திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் மாசிலாமணீஸ்வரர்
மூலவர் : கோமுக்தீஸ்வரர் / மாசிலாமணீஸ்வரர்
அம்பாள் : ஒப்பிலாமுலையம்மன் / அத்துல்யகுஜாம்பாள்
ஸ்தலவிருக்ஷம் : படர் அரசு (PEEPAL)
தீர்த்தம் : கோமுக்தி தீ, கைவல்ய தீ, பத்ம தீ
விமானம் : துவாதள விமானம்
பாடல் : அப்பர் சுந்தரர் சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 36
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
போகர் உட்பட “நவகோடி சித்தர்கள்” இங்கு தவம் செய்ததாகவும், சிவபெருமான் 8 யோக சக்திகளை (அஷ்டமா சித்திகளை) கற்பித்ததாகவும் நம்பப்படுகிறது.
மூன்று வெவ்வேறு சாம்ராஜ்யங்களைச் சேர்ந்த பேரரசர்கள் – சேர வம்சத்தைச் சேர்ந்த மன்னர் சேரமான் பெருமாள் (63 நாயன்மார்களில் ஒருவர்), சோழ வம்சத்தைச் சேர்ந்த மன்னர் கோச்செங்கட் சோழன் மற்றும் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர் விக்ரம பாண்டியன் ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. மேலும், இக்கோயிலின் திருப்பணிக்கும் பங்களித்துள்ளனர்.
தர்மதேவன் என்றும் அழைக்கப்படும் யமன், இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. சிவபெருமான் அவரை ஆசிர்வதித்து, இங்கு காளை ஏற்றிய இடத்தை அவருக்குக் கொடுத்தார்.
கோவிலில் நிறைய உப சன்னிதிகள் உள்ளன.
இக்கோயிலின் ஸ்ரீ விநாயகர் “துணைவந்த கணபதி” என்று போற்றப்படுகிறார். சாப விமோசனம் பெற அன்னையை கோவிலுக்கு அழைத்து வந்ததால் இப்பெயர்.
ஸ்ரீ அனைத்தெழுந்த நாயகன்” உற்சவர் சிலை
பார்வதி தேவியை தழுவியவாறு, but, இறைவன் கைகள் அம்மனின் உடலை தொடாதவாறு சிலை உள்ளது.
சிவபெருமான் தனது மஹாதாண்டவ நடனம் = சுந்தர நடனம் ஆடிய தலம்.
மிகவும் புனிதமும் பழமையும் வாய்ந்த அரச மரம்
தேவர்களில் பிரதிநிதித்வம். சிவபெருமான் இந்த மரத்தடியில் தோன்றி தேவர்களை ஆசீர்வதித்தார்.
பார்வதி பசு வடிவில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம்
“ஸ்ரீ கோரூபாம்பிகை” என்று அழைக்கப்படுகிறது.
நடைபாதையில் மூன்று சூரியன் சிலைகள் ஒன்றாக உள்ளன. இந்த தரிசனம் மிகவும் அரிது.
இங்கு நவகிரஹங்கள் கிடையாது.
திருவிடைமருதூரின் பரிவார ஸ்தலங்களில் இது “நந்தி ஸ்தலம்”. இங்கு நந்தி வழிபாடு புண்ணியம்.
திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ள தலம் . பல அறக்கட்டளைகள், பல சிவன் கோவில்கள் சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முசுகுந்த சக்கரவர்த்தி :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்திரன் கொடுத்த விடங்க லிங்கத்தை வணங்கிக் கொண்டிருந்தார். அவரது கனவில் சிவபெருமான் தோன்றி இத்தலம் வந்து வழிபாடு செய், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூற, வழிபட்ட மன்னனுக்கு சிவபெருமான் திருவாரூர் தியாகராஜர் வடிவில் காட்சியளித்ததாக நம்பப்படுகிறது.
ஞானசம்பந்தர் உலவாகிழி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தந்தை சிவபாத ஹ்ருதயருடன் சிறிது காலம் இங்கே தங்கி இருந்தார். அப்பா சிவபாதர் சீர்காழியில் ஒரு யாகம் செய்ய விரும்பி அதற்கான ஆதாரங்களை தன் மகனிடம் பெற்றுத் தருமாறு வேண்டினார். சம்பந்தம் இறைவனிடம் வேண்டி பதிகம் பாட, எம்பெருமான் தனது பூதகணங்கள் மூலம் “பலிபீடம்” மீது ஆயிரம் பொற்காசுகள் “பொற்கிழி” கொண்ட பணப்பை வைத்தார். இது “உலவாகிழி”, என்றும் தங்கத்தால் நிறைந்திருக்கும் என பூதகணங்கள் சம்பந்தரிடம் தெரிவித்தது. சம்மந்தர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு யாகம் நடத்துவதற்காக தந்தையிடம் கொடுத்தார். இன்றும் கோவிலில் அந்த பலிபீடம் பார்க்கலாம். இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால் பக்தர்களுக்கு செல்வமும் செழிப்பும் கிடைக்கும்.
பலிபீடம் சுற்றிலும் பொற்கிழி கொண்டு வந்த பூதகணங்கள் உள்ளன..
” தமிழ்மணம் “
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பலிபீடத்திலிருந்து பணப்பையை எடுக்கும் பொழுது ஞானசம்பந்தருக்கு “தமிழ் மணம்” கிடைத்தது. மறைந்திருக்கும் பொக்கிஷங்களை காட்ட( உணர) கூடியது. சம்பந்தர் பலி பீடத்தை நகர்த்துமாறு கூற, அங்குதான் பனை ஓலையில் எழுதப்பட்ட, திருமூலரின் 3000 பாடல்களை கண்டனர். அதுவே “திருமந்திரம்”. ஆஹா எவ்வளவு பெரிய பொக்கிஷம்..
சுந்தரமூர்த்தி நாயனார்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காஞ்சிபுரத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்த சுந்தரர் உடல்நிலை பாதிக்க, இறைவனை வேண்ட, ஆசீர்வதித்து குணப்படுத்தினார். நோயிலிருந்து குணமடையவும் வேண்டலாம்.
திருமாளிகை தேவர் & நந்தி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இவர் சிவபக்தர், 63 நாயன்மார்களில் ஒருவர், போகரின் சீடர், அறிஞர், சோழர் குரு கூட.. அனைத்தும் துறந்து, ஆன்மீகம் பற்றி, சன்னியாசி ஆகி, இங்கு அரச மரத்தடியில் தவம் செய்து, சிவபெருமான் பார்வதி தேவி ஆசியுடன் பல சக்திகளை பெற்றார். பொறாமை கொண்ட சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மன்னனிடம் தெரிவிக்கின்றனர்.
மன்னன் நரசிங்கன் அதை நம்பி வீரர்களை தாக்க அனுப்புகிறான். தேவர் தனது தெய்வீக சக்தியை பயன்படுத்தி, வீரர்களை விரட்டி அடிக்க, கோவில் சுற்றுச்சுவரில் இருந்த அனைத்து நந்திகளையும் இயக்கியதாக நம்பப்படுகிறது. இதனாலேயே நாம் நந்தியின் சிற்பங்களை வளாக சுவரில் காண முடியாது. அந்த நந்திகளே சேர்ந்து பெரிய நந்தியாக (15 அடி) இறைவன் முன் உள்ளது.அதற்கு முன்னால் இருந்த சிறிய நந்தியும் உள்ளது.
அவர் ஒரு முறை இறந்த மனிதனை சுடுகாட்டிற்கு நடக்கச் செய்ததாக நம்பிக்கை.
ஒருமுறை சிதம்பரம் தேர் சிக்கியபின் ஓட செய்ததாகவும் நம்பிக்கை.
திருமாளிகை தேவரின் 4 பாடல்கள் (40 செய்யுள்களை கொண்ட பதிகம்) பன்னிரு திருமுறையில், 9வது திருமுறையின் (திருவிசைப்பா) பகுதி.
அவர் வாழ்ந்த இடம் தான் திருவாவடுதுறை மடம். உள்ளே அவருக்கு ஒரு சந்நிதி உள்ளது. (அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் சமாதி )
திருமூலர் திருமந்திரம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவனின் இருப்பிடமான கைலாச மலையிலிருந்து சுந்தரநாதர் என்ற சிவயோகி பூமிக்கு வந்தார். இவர் நந்திதேவரின் மாணவர்களில் ஒருவர். நாட்டில் உள்ள பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று கொண்டிருந்த அவர், அகஸ்திய முனிவரை சந்திக்க விரும்பினார்.
இவ்விடம் அருகே மூலன் என்ற ஆடு மேய்ப்பன் இறந்து கிடந்ததைக் கண்டு அவரைச் சுற்றியிருந்த பசுக்கள் சோகத்தில் மூழ்கின. பசுக்கள் மீது அனுதாபம் கொண்டு, அவர் தனது யோக சக்தியைப் பயன்படுத்தி மேய்ப்பனின் உடலில் நுழைந்து (“பரகாய பிரவேசம்”) பசுக்களை அவற்றின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் இந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தடியில் தவம் செய்யத் தொடங்கினார்.
மூலனின் உறவினர்கள், குறிப்பாக அவரது மனைவி, அவரை வீட்டிற்குத் திரும்பச் சொன்னார்கள். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். அவர் தெய்வீக ஞானம் பெற்றதை உணர்ந்த அவரது உறவினர்கள் அவரைத் தனியாக விட்டுவிடுமாறு அவரது மனைவிக்கு அறிவுறுத்தினர்.
அந்த மகான் பின்னாளில் திருமூலர் என்று அழைக்கப்பட்டார். திருமூலர் தவம் செய்து கொண்டிருந்த போது, இந்த மரத்தடியில் தனது திருமந்திரத்தை இயற்றினார். அவர் வருடத்திற்கு ஒரு முறை தவத்திலிருந்து எழுந்து தத்துவ சிந்தனைகள் நிறைந்த ஒரு பாடலைப் பாடிவிட்டு மீண்டும் தவத்திற்குச் செல்வார். இதைப் போலவே, 3,000 ஆண்டுகளில் 3,000 பாடல்களைப் பாடியதாக நம்பப்படுகிறது. இது “திருமூலர் திருமந்திரம் ” என்று
தொகுக்கப்பட்டது. இது
பன்னிரு திருமுறையின் பகுதி.
அவரது சன்னதி (ஜீவ சமாதி) தாழ்வாரத்தில் (பிரகாரம்) காணலாம், அங்கு அவர் முக்தி அடைந்து சிவனின் இருப்பிடத்தை அடைந்தார் என்று நம்பப்படுகிறது. அவர் 63 நாயன்மார்களில் ஒருவராகவும், 18 சித்தர்களில் ஒருவராகவும் ஆனார். சுந்தரமூர்த்தி நாயனார் தனது “திருத்தொண்டர் தொகை”யில் “நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” என்று புனித திருமூலரைப் போற்றியுள்ளார்.
ஸ்தல புராணம் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கைலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் பகடை விளையாட, ஒவ்வொரு விளையாட்டிலும் பார்வதி தேவியே ஜெயிக்கிறாள். அதனால் ஆணவம் மிகுந்த தேவி வீண் பெருமை பேச, பூமியில் பசுவாய் பிறக்கும்படி சாபம் பெறுகிறார். மனம் திரும்பி மன்னிப்பு வேண்ட திருவாவடுதுறையில் தவம் செய்த பின் சாபம் தீரும் என விமோசனம் அளிக்கிறார்.
இங்கு பசு வடிவில் லிங்கத்திற்கு பால் ஊற்றி சிவ வழிபாடு செய்ய, மகிழ்ச்சி அடைந்த சிவபெருமானும் சாப விமோசனம் அளிக்கிறார். So கோ+முக்தி+ஈஸ்வரர்.
ஊர் = திரு +ஆ+ ஆடு+துறை
ஆ=பசு, ஆடு=அகற்று,
துறை=ஆற்றங்கரை (காவிரி)
தேரெழுந்தூரில்
சிவபெருமானால் சபிக்கப்பட்ட பார்வதி பசுவாக மாறினார். மகாவிஷ்ணு இங்கு ஆடு மேய்க்கும் வேடத்தில் நடித்தார்.
( ஆ மருவி அப்பன் )
திருக்கோழம்பியம்
பசு வடிவில் பார்வதி சிவபெருமானை வழிபட்டாள். பசுவின் கால் சிவபெருமான் மீது பட்டதால் அதன் குளம்பு இறைவனின் மார்பில் உள்ளது.
திருவாவடுதுறையில்
மீண்டும் வழிபட்டு தினமும் பால் சுரக்க தேவி சாப விமோசனம் பெற்று சுயரூபம் திரும்பினாள்.
திருத்துருத்தியில் (குத்தாலம்)
பரத முனிவர் யாகத்தில் ( காமேஷ்டி யாகம்) பார்வதி தேவி குழந்தை வடிவில் நெருப்பிலிருந்து வெளியே வந்தார்.
எதிர்கோள்பாடியில்
சிவபெருமானை அவரது மாமனார் பரத முனிவர் எதிர்கொண்டு மணமகனாக அழைத்தார்.
திருவேள்விக்குடியில்
யாகம் (வேள்வி) உள்ளிட்ட திருமண நிகழ்ச்சிகள், கங்கண தாரணமும் மங்கள நாமமும் செய்து..
திருமணஞ்சேரியில்
பூவுலகில் சிவபெருமான் பார்வதி தேவி திருமணம் நடைபெற்ற இடம்.
சிவபெருமான் பார்வதி அனைவருக்கும் திருமண கோலம் காட்டும் இடம்..
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
10 ஏக்கர் பரப்பளவும், சிறப்பான கட்டிடக்கலை அமைப்பும் கொண்டது. கிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரத்துடன்.
வடக்கு வாயிலில் புதிதாக மூன்று நிலை ராஜகோபுரம். 3 பிரகாரங்களுடன். மூலவர் சதுர வடிவ கருவறை. எதிரே பலிபீடம் கொடிமரம், பெரிய நந்தி (சுதை).
மூலவர் மாசிலாமணீஸ்வரர் (கோமுக்தீஸ்வரர்) கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவி ஒப்பில்லா முலைநாயகி (அதுல்யகுஜாம்பிகை) தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார்
இத்தலத்தில் புகழ்பெற்ற திருமூலர் ஜீவ சமாதி, திருமாளிகைத் தேவர், மற்றும் நம்சிவாயமூர்த்தி சன்னதிகள் அமைந்துள்ளன. இங்கு சகல தோஷ நிவர்த்தி கிடைப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கணவனின் பாதுகாப்பு, ஆயுள் பிரார்த்தனை,
பிரிந்த தம்பதிகள் இணைய, குழந்தை பாக்யம் பெற, திருமணத்தடை நீங்க
பணத் தட்டுப்பாடு நீங்குதல்
செவ்வாய் தோஷ நிவர்த்தி
பூசம் நட்சத்திரப் பலன்கள்
மன அமைதி மற்றும் ஞானம்
வேண்டிக்கொள்கிறார்கள்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
புரட்டாசி பிரம்மோற்சவம் 7 Days
தை மாத ரத சப்தமி
மஹா சிவராத்திரி
ஐப்பசி அன்னாபிஷேகம் ஆருத்ரா தரிசனம்
பங்குனி பிரம்மோற்சவம்
வழிப்பட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பார்வதி தேவி, திருமூலர், திருமாளிகை தேவர், நவகோடி சித்தர்கள், போகர், அகத்தியர், செவ்வாய், அக்னி, முசுகுந்த சக்கரவர்த்தி, தர்ம தேவதை, விநாயகர், முருகப்பெருமான், முதலாம் பராந்தக சோழன், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேரமான் பெருமாள், மிதிலேசன், வரகுணபாண்டியன், சேந்தனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி , சேக்கிழார் முதலியோர்.
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணம் 18KM
மாயவரம் 17KM
திருவிடைமருதூர் 10KM
திருக்கோளம்பியம் 5KM
மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து இத்தலத்திற்குச் செல்ல ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் உள்ள திருவாலங்காடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 1 கி.மீ தொலைவு நடந்து சென்றால் கோயிலை அடையலாம்.
7AM – 12NOON, 4PM – 8.30PM
97865 95127 91594 63598
உமாபதி சிவாச்சாரியார்
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே.
ஞானசம்பந்தர்
வான நாடனே வழித்துணை மருந்தே
மாசி லாமணி யேமறைப் பொருளே
ஏன மாஎயி றாமையும் எலும்பும்
ஈடு தாங்கிய மார்புடை யானே
தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே
தேவ னேதிரு
ஆனை யேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே
சுந்தரர்


Leave a Reply