தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர்

🏵️மூலவர் : வேதபுரீஸ்வரர்

அம்பாள் : சௌந்தர்ய நாயகி

ஸ்தல விருக்ஷம் : வில்வம் & சந்தனம்

தீர்த்தம் : வேத தீ, வேதாமிர்த தீ,

புராணப் பெயர் : திருவழுந்தூர்,

பாடல் : சம்பந்தர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 38

🏵️ ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹சிவனும் பெருமாளும் சொக்கட்டான் விளையாடிய மண்டபம் இன்னும் உள்ளது.

🌹காவிரிக்கும் அகஸ்தியிருக்கும் இங்கு சாப விமோசனம் கிடைத்ததால் இருவருக்கும் தனித்தனி சந்நிதி உள்ளது.

🌹மாசி 23 24 25 சூரியன்.. மாலை 5.55PM முதல் 6.05PM வரை சூரிய பூஜை நடக்கிறது.

🌹கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர். கம்பன் வாழ்ந்த இடம் கம்பர் மேடு. MEMORIAL NOW, UNDER A.S.I.

🌹ஒரு காலத்தில் சந்தன மரக் காடுகள் நிறைந்த இடம், So சந்தனாரண்யம்.

🌹இத்தல இறைவனை வேதங்கள் தேவர்கள் அஷ்டதிக் பாலகர்கள் முனிவர்கள் பூஜை செய்துள்ளனர்.

🌹இரும்பிடர்த் தலையார் என்னும் தமிழ் சான்றோரும் வாழ்ந்த பதி.

🌹ஒரே வீதியின் ஒருமுனையில் இத்தலமும், எதிர்முனையில் பாடல் பெற்ற விஷ்ணுஸ்தலமும் உள்ளன.

🏵️ ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹அகத்திய முனிவர் இத்தல

இறைவனை பூஜை செய்து

கொண்டிருந்தார்.அப்போது இதை அறியாத மழவநாட்டு அரசன் ஊர்த்துவ ரதன் எனும் அரசன் வான்வெளியில் தேரை செலுத்தினான். அந்த தேர் செல்லாது கீழே அழுந்திய காரணத்தால் இத்தலம் தேரழுந்தூர் ஆனது.

🌹 ஞானசம்பந்தர் குழந்தையாக இந்த ஊருக்கு வந்த பொழுது இரண்டு திசையிலும் இரண்டு கோபுரங்கள் உயர்ந்து இருந்ததால் எது சிவன் கோவில் என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது இத்தலத்தில் இருந்த விநாயகர் “அதோ ஈஸ்வரன் கோவில்” என சுட்டிக்காட்டினார். எனவே இந்த விநாயகர் – “ஞானசம்பந்த விநாயகர்”, “வழிகாட்டி விநாயகர்” என அழைக்கப்படுகிறார்.

🌹சிவனும் சக்தியும் பிரிந்த காலத்தில் அவர்களை சந்திக்க இந்திரன் முதலான தேவர்களும் இங்கு வந்தனர். ஆனால் நந்தி அவர்களை சிவனை சந்திக்க அனுமதிக்கவில்லை.

எனவே அஷ்டதிக் பாலகர் இந்த ஊரைச் சுற்றி லிங்கங்களை

பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த அஷ்டலிங்கங்கள் இன்றும் உள்ளன.

🏵️ ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹ஒருமுறை பரமேஸ்வரனும் மஹா விஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். ஒரு கட்டத்தில் பகடைக்காயில் விழுந்த எண்ணிக்கையில் சந்தேகம் வந்தது. நடுவராக இருந்த பார்வதி பெருமாளுக்கு ஆதரவாக கூறினார்.

🌹இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் பார்வதியை பசுவாக மாற சாபமிட்டார். தன்னால்தானே பார்வதி பசுவாக மாறினார் என்பதால் பெருமாள் மாடு மேய்ப்பவராக அவதாரம் எடுத்து இவ்வூரில் எழுந்தருளினார். எனவே இவ்வூரில் உள்ள பெருமாளின் பெயர் ‘ஆமருவியப்பன்’ என்றானது

🌹பசுவாக மாறிய பார்வதி பல தலங்களுக்கும் சென்று வழிபட்டு கடைசியில் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு அழகிய உருவம் பெற்றாள். ‘சௌந்தர்யநாயகி’ என இவளை அழைத்தனர். தன் அழகை பிறர் விரும்ப வேண்டுமென ஆசைப்படுபவர்கள் இந்த அன்னையிடம் அதற்கான அருளாசி பெறலாம்.

🌹பார்வதியை பசுவாக சபித்த சிவன் வருத்தம் அடைந்து இங்கு வந்து வேதியர்களுக்கு வேதம் சொல்லித் தந்தார். எனவே இங்குள்ள இறைவனின் திருநாமம் ‘வேதபுரீஸ்வரர்’

என்பதாகும்.

🏵️ ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஐந்து நிலை ராஜ கோபுரம், 2 பிரகாரங்களுடன் மாடகோவில். மேற்கு நோக்கிய மூலவர் சந்நிதி சிறப்பு. தனிக்கோவிலில் அம்பாள் சௌந்தரநாயகி.இங்குள்ள நவகிரக அமைப்பில், அனைத்துக் கிரகங்களும் சூரியனை நோக்கியும், சூரியன் மேற்கு நோக்கியும் தனித்துவமா காணபடுகின்றனர்.

சோழர் காலத்து 6 கல்வெட்டுகள் உள்ளன. 3ம் குலோதுங்கன், ராஜராஜன் திருப்பணி.

🏵️ பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 இத்தலம் திருமண தடை நீக்கும் தலமாகும். தன் அழகை பிறர் விரும்ப வேண்டும் என விரும்புவோர் அம்பாளை பிரார்த்தனை செய்கின்றனர்.

சாப நிவர்த்தி

கல்வி மற்றும் அறிவு பிரார்த்தனை.

🏵️ திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சூரிய பூஜை

நவராத்திரி

ஐப்பசி அன்னாபிஷேகம்

திருக்கார்த்திகை

மஹா சிவராத்திரி

🏵️ வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பார்வதிதேவி, அகத்தியர், காவிரி, மார்க்கண்டேயர், வேதங்கள், தேவர்கள், திக்குப்பாலகர்கள், சம்பந்தர், அப்பர், சுந்தரர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் முதலியோர்

🏵️அமைவிடம்,நேரம், தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாயவரம் ஆடுதுறை கும்பகோணம் பாதையில் கோமலுக்கு பிரியும் பாதையில் இடப்புறம் சென்றால் தேரழுந்தூர் அடையலாம்.

கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து தேரழுந்தூருக்கு நேரடி பேருந்து வசதிகளும் உள்ளன.

மாயவரம் 13KM

குத்தாலம் 6KM

திருவாவடுதுறை 8KM

7AM – 12NOON, 4.30PM – 8.30PM

98421 53947 94864 57103

ராஜ மோகனசுந்தரம் சிவாச்சாரியார்

🏵️ கோவில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தொழுமாறு வல்லார், துயர்தீர நினைந்து,

எழுமாறு வல்லார், இசைபாட விம்மி,

அழுமாறு வல்லார் அழுந்தை மறையோர்,

வழிபாடு செய் மாமட மன்னினையே.

ஞானசம்பந்தர்

காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே

கானப் பேரூராய்

கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே

கொழுநற் கொல்லேறே

பாட்டூர் பலரும் பரவப் படுவாய்

பனங்காட் டூரானே

மாட்டூர் அறவா மறவா துன்னைப்

பாடப் பணியாயே.  1 சுந்தரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *