மயிலாடுதுறை மயூரநாதர்

🪷மூலவர் : மயூரநாதர்

அம்பாள் : அபயாம்பிகை அஞ்சொல்நாயகி

ஸ்தலவிருக்ஷம் :வன்னி மாமரம்

தீர்த்தம் : இடப, பிரம்ம, அகத்திய, காவேரி, ரிஷப தீ,

பாடல் : அப்பர் சம்பந்தர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 39

🪷 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹மயில் வடிவில் சிவன் அம்பாள் 👉 இக்கோயிலில் ஆதி மயூரநாதருக்கு பிரகாரத்தில் தனி சந்நிதி. இங்கு சுவாமி லிங்கமாக இருக்க, அருகில் அம்பாள் மயில் வடிவில் அவரை வழிபட்ட கோலத்தில் இருக்கிறாள்.

🌹சிவனது “கௌரி தாண்டவத்தை”, “மயூர தாண்டவம்” என்றும் சொல்கிறார்கள். இந்த நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது.

🌹இவருக்கு நேரே மயிலம்மன் சன்னதி இருக்கிறது. இதில் அம்பாள் சிவன் இருவரும் மயில் வடிவத்தில் இருக்கின்றனர். ஐப்பசி விழாவில் சிவன் அம்பாளுக்கு நடனக்காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கிறது.

🌹கோஷ்டத்தில் உள்ள தக்ஷி சிற்பத்தில் ஆலமரத்தில் இரண்டு மயில் மற்றும் குரங்குகள் இருப்பது போல் அமைக்கப்பட்டு இருப்பது விசேஷமான அமைப்பு. இவருக்கு கீழே நந்தியும் இருக்கிறது.

🌹சுவாமி சன்னதிக்கு பின் புறத்தில் உள்ள முருகனைக் குறித்து அருணகிரிநாதர் பதிகம் பாடி இருக்கிறார். பெரும்பாலான சிவாலயங்களில் கந்த சஷ்டியின் பொழுது முருகன் அம்பாளிடம் தான் வேல் வாங்குவார். ஆனால் இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குவது விசேஷம்.

🪷 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது. (1000 க்ஷேத்ர தரிசனத்தை விட உயர்ந்தது ). தேவா எல்லாம் மாயூரம் பெரிதா கைலாயம் பெரியதா விவாதிக்கிறார்கள் அப்போது சிவன் துலாக்கோல் அளக்க 👉 மாயூரம் கீழே, கைலாயம் மேலே – அவ்ளோ உசத்தி. முதலில் பிரம்மா ஆராதித்த சிவன். அம்பாள் அள்ளித்தரும் அன்னை.

🌹 சேலை கட்டிய சிவன் 👉

நாதசர்மா, அனவித்யாம்பிகை எனும் தம்பதியர் ஐப்பசி கடைசி கட்ட துலா ஸ்நானத்திற்காக இத்தலத்திற்கு வந்தனர். அவர்கள் வருவதற்குள் 30ம் நாள் ஸ்நானம் முடிந்து விட்டது. எனவே வருத்தத்துடன் இங்கு தங்கி சிவனை வேண்டினர்.

🌹அன்று இரவில் நாதசர்மா கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அதிகாலை தம்பதியினர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்க பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல் நாள் அன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது. தம்பதியர்களுக்காக சிவன் வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை முடவன் முழுக்கு என்கின்றனர்.

🌹அத்தம்பதியினர் இக்கோயிலில் சிவனுடன் ஐக்கியமாயினர். நாதசர்மா ஐக்கியமான லிங்கம் மேற்கு பார்த்தபடி அவரது பெயரிலேயே இருக்கிறது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம் அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில் அனவித்யாம்பிகை என்ற பெயரில் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிற சேலைதான் கட்டுகின்றனர். ஆணும் பெண்ணும் சமம் என்பதை இந்த வடிவம் உணர்த்துவதாக சொல்கிறார்கள். இவரது சந்நிதி கோஷ்டத்தில் தக்ஷி சற்றே இடப்புறம் சாய்ந்து இடது காலை மடித்து வைத்தபடி காட்சி தருகிறார்.

🌹ஆடிப்பூர அம்பாள் 👉

தன்னை நாடி வந்த மயிலை காத்தவள் என்பதால் அபயாம்பிகை. இவன் வலது கையில் கிளியுடன் இருக்கிறாள். ஆடிப்பூர அம்பாள்- வீர சக்தி வடிவம் –

தனி சன்னதியில் உள்ளார்.

இவள் ஆடிப்பூரத்தன்றும்

ஆடி வெள்ளிக்கிழமை களிலும் காவிரி கரையில் எழுந்தருளுகிறார். பிரகாரத்தில் சந்தன விநாயகர் சன்னதி இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இங்கிருந்த சந்தன மரத்தில் உருவான விநாயகர் அவர். அகத்தியரால் வழிபட்டவர் என்பதால் இவரை அகத்திய சந்தன விநாயகர் என்றும் அழைக்கிறார்கள்.

