திருச்சிராப்பள்ளி தாயுமானவர் மாத்ருபூதேஸ்வரர்
மூலவர் : தாயுமானவர் / மாத்ருபூதேஸ்வரர்
அம்பாள் : மட்டுவார் குழலி/ சுகந்த குந்தளாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : வில்வம்
தீர்த்தம் : பிரம்ம தீ
புராண பெயர் : சிரபுரம், மலைக்கோட்டை
பாடல் : அப்பர், சம்பந்தர்,
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 6
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கு சிவன் மிகப்பெரிய லிங்கம் & பங்குனி மாதம் 3 நாட்கள் சூரிய பூஜை. மேற்கு நோக்கிய சிவன் சிறப்பு.
சாரமாமுனிவரின், (சிவ பூஜைக்கான ) நந்தவன செவ்வந்தி மலர்கள் – எவ்வளவு சொல்லியும் கேளாமல் மன்னன் எடுக்க
முனிவர் சிவனிடம் முறையிட
சிவன் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி உக்கிரப் பார்வை பார்க்க
மண் மழை பொழிந்தது.. SO செவ்வந்தி நாதர்.
சாரமா முனிவருக்காக மன்னனை தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கி திரும்பி விட்டதால், சன்னதி வாசலும் கொடிமரமும் அங்கேயே (BACK) நிலைத்து விட்டது. பூஜையின் போது மேளதாளம் தேவாரம் பின்புறத்தில் தான். கொடி மரமும் வாசலும் சிவனுக்கு பின்புறம் தான்.
எல்லா உயிர்க்கும் தந்தையாக விளங்கும் இறைவன், தனக்குந்தன் மனைவி ரத்னாவதிக்கு மகப்பேறு காலத்தில் தாயாக இருந்து அருளிய தலம். ரத்னாவதி உதவிக்கு அவளது தாயை அழைத்திருந்தாள். வழியில் காவிரியில் வெள்ளம் வீட்டிற்கு வர முடியவில்லை. பிரசவ வலி உண்டானது. தன்னை காக்கும்படி திரிசிரா நாதரிடம் வேண்டினாள். அப்போது சிவன் அவளது தாயின் வடிவில் வந்து பிரசவம் பார்த்தார். காவிரியில் ஒரு வாரம் வரையில் வெள்ளம் ஓடவே, அதுவரையில் சிவன் தாயின் இடத்திலிருந்து அப்ப பெண்ணிற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தார். வெள்ளம் வடிந்த பிறகு ரத்னாவதியின் தாய் வீட்டிற்கு வந்தாள். அவளது வடிவில் மற்றொருவர் இருப்பதை கண்ட இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது சிவன் இருவருக்கும் காட்சி கொடுத்தருளினார். தாயாக இருந்து அருளியதால் இவர், “தாயுமானவர்” என்று பெயர் பெற்றார்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மலைக்கோட்டை என்று பிரபலமாக அழைக்கப்படும் இத்தலத்தின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் நடுவில் தாயுமானவர் சன்னதியும் உச்சியில் ஏறிச் சென்றால் உச்சிப்பிள்ளையார் கோவிலையும் தரிசிக்கலாம்.
திருச்சி என்றாலே உச்சிப்பிள்ளையார். அயோத்தியில் ராமபிரான் பூஜித்த ரங்கநாதரை பெற்ற விபீஷணன் இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில் சந்தியாவந்தனம் செய்ய எண்ணினான். ராமர் ரங்கநாதர் சிலையை வழியில் வைக்க கூடாது என நிபந்தனை விதித்திருந்ததால், விபீஷணன், அங்கு சிறுவன் வடிவில் வந்த விநாயகரிடம் சிலையை கொடுத்து விட்டு சென்றான். விநாயகரோ விபீஷணன் வரும் முன்பாகவே மூன்று முறை அழைத்து அச்சிலையை கீழே வைத்து விட்டார். நீராடி சந்தியாவந்தனம் செய்த பின்பு வந்த விபீஷணன் கோபம் கொண்டு, சிறுவனை விரட்டி சென்றான். இங்கு மலை உச்சிக்குச் சென்ற விநாயகர் சுயரூபம் காட்டினார். இவர் உச்சிப்பிள்ளையார் என பெயர் பெற்றார்.
அம்பாள்
மட்டுவார் குழலி அம்பாள் தனி சன்னதியில், இவளுக்கு “சுகந்த குந்தளாம்பிகை” என்ற பெயரும் உண்டு. வாசனையுடைய கூந்தலை உடையவள் என பொருள். கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வந்து இந்த அம்பிகைக்கு 21 கொழுக்கட்டை, 21 அப்பம் படைத்து, ஒரு துணியில் மஞ்சள் குங்குமம் வெற்றிலை கட்டி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இதனால் சுகப்பிரசவம் ஆகும் என்பதும் நம்பிக்கை. சுகப்பிரசவத்திற்கு சுலோகமும் உள்ளது.
ஞான தக்ஷிணாமூர்த்தி
விஜய ரகுநாத சொக்கர் மன்னரின் கணக்கர் கேடிலியப்ப பிள்ளை, பக்திமான். அவர் தன் குழந்தைக்கு தாயுமானவர் என சுவாமியின் பெயரையே சூட்டுகிறார். இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய தாயுமானவரை மன்னன் தன்னிடம் பணி அமர்த்திக் கொண்டான்.
இத்தலத்தில் பல ஆண்டுகாலம் சிவனுக்கு சேவை செய்த அவருக்கு, சிவன் குருவாக, தக்ஷிணாமூர்த்தி உபதேசம் செய்து ஆட்கொண்டார்.
இவர் இக்கோயிலில் தர்பை ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார். இவருக்கு கீழே சனகாதி முனிவர்கள் நால்வருடன், சிவயோக மாமுனிவர் பதஞ்சலி வியாக்ரபாதர் திருமூலர் என எட்டு சீடர்கள் இருக்கின்றனர். அருணகிரியார் தனது திருப்புகழில் இவரை குறித்து, ” தர்ப்ப ஆசன வேதியன் ” என குறிப்பிட்டு பாடி இருக்கிறார்.
வாழைத்தார் வழிபாடு
பொதுவாக கோவில்களில் சர்க்கரை பொங்கல் அல்லது ஏதாவது ஒரு சாதம் படைத்து வேண்டிக் கொள்வார்கள். ஆனால் இங்கு மட்டும் குழந்தை வரம் கிடைக்கவும் சுகப்பிரசவம் ஆகவும் தாயுமானவருக்கு வாழைத்தார் படைத்து பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். வாழைமரம் எப்போதும் அழிவில்லாமல் தழைத்துக் கொண்டே இருக்கும் தன்மையுடையது. இவ்வாறு வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தான். வாழையை மூலஸ்தானத்தில் வைத்து பூஜித்து பின்பு அதை பிரசாதமாக கொடுத்து விடுகிறார்கள். ( கீழே கடைகளில் வாழைத்தார் வாங்கினால் அவர்களே சந்நிதி வரை கொண்டு வந்து வைத்து விடுகிறார்கள் )
சிவன் சன்னதி பிரகாரத்தில் மஹாலக்ஷ்மி மர வடிவில் நின்ற கோலத்தில்
ஐஸ்வர்யம் பெருக பூஜை.
பிரகாரத்தின் அருகில் சாரமாமுனிவர் வணங்கியபடி இருக்க, விஷ்ணுதுர்க்கை எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள். மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் பூஜை.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வாயு ஆதிசேஷன் இருவரில் யார் பெரியவர் போட்டியில் வந்த மலை. இம்மலையில் மூன்று தலைகளைக் கொண்ட திரிசிரன் என்ற அசுரன் சிவனை வேண்டி தவம் இருந்தான். பல்லாண்டுகள் தவமிருந்தும் காட்சி கிடைக்காததால் அசுரன் தனது 2 தலைகளை அக்னியில் போட்டுவிட்டு 3வது தலையையும் போட துணிந்தான். அப்போது அவனுக்கு காட்சி தந்த சிவன், இழந்த இரு தலைகளை மீண்டும் பெற அருள் செய்தார். பின்பு அசுரனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். அசுரனின் பெயராலேயே ‘திரு சிர நாதர்’ என பெயர் பெற்றார். தலம் ‘திருசிராமலை’ என்று அழைக்கப்பட்டு திருச்சி என மருவியது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு மலை மீது மூன்றடுக்கு அமைப்பாகவும், திராவிடக் கலைப்பாணியிலும் கட்டப்பட்டுள்ளது. மூலவர் 5 அடி உயரமான பெரிய லிங்கத் திருமேனியுடன் அருள்பாலிக்கிறார்.
இத்தல விநாயகர் , செவ்வந்தி விநாயகர். குன்றின் மத்தியில் ஒரு பிரகாரம் இதை மேல்வீதி என்றும், மலையை சுற்றி அடிவாரத்தில் உள்ள வீதியை கீழ் வீதி என்றும் சொல்கிறார்கள். விழாக்களின் போது இரண்டு வீதிகளிலும் சுவாமி உலா செல்வார்..
இத்தலத்திற்கு தென்கைலாயம் என்ற பெயரும் உண்டு. நவக்கிரக மண்டபத்தில் மனைவியருடன் சூரியன், கிரகங்கள் அனைத்தும் சூரியனை நோக்கி திரும்பி இருக்கின்றன. தனி சன்னதியில் உள்ள முத்துக்குமார சுவாமியை, அருணகிரிநாதர் பாடியுள்ளார். அம்பாள் சன்னதிக்கு அருகில் ஒரு பள்ளத்திற்குள், ” பாதாள அய்யனார்” இருக்கிறார்.
பிரசவம் பார்க்கும் சிவன் வைபவம், சங்கு சாமி, நந்தி கோவில் சொல்லிக்கொண்டே போகலாம்..
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுகப்பிரசவம்
குழந்தைப்பேறு
செட்டிப்பெண் மருத்துவம் திருவிழா ( பிரம்மோற்சவத்தின் 5ம் நாள் )
ராகு கால துர்க்கை வழிபாடு
மூலவருக்கு வாழைத்தார் வழிபாடு, அம்பாளுக்கு 21 அப்பம் 21 கொழுக்கட்டை வழிபாடு.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேரோட்டம் 15 நாட்கள்
பங்குனி தெப்பத் திருவிழா
ஆடி பூரம்
விநாயகர் சதுர்த்தி
புரட்டாசி நவராத்திரி
தாயுமானவர் குருபூசை மற்றும் அனைத்து முக்கிய உற்சவங்களும்..
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரமன், இந்திரன், சடாயு, சப்தரிஷிகள், திரிசிரன், சாரமாமுனிவர், மௌனகுரு, தாயுமானவர், சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், சேக்கிழார், முதலியோர்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருச்சி மாநகரின் மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கும், அடிவார மாணிக்க விநாயகர் கோவிலுக்கும் இடையே, இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.
உச்சிப்பிள்ளையார் கோவில் 6AM – 8PM தொடர்ச்சியாக
தாயுமானவர் கோவில்
6AM – 12NOON, 4PM – 8.30PM
94433 70242 கிரி சிவாச்சாரியார்
99652 41156 மணி சிவாச்சாரியார்
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே
திருஞானசம்பந்தர்


Leave a Reply