திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர்

🌷மூலவர் : சுந்தரேஸ்வரர் / திருமேனி அழகர்

உற்சவர் : வேடமூர்த்தி

அம்பாள் : சாந்தநாயகி / சௌந்திரநாயகி

ஸ்தல விருக்ஷம் : புன்னை

தீர்த்தம் : தேவ தீ

ஆகமம் : காரணாகமம்

பாடல் : சம்பந்தர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 49

🌷ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 வில் ஏந்திய வேடுவர்👉

இங்கு உற்சவர் வேடமூர்த்தி கையில் வில் மற்றும் சூலம்

ஏந்தியும் அம்பாள் தலையில்

பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும்

காட்சி தருவது வித்யாசமான தரிசனம்.

🌹சிவன் வேடராக வந்த பொழுது அவருடன் முருகனையும் அழைத்து வந்தாராம். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சி தருகிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி தெய்வானையுடன் இருக்கிறார்

🌹சம்பந்தர் பதிகம் பாடிய சிவன் – பிரகாரத்தில் தனி சன்னதியில் “புன்னைவன நாதராக” அருளுகிறார். இவரது சன்னதியின் முன் புறம் சனீஸ்வரர் சம்பந்தர் இருவரும் இருக்கின்றனர். கிரஹதோஷம் உள்ளவர்கள் இங்கு சிறப்பு பூஜைகள் செய்து வேண்டி கொள்கிறார்கள்.

🌷ஸ்தல பெருமை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹மாப்பிள்ளை சிவன்👉

ஒரு சமயம் கைலாயத்தில் பார்வதி தேவி சிவனிடம், ( முன்னர் கைலாயத்தில் சிவபெருமான் யோக நிஷ்டை – உடலும் உணர்வும் அசைவற்று, ஆதலால் உலகமே அசைவற்று, பிரம்மா விஷ்ணு வேண்டி யோக மிஸ்டையிலிருந்து மீண்டார் )

” உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக நீங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும்? நான் இல்லாமல் உங்களால் தனித்து இயங்க முடியாதே! என்றாள். அவர் மீண்டும் நிரூபித்தார்.

🌹தன்னை சோதித்து உயிர்கள் யாவற்றிற்கும் துன்பத்தை விளைவித்த பார்வதியிடம், ‘நீ எம்மை சோதித்து உயிர்களுக்கு எல்லாம் துன்பம் விளைவித்து விட்டாய். எனவே மீனவர் மரபில் பிறந்து அருந்தவம் செய்து எம்மை மீண்டும் வந்தடைவாயாக’ என்று அருளினார். அதன்படி அம்மை புன்னை வனமாக இருந்த இத்தலத்தில் குழந்தை வடிவில் கிடந்தார். அவ்வழி வந்த மீனவர் ஒருவர் குழந்தையை பரிவோடும் பாசத்தோடும் எடுத்துச் சென்று வளர்க்கலானார். அப்பெண் சிறுமியாக வளர்ந்து உரிய நிலையை எய்திய பின்பு, சிவபெருமானை நினைத்து சிவலிங்கம் ஸ்தாபித்து சிவாகமப்படி பூஜித்து வந்தார்.

🌹இந்நிலையில் சோமுகன் என்ற அசுரன், பிரம்மாவிடம் அரிய வரங்களை பெற்று,

தேவர்களை துன்புறுத்தியதுடன் வேதங்களைத் திருடிச் சென்று கடலுக்குள் ஒளித்து வைத்தான். விஷ்ணு மத்ஸ்யாவதாரம் எடுத்து அவனை வதம் செய்தது தெரிந்ததே. பின்னர் சினம் அடங்காமல் கடலையே கலக்கினார். உலகமே நடுக்கம் அடைந்தது.

🌹அனைவரும் சிவனை வேண்ட – மீனவர் வடிவில் பூலோகம் வந்து பெரிய கடல் மீனைப் பிடித்து கரை மீது போட்டார். சிவனருளால் மீன் வடிவம் நீங்கி பெருமாள் வைகுந்தம் சென்றார்.

🌹பின்னர் அருகே புன்னைவன காட்டில் தவம் செய்த பார்வதி தேவியை கண்டு, தன்

சுயவடிவம் காட்டியருள அம்மையும் ஐயனை வணங்கி நின்றாள். பின்னர் ஈசன் வேண்டுகோளுக்கிணங்கி கடலாடி சுய உருவை பெற்ற அன்னையிடம், ‘வேண்டிய வரம் கேள்’ என்றார் ஈசன். உமைதேவி, ‘இறைவா! நான் ஸ்தாபித்து வழிபட்ட இந்த லிங்கத்தில் தாங்கள் இருந்து பக்தர் களுக்கு அருள வேண்டும். இந்த இடம் என் பெயரால் வழங்கப்பட வேண்டும்’ என்று வேண்டினாள்

🌹இந்த நிகழ்வின் அடிப்படையில் மாசி திருவிழாவின் போது, சிவனை மீனவர்கள் இங்கிருந்து தங்கள் பகுதிக்கு அழைத்து சென்று

மாப்பிள்ளை அழைப்பு கொடுக்கின்றனர். அப்பொழுது மீனவர்கள் சிவனை மாப்பிள்ளை என்று அழைக்கும் வழக்கமும் உள்ளது. இவரிடம் வேண்டிக் கொண்டால் திருமண தோஷம் நீங்கும் விரைவில் வரன் அமையும்.

🌷 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பாசுபதேஸ்வரர் கோவில் போன்றே வரலாறு 👉 மஹாபாரதபோர்

வியாசர் to அர்ஜுனன்👉 சிவனை வணங்கி பாசுபத

அஸ்திரம் பெற்று வந்தால் வெற்றி நிச்சயம் என அறிவுறுத்த, அர்ஜுனனும் எங்கெல்லாமோ சுற்றி திரிந்து கடைசியில் இந்த பகுதிக்கு வந்தவுடனே அர்ஜுனன் மனது சாந்தமாயிற்று. ஆகவே இங்கேயே வெகு காலம் ஒற்றைக் காலில் – ஒரு கால் பூமியில், ஒரு கால் மடக்கி, கைகளை தலைக்கு மேலே தூக்கி வைத்து பஞ்சாட்சர மந்திரத்தால் இறைவனை வழிபட்டு பூஜித்து வருகிறான்.

🌹இந்த அகோர தவம் எதற்காக என துரியோதனன் பார்த்தான். இவன் ஏதாவது அஸ்திரம் பெற்றுவிட்டால் என்ன செய்வது என்று மூகாசுரன் எனும் ஒரு அசுரனை பன்றியின் வடிவத்தை எடுத்துக்கொண்டு இவனை ஹிம்சை செய்ய அனுப்பினான். இரவு பகல் என கடின தபஸ் செய்யும் அர்ஜுனனுக்கு அருள் புரிய வேடன் வேட்டுவச்சி வடிவம் தாங்கி (கிராதரூபம்) இறைவனும் இறைவியும் இறங்கி வரும் பொழுது பன்றியை கண்டார்கள்.

🌹சிவபெருமான் தன்னுடைய அம்பை அடித்தார். அதே நேரத்திலே அர்ஜுனனும் அடித்தான். இருவருடைய அம்பும் பட்டது. பன்றியும் கீழே விழுந்தது. யார் அடித்ததால் பன்றி இறந்தது என இருவருக்கும் வாக்குவாதம், கைச்சண்டை, மல்யுத்தம் வெகு நேரம். அர்ஜுனனின் வில் முறிந்தது. கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. சிவன் தானே வேடன் வடிவில் வந்ததாக உணர்த்தி-பாசுபத

அஸ்திரம் கொடுக்க விழையும்பொழுது-அம்பாள் அர்ஜுனனின் தகுதி பற்றி வினவ – அர்ஜுனனின் கையில் உள்ள மத்ஸ்ய ரேகை (அதிர்ஷ்ட ரேகை) விளக்கி தகுதியானவன் என பாசுபதாஸ்திரம் கொடுத்தார். அர்ஜுனன் தனக்கு அருள் செய்ததைப் போல் அனைவருக்கும் இங்கிருந்து அருளும் படி வேண்டவே சிவன் எழுந்தருளினார். ஆதலால் சிவன் மீனவர் வேடன் என 2 வடிவங்களில் வந்து அருள் செய்த தலமிது.

🌷ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன் கோவில். கருவறையில் சிவன் லிங்க வடிவில், சதுர பீடத்துடன், ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார்.

🌹அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் அளித்த சிவன், கையில் சூலம் வில் வைத்து கொண்டு ருத்ராட்ச மாலை அணிந்தபடி உற்சவராக இருக்கிறார்.

🌹அம்பாள் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கிறாள். சாந்தமான கோலத்தில் இருப்பதால் சாந்தநாயகி.

🌹 ஞானசம்பந்தர் காரைக்கால் செல்லும் முன்பு இத்தலத்திற்கு கடல் வழியாக வந்தார். அவர் படகிலிருந்து இறங்க முயன்ற போது, கரையில் மணல்கள் எல்லாம் லிங்கமாகவே தெரிந்தது. எனவே அவர் கடலில் நின்றே சுவாமி குறித்து பதிகம் பாடி விட்டு சென்று விட்டாராம்.

🌹சிவன் வேடன் வடிவில் வந்ததால் இவ்வூர் வேட்டக்குடி என்றும், அம்பாள் மீனவப் பெண்ணாக பிறந்த தலம் என்பதால் அம்பிகாபுரம் என்றும். ஸ்தலவிநாயகர் சுந்தரவிநாயகர்

என்றும் அழைக்கப்படுகிறது.

🌹அதிக சிற்ப வேலைப்பாடுகள் உள்ள கோவில். பிரகாரத்தில் நடராஜர் சுப்ரமணியர், பூரணா புஷ்கலையுடன் ஐயப்பன் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது.

🌷 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

எதிரிகள் மற்றும் தடைகள் நீங்க

திருமணப் பிரார்த்தனை

தம்பதியர் ஒற்றுமை

அகந்தை ஒழிய

🌷 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹மாசிமக கடலாடு விழா

🌹வேடமூர்த்தி உற்சவம்

🌷 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அர்ஜுனன், பார்வதி தேவி, விசுவாமித்ரர், அனவரத ராஜா, அய்யடிகள் காடவர்கோன், சம்பந்தர் திருநாவுக்கரசர் சேக்கிழார் முதலியோர்.

🌷 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

காரைக்கால் & தருமபுரம் 9KM

திருக்கடையூர் 17KM

திருத்தெளிச்சேரி 7KM

காரைக்கால் அல்லது நாகப்பட்டினம். அங்கிருந்து உள்ளூர் பேருந்துகள் அல்லது வாடகை வாகனங்கள் (Auto/Taxi) மூலம் கோயிலுக்குச் செல்லலாம்.

காரைக்காலில் இருந்து ECR வழியில் புதுச்சேரி மாநில எல்லையில் நுழைந்ததும் ‘பூவம்’ கிராமத்தைத் தாண்டி, ‘வரிச்சக்குடி’ என்ற கிராமத்தை அடையலாம். Aவரிச்சக்குடி கிராமத்தில் இருந்து திருவேட்டக்குடிக்கு பிரியும் கிளைப் பாதையில் (இடதுபுறம்) சுமார் 1 முதல் 2 கி.மீ உள்ளே சென்றால் கோயிலை எளிதாக அடையலாம். (சாலையோரம் இக்கோயிலுக்கான நுழைவு வளைவு/Arch அமைக்கப்பட்டுள்ளது)

7AM – 12 NOON 5PM – 9PM

95822 28088 ரமேஷ் குருக்கள்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🌷 கோவில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வண்டிரைக்கும் மலர்க்கொன்றை

விரிசடைமேல் வரியரவங்

கண்டிரைக்கும் பிறைச்சென்னிக்

காபாலி கனைகழல்கள்

தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத்

துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளந்

தெண்டிரைக்கண் கொணர்ந்தெறியுந்

திருவேட்டக் குடியாரே.

ஞான சம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *