திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்
மூலவர் : அமிர்தகடேஸ்வரர்
உற்சவர்: கால சம்ஹார மூர்த்தி
அம்பாள்: அபிராமி
ஸ்தலவிருக்ஷம்: வில்வம் ஜாதிமல்லி
தீர்த்தம் : அமிர்த புஷ்கரணி, கங்கை தீ, சிவகங்கை தீ…
பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 47.
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சக்தி பீடம்
விநாயகரின் 3ம் படை வீடு
இங்குள்ள “கள்ள வாரன பிள்ளையார்” துதிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சி அளிக்கிறார்.
அட்ட வீரட்ட தலம்.
பிரகாரத்தில் ஒரு சன்னதியில் பார்வதி முருகனை தனது வலது மடியில் அமர்த்திய கோலத்தில் “குகாம்பிகை” ஆக காட்சி தருகிறாள்.
யமபயம் நீங்கும், ஆயுள் விருத்தி தலம் இது..
அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தின் மீது எமன் வீசிய பாச கயிறு தடம் இருக்கிறது. பால் அபிஷேகம் செய்யும் பொழுது மட்டுமே பார்க்க முடியும். ( கர்ப்ப கிரகம் தூரத்தில் இருப்பதால் எங்களுக்கு தெரியவில்லை )
தினமும் சாயரட்சை பூஜையின் போது மட்டும் ஆதி வில்பவனநாதருக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது. இவரது சன்னதிக்குள், மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துச் சென்ற பாதாள குகை இருக்கிறது.
திருக்கடையூரில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள் – அகஸ்தியர் வழிபட்ட பாபஹரேஸ்வரர் மற்றும் புலஸ்தியர் வழிபட்ட புண்யஹரேஸ்வரர். இவர்களை வணங்கிய பிறகு மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி புண்ணியம் உண்டாகும். புண்யஹரேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது.
இத்தலத்து முருகனைக் குறித்து அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார்..
பல சித்தர்கள் வணங்கிய தலம். (உ-ம்) பாம்பாட்டி சித்தர்.
நவகிரஹங்கள் கிடையாது. காலசம்ஹாரமூர்த்திக்கே பூஜை செய்து பலன்.
63 நாயன்மாரில் இப்பதியில் அவதரித்த குங்குலியகலய நாயனார், வறுமையுற்ற காலத்தும், தன் மனைவியாரின் தாலியை விற்றுக் குங்குலியத் தொண்டைச் செய்து பேறு பெற்றார். திருப்பனந்தாளில்
சாய்ந்து யாராலும் நிமிர்த்த முடியாத சிவலிங்க திருமேனியை தனது சிவ பக்தியால் நேராக நிமிர்த்தியவர்.
காரி நாயனார் இப்பகுதியில் அவதரித்து, அரசனிடம் சென்று பொருள் பெற்றுப் பல திருப்பணிகள் செய்து, தொண்டாற்றி முத்தியடைந்த பதி.
அபிராம பட்டர் அவதரித்த தலம்
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அமுதத்தை மஹாவிஷ்ணு பரிமாறும் முன் சிவபூஜை செய்ய எண்ணினார். சிவபூஜையின் பொழுது அம்பிகையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி. எனவே மஹாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார்.
மஹாவிஷ்ணு மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில் மஹாலக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம். அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், மஹாவிஷ்ணுவை அம்பிகையின் அன்னையாகவும் கருதி வணங்குகின்றனர்.
பௌர்ணமி ஆன அமாவாசை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அபிராமி அன்னையின் தீவிர பக்தரான சுப்பிரமணிய பட்டர், அம்பிகையின் முகத்தை நினைத்துக் கொண்டே, சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை பௌர்ணமி என்று கூறிவிட்டார். எனவே மன்னர் அந்நாளை பௌர்ணமி அன்று நிரூபிக்காவிட்டால் மரண தண்டனை என அறிவிக்க, பட்டர் அக்னி வளர்த்து அம்பிகையிடம் வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79 ஆம் பாடல் பாடிய போது, அன்னை அபிராமி காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தாடங்கம் (தோடு) வானில் எரியவே அது முழுநிலவாக காட்சி தந்தது..
அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்பொழுது கொடிமரம் அருகில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை.
79ம் பாடல் பாடும் பொழுது, வெளியில் மின் விளக்கை எறிய செய்கிறார்கள். இந்த வைபவத்தைக் காண ஆயிரம் கணக்கில் மக்கள் திரள்வர்.
கால சம்ஹார மூர்த்தி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மிருகண்டுமுனிவர்+மருத்துவதி நீண்ட காலம் பிள்ளை வரம் இல்லை. ஈசனிடம் குழந்தை வரம் வேண்டி கடுந்தவம் இருந்தனர். குறைந்த ஆயுளுடன் நிறைந்த அறிவு உடைய குழந்தை பிறக்கும் என்ன வரம். மார்க்கண்டேயனின் 16 வது வயதில் பெற்றோர்கள் கவலை.
தன் பிறப்பில் உள்ள பிரச்சனையை தெரிந்து கொண்ட மார்க்கண்டேயன் ஒவ்வொரு சிவ தலங்களாக வழிபட்டான். 107வது கடவூர் மயானம், 108வது திருக்கடையூர்
இறுதி நாளும் வந்தது, இங்கு சிவனை வேண்டினார்.
எமன் அவரது உயிரை பறிக்க வந்த போது, மார்க்கண்டேயன் ஓடிப்போய் அமிர்தகடேஸ்வரரை கட்டிக் கொண்டான். எமன் பாசக்கயிறை வீசினான். மார்க்கண்டேயனோடு அமிர்தகடேஸ்வரரையும் சுருக்கு இழுத்தது. சிவன் கோபம் கொண்டு, என்னையுமா இழுக்கிறாய் என்று காலனை எட்டி உதைத்து சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தார்.
அத்தோடு “மார்க்கண்டேயா! நீ என்றும் பதினாறாய் சிரஞ்சீவியாய் இரு..” என அருளினார்.. மார்க்கண்டேயர் அமிர்தகடேஸ்வரரை கட்டிக்கொண்டு சொன்ன ஸ்லோகம், “த்ரையம்பகம் யஜாமகே..”
மிருத்யுஞ்ஜய மந்திரம்.. இங்கே மிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்பு..
காலன் சம்ஹாரம் செய்யப்பட்டு விட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது. பூமாதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை. தேவி ஈசனிடம் முறையிட, கோபம் தணிந்து, எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார். சிவன் யமனின் உயிர் எடுத்ததும், திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில் தான்.
இவர் “காலசம்ஹார மூர்த்தி”. இடது காலை ஆதிசேஷன் தலைக்கு மேல் வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன் எமனை ஒரு கயிற்றில் கட்டி இழுத்தபடியும், மார்க்கண்டேயன் வணங்கியபடியும் காட்சித் தருகின்றனர்..
சாதாரணமாக கால சம்ஹார மூர்த்தியை தரிசனம் செய்யும் போது எமனை பார்க்க முடியாது.
பூஜை தீபாராதனை காட்டும் போது பீடத்தை திறப்பார்கள். அப்பொழுதுதான் எமனை பார்க்க முடியும். கையில் சூலத்துடன் காட்சி தருவதை சம்ஹார கோலம் என்றும், எமனுடன் இருப்பதை உயிர்ப்பித்த கோலம் என்றும் சொல்கின்றனர். ஆக ஒரே சமயத்தில் “சம்ஹார” மற்றும் “அனுக்கிரஹ” மூர்த்தியை தரிசிக்கலாம். இச்சன்னதியில் உள்ள பாலாம்பிகை, பால (சிறுமி) வடிவில், இரு கரங்களுடன் காட்சி தருகிறார். அருகில் லக்ஷ்மி, சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்..
திருக்கடையூர் ரகசியம் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிதம்பரத்தில் சிதம்பர ரகசியம் போல, இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் “யந்திர தகடு” ஒன்று உள்ளது. இதனை திருக்கடையூர் ரகசியம் என்கிறார்கள். முதலில் பாபகரேஸ்வரரையும், பின் சுவாமியையும், அடுத்து யந்திர தகட்டையும் வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்று நம்பிக்கை.
இத்தலத்தில் கால சம்ஹார மூர்த்தி சந்நிதிக்கு எதிரே, வெளிப்பிரகாரத்தில், மீண்டும் உயிர் பெற்ற, எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கி, பயத்துடன் நின்ற கோலம். அருகில் எருமையும் நிற்கிறது.
தீர்த்தமும் சிறப்பு :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மார்க்கண்டேயன் சிவபூஜைக்காக காசியிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்தார். அவருக்காக சிவன் திருக்கடவூர் மயானம், பிரம்மபுரீஸ்வரர் கோவில் அருகே கிணற்றில் கங்கையை பொங்கும்படி செய்தார். தற்போதும் இங்கிருந்து தான் தினமும் தீர்த்தம் எடுக்கப்பட்டு அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் யாரும் நீராடுவது கிடையாது. பங்குனி மாதம் அஸ்வதி நட்சத்திரத்தில், இத்தீர்த்தத்தில் கங்கை பொங்கிது. இதன் அடிப்படையில் அன்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள்.
மார்க்கண்டேயர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்த பொழுது, கங்கை நீருடன் இப்பிஞ்சிலமும் சேர்ந்து வந்ததாக ஐதீகம். ( பிஞ்சிலம் = சாதி மல்லி ). ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக் கூடியது. இங்கே இம்மலர் சுவாமிக்கு மட்டும் சாத்தப்படுகிறது. இதை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. இந்த 1 பூ அர்சித்தால் 1008 பூ அர்ச்சித்ததற்கு சமம்.
சதாபிஷேகம் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பூர்ணாபிஷேகம் (100)
கனகாபிஷேகம்(90)
சதாபிஷேகம்(80)
பய்மரதசாந்தி(70)
சஷ்டியப்தபூர்த்தி(60)
மணிவிழா
ஆயுஷ்யஹோமம்,
உக்கிரசாந்தி செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும்.
16 கலசங்கள் வைத்து அருகில் நவதானியங்களில் நவகிரகங்களை ஆவாஹனம் செய்து ஹோமம் செய்கின்றனர் கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு தம்பதியர் மீது ஊற்றுகின்றனர்.
இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கி விடுவதாக நம்பிக்கை. இந்த பூஜை செய்பவர்கள் அருகில் இருக்கும் கடவூர் மயான பிரம்மபுரீஸ்வரரையும் வழிபட்டால் வேண்டுதல் பூர்த்தியாவதாக ஐதீகம்.
ஸ்தல புராணம் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மா சிவனிடம் ஞான உபதேசம் பெற கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வமரம் வளர்கிறதோ அவ்விடத்தில் ஞான உபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா இத்தலம் வந்து இறைவனை வணங்கினார்.
சிவன் அவருக்கு காட்சி தந்து ஞான உபதேசம் செய்து வைத்தார். இவரே இத்தலத்தின் மூலமூர்த்தி. ஆதிவில்வவன நாதராக தனி சன்னதியில் அருளுகிறார்.
பின்னர் பாற்கடலில் அமிர்தம் எடுத்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதை உண்ணச் சென்றனர். எனவே விநாயகர் அதை மறைத்து வைத்து விட்டார். பின்னர் விநாயகரை வணங்கிய தேவர்கள் சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அப்பொழுது அமிர்த குடம் இருந்த இடத்தில் சுயம்புலிங்கம் உண்டானது. அமிர்தத்தில் இருந்து தோன்றியதால் “அமிர்தகடேஸ்வரர்” என்று பெயர்.
அட்டவீரட்டான ஸ்தலம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அட்டவீரட்டான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று
1) பிரம்மாவின் 5 தலைகளில் ஒன்று பறிக்கப்பட்ட, “திருக்கண்டியூர்”..
2) அந்தகாசுரன் என்ற அரக்கனை வீழ்த்திய “திருக்கோவிலூர்”..
3) இறைவன் திரிபுர சம்ஹாரம் செய்ததாக நம்பும் “திருவதிகை”
4) தக்ஷனின் யாகம் நிறுத்தப்பட்டு அவன் கொல்லப்பட்ட “கீழப்பரசலூர்”
5) ஜலந்தராசுரன் அரக்கனை வதம் செய்த “திருவிற்குடி”
6) கஜாசுரன் என்ற யானையை வீழ்த்திய “திருவாழுவூர்”
7)மன்மதன் எரிக்கப்பட்டு பின் அருள்பாலித்த “திருகொருக்கை”
8) மார்க்கண்டேயனைக் காப்பாற்ற எமனை சம்ஹாரம் செய்து பின்னர் உயிர் கொடுத்த “திருக்கடையூர்”
வில்வனம், பிஞ்சிலவனம், கடவூர், தர்மபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
தருமபுரம் ஆதீனத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
11 ஏக்கர் பரப்பளவில், 5 பெரிய பிரகாரங்களைக் கொண்டது.
மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம், மேற்கு நோக்கிய மூலவர் மிகவும் சிறப்பு. அம்பாள் அபிராமி கிழக்கு நோக்கி நின்ற கோலம். மார்க்கண்டேயரைக் காக்க எமனை உதைத்தருளிய கால சம்ஹார மூர்த்தி தனி சன்னதி. விநாயகர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் மற்றும் ஆதி வில்வவன நாதர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. நவகிரக சன்னதி இல்லை.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆயுள் விருத்தி
ஆயுள் ஹோதங்கள் (60, 70, 80, 100 etc )
ஆயுஷ்ய ஹோமம்
மிருத்யுஞ்ஜய ஹோமம்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்திரை பிரம்மோற்சவம் / சித்திரை திருவிழா
ஆடிப்பூர திருவிழா
கார்த்திகை சங்கடஹர / சங்காபிஷேகம்
நவராத்திரி விழா
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மார்க்கண்டேயர், எமன், அபிராமபட்டர், பிரம்மா, திருமால், அகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி, துர்கை, சப்த கன்னிகள், பூமாதேவி, சிபி, சோமசருமன், சிவசருமர், ஏமகிரீடன், இரத்தினகைடன், சந்திரபூஷணன், பிரமாதிராசன், இரத்தினாகரன், பஞ்ச சூரியர்கள், அப்பர் சம்பந்தர் சுந்தரர் திருமூலர் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீர தேவ நாயனார், பரணதேவ நாயனார், சேக்கிழார் முதலியோர்
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பேருந்து நிலையங்களிலிருந்து திருக்கடையூருக்கு அடிக்கடி நேரடிப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோவிலின் அருகில் திருக்கடையூர் பேருந்து நிறுத்தம் உள்ளது.
மாயவரம் 14 KM
ஆக்கூர் 6 KM
தலைச்சங்காடு 9KM
செம்பனார்கோவில் 11KM
6AM – 1PM 4.30PM – 9PM
97888 15222 ஆனந்த் சிவாச்சாரியார்
94438 50577 மகேஷ் சிவாச்சாரியார்
98656 93123 சுபாஷ் சிவாச்சாரியார்
94420 11125 கல்யாணராம சிவாச்சாரியார்.
76395 50045 ராஜரத்தினம் சிவாச்சாரியார்
88385 17838 நந்தகுமார் சிவாச்சாரியார்
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சடையுடை யானும்நெய் யாடலா
னுஞ்சரி கோவண
உடையுடை யானுமை ஆர்ந்தவொண்
கண்ணுமை கேள்வனுங்
கடையுடை நன்னெடு மாடமோங்
குங்கட வூர்தனுள்
விடையுடை யண்ணலும் வீரட்டா
னத்தர னல்லனே.
ஞானசம்பந்தர்
மலைக்கொ ளானை
மயக்கிய வல்வினை
நிலைக்கொ ளானை
நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையுங்
கொன்றிடு மாதலாற்
கலைக்கை யானைகண்
டீர்கட வூரரே. 1
திருநாவுக்கரசர்
பொடியார் மேனியனே
புரிநூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல்
வளர்கங்கையின் மங்கையொடுங்
கடியார் கொன்றையனே
கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே
எனக்கார்துணை நீயலதே.
சுந்தரர்


Leave a Reply