🌹துலாஸ்நானம் 👉 சிவன் இத்தலத்தில் நந்தியின் கர்வத்தை போக்கி அருள் செய்தாராம். 👉 இந்த நந்தி காவிரியின் நடுவில் இருக்கிறது. இந்த தீர்த்தமும் இடப தீர்த்தம் எனப்படுகிறது

ஐப்பசி மாதம் 30 நாட்களும் கார்த்திகை முதல் நாளிலும் இவ்விடத்தில் நீராடி வழிபடுவது விசேஷம். இந்நாட்களில் தினமும் சுவாமி தீர்த்த கரைக்கு எழுந்தருளுகிறார். கங்கை கூட இங்கு நீராடித் தான் தன் பாவங்களை போக்கிக் கொண்டதாம். இந்நாள் ஐப்பசி அமாவாசையாக (தீபாவளி) கருதப்படுகிறது. அன்று நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

🌹 சனி சிறப்பு 👉

இக்கோயில் பிரகாரத்தில் நவகிரக சந்நிதியில் உள்ள

சனிபகவான் தலையில் அக்னியுடன் “ஜ்வாலை சனி” யாக இருக்கிறார். இவருக்கு அருகில் தனியே சனீஸ்வரர் காகத்தின் மீது அமர்ந்து வடக்கு திசை நோக்கி சிவலிங்கத்தை பூஜை செய்தபடி இருக்கிறார். இந்த அமைப்பை காண்பது அபூர்வம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் பார்வை குறையும்.

🪷 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹தக்ஷன் யாகம் அறிந்ததே.

வீரபத்திர வடிவம் எடுத்து யாகத்தை அழித்தார். தன் சொல்லை மீறி யாகத்திற்கு வந்ததால் அம்பாளை மயில் வடிவம் எடுக்கும் படியாக தண்டித்தார் சிவன். மயிலாக மாறிய அம்பாள் இத்தலத்திற்கு வந்தாள். சிவனை வேண்டி தவம் இருந்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும், மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரி தாண்டவ தரிசனம் தந்ததோடு, அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால் “மயூரநாதர்”

🌹காசிக்கு சமமான 6 தக்ஷின ஸ்தலங்களில் ஒன்று.

காசி யாத்திரையின் அதே பலன் கிடைக்கும்.

🌹துலா கட்டம்-சர்வ தீர்த்தம்👉 கன்வ மஹரிஷி இங்கிருந்து காசிக்கு, கங்கா ஸ்தானத்திற்கு செல்கிறார். வழியில் சப்த நதிகளும் ரிஷிகளும் தேவர்களும் – அதுவும் தேஜஸ் கலைகள் இல்லாமல் – காவிரி ஸ்தானத்திற்கு வருகிறார்களாம் – சிவபெருமான் மாயூரம் துலா கட்டத்திற்கு அனுப்பி இருக்கிறாராம் 👉 அனைவரும் ஸ்னானம் செய்து இழந்த கலைகளைப் பெற்றனர். அத்தனை சிறப்பு

🪷 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. 5 பிரகாரங்களுடன் அமைந்த ஸ்தலம் இது. மூலவர் விமானம் திரிதளம். இங்குள்ள விநாயகர் அகத்திய விநாயகர்.

இங்குள்ள நடராஜர் கௌரி

தாண்டவ கோலத்தில் அருள் புரிகிறார். நடராஜரின் பாதத்திற்கு அருகில் ஜுரதேவர் இருப்பது வித்தியாசம். இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தி இருக்கிறார்.

🌹துர்க்கை அம்மனின் காலுக்கு கீழே மகிஷனும்

அருகில் 2 அசுரர்களும் இருக்கின்றனர்.

இந்த வடிவம் அரிது.

🌹இங்கு சிவ சண்டிகேஸ்வரர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். அஷ்டலிங்கம், சட்டைநாதர், சிவலிங்கத்தை பூஜிக்கும் மஹாவிஷ்ணு தனியே இருக்கிறார். இத்தலத்தில் ஐக்கியமான குதம்பை சித்தருக்கு சன்னதி உண்டு.

இங்குள்ள கணக்கடி விநாயகரை வேண்டி கொண்டால் கணக்குகளை சிறப்பாக பார்த்து கொள்வார் என்பது நம்பிக்கை.

🪷 பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தம்பதியர் ஒற்றுமை மற்றும் குடும்ப நலன்

பயம் மற்றும் கவலை நீங்க

பாவ விமோசனம் மற்றும் மன அமைதி

கல்வி மற்றும் கலைகளில் தேர்ச்சி, கணித அறிவு

நவகிரக தோஷ நிவர்த்தி

செய்த தவறுக்கு மனம்

வருந்தி மன்னிப்பு

🪷 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஐப்பசி துலா உற்சவம் 31 நாட்கள்

வைகாசி விசாகப் பெருவிழா 15 நாட்கள்

ஆனித் திருவிழா

சித்ரா பௌர்ணமி விழா

🪷 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பார்வதிதேவி மஹாவிஷ்ணு மஹாலக்ஷ்மி பிரம்மா சரஸ்வதி இந்திரன் அக்னி எமன் நிருதி வாயு வருணன் சப்த கன்னியர், கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி மற்றும் நர்மதை போன்ற புனித நதிகள், அகஸ்தியர் பிரகஸ்பதி குதம்பை சித்தர் கபித்தன் நாதசர்மா அனவித்யாம்பிகை அப்பர் சம்பந்தர் அருணகிரிநாதர்

🪷 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாயவரம் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 1 KM. ரயில் நிலையத்திலிருந்து 3 KM. அனைத்து ஊர்களில் இருந்தும் சாலை வசதி உள்ளது.

6.30AM-12.30PM, 4.30PM-8.30PM

63746 06311 சங்கர் சிவாச்சாரியார் தலைமை குருக்கள் 

63832 36795 சுந்தர குருக்கள் 

75983 03299 கல்யாணம் குருக்கள்

90803 65760 பாலாமணி குருக்கள் 

75988 48983 ராஜு குருக்கள் 

94424 04424 ஐயப்பன் குருக்கள்

90422 82942 கணபதி குருக்கள்

99649 95666 கணபதி சுப்ரமணியம் குருக்கள் 


🪷 கோவில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கரவின் றிநன்மா மலர்கொண்டு

இரவும் பகலுந் தொழுவார்கள்

சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்

வரமா மயிலா டுதுறையே.

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *