செங்கட்சோழன், ஐராவதம், சம்பந்தர் முதலியோர்.

🌸அமைவிடம் நேரம் தொடர்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

காரைக்கால் – கும்பகோணம் மார்க்கம்: காரைக்காலில் இருந்து திருநள்ளாறு, நெடுங்காடு வழியாக வரும்போது, நெடுங்காட்டைத் தாண்டியவுடன் திருக்கொட்டாரம் கூட்டுச் சாலை வரும். அல்லது காரைக்கால் – கும்பகோணம் பேருந்து பாதையில் உள்ள அம்பகரத்தூர் என்ற ஊரில் இறங்கினால், அங்கிருந்து சுமார் 2 கி.மீ முதல் 3 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

7AM – 12NOON 5.30PM – 8PM

86376 41976 & 98424 87512

பிரகாஷ் குருக்கள்.

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு

🌸 கோவில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கருந்த டங்கணின் மாத ராரிசை செய்யக் காரதிர் கின்ற பூம்பொழிற்குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில் இருந்த எம்பெரு மானை யுள்கி

இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள் வருந்து மாறறியார் நெறிசேர்வர் வானூடே.

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *