திருப்பாலைத்துறை பாலைவனேஸ்வரர் க்ஷீரபுரீஸ்வரர்
மூலவர் : பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர்
அம்பாள் : தவளவெண்ணெய்கையாள் (மக்கள் தவளாம்பிகை, தவளாம்பாள் )
ஸ்தல விருக்ஷம் : பனைமரம் மற்றும் பாலை (பாலை இப்போது இல்லை)
தீர்த்தம் : வசிஷ்ட தீ, இந்திர தீ, எம தீ (புத்தகத்தில் காவிரியாறு என்றும் உள்ளது )
பாடல் : அப்பர் சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 19
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ராமர் இத்தலத்தில் 108 சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் பாபநாசம். அருகிலேயே உள்ளது.
கோவில் வலப்பக்கம் ஒரு பெரிய நெற்களஞ்சியம்.
செங்கல்லால் கட்டப்பட்டது காட்சி தருகிறது. இது கி.பி. 1600-களில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரான ரகுநாத நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது.
வட்ட வடியில் கூம்பு
முனையுடன் கட்டப்பட்டுள்ள இக்களஞ்சியம் 3000 கலம் கொள்ளளவுடையைது.
(1 கலம் = 12 மரக்கால் = 48 படி =
36 கிலோ. 3000 கலம் = 108,000 கிலோ. தோராயமாக).
இவ்வளவு அதிகமான நெல் வருவாயைக் கொண்டதாக இக்கோயில் விளங்தியதென்பது நமக்கு தெரிகின்றது. இன்று பயன்படுத்த படாமல் உள்ளது.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பாண்டவர்களின் வனவாச காலத்தில் தௌமிய முனிவரின் ஆலோசனை படி அர்ஜுனன் இத்தலத்திற்கு வந்து, வழிபட்டு வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்று சொல்லப் படுகின்றது.
குடமுருட்டி ஆற்றின் கரையில் பனைமரத்தை தலைமரமாக கொண்டுள்ளதால் இத்தலம் பாலை துறை.
ஜோதிட ரீதியாக இத்தலம் ரிஷப ராசிக்காரர்களுக்கான மிக முக்கிய வழிபாட்டுத் தலமாகக் கருதப்படுகிறது. ரிஷப ராசியினர் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் வளம் பெறவும் இங்கு வந்து பாலைவனநாதரை வழிபட்டுச் செல்கின்றனர்.
திருநல்லூரைத் தலைமை இடமாகக் கொண்டு விளங்கும் சப்தஸ்தான (ஏழு ஊர் வலம்) தலங்களில் திருப்பாலைத்துறைத் திருத்தலமும் ஒன்றாக திகழ்கிறது.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்தக் கோயிலின் புராணக்கதை, தாருகவனம் என்ற இடத்தைச் சேர்ந்த சில கர்வம் பிடித்த முனிவர்களைப் பற்றியது. தங்களின் அதீத கர்வத்தால், அவர்கள் தங்களைத் தெய்வங்களை விட உயர்ந்தவர்களாக எண்ணிக் கொண்டனர். அவர்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக, சிவபெருமான் மகாவிஷ்ணுவை ‘மோகினி’ (அழகான தேவதை) வடிவம் எடுக்குமாறு பணித்தார். இதன் மூலம், தாங்கள் நிகரற்ற தவம் செய்வதாகக் கூறிக்கொண்டிருந்த முனிவர்களின் கவனத்தைத் திசை திருப்ப முடியும் என அவர் நம்பினார். மோகினியால் ஈர்க்கப்பட்டதாலேயே முனிவர்கள் தங்கள் தவத்தில் தோல்வியடைந்ததாக நம்பப்படுகிறது. அதே சமயம், சிவபெருமான் பிச்சாண்டவர் வடிவம் எடுத்து, பிச்சை கேட்பதற்காக முனிவர்களின் வீட்டிற்குச் சென்றார். முனிவர்களின் மனைவிகள் பிச்சாண்டவரால் மிகவும் கவரப்பட்டு, அவரைப் பின்தொடரத் தொடங்கியதாக நம்பப்படுகிறது. இந்தச் சம்பவம், தங்கள் மனைவிகள் மிகவும் பக்தியுள்ளவர்கள் மற்றும் புனிதமானவர்கள் என்ற முனிவர்களின் கூற்றை மேலும் தகர்த்தது.
இதுவெல்லாம் சிவபெருமானின் நாடகம் என்பதை முனிவர்கள் உணர்ந்தபோது, அவர்கள் ஒரு யாகம் செய்ய முடிவுசெய்து, சிவபெருமானைக் கொல்வதற்காகத் தீய சக்திகளையும் மந்திரங்களையும் பயன்படுத்தினர். அவரைக் கொல்வதற்காக, புலி உட்படப் பல்வேறு ஆயுதங்களை அவர்கள் உருவாக்கினர். சிவபெருமான் அவர்களின் ஆயுதங்கள் அனைத்தையும் தடுத்து, அந்த நரமாமிசப் புலியை வென்று, அதன் தோலைத் தனது ஆடையாக அணிந்துகொண்டார். இந்த நிகழ்வு இந்த இடத்தில்தான் நடந்ததாக நம்பப்படுகிறது.
இக்கோயிலுடன் தொடர்புடைய மற்றொரு புராணக்கதை என்னவென்றால், வசிஷ்ட முனிவர் இங்குள்ள ஒரு அரச மரத்தின் கீழ் தவம் மேற்கொண்டார். அவர் இங்கு ஒரு குளத்தையும் உருவாக்கினார், அது இப்போது வசிஷ்ட தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அரச மரத்தின் முக்கியத்துவத்தின் காரணமாக இந்த இடம் அரசவனம் என்றும் அழைக்கப்படுகிறது (தமிழில் “அரச மரம்”).
இந்தக் கோவிலுடன் தொடர்புடைய மற்றொரு புராணக்கதை, மலையத்துவஜன் என்ற பாண்டிய மன்னனைப் பற்றியது. அவன் ஒருமுறை காலவ முனிவரை அவமதித்ததாகவும், அதனால் அந்த முனிவர் அவனைச் சபித்து கரடியாக மாற்றியதாகவும் நம்பப்படுகிறது. அகத்திய முனிவரின் அறிவுரைப்படி, மன்னன் இந்தக் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டான். இறைவன் அவனை ஆசீர்வதித்து, மீண்டும் அவனது பழைய உருவத்திற்கு மீட்டளித்ததாக நம்பப்படுகிறது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி அம்பாள் இருவரும் கல்யாண கோலத்தில் விளங்குகின்றனர். கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர் ஊர்த்துவதாண்டவர் தக்ஷிணாமூர்த்தி பிரம்மா துர்கை ஆகியோர் + சண்டிகேஸ்வரர் சன்னதி. பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், வசிஷ்டர், மஹாலக்ஷ்மி, பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் வழிபட்ட சிவலிங்கள் உள்ளன. இங்குள்ள தட்சிணாமூர்த்தி கையில் வீணையேந்திய வீணா தட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சியளிப்பது கலை நயம் மிக்க சிறப்பாகும்.
கோயில் கீழ் பகுதி கருங்கல்லிலும் மேற்பகுதி செங்கல் கட்டமைப்பிலும் காணப்படுகிறது.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமணத் தடை நீங்கப் பிரார்த்தனை
குழந்தை வரம் (பிள்ளை வரம்) வேண்டுதல்
ரிஷப ராசிக்காரர்களுக்கான சிறப்புத் தலம்
பஞ்சாட்சர மந்திர பலன் மற்றும் பாவ விமோசனம்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்திரை பௌர்ணமி மற்றும் சித்திரை திருவிழா
ஆனி திருமஞ்சனம்
மஹா சிவராத்திரி & நாட்டியாஞ்சலி
ஐப்பசி அன்னாபிஷேகம்
திருக்கார்த்திகை நவராத்திரி பிரதோஷம் சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமால், பிரம்மன், அஷ்டதிக் பாலகர்கள், வசிஷ்டர், ராமர் சீதை, லட்சுமணன், தௌமிய முனிவர், அர்ஜுனன், பாண்டவர்கள், தேவர்கள், மலையத்வஜன், அப்பர், சேக்கிழார் முதலியோர்.
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் பாபநாசம் வழியாகச் செல்லும் அனைத்து நகர மற்றும் புறநகர்ப் பேருந்துகளும் திருப்பாலைத்துறை கோவில் வாசலில் நின்று செல்லும்.
7AM – 12.30PM, 4.30PM – 8.30PM
70103 24728 விக்னேஷ் குருக்கள்
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நீல மாமணி
கண்டத்தர் நீள்சடைக்
கோல மாமதி
கங்கையுங் கூட்டினார்
சூல மான்மழு
வேந்திச் சுடர்முடிப்
பால்நெய் யாடுவர்
பாலைத் துறையரே. 1
திருநாவுக்கரசர்


Leave a Reply