உறையூர் முக்கீச்சுரம் பஞ்சவர்ணேஸ்வரர்
மூலவர் : பஞ்சவர்ணேஸ்வரர், திரு முக்கீச்சுரத்தடிகள்
அம்பாள் : காந்திமதி அம்மை
ஸ்தல விருக்ஷம் : வில்வம்,
தீர்த்தம் : சிவ தீ, ராக தீ
பாடல் : அப்பர் சம்பந்தர்
சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 5
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உறையூர் வந்த பிரம்மன் இத்தலத்து இறைவனை வணங்கினார். அப்போது சிவன் தன்னிடமிருந்து பொன்மை, தங்க நிறம் (மண்), வெண்மை(நீர் ), செம்மை (நெருப்பு), கருமை(காற்று), புகைமை( ஆகாயம்) ஆகிய ஐந்து நிறங்களை பிரம்மனுக்கு காட்டினார். பஞ்சவர்ணேஸ்வரர்.
பஞ்சபூதங்களையும் உள்ளடக்கி இங்கே உறைவதால் உறையூர்.
“நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்”
திருவாசகம் மாணிக்கவாசகர் & “ஊரெனப்படுவது உறையூரே” என்பதும் சிறப்பு.
புகழ் சோழ நாயனார் அவதரித்து ஆட்சி செய்த பதி. அவரின் திருஉருவ சிலை கோவிலில் உள்ளது.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோவிலில் பெறப்பட்ட திருநீறை அணிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்தான். இதற்காக மறுபிறவியில் பன்றியாகப் பிறந்து சேற்றில் உழன்றான். தன் முந்தைய பிறவி தவறை நினைத்து வருந்தினான். சிவனை வணங்கி இங்குள்ள சிவ தீர்த்தத்தில் நீராடி பாவ விமோசனம் பெற்றான்.
வேதம் ஆகமம் புராணங்களில் வல்லவராக விளங்கிய உதங்க முனிவர், தன் மனைவி பிரபையுடன் கங்கையில் நீராடிய போது, அவளை ஒரு முதலை இழுத்துச் சென்று சின்னாபின்னப்படுத்தியது. வாழ்வின் நிலையை உணர்ந்த முனிவர் என்றாலும் கூட, அவரது மனம் இந்நிகழ்ச்சியால் தத்தளித்தது. மன நிம்மதிக்காக அவர் உறையூர் வந்து சிவனை வழிபட்டார்.
காலை வழிபாட்டில் ரத்னலிங்கமாகவும், உச்சி கால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வழிபாட்டில் வைரலிங்கமாகவும், அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திரலிங்கமாகவும் சிவன் அவருக்கு காட்சி அளித்தார். இதனாலும் சிவP பஞ்சவர்ணேஸ்வரர் எனப்பட்டார். பிறகுதான் முனிவர் மனம் அடங்கி அமைதியானது. ஞான அனுபவம் பெற்று முக்தி அடைந்தார். ஆடி பௌர்ணமியில் முனிவருக்கு ஐந்து வண்ணம் காட்டியதாக வரலாறு என்பதால் அன்று இறைவனை தரிசிப்பது சிறப்பாக கருதப்படுகிறது.
பைரவர் சனி சூரியன் ஒரே சன்னதியில் வீற்றிருப்பதால் கிரஹதோஷ நிவர்த்திக்கு ஏற்ற தலமாகும். தேய்பிறை அஷ்டமி திதிகளில் பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது.
உலகில் எவ்விடத்தில் சிவபூஜை, சிவதரிசனம் செய்தாலும் இத்தலத்தில் இறைவனை வந்தடையும் என்பது ஐதீகம்.
சாபம் பாவம் தோஷம் ஆகியவற்றிலிருந்து நிவர்த்தி தருபவராக சுவாமி உள்ளார் இங்கு அம்பாள் மற்றும் பஞ்சமுக விநாயகரும் தரிசனம் தருகின்றனர்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வீரவாதித்தன் என்ற சோழ மன்னன் தன் யானை மீது உலா வரும்போது, மன்னனின் பட்டத்து யானைக்கு மதம் பிடிக்க, மன்னனும், பாகனும் செய்வதறியாது திகைக்கும் பொழுது, கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து, பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல், தன் மூக்கினால் கொத்தியதும், மதம் அடங்கிய யானை பழைய நிலைக்கு வந்தது. யானையை கோழி குத்தி வென்றதால் கோழியூர்.
யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டிப் பார்த்த பொழுது, அங்கே சிவலிங்கம் இருந்ததைக் கண்ட மன்னன், சிவனே தன்னையும் மக்களையும் யானையிடமிருந்து காப்பாற்றியதாக எண்ணி,
அங்கே கோவில் எழுப்பினான்.
பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது, யானையை கோழி அடக்கியது போல, அவர்களை அடக்கும் பலத்தை, இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார்.
இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் திருமுக்கீச்சுரம்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோவில் கிழக்கு நோக்கிய நுழைவாயிலும், மூன்று நிலைகளைக் கொண்ட ராஜகோபுரமும் கொண்டு அழகாக அமைந்துள்ளது.
மூலவரைச் சுற்றியுள்ள கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை உள்ளனர்.
மூலவருக்கு அருகில் அம்பாள் காந்திமதி அம்மன் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். இவள் நாகலோகத்தில் நாக கன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழ மன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.இத்தலத்தில் சுப்பிரமணியர், மகாலட்சுமி, கால பைரவர், சனீஸ்வரர், சூரிய பகவான் மற்றும் நவக்கிரக சன்னதிகள் மற்றும் உதங்கமுனிவர், புகழ்சோழர் சன்னதிகள் உள்ளன உள்ளன.
ஏராளமான சிற்ப வேலைப்பாடுகள் நிரம்பிய அழகிய தலம். வலது புறம் உள்ள தூணில் யானை கோழி புடைப்பு சிற்பம் காணலாம்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எதிரிகள் தொல்லை நீங்க
பஞ்சபூத ஸ்தல யாத்திரை பலன்
நாக தோஷம் நிவர்த்தி
வாழ்வில் நல்மாற்றங்கள்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பஞ்சப்பிரகார விழா
வைகாசி தேரோட்டம்
மஹா சிவராத்திரி
திருக்கார்த்திகை
ஐப்பசி அன்னாபிஷேகம்
ஆடிப்பூரம் பிரதோஷம் சிறப்பு
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரமன், உதங்க முனிவர்,
கருடன் கஷ்யபர் கத்ரு கார்கோடகன் சம்பந்தர், சேக்கிழார், முதலியோர்
அமைவிடம்,நேரம், தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருச்சியில் மையப் பகுதியில் உறையூரில் உள்ளது. அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளும் உண்டு.
7AM – 12NOON, 4PM – 8PM
97900 92887 ராஜாராம் குருக்கள்
94434 64595 செல்வகுமார் குருக்கள்
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சாந்தம்வெண்ணீ றெனப்பூசி
வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தளாரும் விரலேழை
யொடாடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங் கறியந்
நிறைந்தாரவ ரார்கொலோ
வேந்தன்மூக்கீச் சரத்தடிகள்
செய்கின்றதோர் மெய்ம்மையே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply