திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கர்ப்பரக்ஷாம்பிகை

🌺மூலவர் : முல்லைவனநாதர்

அம்பாள் : கருகாத்தநாயகி, கர்ப்பரக்ஷாம்பிகை.

ஸ்தல விருக்ஷம் : முல்லை. தீர்த்தம் : க்ஷீரகுண்டம், பிரம்ம தீ, பாடல் : அப்பர் சம்பந்தர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 18.

🌺 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இத்தலத்தைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மூன்று அடி நடந்தால் முதலாவது அடியால் பாவ வினைகள் முழுதும் அகலும் என்றும், இரண்டாவது அடியால், அமரர் உலகையும் பெறலாம் என்றும், மூன்றாவது அடியால் சிவசாயுஜ்ஜியம் பெறலாம் என்றும் தலபுராணம் குறிப்பிடுகிறது.

🌹இத்தலத்தை நினைத்தாலும், இதன் பெயரைச்சொன்னாலும் , அதனைக் கண்டாலும், அங்கு வசித்தாலும், இதன் வழியாகப் பிற ஊர்களுக்குச் சென்றாலும் பாவங்கள் நீங்கப்பெற்று, போகங்கள் யாவும் பெற்று, நிறைவாக இறைவன் கழலடியை அடைவர் என்கிறது தலபுராணம்.

🌹மூர்த்தி ஸ்தலம் தீர்த்தம் மூன்றும் பெருமை..

🌹மகப்பேறு மருத்துவர்களே கோவிலுக்கு சென்று வேண்டுகிறார்கள்.

🌹 இந்த கிராமத்தில் கர்ப்ப காலத்தில் பெண்கள் யாரும் இறப்பதில்லை என நம்பப்படுகிறது.

🌹திருமணம் கூடிவர படிக்கு நெய் மொழுகுதல் 👉 திருமணம் கூடி வராத கன்னியர்களும், பல ஆண்டுகளாக ‘குழந்தை’ இல்லாத பெண்களும், கோயிலுக்கு வந்து அம்பாள் சந்நிதியில் சிறிது நெய்யால் மொழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்கிறார்கள். அவ்வாறு செய்பவர்களுக்கு திருமண பாக்யம், குழந்தை பாக்யம் கிடைக்கின்றன. தங்கள் பிரார்த்தனை பலித்தவுடன் பக்தர்கள் தொட்டில் கட்டி துலாபாரம் செய்கின்றனர்.

🌹குழந்தை பாக்யம் பெற வைக்கும் நெய் 👉 திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதவர்களுக்கு அம்பாளின் திருபாதத்தில் வைத்து மந்திரித்து கொடுக்கப்படும் நெய்யை தம்பதியினர் 48 Days தொடர்ந்து இரவில் சிறிதளவு சாப்பிட்டு வர வேண்டும். கணவனால் முடியாவிட்டாலும் மனைவி தினமும் இரவு சாப்பிட வேண்டும். நெய் சாப்பிடும் காலங்களில், உணவில் + இதர பழக்க வழக்கங்களில் பத்தியங்களோ கட்டுபாடுகளோ இல்லை. இவ்வாறு செய்து வந்தால் விரைவில் கருத்தரிக்கும்.

🌹சுக பிரசவம் அடைய வைக்கும் விளக்கெண்ணெய் 👉 கர்ப்பம் அடைந்த பென்கள் சுக பிரசவம் அடைவதற்தாக அம்பாள் திருப்பாதத்தில் விளக்கெண்ணெய் வைத்து மந்திரித்து கொடுக்கப்படுகிறது. இது விசேஷமானதாகும். இதை பிரசவவலி ஏற்படும் பொழுது வயிற்றில் தடவினால் எவ்விதமான கோளாறுகளோ, பேறு கால ஆபத்துகளோ, பின் விளைவுகளோ இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும்.

கர்ப்பமடைந்தவர்களுக்கு எப்போதாவது அசாதாரண வலி தோன்றினால், அப்போது மந்திரித்த விளக்கெண்ணெய் வயிற்றில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

🌹இக்கோவிலின் அமைப்பே சோமாஸ்கந்த அமைப்பாகும். சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் முருகன் சந்நிதி அமைந்திருப்பதே இக்கோவிலில் குழந்தை பாக்யம் கிடைப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும். இக்கோயில் சோழர்களால் கட்டபட்டது.

🌺 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹லிங்கம் புற்று மண்ணால் ஆனது. அபிஷேகம் கிடையாது, புனுகு சட்டம் மட்டுமே சாத்தபடுகிறது.

🌹முல்லை காடாக இருந்த இந்த இடத்தல், சிவட திருமேனியை முல்லை கொடிகள் தழுவிப் படர்ந்திருந்தன. குழைவான இத்திருமேனியில் இன்றும் முல்லை கொடி படர்ந்து இருந்த வடுவை காணலாம்.”

🌹இத்திருத்தலம் மிகப்பழைய காலந்தொட்டு கருவுற்ற மகளிருக்கு மிக சிறந்ததோர் ஆரோக்ய ஸ்தலமாக இருந்து வந்துள்ளது.

🌹 இத்திருக்கோயிலில் ஸ்வாமியும் அம்பாளும் மகளிரின் கருச்சிதையா வண்ணம் காத்து, அவர்கள் எளிதில் மகப்பேறு எய்த, திருவருள் பாலித்த வண்ணம் உள்ளனர்.

🌹ஸ்வாமி விநாயகர் நந்தி முன்றுமே இத்தலத்தில் சுயம்பு மூர்த்திகள். அதில் ஸ்வாமி மட்டுமே மண்ணால் ஆனது. மற்ற 2ம் சிலா மூர்த்திகள்.

🌹நவகிரஹங்களில் எல்லா கிரஹங்களும் சூரியனை நோக்கியே இருக்கும். சூரியனுக்கு எதிரில் குரு. எல்லாமே அனுக்கிரஹ மூர்த்திகள். வக்கிர மூர்த்திகள் கிடையாது.

🌹அம்பாள் இடது கையை இடுப்பில் வைத்தபடி, கர்ப்பத்தை தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம்.

🌺 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹ஒரு காலத்தில் இந்த இடம் முல்லைக் காடாக இருந்தது. நிருத்துவர்,

வேதிகை என்ற தம்பதியர் தங்களுக்குக் குழந்தை இல்லையென வருந்தினர். முல்லைவனத்து நாதனையும் இறைவியையும் வணங்கி, குழந்தை பேறு தரும்படி வழிபட்டனர். இதையடுத்து வேதிகை கருவுற்றாள். வேதிகை கருவுற்றிருந்த போது கனவர் வெளியே சென்றிருந்த சமயம் கர்ப்ப அவஸ்தை பட்டாள்.

🌹அச்சமயம் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிக்ஷை கேட்டார். மயக்கமடைந்து இருந்ததால் வேதிகையால் முனிவருக்கு பிக்ஷையிட முடியவில்லை. அது அறியாத முனிவர் சாபமிட, வேதிகையின் கரு கலைந்தது. வேதிகை அம்பாளிடம் பிரார்த்தனை செய்து முறையிட, அம்பாள் தோன்றி, கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாஹனம் செய்து, குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்து காப்பாற்றி குழந்தையாக கொடுத்தாள்.

🌹இறைவியின் அருள் மஹிமையை கண்டுணர்ந்த வேதிகை இத்தலத்தில் கர்ப்ப ரக்ஷாம்பிகையாகவே எழுந்தருளி உலகில் கருத்தரித்தவர்களையும் கருவையும் காப்பாற்ற வேண்டுமென்று ப்ரார்த்திக்க, அம்பாள் அவ்வாறே அருள் பாலிக்கிறாள்.

🌹குழந்தைக்கு ‘நைத்துருவன்’ என பெயரிட்டனர்.

🌹வேதிகை தன் குழந்தைக்கு உணவளிக்க பால் இல்லாததால் மீண்டும் தேவியை வேண்ட, குழந்தைக்கு உணவளிக்க தெய்வீக பசுவான

காமதேனுவை அனுப்பினார். காமதேனு கோவிலின் முன் உள்ள பூமியை தனது குளம்பினால் கீறி, பால் தொட்டியை ‘க்ஷீர குண்டம்” உருவாக்கினாள். இதை இன்றும் காணலாம்.

🌺 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கர்ப்பரக்ஷாம்பிகை திருக்கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பு முறைப்படி, கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் திராவிடக் கலைக் கட்டுமானத்தில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

🌹கோயிலின் வெளியே பிரம்ம தீர்த்தமும், உட்பிரகாரத்தில் பால்குளம் (க்ஷீரகுண்டம்) மற்றும் சத்தியகூபம் எனும் கிணறும் உள்ளன.திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதிகள் அமைந்துள்ளன. அழகிய தூண்களுடன் கூடிய மண்டபங்களும் உள்ளன.

🌹வடக்கு பிராகாரத்தில் ஸ்தல விருக்ஷமான முல்லை உள்ளது. சபா மண்டபம் குதிரை பூட்டிய ரத வடிவில் உள்ளது. இங்கு நித்துருவர்,கார்க்கியர், சங்குகர்ணன் ஆகியோர் பூஜித்த சிவலிங்கங்கள் உள்ளன.

