தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர்

🪷மூலவர் : சங்காரண்யேஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்பாள் : சௌந்திர நாயகி

ஸ்தல விருக்ஷம் : புரசு

தீர்த்தம் : சங்கு தீ

பாடல் : சம்பந்தர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 45

🪷 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻 இத்தலத்து இறைவன் 3 அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.

🌻 மூலவர் சங்காரண்யேஸ்வரர் மீது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்கால்கள் தெரியும்.

🌻பழந்தமிழர்கள் இயற்கை தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும் அதனை சார்ந்த ஊருக்கும் பெயர் வைத்திருக்கின்றனர்

எனவே தலைச்சங்காடு. தலை+சங்கு+காடு என பிரித்து பார்த்தால் பொருள்.

🌻சங்கு பூக்கள் தோட்டத்தில்

மிகுதியாக பயிரிட்டு இந்த

கோவிலுக்கும் இதனை

சுற்றியுள்ள கோவில்களுக்கும் மிகுதியாக அனுப்பப்பட்டன. இந்த பூந்தோட்டத்தை ஒட்டியே தலைச்சங்காடு என பெயர் உருவாகியது என ஒரு கல்வெட்டு கூறுகிறது.

🪷 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻 கோயில் அமைப்பே சங்கு வடிவில் அமைந்துள்ளது.

🌻 ஒரே சிவாலயத்தில் பிரம்மா விஷ்ணு சிவன் என மும்மூர்த்திகள் தரிசனம் கிடைக்கிறது. மூலவர் தனியாகவும் பிரதோஷ நாயகர் தனியாகவும் அருள் பாலிக்கிறார்கள்.

🌻உலகமஹா கோடீஸ்வரர்களான சங்கநிதி பதுமநிதி இருவரும் கோயில் நுழைவு வாயிலிலேயே நம்மை வரவேற்கிறார்கள்.

🌻 தலைச்சங்காடு திருவெண்காடு திருசாய்காடு திருமறைக்காடு திருதலையாலங்காடு 👉 சங்குஆரண்யம், ஸ்வேதஆரண்யம், வில்வஆரண்யம், வேதஆரண்யம், வடவாரண்யம் என ஐந்து ஆரண்யங்களில் வைத்தும் போற்றப்படுகிறது.

🪷 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻மஹாவிஷ்ணு தனது நான்கு கரங்களிலும் சங்கு(பாஞ்சஜன்யம்) சக்கரம்(சுதர்ஷனம்) கதை(கௌமோதகி) வாள்(நந்தகம்) ஆகியவற்றையும் தோளில் வில்லையும் (சாரங்கம்) ஆயுதங்களாக தரித்திருப்பார்.

🌻இவைகளில் வாளும் சாரங்கமும் மறைந்திருந்து அருளும் ஆயுதங்களாகும்.

🌻இந்த ஆயுதங்கள் ஒவ்வொன்றும் அவருக்கு கிடைத்ததன் பின்னணியில் புராண வரலாறுகள் உள்ளன. இவைகளில் சங்கு மற்றும் சக்கரம் இரண்டும் அவர் ஈஸ்வரனிடம் கேட்டு பெற்றவைகள் ஆகும்.

🌻சங்கின் பிறப்பு பற்றி தேவி மஹாத்மியத்தில் கதை கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் மகனான சுதர்மன் அவதரித்தான். ராதையின் சாபம் காரணமாக அவன் அசுர குலத்தில் சங்கசூடன் என்ற பெயரில் பிறக்க நேரிட்டது.

🌻சங்க சூடன் தான் பெற்ற வரத்தால் தேவர்களை

கொடுமை படுத்தினான். இதனால் சிவபெருமான் அவனை சூலாயுதத்தால் அழித்து சாம்பலாக்கினார். அவனது எலும்புகள் தான் ஆழ்கடலில் விழுந்து சங்குகளாக மாறியதாக சொல்லப்பட்டுள்ளது.

🌻சங்குகள் பலவகை உண்டு. அதில் இடம்புரி வலம்புரி திருகுசங்கு ஆகிய 3 முக்கியமானவை.

🌻இடம்புரி அதிகமாக கிடைக்கும். கோயில்களில் 1008 / 108 சங்கு பூஜை இடம்புரி சங்கே.

🌻திருகு சங்குகள் திருஷ்டி போக்கவும், வாஸ்து குறைபாடுகளை நீக்கவும் பயன்படும்.

🌻இடது கையால் பிடிக்கத் தகுந்த அமைப்புடன் இருக்கும் சங்குகளே வலம்புரி சங்குகள் ஆகும். இவை புனிதமும் ஆற்றலும் நிறைந்தவை. ஒரு லட்சம் சங்குகளில் ஒன்றுதான் வலம்புரி சங்கு. காதில் வைத்து கேட்டால் ஓம் என எந்நேரமும் ஒலித்த வண்ணம் இருக்கும்.

🌻 பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் ஆன பொய்கையாழ்வார் சங்கின் அம்சமாக அவதரித்தார்.

🌻தோஷங்களில் மிக உயர்ந்த தோஷமான பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் ஆற்றல் வலம்புரி சங்குக்கு மட்டுமே உண்டு.

🌻வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டால் மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு நம் பொருளாதார நிலை உயரும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வலம்புரி

சங்கில் பால் வைத்து 27

செவ்வாய்க்கிழமை அம்மன வழிபட்டு வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கி விடும்.

🌻சலந்திரன் அசுரனை சிவபெருமான் சுதர்ஷன சக்கரம் வைத்து அழித்தார்👉 மஹா விஷ்ணு அதைப் பெற 1000 தாமரை தினம் அர்ச்சனை.

ஒரு நாள் ஒரு தாமரை குறைய தன் கண் மலர் 👉 ஈசன் மகிழ்ந்து சக்கரம் 👉 திருவீழி மிழலை.

🌻பாற்கடல் லக்ஷ்மி திருமணம், அவற்றுடன் வெளிவந்த துளசி கௌஸ்துபம் தனதாக்கிக் கொண்டு, சங்கையும் தனதாக்கிக் கொள்ள எண்ணினார். சங்கிலிருந்து எழும் ஒலி ஓம் துர் சக்திகளை விரட்டும் ஆற்றல் கொண்டது என்பதால் அதனை தனது இடது கரத்தில் தரிக்க விரும்பினார். ஈசனை வழிபட்டு இங்கே சங்கை பெற்றார் என ஸ்தல வரலாறு. ஆகவே சங்கு பெற்ற இடம் தலைச்சங்காடு, கொடுத்தவர் சங்காரண்யேஸ்வரர்.

🌻 சங்க சூடனால் கடலில் உருவான சங்குகள் தனது சந்ததியினருக்கு சொந்தமானவை என உரிமை கொண்டாடினான் பாஞ்சன் என்ற அரக்கன். இதனால் அவனுடன் போரிட்டு வென்றதால் பாஞ்சஜன்யம் என பெயர் பெற்றதாக மற்றொரு வரலாறு.

🌻தலைமையான சிவாலயத்தை கொண்டிருந்த காரணத்தினாலும், திருமாலின் வேண்டுதலை ஏற்று சிவன் சங்கு வழங்கி அருள் புரிந்ததாலும் (ஸ்தல

புராணம்), சங்கு பூக்கள் பூத்து குலுங்கும் வனமாக இருந்தமையாலும் (கல்வெட்டு), பூம்புகார் துறைமுகம் செழிப்புற்று வழங்கிய காலகட்டத்தில் கடலில் இருந்து எடுக்கபடும் சங்குகள் விற்பனை செய்யப்படும் இடமாக இருந்தமையாலும் (வரலாறு), இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என பல்வேறு ஆதாரங்கள் கூறப்படுகிறது. அனைத்தும் பொருத்தமாகவே உள்ளது.

🌻பிரகாரத்தின் பின் பக்கத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தனி சந்நிதியில் இருந்து அருள்பாலிக்கிறார். இவர் பஜனை மடத்திலிருந்து எடுத்து வரப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டவர் ஆவார். ஒரு சாரார் சங்கு வேண்டி சிவனை வழிபட்ட பெருமாள் இவரே என்றும், மற்றொரு தரப்பினர் இவ்வாலயத்திற்கு தெற்கே 1/2KM தூரத்திலுள்ள 108 திவ்ய தேச தலைசங்க நான்மதிய பெருமாளே அவர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

🪷 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻கோச்சங்கண்ணன் கட்டிய 72 மாடகோவில்களில் ஒன்று. யானை புகா வாயில்

🌻 கோயில் அமைப்பே சோமாஸ்கந்தர் அமைப்பில் உள்ளது. நுழைந்தவுடன் இடப்பக்கம் சிவன் சந்நிதி நடுவில் முருகன் சந்நிதி வலப்பக்கம் அம்மன் சந்நிதி.

🌻ஆலயத்தின் இறைவி சௌந்தரநாயகி கிழக்கு நோக்கி தனி சன்னதி அருள் பாலிக்கிறாள். அவளது வலது புறத்தில் புவனத்தை கட்டி காக்கும் புவனேஸ்வரி தாயாரும், சந்நிதிக்கு வெளியே ஆலய வாசலை ஒட்டி ஸ்ரீலிங்கம் பைரவர் சந்திரன் உள்ளனர்.

அம்பாள் சந்நிதியை ஒட்டி ஆலயத்தின் தீர்த்த கிணறு இருக்கிறது.

🌻மாடக்கோயில், கொடிமரத்திலிருந்து வணங்குவோருக்கு இறை காட்சி கிடைக்காது. எனவே பிரதோஷ நாயகர் நாயகி கற்சிலை உள்ளது, தமிழ்நாட்டில் இதைப்போல் ஒன்றே ஒன்றுதான் உள்ளது.

🪷 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தம்பதியர் ஒற்றுமை மற்றும் சந்தான பிராப்தி

வயிற்றுவலி நீங்க

குழந்தை நேர்ச்சை

தலைமுறை விருத்தி

🌻குழந்தை பேறுக்காக பெண்கள் வருகிறார்கள். அப்படி வரும் பெண்கள் பௌர்ணமி விரதம் இருந்து, அம்மனுக்கு செய்யப்பட்ட சந்தனகாப்பில் இருந்து சிறிதளவு சந்தனம் எடுத்து சாப்பிட்டு, குழந்தை பிறக்க வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அம்மனுக்கு சந்தனக்காப்பு செய்து வணங்குகிறார்கள்.

🪷 திருவிழாக்கள்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வைகாசி விசாகம்

கந்த சஷ்டி

கார்த்திகை லட்சதீபம்

பௌர்ணமி விரதம் & தீர்த்த நீராடல்

🪷 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மஹாவிஷ்ணு கோட்செங்கசோழன் வள்ளலார்

சிறப்புலி நாயனார், அப்பர், சம்பந்தர் சேக்கிழார் முதலியோர்

🪷அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் பேருந்துகளில் ஏறி, தலைச்சங்காடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கோயிலுக்குச் செல்லலாம்.

மேலப்பெரும்பள்ளம் 4KM

திருநனிப்பள்ளி புஞ்சை 7KM

செம்பனார்கோவில் 11KM

மயிலாடுதுறை 18KM

7AM – 7PM

94434 01060 & 96001 55155

பாலச்சந்திரன் குருக்கள்

குருக்களை அழைத்துவிட்டு செல்வது சிறப்பு

🪷 கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நலச்சங்க வெண்குழையுந்

தோடும்பெய்தோர் நால்வேதம்

சொலச்சங்கை யில்லாதீர்

சுடுகாடல்லாற் கருதாதீர்

குலைச்செங்காய்ப் பைங்கமுகின்

குளிர்கொள்சோலைக் குயிலாலும்`

தலைச்சங்கைக் கோயிலே

கோயிலாகத் தாழ்ந்தீரே.  1

ஞான சம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *