திருவெறும்பூர் எறும்பீஸ்வரர்
மூலவர் : எறும்பீஸ்வரர்/ பிப்பிலிகேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்பாள் : நறுங்குழல் நாயகி / சௌந்தர நாயகி
ஸ்தல விருக்ஷம் : வில்வம்
தீர்த்தம் : பரம்ம, பதும, மது, குமார தீ சூரிய புஷ்கரணி சந்திர புஷ்கரணி கல்யாண தீர்த்தம்
புராண பெயர் : திருவெறும்பியூர்
பாடல் : அப்பர்,
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 7
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆதிசேஷன் வாயு இடையே யார் பெரியவர் என போட்டி வந்த போது வாயுவால் பெயர்கப்பட்ட மேரு மலையின் ஒரு பகுதியே இங்கு திருவெறும்பூர் மலை.
கருவறையில் சிவலிங்கம் புற்று வடிவில் மேடும் பள்ளமுமாக உள்ளது.- அபிஷேகம் கிடையாது, எண்ணெய் காப்பு மட்டுமே.
லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க மத்தியில் ஒரு பிளவு- பார்வைக்கு லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்து இருப்பது போல் தெரியும். வலப்புறம் உள்ள பகுதி சிவன் அம்சம் இடப்புறம் அம்பாள் அம்சம். இந்த சிவ லிங்கத்திற்கு சிவசக்தி லிங்கம் என்ற பெயரும் உண்டு. சிவமும் சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.
தினமும் சுவாமிக்கு பூஜை நடக்கும் பொழுது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று நெய்வேத்திய பொருட்களை எடுத்துக் கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சுவாமியை வழிபடுவது மிகவும் விசேஷம்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மா இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டார். அந்தத் தீர்த்தம் இப்போது பிரம்ம தீர்த்தம் பாவனாச தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
அகத்தியர் லோபமுத்திரை யுடன் வழிபட்டு எறும்பியூர் ஈசன் திருவருளால் முருகப்பெருமானிடம் ஞானோபதேசம் கிடைக்கும் என்று வரம் பெற்ற தலம்
மன்மதனின் மனைவி ரதி, அழகு மீது தனக்கு ஆணவம் வந்து விடக்கூடாது என்பதற்காக இங்கு சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளாள்.
சிவன் கருவறைக்கு முன்புள்ள துவார பாலகர்களில் ஒருவர் கோப முகத்துடனும் மற்றொருவர் சாந்த முகத்துடனும் இருக்கின்றனர். இக்கோவிலுக்கு வருபவர்கள் மனதில் கோபம் ஆணவம் போன்ற குணங்களைக் கொண்டிருந்தாலும், சுவாமியை வணங்கிய பின்பு அவர்கள் சாந்த கோலத்தை அடைகின்றனர் என்பதை இவ்வடிவம் காட்டுகிறது.
49 கல்வெட்டுகள், ஆதித்ய சோழன் கட்டிய கோவில், 13, 14 நூற்றாண்டில் மாலிகாபூர் படையெடுப்பின் போது கூட கைப்பற்ற முடியாத ஒரே கோவில் எனும் பெருமை. அழகான மலைக்கோவில் 60 படிக்கட்டுகள்.
சுவாமியிடம் வேண்டிக் கொண்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் உண்டாகும் துயரங்கள் நீங்கும்.. ( படிகள் ஏறினாலே சோம்பல் நீங்கி விடுகிறது )
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆதிசேடனுக்கும் வாயு தேவனுக்கும் இடையே யார் வலிமை மிக்கவர் என்ற போட்டியில் ஆதிசேடன் கைலாய மலைக்கு சென்று அதனைச் சுற்றிக்கொள்ள வாயுதேவன் பலமான காற்றை வீசி அவ்விடத்தில் இருந்து அகற்ற முயன்றார். பலத்த காற்றின் துன்பம் தாளாமல் எல்லோரும் அவதிக்குள்ளாக, தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். கைலாய மலையை விட்டு விடுமாறு அவர் ஆதிசேடனிடம் பணித்தார். அதற்கு இணங்கிய ஆதிசேடன் தன் தலையைத் தூக்கினார். அந்த சமயத்தில் வாயு தேவன் மிக பலமாகக் காற்றை வீசித் தாக்க அம்மலையில் சில சிகரங்கள் தென்னகத்தே வந்து விழுந்தன அவற்றில் ஒன்று எறும்பியூர் மலை. இதனால் இம்மலைக்குத் தென் கயிலாயம், ரத்ன கூடம் என்ற பெயர்கள் வந்தது.
அசுரனை அழிக்கத் தேவர்கள் வழிகேட்டு பிரமனை அனுகினர். அவர் சொல்லியவண்ணம் இந்திரனும், தேவர்களும் தங்கள் உருவம் அசுரர்களுக்குத் தெரியக் கூடாதென்றெண்ணி, எறும்பு வடிவங்கொண்டு இத்தலத்திற்கு வந்து லிங்கத்திற்கு மலர் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். அவ்வாறு வழிபடும்போது சிவலிங்கத்தின் மீதிருந்த எண்ணெய்ப் பசையால் மேலேற முடியாது கஷ்டப்பட,
பானத்தின் மீது ஏறிய போது வழவழப்பாகவும் செங்குத்தாகவும் இருந்ததால் மேலே செல்ல முடியவில்லை.
So, சிவ பெருமான் மண்புற்று போல தன் உருவத்தை மாற்றிக் கொண்டதோடு சற்றே இடப்புறமாக சாய்ந்தும் கொண்டார்.தேவர்கள் எளிதாக ஏறிச்சென்று சிவனின் தலையில் மலர் வைத்து வழிபட்டனர். அவர்களுக்கு அருள் புரிந்த சிவன், தாருகா சுரணை அழித்து தேவர்களை காத்தார்.
எனவே எறும்பீஈஸ்வரர்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தற்போது மக்கள் வழக்கில் ‘திருவெறும்பூர் ‘ என்று வழங்குகிறது.இக்கோயில் மலைமீது உள்ளது. மலை 150 அடி உயரமானது. திருக்கோயிலை அடைய 125 படிகள். மலைக்கோயில் பரப்பளவு 3500 சதுர மீட்டர்.
கோயிலின் உட்பிரகாரத்தில் மடைப்பள்ளிக்கு அருகில் ஒரு சுரங்கம் உள்ளது. அடிவாரத்தில் நெற்களஞ்சியம் உள்ளது.
பிரதான மூலவர் சன்னதிக்கு வெளியே அம்பாள் நறுங்குழல் நாயகி (சௌந்தர நாயகி) தனிச் சன்னதியில்அருள்பாலிக்கிறார் மேலும் பாலச்சந்திர விநாயகர், தட்சிணாமூர்த்தி, சங்கரநாராயணர் மற்றும் இரண்டு மனைவியருடன் கூடிய சூரிய பகவான் சன்னதிகளும் இங்குள்ளன. ருத்ராக்ஷ பந்தலின் கீழ் நடராஜர் காலில் கொலுசு அணிந்த கோலத்தில் இருப்பதும் சிறப்பு.
பிரகாரத்தில் உக்கிரமாக சொர்ண கால பைரவர், இவர் சந்நிதிக்கு நேரே கஜலட்சுமி. ஒரே சமயத்தில் இருவரையும் வேண்டிக் கொண்டால் பயன்கள் நீங்கி குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.
நவக்கிரஹ சன்னதியில் சூரியனுடன் அவரது மனைவியர்களான உஷா பிரத்யுஷா இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி இருக்கின்றனர்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுறுசுறுப்பு மற்றும் உழைப்பு
துயரங்கள் நீங்குதல்
கர்வம் நீங்குதல்
ஐஸ்வர்யம் பெருக
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் + தேரோட்டம் சிறப்பு
மஹா சிவராத்திரி
ஐப்பசி அன்னாபிஷேகம்
திருக்கார்த்திகை
நவராத்திரி மற்றும் பிரதோஷம் சிறப்பு
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முருகன், திருமால், திருமகள், பிரமன், இரதி, இந்திராதி தேவர்கள், அக்னி, அகத்தியர், நைமிசா முனிவர், அப்பர், சேக்கிழார், நைமிசாரண்ய ரிஷிகள், இந்திரன், தேவர்கள்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எறும்பீஸ்வரர் கோயில், திருச்சி – தஞ்சாவூர் முக்கியச் சாலையில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. திருச்சி 11 KM.
BHEL, NIT, துவாக்குடி செல்லும் அனைத்து நகர பேருந்துகளிலும் கோவில் அருகிலேயே இறங்கலாம்.
8AM – 12NOON, 5PM – 8PM
98429 57568 மணி குருக்கள்
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விரும்பி யூறு
விடேல்மட நெஞ்சமே
கரும்பி னூறல்கண்
டாய்கலந் தார்க்கவன்
இரும்பி னூறல
றாததோர் வெண்டலை
எறும்பி யூர்மலை
யானெங்க ளீசனே. 1
திருநாவுக்கரசர்


Leave a Reply