திருத்துருத்தி குத்தாலம் உக்தவேதீஸ்வரர்
மூலவர் : உத்தவேதீஸ்வரர் / கல்யாண மணவாளர் / சொன்னவர் அறிவார்
அம்பாள் :
அரும்பன்னவன முலை நாயகி / அமிர்த முகிழாம்பிகை /
பரிமள சுகந்த நாயகி
ஸ்தல விருக்ஷம் : உத்தால மரம், அகத்தி
தீர்த்தம் : பதும சுந்தர காவிரி தீ & வடகுளம்
பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 37
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவபெருமான் திருமணம் செய்ததற்கு அடையாளமாக தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்தில் இருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டுச் சென்றார். சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.
ஜகன்மாதா சிவனை நோக்கி தவம் இருந்த புண்ணிய க்ஷேத்ரம். கைலாயத்திற்கு ஒப்பான ஒரு சிவக்ஷேத்ரம். உத்தால மரம்
உத்தாலம் மருவி
குத்தாலம். காசியும் கைலாயமும் ஒன்னான க்ஷேத்ரம்.
விக்ரம சோழன் மனைவி குஷ்ட நோய் நீங்கியது, சுந்தரருக்கு சரும நோய் நீங்கியது சிவபக்தனின் காசநோய் போக்கியது போன்ற பல சிறப்புகளை கொண்டது.
இங்கு பார்வதிதேவி மட்டுமல்லாமல், காளி, சப்தரிஷிகளும் பேறு பெற்றுள்ளனர்.
ஞான சம்பந்தர் சொல்றார் – *கையில் கனல் கொண்ட பெருமான்
கையில் அக்னி
*கங்கையை தாங்கிய பெருமான்தலையில் இருக்கு
*வேள்வியை ஏற்ற பெருமான் யாக யஞ்யங்கள் அவரையே போய் சேருவதால்.
*ஞான சம்பந்தர் வாக்குக்கு ஒப்பான ஒரு திவ்யக்ஷேத்ரம்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பாம்பாட்டியாக வந்த சிவன்
உருத்திர சன்மன் ஏழை சிவ பக்தன், பல கஷ்டம் இடையில் முக்தி பெற காசிக்குச் சென்றான். இத்தலமும் காசிக்கு சமம் தான் என்பதை உணர்த்த சிவன், குண்டோதரனை அழைத்து, ” நீ பாம்பு வடிவம் எடுத்து உருத்திர சன்மன் காசிக்குச் செல்ல விடாமல் தடுத்து விடு “. அதன்படி பாம்பு இவனை தீண்ட, உருத்திர சன்மன் கருட மந்திரத்தை உச்சரிக்க, இருவரும் மயக்கம். இருவரையும் காப்பாற்ற சிவன் பாம்பாட்டி வடிவம் எடுத்தார். பாம்பாட்டியாக வந்திருப்பது சிவன் என்பதை அறிந்து அவன் வணங்க, உனது பக்திக்காக யாம் காசி விஸ்வநாதர் விசாலாட்சியாக தரிசனம் தந்தோம், ” இத்தலத்தை தரிசித்தாலே காசியில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். ” என்றார். விஸ்வநாதர் விசாலாக்ஷி சன்னதி உள்ளது.
மூலவர் உத்தவேதீஸ்வரர் என்ற சொன்னவர் அறிவார்
அம்பாள் பரிமளசுகந்தநாயகி
இந்த இடத்தில் சுவாமியை மாப்பிள்ளை கோலத்தில் வரவேற்கின்றனர். திருமணஞ்சேரியில் கல்யாணம்.
இந்த க்ஷேத்ரம்
கல்யாணத்துல பார்த்தா தெரியும்
காலில் பாதரக்ஷை, குடை, யோகவஸ்திரம் போட்டுப்பா
இதோட சுவாமி இங்கே வந்தாராம். என்ன சாட்சின்னா?
சுவாமி போட்டுண்டு வந்த பாதக்குரடு கழட்டி வைத்த இடம், சுவாமி கூடவே குடையாக கைலாயத்திலிருந்து வந்த விருக்ஷம் தான் உத்தால மரம். So குடை & பாதரக்ஷை
தரிசனம் பண்ணினா அளவில்லாத ஆற்றல்..
தன்னால் தீண்டப்படும் பொருள்கள் எல்லாம் அழிந்ததால், அக்னி இங்கு வந்து தான், தன் குறையை போக்கி அனைவருக்கும் பயனுள்ளவன் ஆனான்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பரதமாமுனிவர் பார்வதி தேவி தனக்கு மகளாக வேண்டும் என தவம். வேள்வி குண்டத்தில் பார்வதி தேவி மகளாக கிடைக்க – அவளுக்கு ஒரே விருப்பம் சிவன். தினமும் காவிரி கரையில் மணலால் சிவலிங்கம் பிடித்து வேண்ட – 8வது வழிபாடு- அவள் பிடித்த லிங்கத்தில் சிவனே எழுந்தருளி பார்வதியின் கையை பற்றி அழைத்தார்.
பார்வதி தேவி யின் கனவே நனவாகி விட்டாலும் அன்னை என்ன சொன்னார் தெரியுமா
என்னை வளர்த்த பெற்றோர்கள் மகிழ்ச்சி அடையும்படி அவர்கள் சம்மதத்துடன் அழைத்து செல்லுங்கள்.
அதன்படி நந்தி தேவரே தூதுவராக வந்து, முனிவரின் சம்மதம் பெற்று மணநாள் குறிக்க, கைலாயத்திலிருந்து மணமகனாக சிவன் ரிஷப வாஹனத்தில் வர, விநாயகர் முன்னே செல்ல, உத்தால மரம் சிவனுக்கு நிழல் தந்து கொண்டே வந்தது. மணமகள் இருப்பிடமான குத்தாலம் வந்து பெற்றோர் சம்மதத்துடன் பார்வதியை பரமன் திருமணம் செய்து கொண்டார்.
இறைவனை இங்கு திருமணம் நடத்தியதால் எப்பேர்ப்பட்ட திருமண தடையும் நீங்கிவிடும்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
5 நிலை ராஜகோபுரம், 2 பிரகாரங்களுடன் கோவில். கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவை காணப்படுகின்றன.
கொடிமரத்திற்கு வலதுபுறத்தில் ஸ்தல விருட்சமான உத்தால மரம் (ஆத்தி வகை) அதற்கேற்ற பீடத்துடன் அமைந்துள்ளது. அங்கே இறைவனின் பாத குரடு வணங்கலாம்.
மேற்கு பார்த்த மூலவர் சிறப்பு. அருகில் அம்பாள் தனி சன்னிதியில். கோஷ்ட மூர்த்தங்கள் & பிரகாரத்தில் மகாலட்சுமி, சபாநாயகர் (நடராஜர்), 63 நாயன்மார்கள், நவக்கிரகங்கள் மற்றும் சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் உள்ளனர்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமணத் தடைகள் நீங்குதல்
தோல் நோய் நீங்குதல்
வாக்கு பலிதம் மற்றும் வழக்குகள் வெல்ல பிரார்த்தனை
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பார்வதிதேவி, அக்னி வருணன் காளி காமன் அத்ரி ப்ருகு குத்ஸ வசிஷ்டர் கௌதமர் காஷ்யபர் ஆங்கீரசர் புலஸ்தியர் அகஸ்தியர் மார்க்கண்டேயர் சிவபக்தன் வித்துவான்மாலி சூரியன் உருத்திரசன்மன் பரதன் புண்டரீசன் ககோளமுனிவர் புலகன் குச்சன் விக்ரமன் சுந்தரர் சதானந்தர் வச்சன் சோமசேகரன் தருமசன்மர் சுமதி சௌதரிசன முனிவர் விக்ரம சோழன், கோமாலையாணி சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் ஆகியோர் இறைவனை தரிசித்துள்ளனர். 86000 முனிவர்கள் தபஸ் செய்த பூமி.
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 10KM தொலைவில் குத்தாலம் உள்ளது. குத்தாலம் பேருந்து நிலையத்திலிருந்து அல்லது வழித்தட பேருந்துகளில் இறங்கி, அங்கிருந்து சுமார் 1 கி.மீ தூரம் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் எளிதாகக் கிடைக்கும்.
வாகனத்தில் வருபவர்கள் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் சென்று மஞ்சலாறு ஆற்றுப் பாலத்தை ஒட்டியுள்ள பாதையில் திரும்பினால் கோயிலை எளிதில் அடையலாம்
8AM – 12NOON, 5.30PM – 8.30PM
91501 37622 பாலசுப்பிரமணியம் சிவாச்சாரியார்
94878 83800 ராஜசேகர சிவாச்சாரியார்
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொருத்திய குரம்பை தன்னைப்
பொருளெனக் கருத வேண்டா
இருத்தியெப் பொழுதும் நெஞ்சுள்
இறைவனை ஏத்து மின்கள்
ஒருத்தியைப் பாகம் வைத்தங்
கொருத்தியைச் சடையில் வைத்த
துருத்தியஞ் சுடரி னானைத்
தொண்டனேன் கண்ட வாறே. 1
திருநாவுக்கரசர்


Leave a Reply