திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர்
மூலவர் : பிரம்மபுரீஸ்வரர்
அம்பாள் : மலர்குழல் மின்னம்மை / அம்மலகுஜ நாயகி
ஸ்தல விருக்ஷம் : கொன்றை
தீர்த்தம்: காசி தீர்த்தம்
பாடல் : அப்பர் சுந்தரர் சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 48
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மாவை அழித்து ஞானம் உபதேசித்த தலம் என்பதால் கடவூர் மயானம் என்றும் திருமெய்ஞானம் என்றும் பெயர்கள். திருக்கடையூரில் ஆயுஷ்ய ஹோமம், சதாபிஷேகம் செய்பவர்கள் இங்குள்ள சிவனுக்கு பூஜை செய்து ஹோமத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
கோஷ்டத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தியுடன் ஆறு சீடர்கள் உள்ளனர். கல்லால மரம் இல்லை. கல்வியில் சிறந்து விளங்க இத்தல சிவனையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது சிறப்பு.
சிவனின் ஐந்து மயான தலங்களில் ஒன்றாகும். ஆதி திருக்கடையூர் இது.
அமிர்தகடேஸ்வரர் அபிஷேக திருமஞ்சன தீர்த்தம் இத்தலத்தில் இருந்து தான் தினமும் கொண்டு செல்லப்படுகிறது.
இத்தலத்தில் தான் சிவன் பிரம்மனை நீராக்கி, மீண்டும் உயிர்ப்பித்து அவருக்கு படைப்பு தொழிலை அருளினார்.
மார்க்கண்டேயருக்கு நாள்தோறும் சிவபூஜை செய்ய, காசி கங்கை தீர்த்தத்தை, திருக்கடவூர் மயானத்திற்கு இறைவன் வரவழைத்தார்.
பங்குனி அம்மாவாசை கழிந்த மூன்றாம் நாள், வளர்பிறை அஸ்வதி நட்சத்திரத்தில் நீராடு விழா பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது..
அம்பாள் அருகிலேயே அழகாக பெரிய தனி சன்னதியில் அருள் பாலிக்கிறாள்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிங்காரவேலர் சிறப்பு
வள்ளி தெய்வானையுடன் சிங்காரவேலர் என்ற திருநாமத்துடன் முருகர் இங்கு வீற்றிருக்கிறார். இவரது சன்னதி விமானத்துடன் கூடிய தனிமண்டப அமைப்பில் உள்ளது. இவர் போருக்கு சொல்லும் கோலத்தில், கைகளில் வேல் மற்றும் வில் ஏந்தி, கழுத்தில் ருத்ராட்சமாலை, பாதத்தில் குறடு (காலணி) அணிந்து காட்சி தருகிறார்.
இவரது சிலை வில்லேந்திய ராமன் போல் நளினமாக, இடப்புறமாக சற்றே சாய்ந்தபடி அமைக்கப்பட்டு இருக்கிறது. முருகன் சிவனின் அம்சம் என்றாலும் இத்தலத்தில் ராமனின் சிலை போல் வளைந்து காட்சி தருவதால், இவரை திருமாலின் அம்சமாக கருதுகின்றனர். மாமனை போல் மருமகன் என்று கொண்டாடுகின்றனர். சிவன் சன்னதியில் சண்டிகேஸ்வரர் இருப்பது போல் முருகன் சன்னதியிலும் சண்டிகேஸ்வரர்
குக சண்டிகேஸ்வரர் உள்ளார்
ஒட்டிய வயிருடன் விநாயகர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விநாயகர் எப்போதும், எங்கும் பெரிய வயிறுடன் தான் இருப்பார். இக்கோயிலில் ஒட்டிய வயிறுடன் காட்சி தருகிறார். இவரை பிரணவ விநாயகர் என்று அழைக்கின்றனர்.
பிரணவ மந்திரத்தின் வடிவமான முருகனையும், பிரணவ விநாயகரையும் இங்கு தரிசிப்பது விசேஷம்..
படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கு சிவன் படைப்பின் ரகசியத்தை உபதேசித்த போது, கைகட்டி, மெய் பொத்தி விநாயகரும் உபதேசத்தை கேட்டாராம். இதனால் இவர் வயிறு சிறுத்து இருப்பதாக சொல்வர். படிக்கும் குழந்தைகள் அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை இதன் மூலம் சொல்கிறார்..
ஸ்தலபுராணம் :
*******************
ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் சிவபெருமான் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில் படைப்புக் கடவுளான பிரம்மாவும் அழிந்து போவார். புதுயுகம் துவங்கும் போது, மீண்டும் பிரம்மாவை உண்டாக்கி, அவர் மூலமாக ஜீவராசிகள் பிறக்கும்படி செய்வார்.
அவ்வாறு பிரம்மாவை அழித்து மீண்டும் உயிர்பித்த தலம் இது. அதோடு பிரம்மாவிற்கு உயிர்களைப் படைக்கும் ரகசியம் பற்றி இங்கு ஞான உபதேசம் செய்தருளினார். So, பிரம்மபுரீஸ்வரர்..
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
3 நிலை ராஜகோபுரத்துடன், மேற்கு நோக்கிய சிவாலயம் சிறப்பு. மூலவர் லிங்கத்தில் ஒரு சிறு பிளவு (வெடிப்பு) காணப்படுகிறது. சோழர் காலத்துச் சிலைகளான திருமால், பிச்சாடனர், துர்க்கை, லிங்கோத்பவர், கங்காதரர் மற்றும் கணபதி ஆகிய திருமேனிகள் கோஷ்டத்தில்.
தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கைகூப்பித் தொழுத கோலத்தில் சோழ மன்னர் (மூன்றாம் குலோத்துங்கன் எனக் கருதப்படுகிறது) ஒருவரின் சிற்பம் உள்ளது. சிங்காரவேலன் சன்னதிக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் பன்னிரண்டு ராசிகளின் ஓவியங்கள் காணப்படுகின்றன. இங்கு சோழ பாண்டிய கல்வெட்டுகள் 16 உள்ளன.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°.
எம பயம் நீங்குதல்
பாவங்கள் நிவர்த்தி
ஞானம் மற்றும் கல்வி
பிரம்ம தோஷம் நீங்குதல்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பங்குனி அசுவதி தீர்த்தவாரி
கந்த சஷ்டி
திருக்கார்த்திகை
திருவாதிரை
மஹா சிவராத்திரி
பிரதோஷம்
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மா மார்க்கண்டேயன் அப்பர் சம்பந்தர் சுந்தரர் சேக்கிழார்
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருக்கடையூருக்கு கிழக்கே 2KM
மயிலாடுதுறை, சீர்காழி, காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களின் பேருந்து நிலையங்களிலிருந்து திருக்கடையூருக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. திருக்கடையூரில் இருந்து ஆட்டோ மூலம் செல்லலாம்.
7.30AM – 12NOON, 5PM – 7.30PM
94420 12133 M.K. கணேச குருக்கள்.
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வரிய மறையார் பிறையார்
மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார்
எறியு முசலம் உடையார்
கரிய மிடறும் உடையார்
கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார்
அவரெம் பெருமான் அடிகளே. 1 ஞான சம்பந்தர்
குழைகொள் காதினர்
கோவண ஆடையர்
உழையர் தாங்கட
வூரின் மயானத்தார்
பழைய தம்மடி
யார்செயும் பாவமும்
பிழையுந் தீர்ப்பர்
பெருமா னடிகளே.
திருநாவுக்கரசர்
மருவார் கொன்றை மதிசூடி
மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந்
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே. 1
சுந்தரர்


Leave a Reply