🌹அகந்தையால் படைப்புத் தொழிலை இழந்த பிரமன் இங்கு வந்து,தன் பெயரால் தீர்த்தம் அமைத்து,இறைவனை வழிபட்டு மீண்டும் படைப்புத் தொழிலைக் கைவரப்பெற்றான். 🌹கேரள தேசத்தைச் சேர்ந்த சுவர்நாகரன் என்பவன் சாபத்தால் பைசாச வடிவம் கொண்டு பல பிறவிகள் துன்புற்ற பின்னர், கார்க்கிய முனிவரின் அறிவுரைப்படி இத்தலத்திற்கு வந்து,பிரம தீர்த்தத்தில் நீராடி,இறைவனை வழிபட்டதால் பழைய வடிவை மீண்டும் பெற்றான்.

🌹கோஹத்தி தோஷம் நீங்க வேண்டி கௌதம முனிவர் இத்தல இறைவனை வழிபட்டு, நற்கதி பெற்றார்.

🌹சாபத்தினால் புலி வடிவம் கொண்ட குஜத்வஜன் என்ற மன்னன் கார்த்திகை ஞாயிறுகளில் இறைவனை வழிபட்டுப் பழைய வடிவம் பெற்று, வைகாசியில் பிரம்மோற்சவ விழா நடத்தினான்.

🌹குரு சாபத்தால் பேய் உருவம் பெற்ற சங்கு கர்ணன் என்பவன் முல்லைவன நாதரை மார்கழித் திருவாதிரையன்று வழிபட்டுப் பழைய உருவம் பெற்றான். 

🌹தக்ஷ சாபம் நீங்க வேண்டிச் சந்திரன் வழிபட்டான். இன்றும் பங்குனி மாதப் பௌர்ணமியில் சந்திரனின் கிரணங்கள் இறைவன் மீது படுவதைக் காணலாம்.

🌺 பிரார்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹Not only திருமணம், குழந்தைபேறு, சுக பிரசவம் புகழ்பெற்றது, Also

🌹மேலும் மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள், கர்பப்பபை நோயுள்ள பெண்கள், திருமணம் தடைபெறும் பெண்கள் ஆகியோறும் வழிபட்டு தங்கள் பிரச்சனைகள் நீங்க பெறுகிறார்கள்.

🌹தீராத ரோய் உடையவர்கள், குறிப்பாக சரும நோய் உள்ளவர்கள் ஸ்வாமிக்கு புனுகு சட்டம் சாத்தி தம் நோய் நீங்கப் பெற்று வருகிறார்கள். இது இன்றளவும் நடைபெற்று வரும் கண்கூடான உண்மையாகும்.

🌹இத்தலத்து முல்லைவனநாதரை வணங்குவோருக்கு துயரம் நீங்கி, மன அமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயற்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை. ஸ்வாமி நிச்சயம் நிறைவேற்றி கொடுக்கிறார்.

🌺 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வைகாசி விசாகப் பெருவிழா

ஆடிப்பூரம்

நவராத்திரி திருவிழா

கார்த்திகை மகா தீபம்

மார்கழி உற்சவம்

மஹா சிவராத்திரி

🌺 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 பிரம்மா சந்திரன் காமதேனு

குஜத்வசன், சங்குகர்ணன், புண்ணியதுவாகன், சுவர்நாகரன், வேதிகை மற்றும் நித்துருவர், நித்திருவன், கௌதமர், கார்க்கியர் ஆகிய முனிவர்களும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் இறைவனை வழிபட்டுள்ளனர்.

🌺 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பாபநாசம் வட்டத்தில் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது. இத்தலம் தஞ்சாவூரிலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் எளிதில் சென்றடையும் தூரத்தில் உள்ளது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருக்கருகாவூர் செல்ல நேரடிப் பேருந்துகள் (பேருந்து எண்கள்: 16, 24, 34, 44) இயக்கப்படுகின்றன.

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து எண்கள் 11 அல்லது 29 மூலம் திருக்கருகாவூரை அடையலாம்.

பாபநாசத்திலிருந்து மினி பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகளும் உள்ளன.

7.30AM – 12.30PM 4.30PM – 8PM

99523 17391 பாலச்சந்திரன் சிவாச்சாரியார்.

98941 78140 முத்துக்குமார் சிவாச்சாரியார்

🌺 கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

முத்தி லங்குமுறு

வல்லுமை யஞ்சவே

மத்த யானைமறு

கவ்வுரி வாங்கியக்

கத்தை போர்த்தகட

வுள்கரு காவூரெம்

அத்தர் வண்ணம்மழ

லும்மழல் வண்ணமே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *